மண்டியிட்டேன் அழுதேன் தொழுதேன் கரம்கூப்பி கண்ணீர் மல்கிட என் வேண்டுதலை அவரிடம் தெரிவித்தேன்
ஊரிலுள்ளோர் துயரமெல்லாம் அவருக்குத் தெரிகிறது
என் கஷ்டம் மட்டும் அவர் கண்ணில்பட மாட்டேன் என்கிறது
என்னைப் பொருத்தவரை கடவுள் செவிடு குருடு இதயமே இல்லாத கற்சிலை
என்று நாமும் நம்மில் பலரும் பல சமயங்களில் விரக்தியின் எல்லைக்கே சென்று அங்கலாய்க்கிறோம்
இது சரியான அனுகு முறையா?
மின்சார சக்தி மனிதனுக்கு பல விதத்திலும் பயன் தருகிறது.
ஒரு இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து விசிறியாக சுத்துகிறது.
வேறொரு இயந்திரத்திலோ நீரை இறைத்து தருகிறது.
தண்ணீரை சூடாக்கவும், காற்றை குளிர வைக்கவும் மின்சாரம் பயன்படுகிறது.
அதே போல தான் கடவுள்.
அறிவை வேண்டும் போது கலைமகளாகவும்,
செல்வத்தை வேண்டும் போது அலைமகளாகவும்,
வீரத்தை வேண்டும் போது மலைமகளாகவும் காட்சி தருகிறாள்.
முக்தி மட்டும் தந்தால் கடவுளின் பேரருளுக்கு இது தான் எல்லை என முடிவு கட்டியது போல ஆகிவிடும்.
கடவுளின் கருணை எல்லையற்றது. அவரிடம் எது வேண்டுமென்றாலும் கேட்பதற்கு மனிதனுக்கு உரிமை உள்ளது.
ஆனால் கேட்டதை எல்லாம் தந்து விட வேண்டுமென்ற அவசியம் கடவுளுக்கு கிடையாது.
காரணம் அவர் கருணை நிரம்பியவர் மட்டுமல்ல அறிவு மயமானவரும் ஆகும்.
எதை எப்போது தரவேண்டுமென்பது அவருக்கு நன்றாக தெரியும்.
ஒரு குழந்தை பனிகாலத்தில் ஐஸ்கீம் கேட்டாலோ வெயில் காலத்தில் கம்பளி சட்டை
கேட்டாலோ பொறுப்பான பெற்றோர்கள் கொடுத்து விட மாட்டார்கள். கடவுளும்
அப்படி தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக