ஞாயிறு, 9 டிசம்பர், 2012

எக்காரியத்தையும் துணிந்து ஏற்றுக்கொள்ளுங்கள்..!!!

ஏதோ பிறந்தோம், உயிர் வாழ்வதற்கு பணம் தேவை, அதற்காக ஏதோ தொழில் செய்கிறேன் நிம்மதியாக எனது வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது என்று இருப்பவரா நீங்கள்? தொடர்ந்து படியுங்கள்..

நான் ஏன் வீணாக சென்று பிரச்னைகளை தேடிக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் கருதியிருக்கிறீர்களா? அப்படியிருந்தால் நிச்சயம் நீங்கள் இதைத் தொடர்ந்து படித்துத்தான் ஆகவேண்டும்.


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று 

இது திருவள்ளுவர் வாக்கு. திருவள்ளுவர் வாக்கின் அர்த்தம் என்ன தெரியுமா? இது முற்றிலும ்சோம்பேறிகளை இடித்துரைக்கும் வகையில்தான் அமைந்திருக்கிறது என்பது பார்வையில் உள்ள கருத்து. ஆம் அன்பு நண்பர்களே.. உலகத்தில் தோன்றுவது பெரிய விசயமே இல்லை.. அப்படி தோன்றிவிட்டால், நான் ஏன் இந்த உலகத்தில் தோன்றினேன்.. ? என்னால் இந்த உலகிற்கு என்ன பயன்? மற்றவர்கள் மத்தியில் நான் யார் ? என்ற கேள்விகளைக் கேட்டு ஒரு சிந்தித்து செயல்படுவானாயின் அவனே மனிதன். அதைவிடுத்து முந்தைய பத்தியில் சொல்லியது ஏதோ பிறந்தோம், ஏதோ வளர்ந்தோம், ஏதோ மடிந்தோம் என்பதால் என்ன பயன் இருக்கப்போகிறது?

younger Mahatma Gandhi


உலகில் பிறந்தவன் ஒருவன் ஏதாவது ஒரு துறையிலாவது முனைப்புடன் ஈடுபட்டு, வெற்றி பெற்று அதன் மூலம் முத்திரையை பதிக்க வேண்டும். அதன் மூலம் என்றும் நிலைக்கும் புகழை அடைய வேண்டும். அப்படியில்லை என்றால் ஒருவன் பிறந்ததை விட பிறவாமலிருப்பதே சிறந்தது . 

புதிய செயல்களையும் , காரியங்களையும் சிந்தித்து, துணிவுடன் ஏற்றுக்கொண்டு செயல்படுவதே வெற்றிக்கு அறிகுறியாகும். எதற்கும் பயந்து கொண்டு, கீறல் விழுந்த CD மாதிரி தொடரந்து ஒரே மாதிரியான செயல்களை செய்பவனை வெற்றி நிச்சயமாக தேடி வராது.. அவனால் எதையும் சாதிக்க முடியாது.. 

மகாத்மா காந்தி அவர்கள் இளம் வயதில் பெருங்கோழையாக இருந்தார்.. இரவில் படுத்தாலோ பாம்பு, பூதம் கண்டு பயந்தார். புதிய மனிதர்களைக் கண்டும் நடுங்கிக் கொண்டிருப்பார். பிறருடன் பேசுவதற்கும், பழகுவதற்கும் மிகவும் கூச்சத்துடனே இருப்பார். 

ஆனால் அவரால் எப்படி உலக மகாவீரராக ஆக முடிந்தது? நமது நாட்டின் தந்தையாக முடிந்தது? சர்வ வல்லமை படைத்திருந்த பிரிட்டீஸ் சாம்ராஜ்ஜியத்தையே எதிர்த்து எவ்வாறு வெற்றி கொள்ள முடிந்தது? மெல்லிய தேகத்துடன் அரைநிர்வாணமாக இருந்த அவரால் எப்படி நமது தேசத்தந்தையாக முடிந்தது. சிந்தித்துப் பார்ப்பதற்கே மிகப் பெருமையாகவும் வியப்பாகவும் இருக்கிறது அல்லவா? 

Mahatma Gandhi

அவரது சாதனைக்கு காரணம் அடிமைப்பட்டு கிடந்த நமது இந்தியரையும், இந்தியாவையும் பார்த்து மனம் உருகிறார். இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தே தீருவேன் என்று திடமான மன உறுதியைச் (Determination) செய்துகொண்டார்.

தனது இலட்சியத்தை அடைவதற்கு தன்னுடைய கோழைத்தனத்தையும், எதையும் கண்டு பயப்படுவதையும் தவிர்த்தேயாகவேண்டும் என்பதை மனமார நம்பினார். தன்னுடைய பலவீனத்தை பலமாக, தன்னுடைய தீவிர மனப்பயிற்சிகளின் மூலம் மாற்றி காண்பித்தார்..

காந்தி கையாண்ட இரகசியத்தை நாம் அனைவரும் அறிந்து நமது வாழ்க்கையிலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

Mahatma Gandhi


பயத்தையும், பலவீனத்தையும் வெல்வதற்கு அவர் கையாண்ட இரகசியம் இதுதான்.. "நீ எதை செய்ய பயப்படுகின்றாயோ, அதையே நீ எப்போதம் செய்ய வேண்டும்" என்பதே.. 
(நல்லதிற்கு மட்டும்)

"நீ எண்ணித் துணிந்த பின்பு, உலகம முழுவதும் உன்னை வாளெடுத்து வந்து எதிர்த்து நின்ற போதிலும் உன்னுடைய இலட்சியத்தைக் கைவிடாதே" என்றார் விவேகானந்தர்.
Vivekananda


புதிய காரியத்தை ஏற்றுக் கொண்டால் பொறுப்புக்களும், உழைப்பும் அதிகமாகுமே என்று எண்ண வேண்டாம்.

"முன்னேறு இளைஞனே, முன்னேறு, உனக்கு ஏற்படும் கஷ்டங்களெல்லாம், நீ மேலும் மேலும் துணிந்து முன்னேறும்பொழுது, அவை தன்னாலேயே விலகக் காண்பாய்.  மேலும் உனது இலட்சியத்தில் செல். இருள் நீங்கி அங்கு அதிசய ஒளி பிறப்பதைப் பார்ப்பாய். அந்த ஜோதியானது உங்களுடைய பாதையை நன்றாக தெளிவுபடுத்தி பிரகாசமளிக்கும்" என்கிறார் ஒரு அறிஞர்.

அரைத்த மாவையே அரைப்பதற்காகவா நீ பிறந்துள்ளாய்... ? உலகத்தோடு ஒட்டி மட்டும்தான் வாழ்க்கையல்ல.. உனக்கென வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான முத்திரையை பதிப்பதுதான் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அர்த்தம் என்பதை புரிந்தகொள்ளுங்கள்.. நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதற்கு மனதிட்பம்- மன உறுதி வேண்டும். அந்த உறுதி நமது தேசப்பிதா எடுத்துக்கொண்ட மாதிரியான உறுதியாக இருக்கட்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக