ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்

இன்று இணையத்திலே பலரையும் கட்டிப்போட்ட்டிருக்கின்ற ஒன்றுதான் இணைய அரட்டை. இந்த அரட்டைகள் மூலம் நல்ல பல சம்பவங்கள் இடம்பெறுவதோடு. சில சுத்துமாத்து வேலைகளும் இடம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

இன்று பல சமுகத்தளங்கள் இருக்கின்றன. அதன் மூலம் பலர் தமது நண்பர்கள் வட்டத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இதன் மூலம் காதல், திருமணம், வியாபாரம் என்று நல்ல பல விடயங்கள் நடை பெற்றாலும் இன்று பலர் இணைய அரட்டையே வாழ்க்கை என்று தினமும் அரட்டையிலேயே தமது காலத்தை வீணடித்துக்கொண்டு இருக்கின்றனர்.
இங்கே அரட்டை அடிப்போர் பலர் தமது உண்மையான விபரங்களை விடுத்து பொய்யான தகவல்களைத்தான் பகிர்ந்து கொள்கின்றனர் என்பது வேறு விடயம். சில ஆண்கள் பெண்களின் பெயரிலே அரட்டை அடித்து பல சுத்துமாத்து வேலைகள் செயவோருமுண்டு.

சிலர் இந்த அரட்டைகளைப் பயன் படுத்தி நிறையவே சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர். இதிலே சில பெண்கள் ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களிடமிருந்து பணங்களை பெற்று பின்னர் ஏமாற்றி வருகின்ற சம்பவங்களும் நடந்துகொண்டு வருகின்றன.

நான் இணையத்திலே உலாவ வந்த ஆரம்பத்திலே வலைப்பதிவுகள் பற்றி எல்லாம் தெரியாது. நண்பர்கள் மூலமாக சில சமுக வலையமைப்புகள் பற்றி அறிந்தேன். அவ்வப்போது அந்த இணையத்தளங்களிலே அரட்டையோடு என்பொழுது போகும்.

இத் தளங்களிலே அதிகமாக ஆண்கள் என்றால் பெண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். பெண்கள் ஆண் நண்பர்களை வைத்துக் கொள்வார்கள். ( ஈநேன்று தெரியவில்லை தெரிந்தவங்கள் சொல்லுங்கள்) ஆனால் நான் ஆண், பெண் என்று பாகுபாடின்றி எல்லா நண்பர்களையும் இணைத்துக்கொண்டேன். ஆனால் என்னிடம் இருக்கின்ற ஒரு கெட்ட குணம் எல்லோரையும் நம்பிவிடுவது.

இந்த அரட்டையிலே இருக்கின்ற பொய் நண்பர்களையும் இவர்களின் சுத்துமாத்துக்களையும் அறிந்தபோது அரட்டைப் பக்கமே போவதில்லை. அவ்வப்போது போய் என்ன என்ன நடக்கிறது என்று பார்த்துவருவதுமுண்டு.

இப்போ சொல்ல வந்த விடயத்துக்கு வருகிறேன். அரட்டை மூலம் எனக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். ( நான் நண்பனின் கதை என்று சொன்னால் நம்பவா போறிங்க அதுதான் எனக்கு என்று ஆரம்பிக்கிறேன்) இதிலே சில வெளிநாட்டு நண்பிகள் நெருக்கமானார்கள். அதிலே ஒரு நண்பி எப்போதும் இணைய இணைப்பிலே இருப்பார். எப்போதும் என்னோடு அரட்டை அடித்துக்கொண்டே இருப்பார்.

இவரது நண்பர் வட்டத்திலே பல ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருக்கின்றனர். எவரும் பெண்கள் இல்லை. மிகவும் அழகானவர், என்னுடைய வலைப்பதிவை பார்த்து கருத்துக்களைச் சொல்வார். அடிக்கடி என்னைப் பற்றி புகழ ஆரம்பித்துவிட்டார். பின்னர் என்னைக் காதலிப்பதாக அடிக்கடி சொல்வார். நான் இப்போத்துதான் பச்சிளம் பாலகன் என்பதனால் முடியாது என்று சொல்லிவிட்டேன்.

இக்கால கட்டத்திலே இவரது நட்புவட்டத்திலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த மத்திய கிழக்கு நாடொன்றிலே இருக்கின்ற ஒரு நண்பரை நான் எனது நட்பு வட்டத்திலே இணைத்துக் கொண்டேன். அந்த நண்பரும் என்னோடு நல்ல நெருக்கமான நண்பரானார்.

அடிக்கடி என்னோடு பேசும் ஒரு நண்பராக மாறிவிட்டார். அப்போது அந்த நண்பர் என்னிடம் நான் குறிப்பிட்ட அந்த பெண் தன்னை இரண்டு வருடங்களாகக் காதலிப்பதாகவும் மாதாமாதம் அந்த பெண்ணுக்கு தான் பணம் அனுப்புவதாகவும் சொன்னார். நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை

மறுபுறத்திலே அந்தப்பெண் என்னிடம் விருப்பம் கேட்டு என்னை விடுவதாக இல்லை. அடிக்கடி அவசரமாக பணம் தேவைப்படுகின்றது. என்றெல்லாம் பேசுவார் நான் காதில் கேட்காதது போன்று இருந்து விடுவேன்.

இவர் நிறையப்பேரை ஏமாற்றி வருகின்றார் என்பது மட்டு எனக்கு புரிந்துகொள்ள முடிந்தது. இவரை பற்றி ஆராய வேண்டு மென்று நினைத்தேன் இவரது நண்பர் வட்டத்திலே இருக்கின்ற பலரை என் நண்பர் வட்டத்திலே இணைத்தேன். அப்போது பலரை இந்தப் பெண் காதலிப்பதாக அறியக் கிடைத்தது. நான் எவரிடமும் இந்தப்பெண் பற்றிய விடயங்களை சொல்லவில்லை.

அவர் தனக்கொரு வலைப்பதிவு உருவாக்கித்தரும்படி அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு. நான் உங்கள் மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் என்பவற்றை தாருங்கள் என்று கேட்டு வங்கிக் கொண்டேன். வலைப்பதிவு உருவாக்கியக் கொடுப்பது என் நோக்கமல்ல இவரது ஏமாற்று வேலைகளை அறிய வேண்டும் என்பதே என் எண்ணம்.

உடனடியாக நான் அவரது மின்னஞ்சலை பார்த்தபோது பலரிடமிருந்து நிறையவே பணம் பெற்றிருப்பது அறிய வந்தது. அவர் பலரை காதலிப்பதாக நடித்துக்கொண்டிருக்கின்றார். பலர் இவருக்கு மாதாந்தம் பணம் அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். என்பதும் தெரிய வந்தது.



உடனடியாக நான் மத்திய கிழக்கிலே இருக்கின்ற இலங்கையைச் சேர்ந்த நண்பருடன் தொடர்புகொண்டு விபரங்களைச் சொன்னேன் அவர் நம்பவே இல்லை. அவரால் அவள் மீதான காதலிலிருந்து வெளியே வர முடியவில்லை.

அந்த நண்பரைப் பற்றி நினைக்கும்போது இன்றும் நான் கவலைப் படுவதுண்டு. அவரது குடும்பம் சாதாரண ஏழைக் குடும்பம். தந்தை இறந்துவிட்டார். தாய், இரு தங்கைகள் அவர்களைப் பார்க்கின்ற பொறுப்பு இவரிடமே. இவர் செய்தவை தனது வருமானத்தில் அரை வாசியை அந்தப் பெண்ணுக்கும் அரை வாசியை தாய்க்கு அனுப்புவதும். இன்று அந்தப் பெண்ணின் தொடர்பு இல்லாமல் போய்விட்டதாகவும் அந்தப் பெண்ணால் நிறையவே இழந்திருப்பதாகவும் கூறினார்.

இவர் மாத்திரமல்ல இன்று பல இளைஞர்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். பல சமுக இணையத்தளங்களிலே பல பெண்கள் காதல் எனும் போர்வையில் இளைஞர்களை சிக்கவைத்து பணம் பறித்துக்கொண்டிருக்கின்றனர். இணையத்திலே அரட்டை அடிப்பவர்கள் நிதானமாக சிந்தித்து செயற்படுவது நல்லதே.



சம்பவங்கள் உண்மை..... நீயா அவன் என்று கேட்கவேண்டாம். நான் அவனில்லை.

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேண்டும் என அடம்பிடிக்கு ஈழத்து கன்னியர்கள்




எங்களுர்ப் பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளையருக்காகத் தவம் கிடப்பதற்கு இன்னொரு காரணம், விடுமுறைகளின் போது இங்குவரும் வெளிநாட்டவர்கள் காது,கழுத்தில் தொங்கும் வடம் போன்ற "பவுண்" சமாச்சாரங்கள் தான். அட! இத்தனை பவுண் சங்கிலியை சும்மார ரோட்டாலை போகேக்கையே போட்டுக்கொண்டு போறாளென்றால உள்ளுக்குள்ளை எவ்வளவு வைச்சிருப்பாள்.




"தலைமுறை தலைமுறையாக சொத்துச் சேர்த்து வைத்த குடும்மென்றாலும் இங்கே இருந்து கொண்டு இவ்வளவு உழைக்க முடியாது. ஆகவே, புறப்பட்டுப் போய் ஒருத்தனைக் கைபிடிப்பதே நலம்" என்று இளம் பெண்கள் விரும்பிக் கொண்டுவிடுகின்றனர்.

மணமன் தேவை 1. யாழ்.இந்து வேளார் 81ஆம் ஆண்டு A/L IAB படித்த, அழகிய மணமகளுக்கு படித்த தராதரமுடைய லண்டன் மணமகன் தேவை.

மணமகன் தேவை 2 யாழ்.இந்து வேளாளர் 79ம் ஆண்டு சுவாதி... டொக்டர் மணமகளுக்கு தராதரமுடைய டொக்டர், எஞ்சினியர் லண்டன் மணமகன் தேவை.

மணமகன் தேவை 3 யாழ்.இந்து வேளாளர் 77ஆம் ஆண்டு 5'2' உயரம்.... கம்பியூட்டர் பிரிவில் படித்த அழகிய மணமகளுக்கு படித்த தராதரமுடைய வெளிநாட்டு மணமகன் தேவை.

மேற்தரப்பட்டுள்ளவை. அண்மையில் எங்களுர் பத்திரிகைகளில் "மணமகன் தேவை" என்ற தலைப்பின் கீழ் வெளிவந்த விளம்பரங்கள் சில. பெண்களின் வரிசையைப் பாருங்கள். ஒருவர் உயர்தரம் படித்தவர். இன்னொருவர் வைத்தியர். மற்றொருவர் கணினித்துறையில் கல்வி கற்றவர். வேறொருவர்.. இப்படியாக இன்னும் பலலை வரிசையாகக் சொல்லிக் கொண்டே வரலாம்.


இவர்களின் அல்லது இவர்களுடைய பெற்றோர்களின் எதிர்பார்ப்புக்கள் அந்தந்த விளம்பரங்களில் தலை காட்டியபடி உள்ளன. என்ன எதிர்பார்ப்புக்கள்? வேறொன்றுமில்லை. வெளிநாட்டுப் மாப்பிள்ளை. அவ்வளவுதான். அந்த மாப்பிள்ளை அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதல்ல முக்கியம். அவர் வெளிநாட்டுப் பிரஜாவுரிமையோடு இருக்கிறாரா என்பதே முக்கியம்.

அண்மையில் 34 வயதான கணினித்துறையில் பணிபுரியும் மகனை, கன்னி அழியாமல் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு வயோதிப தம்பதியினரைச் சந்திக்க நேர்ந்தது. "என்ன மகனுக்கு முற்றாகவில்லையோ?" என்று வேறு கதை பேசுவதற்குப் பதிலாய் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டதுதான்.. பரிதாபம்... அவர்களின் முகத்தைப் பார்க்க வேணுமே. "அதையேன் கேக்கிறியள்" எத்தனையோ இடம் தேடிப் பாத்திட்டம்.. எல்லாப் பெடிச்சிகளும் வெளிநாட்டு மாப்பிள்ளையளையெல்லோ கேக்கிறாளவை. நேற்றுக்கூட ஒரு சாதகம் பொருந்தி... அந்த புரோக்கர் மூலம் பிள்ளையின்ரை வீட்டுக்கு போன் பண்ணினம், பிள்ளையின்ரை அப்பாதான் கதைச்சவர். அவருக்கு சந்தோஷம். அப்பாடி! இனித்தான் நிம்மதி என்று நினைச்சபடி "அப்ப படத்தை ஒருக்கா எடுக்கலாமோ?" என்று கேட்டம். அவரும் பின்னேரம் புரோக்கரிட்டை குடுத்தனுப்புகிறதென்று சொன்னார். பின்னேரம் புரோக்கரிட்டைப் போனா, அவரோ "பிள்ளையின்ர அப்பா, அம்மாதான் சம்மதிச்சிருக்கினம், பிள்ளை ஓமெண்டு சொல்லேல்லயாம். தன்னோடை படிச்ச சிநேகிதிப் பெட்டையளெல்லாம் லண்டன், கனடா என்று சொகுசா வாழ்க்கை... தான் மட்டும் இஞ்சை நிண்டு என்ன குப்பை கொட்டுறதோ? பார்க்கிறதெண்டால் வெளிநாட்டு மாப்பிள்ளையைப் பாருங்கோ." என்று அடிச்சு வைச்ச மாதிரி சொல்லிப் போட்டுதாம் என்று சொன்னார். என்ன வழி? "இப்ப திரும்பி குறிப்போடை திரியுறம்" என்று அந்த அப்பா சொல்லிச் சலித்தார்.

இந்தச் சம்பவம் சும்மா ஒரு மாதிரிதான். நூறு திருமண முயற்சிகளில் கிட்டத்தட்ட 95வீத திருமண முயற்சிகளின் நிலைமை இதுதான். இளம் பெண்கள் வெளிநாடுகள் என்றால் சொர்க்காபுரிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மணமகன்மார் அனைவரும் பொருளாதாரவசதி படைத்தவர்கள் என்றும், அவர்களைக் கட்டிவிடுவதால் சொகுசான இல்வாழ்க்கை கிடைத்துவிடும் என்றும் ஒரு மாயக் கற்பனை உலகை எங்கள் மணமகள்மார் உருவாக்கிக் கொண்டு அதற்குள்ளே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மாய கனவுலக சஞ்சரிப்புக்கு அங்கிருந்து உறவினர்களால்/நண்பர்களால் அனுப்பப் பெறும் புகைப்படங்கள் பிரதான காரணங்களாக விளங்குகின்றன. "பொலிஷ்" பண்ணித் துடைத்த "பளிச்" சென்ற வீடுகள், புதிய ரக கார்கள், மகனின் அறைக்கோர் கணினி, மகளுக்கோர் கணினி, தனித்தனியே தொலைக்காட்சி என்று வீடு முழுவதும் நிரம்பியிருக்கின்ற பொருட்கள்- இவற்றை அங்கிருந்து வரும் புகைப்படங்களில் பார்க்கின்ற இளம் பெண்களில் மனசுகள் றெக்கை கட்டிப் பறப்பதிலும் நியாயமுண்டுதான். எனினும், இந்த வண்ணங்களுக்குப் பின்னால் பாரிய வங்கிக் கடன் சுமை இருக்கென்றும், அந்தக் கடன் சுமைக்காக தாங்களும் கொட்டும் பணியில் வேலைக்குக் குதித்தோட வேண்டும் என்றும் அந்த கனவுலக இளம் பெண்களுக்கு தெரிவதேயில்லை.


எங்களுர்ப் பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளையருக்காகத் தவம் கிடப்பதற்கு இன்னொரு காரணம், விடுமுறைகளின் போது இங்குவரும் வெளிநாட்டவர்கள் காது,கழுத்தில் தொங்கும் வடம் போன்ற 'பவுண்" சமாச்சாரங்கள் தான். அட! இத்தனை பவுண் சங்கிலியை சும்மார ரோட்டாலை போகேக்கையே போட்டுக்கொண்டு போறாளென்றால உள்ளுக்குள்ளை எவ்வளவு வைச்சிருப்பாள்.

"தலைமுறை தலைமுறையாக சொத்துச் சேர்த்து வைத்த குடும்மென்றாலும் இங்கே இருந்து கொண்டு இவ்வளவு உழைக்க முடியாது. ஆகவே, புறப்பட்டுப் போய் ஒருத்தனைக் கைபிடிப்பதே நலம்" என்று இளம் பெண்கள் விரும்பிக் கொண்டுவிடுகின்றனர்.

பெண்கள் வெளிநாடுகளே மேல் என்று தீர்மானிப்பதற்கு இன்னுமோர் காரணம், உள்நாட்டு மாப்பிள்ளையள் கேட்கிற பெருந்தொகைச் சீதனம் என்பதை மறந்து விடக்கூடாது. பொருளாதாரம் ஒரு பிரச்சினையே இல்லாமல் உழைத்து வைத்திருக்கின்ற புலம் பெயர் மன்மதர்கள் இங்கு வந்து... எந்தவித சத செலவையும் பெண் பகுதிக்கு வைக்காமல் அழகிகளையும்... கொஞசம் படித்தவர்களையும் அள்ளிக்கொண்ட போய்விடுகின்றார்கள். இதனால் அந்த மன்மதர்களுடைய எதிர்பார்ப்பும் நிறைவடைகின்றது. பெண்களைப் பெற்றவர்களின் பொருளாதாரமும் பேணப்படுகின்றது.

இத்தகைய புலம்பெயர் மாப்பிள்ளைகள் வந்து உள்ளுர் பெண்களைக் கொத்திக் கொண்டு போய்விடுவதால், பாதிக்கப்படுவது உள்ளுர் மாப்பிள்ளை மட்டும் தான் என்றில்லை. புலம்பெயர் நாடுகளில் பருவ வயதினராய் கல்யாணக் கனவுலளோடு காத்திருக்கின்ற தமிழ்ப் பெண்களின் நிலையும் பரிதாபமே.

புலம் பெயர் நாடுகளில் வாழ்க்கின்ற நமது இளம் சந்ததியர் நமது தமிழ் கலாச்சார, பண்பாட்டின் படி வாழ்கின்றனர் என்றில்லை. திறந்த பொருளாதாரம் மாதிரி "திறந்த" கலாச்சாரத்துக்கு அவர்கள் பழகிப் போய் விட்டார்கள். காதல் ஒருவனைக் கைபிடித்து அவரன் காரியம் யாவிலும் கைகொடுப்பது என்கிற தமிழர் அறம் அவர்களைப் பொறுத்தவரை சலித்துப் போன விஷயம். கண்டதே காட்சி, கொண்டே கோலம் என்றபதற்கு இளைய வயது எடுபட்டுவிடும் என்பதை சொல்ல வேண்டுமா, என்ன?


இதனால், புலம்பெயர் வாழ் இளைஞர்களில் பெரும்பான்மையர்கள் ஒழுக்கத்தைப் பொறுத்தவரை சுத்தமில்லை என்பதே உண்மை. சிறிய வயதிலேயே உழைக்க முடிகிறது. கையில் பணம் புரள்கிறது. கண்டித்து வளர்க்குகும் தந்தை,தாயார்கள் தூரத்தே... தாயகத்தில் இருக்கிறார்கள். கெடுக்கவல்ல சிநேகிதர்கள் அருகில். திருமணத்துக்கு முந்தைய உடலுறவு பற்றி அலட்டிக் கொள்ளாத வெள்ளைக்கார ஜரோப்பிய தோழிமார் ஒரு சிலருடைய நட்பாவது வேலைத்தளத்திலோ, படிக்குமிடத்திலோ கிடைத்துவிடுகிறது. பிறகென்ன வேண்டும்? அழிவின் கைதிகளாகிற இந்தப் புலம்பெயர் இளைஞர்கள் தங்களைப் போலவே புலம்பெயர்ந்து வாழும் தமிழ் இளவயது யுவதிகளும் ஒழுக்கமின்றிப் போய்விட்டிருப்பார்கள் என்று நம்புகின்றார்கள். எனவே, "அந்தப் பெண்கள் வேண்டாம்." என்றபடி தாயகத்துக்கு 'தூய" பெண்களை எதிர்பார்த்து மணமாலையோடி ஓடி வருகின்றனர். இவர்களுள் சிலர் 'பி.ஆர்' பெறுவதற்காக அந்நாட்டு யுவதிகளைக் திருமணம் செய்துவிட்டு பின் காசு கொடுத்து விவாகரத்துப் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தாயகத்துக்கு வந்து பெண்தேடும் படலம் நடாத்த இது மட்டுமே காரணமென்றில்லை. புலம்பெயர் தமிழ் யுவதிகள் சொந்தமாக உழைக்கத் தொடங்கி விட்டவர்கள் என்பதோடு, குடும்ப வேலைகளில் ஆணும் அரைப்பங்கு செய்து தர வேண்டும் என்கிற "பெமினிஸ" எண்ணப்பாங்குள்ள நாடுகளில் வளர்வதால் தங்கள் கணவன்மாரிடமும் அதை எதிர்பார்ப்பவர்கள். அவர், தனது உடுப்பை தானே தோய்க்கட்டும், எனது சம்பளத்தை நானே செலவழிப்பேன். இன்று நான் சமைத்தால் நாளை அவர் என்கிற பணிக்கு புலம்பெயர் யுவதிகள் பழக்கப்பட்டுவிட்டார்கள். இது புலம்பெயர் இளைஞருக்கு ஒத்துவருவதாயில்லை. புலம்பெயர்ந்து பலவிடயங்களில் மாறிவிட்டபோதும், மனைவியர் தனது கட்டளைகளுக்குக் கீழ்படிந்து, தனது வேலைகளையும் செய்து தருபவர்களாக இருத்தல் வேண்டும் என்கிற கீழைத்தேய எண்ணத்திலிருந்து இன்னமும் மாறாதவர்களாகவே உள்ளனர். இவர்களுக்கு 'சுதந்திர" புலம்பெயர் யுவதிகளைக் கண்டால் "துடக்கு" ஆகிவிடுகிறது. எனவேதான், ஓரளவுக்காவது இன்னும் பணிவு கொண்டுள்ள தாயகத்துக்குக் கிளிகளிடம் ஓடி வருகிறார்கள். (இந்தக் கிளிகளில் பல அங்கு போய் பணத்தால் உருமாறி வேற்றூருக்கு கொண்டு விடுவதும் நடந்தே வருகிறது)

இவ்வாறு தமிழராகப் பிறந்து, இன்னொரு தேசியராக வாழ நேர்ந்துவிட்ட, "இரண்டுமிலி அலி" வாழ்க்கையில் பல வண்ணக் கனவுகளும் கரைந்து போக, பெரும்பான்மைய புலம்பெயர் குடும்பங்களில் விரிசல் விழுந்து விட்டிருக்கிறது. சகிப்பு, விட்டுக் கொடுப்பு என்பவற்றைக் கொண்டு "குணம் நாடி" ஊடிப் பின் கூடி வாழ்ந்த தமிழ் வாழ்வை புலம்பெயர்ந்த குடும்பங்கள் தொலைந்துவிட்டன. யூதக் கண்ணாடி கொண்டு குற்றத்தை மட்டும் பரஸ்பரம் தேடுவதும், அதை ப10தாகரமாகப் பெருப்பித்துக் காட்டுவதும், பின் அதைக் காரணமாக்கி விவகாரத்துக் கோருவதும், பின் இன்னொரு வாழ்வைத் தேடுவதுமாகத் தொடர்கிறது புலத்தில் நமது இனத்து எச்சங்களின் வாழ்க்கை, இந்தப் பாதிப்பு தாயகத்தையும் தொடவில்லை என முடியாதபடி இப்போது..... இங்கேயும் மணப்பிரிவினைகள் சகஜமாகத் தொடங்கிவிட்டன.


நன்றி :thamilworld.com

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

தென்னாசியாவில் நேரடியான தலையீடுகளை மேற்கொள்ள தயாராகின்றதா அமெரிக்கா? - வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்காவில் நடைபெற்ற உள்நாட்டு போரிலும், அமைதி பேச்சுக்களிலும் காத்திரமான பங்களிப்பை வழங்கி தனது ஆதிக்கத்தை தக்கவைக்கும் வல்லமையை இந்தியா இழந்துள்ளதை தொடர்ந்து, தென்ஆசிய பிராந்தியத்தில் தனது ஆளுமையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அமெரிக்கா நேரடியாக தனது கையில் எடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையின் ஆரம்பம் வன்னியில் நடைபெற்ற போர் கடந்த வருடம் மே மாதம் நிறைவுபெற்றதும் ஆரம்பமாகிவிட்டது. அதுவரை சிறீலங்காவுக்கான தூதுவராக பணியாற்றிய றெபேட் ஓ பிளேக் உடனடியாக இடமாற்றப்பட்டு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை வெளியுறவு செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்து சமுத்திர பிராந்தியம் தொடர்பில் மாற்றமடைந்துவரும் பூகோள அரசியல் இந்த பதவி காத்திரமான பங்கை வகிக்க வல்லது.
அது மட்டுமல்லாது, இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஆளுமையை பேணுவதற்காக 60 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளை பீடமும் தனது செயற்பாடுகளை அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் இந்த கட்டளை பீடத்தை சேர்ந்த பேர்ள் ஹாபர் தரையிறங்கு கலம் திருமலை துறைமுகத்திற்கு வந்து சென்ற நிலையில், அடுத்த வாரம் பசுபிக் பிராந்திய கட்டளை பீடத்தை சேர்ந்த 40 படை அதிகாரிகளை கொண்ட குழு சிறீலங்கா வரவுள்ளதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
பசுபிக் ஏஞ்சல் - 2010 மனிதாபிமான நடவடிக்கை என இதற்கு பெயரிடப்பட்டிருந்தாலும் அமெரிக்காவின் ஆளுமையை தென்ஆசியாவில் அதிகப்படுத்தும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவின் படை கட்டமைப்பில் பசுபிக் பிராந்திய கட்டளை பீடம் மிக முக்கியமானது. அது ஏறத்தாள 325,000 படையினரை (அமெரிக்க படை பலத்தில் இது 20 விகிதம்) கொண்டதுடன், முதன்மையான 5 விமானம் தாங்கி கப்பல்களையும் கொண்டுள்ளது.
இந்த கட்டளை மையத்தின் கீழ் நான்கு படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதன் கடற்படை 5 விமானம் தாங்கி கப்பல்களை கொண்டுள்ளதுடன், 180 கப்பல்களையும், கப்பல்களில் தரித்து நிற்கும் 1,500 தாக்குதல் விமானங்களையும், 100,000 கடற்படையினரையும் கொண்டது.
இராணுவத்தை பொறுத்தவரையில் 60,000 இலகு காலாட் படையினர் அங்கு நிறுத்தப்பட்டுள்ளபோதும், அவர்களில் வான்நகர்வு படையினரே அதிகம். மேலும் 85,000 ஈருடகப்படையினரும் (அமெரிக்கவின் ஈருடக படை கட்டமைப்பில் இது 65 விகிதம்), 1200 சிறப்பு படையினரும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் 400 தாக்குதல் விமானங்களுடன், 40,000 வான்படையினரும், 27,000 கரையோர காவல் படையினரும், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள், புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 40,000 பேரும் பசுபிக் பிராந்திய கட்டளை பீடத்தில் உள்ளடங்கியுள்ளனர்.
அதாவது அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளை பீடம் என்பது உலக நாடுகளுடன் தனியாக போர் புரியும் வல்லமையையும் அதற்கேற்ற ஆளணிகள் மற்றும் தளபாடங்களையும் கொண்டுள்ளது மேற்கூறப்பட்ட தகவல்களில் இருந்து நாம் அறிந்துகொள்ளமுடியும்.
அமெரிக்க அரசை பெறுத்தவரையில் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து பசுபிக் பிராந்திய கட்டளை பீடத்தை வடிவமைத்து பேணிவருவதற்கு வலுவான காரணங்கள் உண்டு.
அதாவது இந்த கட்டளை பீடத்தின் ஆளுமைக்குள் பூமிப்பந்தின் அரை பங்கு நிலம் உள்ளதுடன், 3.4 பில்லியன் மக்களும் வாழ்கின்றனர். உலகில் அதிக எண்ணிக்கையான இராணுவங்களை கொண்டுள்ள நாடுகளும் இந்த பீடத்தின் கட்டமைப்புக்குள் தான் அடங்குகின்றன.
ஹவாய் தீவை தலைமையகமாக கொண்ட பசுபிக் பிராந்திய கட்டளை பீடத்தின் கீழ் உள்ளடக்கப்பட்ட மிகவும் சிக்கலான பூகோள, கலாச்சார மற்றும் இன விழுமியங்களை உடைய 36 நாடுகளை கொண்ட இந்த பிரதேசத்தை அமெரிக்கா நான்கு வலையங்களாக பிரித்து கண்காணித்து வருகின்றது. வட கிழக்கு ஆசியா, தென் கிழக்கு ஆசியா, தென் ஆசியா, ஓசெனிகா என அவை பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த நான்கு பிராந்தியங்களிலும் தென்ஆசியா பிராந்தியம் தற்போது அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றம் பெற்றுள்ளது. சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, சீனாவின் படை பல அதிகரிப்புக்கள் ன்பன அதற்கு பிரதானமான காரணம்.
சிறீலங்காவில் நடைபெற்ற அமைதி பேச்சுக்கள் வரை இந்தியாவுடன் மேற்கொள்ளும் ஒத்துழைப்புக்கள் மூலம் தென்ஆசியா பிராந்தியத்தில் தனது ஆளுமையை தக்கவைக்கலாம் என அமெரிக்கா நம்பியது. முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோர்ச் பு~; இன் கொள்கைகளும் இந்தியாவை இந்த பிராந்தியத்தில் முதன்மைப்படுத்துவதாகவே அமைந்திருந்தது.

ஆனால் 2009 ஆம் ஆண்டு வன்னியில் போர் இறுதிக்கட்டத்தை அடைந்தபோது இந்தியா அதனை கையாண்ட முறை, வன்னியில் நேரிடையாக ஒரு தரையிறக்கத்தை மேற்கொள்ள முயன்ற பசுபிக் பிராந்திய கட்டளை பீடத்தை சேர்ந்த ஈரூடகப்படையினரை தடுத்து நிறுத்திய இந்தியாவின் முயற்சிகள் என்பன அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அவதானிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிகழ்வுகளுடன் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளில் அதிக மாற்றங்களை அவதானிக்க முடிந்துள்ளது. றிச்சட் பௌச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு றொபேட் ஓ பிளேக் அதில் அமர்த்தப்பட்டதுடன், பசுபிக் பிராந்திய கட்டளை பீடமும் தனது செயற்திறனை அதிகரித்துக் கொண்டது.
அண்மையில் கொரிய வளைகுடாவின் கிழக்கு கடற்பகுதியில் நடைபெற்ற அமெரிக்க - தென்கொரிய கடற்படை ஒத்திகையை சீனாவும் வடகொரியாவும் கடுமையாக எதிர்த்தபோதும், பசுபிக் கட்டளை பீடம் அதனை கடும்போக்குடன் கையாண்டு கொண்டது. சீனாவுக்கு அண்மையான கடற்பகுதி என்பதால் சீனாவும், தென்கொரியா தனது எதிரி என்பதால் வடகொரியாவும் அதனை எதிர்த்திருந்தன.
இந்த கடல் ஒத்திகை நடத்தப்பட்டால் அதனை தன் மீதான போராகவே வடகொரியா பார்க்கும் எனவும், பதில் தாக்குதலும் நடத்தப்படும் எனவும் வடகொரியா எச்சரித்திருந்தது.
வடகொரியாவின் இந்த அச்சுறுத்தலை தொடர்ந்து போர் ஒத்திகையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அமெரிக்க கடற்படையின் மிகவும் சக்தி வாய்ந்த கப்பலிகளில் ஒன்றான ஜோர்ச் வொசிங்டன் பசுபிக் கட்டளை பீடத்தில் இருந்து இந்த கடல் ஒத்திகையில் இணைந்து கொண்டது.

70 அதி நவீன போர் விமானங்களுடன் வந்த வொசிங்டன் வடகொரியாவின் வாயை முடிவிட்டது. முன்னரை போலல்லாது ஆசிய பிராந்தியத்தில் விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ள அமெரிக்கா தற்போது விரும்புவதில்லை.
விடுதலைப்புலிகள் பலமாக இருந்தபோது சிறீலங்காவின் மூன்றில் இரண்டு கடற்பகுதிகளை அமெரிக்கா சுலபமாக தனது வசப்படுத்தும் நிலையில் இருந்ததாகவும், அது தவறிப்போனது அமெரிக்காவுக்கு பலத்த ஏமாற்றம் எனவும் ஐரோப்பாவை சேர்ந்த படைத்துறை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த ஏமாற்றங்களை கருத்தில் எடுத்துள்ள அமெரிக்கா, தனது வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் போர் உத்திகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்த்தான் - அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த அது முற்பட்டு வருகின்றது.
விடுதலைப்புலிகள் விடயத்தில் இந்தியா கையாண்ட உத்திகளை விட, ஆப்கானிஸ்த்தான் விடயத்தில் பாகிஸ்த்தான் கடைப்பிடித்துவரும் உத்திகள் திறமை வாய்ந்ததாக அமெரிக்கா கருதுகின்றது. மேலும் தென்ஆசியா பிராந்திய நெருக்கடிகளை நேரடியாக கையாண்டு, அதன் மூலம் தனது ஆளுமையை அங்கு நேரிடையாக செலுத்தவும் அமெரிக்க முயன்று வருகின்றது.
மாலைதீவு போன்ற சிறிய நாடுகளின் விவகாரத்தை இந்தியா நேரிடையாக கையாள்வதை முன்னர் அனுமதித்து வந்த அமெரிக்க அண்மையில் அங்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளில் நேரிடையாக தலையிட்டிருந்தது ஒரு முக்கிய மாற்றம் என கருதப்படுகின்றது. மாலைதீவு - சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அதனை கையாண்டிருந்தார்.
அமெரிக்காவின் இந்த உத்தி மாற்றங்களை இந்தியாவும் உணர ஆரம்பித்துள்ளது. அதனால் தான் பர்மாவின் இராணுவ ஆட்சியாளரை அது அரவணைத்து கொண்டுள்ளது.
எல்லா அண்டைய நாடுகளிலும் பேரம் பேசும் வல்லமையை இந்தியா இழந்துள்ளதாகவும், இது இந்தியாவுக்கு கிடைத்த துரதிஸ்ட்டம் எனவும் இந்திய ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர். ஆனால் ஆப்கான் விடயத்தில் பாகிஸ்த்தான் தனது பேரம்பேசும் வல்லமையை தக்கவைத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறீலங்காவில் பேரம்பேசும் அழுத்தத்தை இழந்துள்ள இந்தியா பர்மாவின் மூலம் அதனை தக்கவைக்குமான என்பது கேள்விக்குறியானது. ஆனால் இந்தியாவின் அரவணைப்பின் மூலம் பர்மா தனது கறைகளை கழுவிவிட முடியும்.
இருந்தபோதும், தென்ஆசியா பிராந்தியத்தில் இந்தியாவை ஓரம்கட்டி அமெரிக்கா நேரிடையாக நுளைந்துகொள்வது அந்த பிராந்தியத்தின் உறுதித்தன்மையையும், மனித உரிமைகளையும் மேம்படுத்த உதவும் என்றே கருதப்படுகின்றது. மேலும் பசுபிக் பிரந்திய கட்டளைப்பீடத்தின் இந்த நகர்வை தடுக்கும் படை வல்லமை அந்த கட்டமைப்பின் நடவடிக்கை எல்லை பிராந்தியத்தின் கீழ் உள்ளடக்கப்படும் 36 நாடுகளிலும் இல்லை என்பதும் உண்மை.
நன்றி: வீரகேசரி

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

இந்திய சீனா யுத்தத்தின் முடிவில் இலங்கைத் தீவு இரண்டாகும்!

சர்வதேச அரசியல் உறவுகளைச் சரிவரப் புரிந்து அவற்றை மிகுந்த மதிநுட்பத்துடன் கையாள்வதிலேயே தமிழீழ மக்களின் எதிர்காலம் பெரிதும் தங்கியுள்ளது. தேசிய இனப்பிரச்சனை என்பது ஒருபோதும் ஒர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல.
அது எப்போதும் ஒரு சர்வதேச பிரச்சனை என்ற மிக எளிமையான அடிப்படை உண்மையை பெரிதும் கருத்திலெடுக்கத் தவறியமையின் விளைவே கடந்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலான தொடர் தோல்விகளுக்கான மையப் புள்ளியாய் உள்ளது. இவ் வகையில் சர்வதேச யதார்த்தத்தை சரிவரப் புரிந்து கொள்ளவும், அதற்குப் பொருத்தமான வகையில் எம்மை மறுசீரமைத்து ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் வேண்டிய இரு முக்கிய பணிகள் உடனடித் தேவைகளாய் உள்ளன.
தற்போதைய சர்வதேச அரசியல் உறவை ஒரு நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய மனோபாவங்களாலும், இறுகி, கட்டிபற்றிப் போயுள்ள பழைய வரண்ட சித்தாந்தங்களினாலும், வெறும் நம்பிக்கை வேகத்தினாலும் பரிசீலிப்பதை கைவிட்டு புதிய உயிர்த்துடிப்புள்ள நடைமுறைக்குப் பொருத்தமான வகைகளில் மிகுந்த மதிநுட்பத்துடனும் இராஜதந்திர மெருகுடனும் அணுக வேண்டியது அவசியம்.
இருப்பதை வைத்துக்கொண்டுதான் எதையாவது செய்தாக வேண்டுமே தவிர கற்பனை வேகத்தில் வானளாவப் பாய முடியாது. வரலாறு எம்மை எங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறதோ அங்கிருந்துதான் நாம் எமது அடுத்த கட்டப் பிரயாணத்தை ஆரம்பிக்க முடியும்.
இராமநாதன் முதல் பிரபாகரன் வரை தோல்வி ஒரு தொடர் கதையாய் உள்ளது. யதார்த்தத்தை சரிவரக் கிரகித்து வெளிநாட்டுச் சக்திகளை மிகுந்த மதிநுட்பத்துடன் கையாள்வதன் மூலம் இலங்கைத் தீவில் ஈழத் தமிழரையும், ஏனைய இன மதத்தவர்களையும் தொடர்ந்து தோற்கடித்து வருவதில் சிங்களத் தலைமைகள் வெற்றி பெற்று வருகின்றன.
சிங்கள தலைவர்கள் தொடர்ந்து தோற்கடித்து வருவது தமிழ் தலைவர்களை மட்டுமல்ல, கூடவே இந்தியாவையும் கடந்த 2250 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தோற்கடித்து தம் இருப்பை பாதுகாத்து வருவதுடன் சீனாவைக் காட்டி இந்தியாவிற்கு தற்போது அச்சமேற்படுத்தத் தொடங்கியுள்ளனர். அத்துடன் அமெரிக்கா உட்பட மேற்குலகத்திற்குச் சவால் விடக்கூடிய நிலையையும் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் வெற்றிநடை போடுவதற்கு அவர்களது சர்வதேச அரசியல் பற்றிய புரிதலும், அவர்களது மதிநுட்பம் நிறைந்த இராஜதந்திர அணுகுமுறைகளுமே காரணமாகும்.
ஒரு சிறிய தேசத்தின் முதன் நிலை ஆயுதம் இராஜதந்திரமே தவிர புஜபலமல்ல. வலுவான மக்களாதரவினால் அரணமைக்கப்பட்ட இராஜதந்திரத்தை எவர் கொண்டிருக்கிறாரோ, அவர் வெற்றிக்கான வாய்ப்புக்களை அதிகம் கொண்டிருப்பார். அரசியல் ஆடுகளத்திற் குதிப்போருக்கான பிரதான அணிகலன்களாய் மக்களாதரவு, சர்வதேச அரசியல் பற்றிய புரிதல், மெருகான இராஜதந்திரம் என்பன அமைகின்றன.
எதிரி பரிதாபமான தோல்வியை மட்டும் எமக்குத் தரவில்லை, கூடவே மகத்தான படிப்பினைகளையும் எமக்குத் தந்திருக்கின்றார். உண்மையாகவே யதார்த்தத்தில் காணப்படும் சாதகமான வாய்ப்புகளைக் கண்டறிந்து வெற்றிக்கு வழி அமைக்க வேண்டியது அவசியம். தோல்வி கண்ட வழிகளைக் கைவிட்டுப் புதிய வழிகளைத் தேடியாக வேண்டும்.
உணர்ச்சி வேகத்திற்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் எம்மை, எமது சிந்தனை முறைமைகளை, அணுகுமுறைமைகளை, சமூக விழுமியங்களை எமது பாதைகளை நாம் மறுசீரமைப்புச் செய்தாக வேண்டும். அணுகுண்டு வீச்சுக்கு இலக்காகி ஹிரோஷிமா, நாகசாயி நகரங்கள் பரிநாசமானபோது யப்பானிய மக்கள் தமது கோபத்தையும், ஆவேசத்தையும் புதிய எண்ணங்களாக உருமாற்றி தலையெடுக்கத் தலைப்பட்டது போல நாமும் நவீன எண்ணங்களுடன் உன்னதமான பாதையில் தலையெடுக்கத் தலைப்படவேண்டும்.
எம்முன் இப்போது இரண்டு பணிகள் முதன்மையாய் உள்ளன. ஓன்று முற்றிலும் ஜனநாயக வழியில் எம்மைப் புதுப்பொலிவுடன் மறுசீரமைப்பதற்கான சிந்தனையை முன்வைத்தல், இரண்டாவது சர்வதேச அரசியலைச் சரிவரப் புரிந்து அதற்குப் பொருத்தமாக எம்மை நெறிப்படுத்துவதற்கான சிந்தனையை முன்வைத்தல் என்பனவாகும்.
இக்கட்டுரை இதில் இரண்டாவது பணியினை நிறைவேற்றுவதற்கான ஒரு சிந்தனை முயற்சியாய் அமைகிறது. ஏகாதிபத்தியம் என்ற பதம் மிக அபத்தமாகப் பொருள் கொள்ளப்படுவதுடன், அது மிகவும் குருட்டுத்தனமாகவும் பிரயோகிக்கப்படுகிறது. அத்துடன் அரைநூற்றாண்டாய் பனிப்போர் சிந்தனை முறைமைக்கு பழக்கப்பட்டுப் போயிருந்த மூளைகள் பனிப்போர் முறைகள், பனிப்போர் மனோபாவத்திற்கு ஊடாகவே சர்வதேச அரசியலை நோக்குகின்றன.
இவை இரண்டும் நடைமுறை யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தடையாய் இருப்பதுடன், நடைமுறை சார்ந்து ஆபத்தானவையாயும் உள்ளன.
ஏகாதிபத்தியம் என்ற பதத்தை அநேகமாக காலனிய ஆதிக்கம் என்ற கருத்துப் படிமத்திற்குள்ளால் பார்க்கும் போக்கு வலுவாகக் காணப்படுகிறது. இது அதிகம் பொருளாதார அர்த்தத்தில் சந்தை ஆதிக்கத்திற்கான ஏகபோகத்திற்கு உள்ளாலும், நிதிமூலதன ஆதிக்கத்திற்கு உள்ளாலும் புரிந்து கொள்ளப்படவேண்டிய பதமாய் உள்ளது. இந்த வகையில் சந்தை பிடிப்பதற்காக வர்த்தக ஏகபோக ஆதிக்கப் போட்டியில் ஈடுபடும் எந்தொரு நாடும் ஏகாதிபத்திய நாடேயாகும்.
ஏகாதிபத்தியம் எனும் பதத்தை பழைய கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வதால் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றை மட்டும் ஏகாதிபத்தியம் என்று சொல்லிக் கொண்டு புதிதாக அரசியற் பொருளாதார ஏகாதிபத்திய ஆதிக்கப் போட்டியில் ஈடுபடும் நாடுகளின் வல்லாதிக்கப் போக்குகளை புரிந்து கொள்ளவும் சரியான அரசியல் தீர்மானம் எடுக்கவும் தவறுகிறோம். இது தேசிய இனப்பிரச்சனையிலும் மற்றும் உள்நாட்டு அரசியலிலும், சர்வதேச அரசியலிலும் பிழையான நிலைப்பாடுகளை எடுக்க வைப்பதுடன் தேசிய ஒடுக்குமுறைமைகளை நியாயப்படுத்தவும் அத்தகைய ஒடுக்கு முறைகளுக்குத் துணைபோகவும் வழிவகுத்து விடுகிறது.
சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருப்பதனால் அதனை ஒரு சோசலிச நாடென்று நினைத்துக் கொண்டு சீனாவை ஏகாதிபத்திய நாடுகளின் பட்டியலில் இருந்து விலக்கிப் பார்க்கும் ஒரு தவறான போக்கு இருக்கிறது. வர்த்தக நிதிமூலதன ஆதிக்கப் போட்டியில் ஈடுபடுகின்ற நாடு எதுவாயினும் அது ஏகாதிபத்திய நாடு தான். வர்த்தகமே சுரண்டலினதும் ஏகப்பரந்த பொருளாதார சூறையாடலினதும் உயிர்நாடி. ஆசியா முழுவதிலும் சீனா தனது வர்த்தக ஆதிக்கத்தை உருவாக்கி உள்ளதுடன், அது கண்டங்களையும் கடந்து புவியடங்கலுமான வர்த்தக வழி சுரண்டல் ஆதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ளது.
இத்தகைய வர்த்தகம் மற்றும் கடல்வழி ஆதிக்கத்திற்கான போட்டி உலகப் பொருளாதார நெருக்கடிகளின் பின்னணியில் இன்னும் சில ஆண்டுகளில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான யுத்தமாக வெடிக்கக்கூடிய ஆபத்து மிகத் தெளிவாகவே தெரிகிறது. அத்தகைய யுத்தத்தில் இலங்கைத்தீவு மிக முக்கிய புள்ளியாக அமையும். அதில் இனப்பிரச்சனை ஒரு தனிப்பரிமாணம் பெறும்.
இதனைத் துல்லியமாக புரிந்து கொள்வதற்காகவும்; ஏகாதிபத்தியத்தின் தற்போதைய இயல்பினைப் புரிந்து கொள்வதற்காகவும் அதன் வழி சர்வதேச அரசியல் போக்கை சரிவர மதிப்பிட்டு அதற்கேற்ப எமது தலைவிதியை நிர்ணயிப்பதற்காகவும் அரசியல் பொருளாதார ரீதியில் இதனை வேரிலிருந்து விழுது வரை ஆராயவேண்டிய அவசியமுண்டு. அவற்றை இனி சரிவரப் பாரப்போம்.
காலனித்துவமானது நான்கரை நூற்றாண்டுக்கு மேல் நீடித்த மேற்குலகத்தினது அரசியற் – பொருளாதார – இராணுவக் கோட்பாடாயும், நடைமுறையாயும் அமைந்தது. இக் காலனி ஆதிக்கத்தை பொதுவாக ‘ஏகாதிபத்தியம்’ என்ற ஒரு பொதுப் பதத்தால் அழைத்தாலும் ஏகாதிபத்தியம் எனும் பதம் ‘பழைய ஏகாதிபத்தியம்’, ‘புதிய ஏகாதிபத்தியம்’ என்று இரண்டாக வகைப்படுத்தப்படும். இதன்படி காலனி ஆதிக்கம் பழைய ஏகாதிபத்தியம் என்ற பிரிவுக்குள் அடங்குகிறது.
முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பானது வளர்ந்து அது ஏக போக பொருளாதாரமாக மாறிய முதலாளித்துவத்தின் உச்சக்கட்டத்தை புதிய ஏகாதிபத்தியம் என்பது குறிக்கிறது. காலனித்துவ ஆதிக்கம் என்பது ஒரு பேரரசு நேரடியாக இன்னொரு அரசையோ அரசுகளையோ இராணுவ ரீதியில் ஆக்கிரமித்து அங்கு தமது குடியேற்றங்களை நிறுவி அதன் மூலம் பொருளாதாரக் கொள்ளையில் ஈடுபடும் நடைமுறையாகும். குடியேற்றங்களை செய்ய தம்மிடம் மக்கள் தொகை இல்லாத இடத்து இராணுவ ஆதிக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரக் கொள்ளையில் ஈடுபட்டதும் காலனித்துவம் என்றே அழைக்கப்டும்.
ஆசிய, ஆபிரிக்க, அமெரிக்க நாடுகள் இவ்வாறு மேற்குலகின் ஆதிக்கத்திற்கு நேரடியாக உட்பட்ட காலகட்டம் வரலாற்றில் சுமாராக நான்கரை நூற்றாண்டுகளைக் கொண்டது. இது கி.பி 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிற் தொடங்கி 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நீண்ட காலமாகும். காலனித்துவம் தோன்றிய காலத்தில் முதலாளித்துவம் எனும் சமூக பொருளாதாரக் கட்டமைப்பு இருந்திருக்கவில்லை. மத்திய கால நிலப்பிரபுத்துவ சமூகத்திலிருந்து வணிகவாதம் எழுச்சி பெறத் தொடங்கிய பின்னணியிலிருந்தே காலனிய ஆதிக்கவாதம் தோன்றியது. காலனித்துவ பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட மூலதனத் திரட்சியும் மூலதனக் குவிவும்தான் முதலாளித்துவத்தை மேற்குலகில் உருவாக்கியது. அந்த மூலதனக் குவிவானது மேற்கில் கைத்தொழில் புரட்சி உருவாகவும் அங்கு தேசிய வாதம் தோன்றவும் வழிவகுத்தது.
காலனிய ஆதிக்கத்தின் தலைமகனாக முதலாளித்துவம் உருவானது. முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமானது அந்த முதலாளித்துவத்தின் பிரதான பொறிமுறைகளான விலைப் பொறியகம், நிறைபோட்டி என்பவற்றை தகர்த்து உடைக்கின்ற ஏகபோக சந்தை ஆதிக்க, நிதி ஆதிக்கப் போக்காய் புதிய ஏகாதிபத்தியம் தோன்றியது. நாம் இப்போது ஏகாதிபத்தியம் என்று பொதுவாக சொல்லுவது இந்த புதிய ஏகாதிபத்தியத்தின் வரவைத் தொடர்ந்து வளர்ந்து வரும் அரசியற் பொருளாதார ஆதிக்கத்தைத்தான். இந்த ஏகாதிபத்தியமானது காலனித்துவம் உயிர்வாழ்ந்து கொண்டிருந்த அதன் நான்கு நூற்றாண்டுகள் பூர்த்தியாகிக்கொண்டிருந்த 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தோன்றி இற்றைக்குச் சுமாராக ஒன்றேகால் நூற்றாண்டை அது பூர்த்தியாக்கியுள்ளது. இது காலனித்துவம் உயிர் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தோன்றிய முதலாளித்துவத்தின் உச்சக் கட்டமாய் அதுவும்; காலனித்துவம் சரிய முன்பே தோன்றிய ஒன்றாய் இந்த புதிய ஏகாதிபத்தியம் உள்ளது.
வரலாறு தொடர்ந்து வளர்ந்து செல்கிறது. அது ஒருபோதும் ஒரேமாதிரியாக இருக்க மாட்டாது. ஆதிக்கங்களும், ஆக்கிரமிப்புக்களும் காலத்திற்கும், இடத்திற்கும், சூழலுக்கும் ஏற்ப புதுவழக்கங்களைப் பெறும். காலனிய ஆதிக்கம் எனும் பழைய ஏகாதிபத்தியம் வரலாற்றில் அவமானகரமாய் தோற்கடிக்கப்பட்டதுடன், அந்த ஆதிக்கம் இன்னொரு புதிய வடிவில் புவியெங்கும் பரவியுள்ளது. அதுவே ஏகபோகத்திற்கான சந்தை – வர்த்தக – நிதிமூலதன ஆதிக்கக் கட்டமைப்பாகும். எனவே இந்த சந்தைபிடி வர்த்தக நிதி மூலதன ஆதிக்கப் போட்டியில் எந்தொரு நாடு ஈடுபட்டாலும் அது ஏகாதிபத்திய நாடேயாகும்.
இதனை சற்று விரிவாகவும் சற்று ஆழமாகவும் பின்நோக்கி முன்வருவோம். காலனிய ஆதிக்கத்தின் விளைவாக பிரித்தானியாவில் மூலதனக் குவிவு பெரிதும் ஏற்பட்டதால் அங்கு முதலில் கைத்தொழிற் புரட்சி ஏற்படுவது சாத்தியமானது. இதனால் மேற்கைரோப்பாவில் முதலாளித்துவம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. இதன் விளைவாக இப்பகுதியிற்தான் கைத்தொழில் பண்ட உற்பத்தி முதலாளித்துவ வளர்ச்சியுடன் இணைந்து அறிவியல், விஞ்ஞானம், தொழில்நுட்ப, ஜனநாயகம், மக்கள் நிறுவன அமைப்பு முறைகள் என்பன பெரிதும் வளரத் தொடங்கின. எனவே இத்தகைய வளர்ச்சிகளின் பின்னணியில் சோசலிசப் புரட்சி முதலில் மேற்படி பகுதியைக் சேர்ந்த பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளிலேயே ஏற்படுமென கார்ல் மாக்ஸ் எதிர்பார்த்தார். அதாவது சோசலிசப் புரட்சிக்கு முதலாளித்துவ வளர்ச்;சி முன்நிபந்தனை என கார்ல் மாக்ஸ்; விளக்கியிருத்தார் என்பதே இதன் அர்த்தமாகும். இதன் மிக ஆழமான உட்பொருளும் சாராம்சமும் என்னவெனில் சோசலிச சமூக விருத்திக்கு கைத்தொழிற் பண்ட உற்பத்தியும் தொழிநுட்ப வளர்ச்சியும் மிக அடிப்படையானது என்பதாகும்.
ஆனால் சோசலிச புரட்சி முதலில் ஏற்பட்டது முழுவளர்ச்சி அடைந்த முதலாளித்து நாட்டிலன்றி அத்தகைய கைத்தொழில் அரை வளர்ச்சி அடைந்திருந்த ரஸ்யாவிலாகும்.
கைதொழில் வளர்ச்சியடைந்த மேற்கூறிய நாடுகளில் சோசலிச புரட்சி முதலில் ஏற்படாததற்கான பிரதான காரணம் அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் உலகில் ஏனைய பகுதிகளில் கொள்ளையடித்தும் சுரண்டியும் சென்ற பெருவாரியான செல்வத்தின் ஒரு பகுதியை தமது நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஒரு வகை இலஞ்சமாய் கிள்ளித் தெளித்தனர். இதன் மூலம் இந் நாடுகளின் தொழிலாளர் வர்க்கம் ஏனைய நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்திலிருந்து வேறுபட்டு டுயடிழரச யுசளைவழஉசயஉல எனப்படும் தொழிலாளப் பிரபுத்துவ நிலையை அடைந்தனர்.
உலகின் ஏனைய நாடுகளின் தொழிலாளரை விடவும் இவர்களுக்கு உயர்ந்த ஊதியம், சலுகைகள், வீட்டுவசதிகள், சமூக நலன்பேண் நடவடிக்கைகள் என்பவற்றின் மூலமும் கைத்தொழிலை யுத்ததளபாட தயாரிப்புக்கு மாற்றியமைப்பதன் மூலமும் இத் தொழிலாளர்களுக்கு பங்கிடப்படும் ஒருவகை உயர்தபட்ச ஊதியம் என்பவற்றின் வாயிலாகவும் இத் தொழிலாளப் பிரபுத்துவ ஏற்பாடு சாத்தியமானது. உலகின் ஏனைய தொழிலாளி வர்க்கங்களையும், ஒடுக்கப்படும் இனங்களையும் இராணுவ ரீதியில் கொன்றொழிக்கவும் ஒடுக்கவும் மேற்படி தொழிலாளி வர்க்கம் தயாரிக்கும் இராணுவ தளபாட கைத்தொழில் உற்பத்தி ஒரு காரணியாய் செயல்படுதையும் இங்கு அவதானித்தல் அவசியம்.
இந்த நாடுகளின் தொழிற்சங்கங்களும் இத்தகைய பின்னணிக்குப் பொருத்தமான பிற்போக்கு பாதையையே சர்வதேச அரங்கில் பின்பற்றின. இது தொழிலாளர் வர்க்கத்தை ஒரு பக்கமாய் வீங்கிப் பெருத்த சமச்சீரற்ற வளர்ச்சிக்கு (ருநெஎநn னநஎநடழிஅநவெ) இட்டுச்சென்றது. இது புரட்சிக்கு எதிர் நிலை வளர்ச்சியாய் அமைந்தது.
அதேவேளை அரை முதலாளித்துவம் வளர்ச்சியடைந்திருந்த ரஸ்யாவின் மீது முதலாம் உலக யுத்தம் ஏற்படுத்திக் கொண்டிருந்த சுமையானது அங்கு புரட்சியை வெடிக்க வைத்தது. கைத்தொழில் வளர்ச்சி அடையாத நாட்டில் அப்புரட்சி வெடித்ததால் அங்கு சோசலிசப் பொருள் உற்பத்தி வெற்றி பெற மறுத்தது. இதனை விரைவாக புரிந்து கொண்ட லெனின் 1921ஆம் ஆண்டு NநுP எனப்படும் புதிய பொருளாதாரக் கொள்ளையை நடைமுறைப்படுத்த தொடங்கினார். இதன் மூலம் சிறு முதலாளித்துவ உற்பத்தியையும் அரச முதலாளித்துவ உற்பத்தியையும் உள்வாங்கிய சோசலிச உற்பத்திக்கு திட்டமிட்டார். அது அவரின் நுண்ணறிவில் சிறப்பாக உதயமானாலும் பின்வந்த ஆட்சியாளர் அதனை அரச முதலாளித்துவ சமூக ஏகாதிபத்தியத்திற்கு இட்டுச் சென்றனர். அதன் தொடர் விளைவாக சோவியத் யூனியன் 1989ஆம் ஆண்டு வீழ்ந்து நொறுங்கி இன்று உலகலாவிய ஏகாதிபத்திய சந்தையில் அலை மோதிக் கொண்டிருக்கின்றது.
1949ஆம் ஆண்டு புரட்சி வெற்றி பெற்ற சீனாவிலும் மேற்படி ரஸ்சியாவில் காணப்பட்டது போன்ற கைத்தொழில் வளர்ச்சியின்மை நிலவியதால் அங்கும் சோசலிச பொருளாதாரம் பெரிதும் ஊசலாடியது. இப்பின்னணியில் 1970 களின் மத்தியில் மா ஓ சேதுங் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்சன் உடன் கைகோர்த்ததன் மூலம் சீனப் பொருளாதாரத்தை ஏகாதிபத்திய வர்த்தக பொருளாதாரத்திற்குள் இழுத்துவிட்டார்.
அவருக்கு அடுத்து பதவிக்கு வந்த டெங்சியா ஓபிங் ‘பூனை கறுப்போ, வெள்ளையோ அது எலி பிடித்தால் போதும்’; என்ற கொள்கையின் அடிப்படையில் நால்வகை நவீன மயமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் சீனாவை முற்றிலும் ஏகாதிபத்திய யுகத்துள் தள்ளிவிட்டார்
மேஜி புரட்சி (ஆயதi சுநளவழசயவழைn) எனப்படுகின்ற நவீனமயமாக்கல் திட்டத்தை 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் யப்பான் மேற்கொள்ளத் தொடங்கியது. அந்த நவீன மயமாக்கம் யப்பானை இரண்டாம் உலக யுத்தத்திற்குள் பாரியளவில் தள்ளிவிட்டது. சீனாவில் டெங்கால் தோற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்தியத்தின் பாதையிலான நவீனமயமாக்கலும் நிச்சயம் சீனாவை ஒரு பெரும் யுத்தத்திற்குள் தள்ளும்.
டெங்கினது நால்வகை நவீனமயமாக்கற் திட்டத்தின் கீழ் தனியார் மயப்படுத்தப்பட்ட அரச முதலாளித்துவ ஏகாதிபத்தியப் பாதை தோற்றுவிக்கப்பட்டது. இது சுமாராக கால் நூற்றாணடு காலத் திட்டமாகும். ஏறக்குறைய 2000ஆம் ஆண்டை அண்டி இத்திட்டத்தின் பெருவெட்டான இலக்கு அடையப்பட்டிருக்க முடியும்.
விவசாயம், கைத்தொழில், தொழில்நுட்பம், இராணுவம் என்பனவே இந்த நால்வகை நவீனமயமாக்கலுக்கு உட்படும் அம்சங்களாகும். இத்திட்டமானது இதன் முதல் அரைப்பகுதி காலத்திற்குள் சீனாவில் உள்நாட்டு சந்தையை ஓரளவு நிரப்பிவிடக்கூடியது. அதன் தொடர் வளர்ச்சியால் அது உள்நாட்டு சந்தையை நிரப்பி வெளியே வழியத் தொடங்குவது இயல்பு.
தனது உற்பத்தியைத் தொடர்ந்து பேணி மீள் உற்பத்திக்குப் போகவும், பட்டாளமெனப் பெருகும் வேலையற்றோருக்கான வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும் தனது சந்தையை வர்த்தக நோக்கில் வெளிநாடுகளை நோக்கி விரிவாக்க வேண்டியது சீனாவுக்கு அவசியமாகும். இந்த சந்தை பிடி போட்டி ஏகாதிபத்தியப் போட்டியாக அமைகின்றது. இந்த ஏகாதிபத்திய சந்தை ஆதிக்கப் போட்டியில் சீனா கடந்த ஒரு தசாப்பத்திற்கு மேலாக மிகப் பெருவளர்ச்சி அடைந்து வருகிறது.
வெளிநாடுகளைச் சுரண்டும் ஏகாதிபத்திய வர்த்தக ஆதிக்கத்தின் மூலமே சீனா பெருகிவரும் தனது சனத்தொகைக்கு உணவுபோடவும் தனது தொழிலாளர்களுக்கு சற்று மேலான ஊதியம் வழங்கவும், அதன் மூலம் தனது ஆதிக்கத்தை அரச கட்டிலில் பேணவும் முடியும். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மேற்குலக ஆட்சியாளர் தெளிவாக டுயடிழரச யுசளைவழஉசயஉல க்கு போய்விட்டனர். 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனாவும் டுயடிழரச யுசளைவழஉசயஉல யில் தெளிவாகக் கால் பதித்து விட்டது.
உலகளாவிய தொழிலாளர்களை வர்த்தகத்தின் மூலம் சுரண்டி, சீனத் தொழிலாளர்களை மேல் நிலைப்படுத்தும் அரச முதலாளித்துவ ஏகாதிபத்தியமே சீனாவின் இன்றைய உலகளாவிய அரசியற் பொருளாதாரமாய் உள்ளது. ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் வரை சீனா தனது சந்தையை விரிவாக்கி வருகின்றது. அமெரிக்கா, யப்பான், ரஸ்யா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா என்பனவற்றுடன் சீனா தனது ஏகாதியத்திய வர்த்தக ஆதிக்கபோட்டியில் ஈடுபட்டுள்ளது. இவற்றுள் சீனாவின் முன் தோன்றும் பலவீனமான நாடும், சீனாவிற்கு வசதியான நாடும் இந்தியாதான். எனவே, ஏகாதிபத்திய பொருளாதார முரண்பாடு முற்றி வெடிக்கும் போது இந்தியாவுடன்தான் சீனா மோதும் நிலை முதலில் உருவாகும்.
இதனை மேலும் சிறிது தர்க்க பூர்வமாக பார்ப்போம். 1980களின் தொடக்கத்தில் உத்வேகமடையத் தொடங்கிய சீனாவின் நால்வகை நவீனமயமாக்கல் கொள்கை இந்தியாவை உலுக்கத் தொடங்கியது. அமைதிக்கு அபிவிருத்தி அவசியம் என்ற டெங்கின் இராஜதந்திர அணுகுமுறையால் இந்தியாவிற்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் அப்போது ஏற்படவில்லை. இத்தகைய நிலையில் இந்தியாவும் சீனாவிற்கு ஈடுகொடுக்கும் நோக்கில் தனது வழமையான தேசிய முதலாளித்துவம் என்று தான் கூறிக்கொண்ட பொருளாதார கொள்கைக்கு பதிலாக தொழில்நுட்பத்தைப் பெறுவதற்காக என்று யப்பான் மற்றும் மேற்குலகுடன் கூட்டுப் பொருளாதார உற்பத்தியில் (ஊழடடயடிசழசயவழைn) ஈடுபடத் தொடங்கியது. ர்நசழ-ர்ழனெய ஊழடடயடிழசயவழைn இவ்வகையானதே. ஆனாலும் சீனாவின் அசுர வேக நால்வகை நவீன மயமாக்கத்தோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் வேகம் பின்தங்கியதாகவே உள்ளது.
தற்போது நிலவும் ஏகாதிபத்தியத்தின் இருதயமாக இருப்பது நிதிநிறுவனங்கள் தான். அந்த நிறுவனங்கள் திவாலகத் தொடங்கியமை அந்த ஏகாதிபத்திய அமைப்பிற்கு ஒரு சிவப்பு விளக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இந்த ஏகாதிபத்தியப் பொருளாதார நெருக்கடி எங்கோ ஒரு பக்கத்தில் யுத்தமாக வெடித்துதான் அது தன்நிலையைச் சமன் செய்யப் போகின்றது.
ஏகாதிபத்திய வர்த்தக நிதிமூலதன ஆதிக்கம் என்னும் ஓரே ஒரு மைய உலக ஒழுங்கே இந்தப் பூமியில் உண்டு. இந்த அமைப்பிற்கு தலைமை தாங்கும் நாடு அமெரிக்கா. இதில் புதிய போட்டியாளனாய் ஏகாதிபத்திய அரங்குள் நுழைந்திருக்கும் அதிவேக நாடு சீனா. எனவே யுத்தம் சீனாவில் முளை கொள்வதற்கான வாய்ப்பே அதிகம். மேஜி புரட்சியின் மூலமான தனது நவீனமயமாக்கலின் விளைவாய் யப்பான் வளர்ச்சி அடைந்த போது அது 1905ஆம் ஆண்டு ரஸ்யாவுடன் முதலில் முட்டி மோதி யுத்தமாய் வெடிக்க தொடங்கியது. அவ்வாறே சீனாவும் தனது நால்வகை நவீன மயமாக்கலின் நிறைவாக அது இந்தியாவுடன் முட்டி மோதி யுத்தமாக வெடிக்கும் காலம் வெகு தொலைவிலில்லை. ஏகாதிபத்தியப் பொருளாதாரப் போட்டியின் விளைவாக இன்னும் சில வருடங்களுள் யுத்தம் வெடித்துவிடும் என்பது மிகவும் சோகம் நிறைந்த வரலாற்று உண்மையாகும்.
உலகம் என்றால் வர்த்தகம், வர்த்தகம் என்றால் கப்பல், கப்பல் என்றால் கடல், கடல் என்றால் துறைமுகம் என்பதே உண்மை நிலவரமாகும். வர்த்தக ஆதிக்கத்திற்கான கடல் என்ற வகையில் இந்து சமுத்திரமும், துறைமுகம் என்ற வகையில் இலங்கைத் தீவின் துறைமுகங்களும் முக்கியத்துவம் பெறப் போகின்றனவா என்பது ஆழ்ந்த கவனத்திற்குரிய மையக் கேள்விகளாகும். ஏகாதிபத்திய பொருளாதார கட்டமைப்பின் முரண்பாட்டால் வெடிக்கப்போகும் இந்த யுத்தத்தை வல்லமை பொருந்திய ஏகாதிபத்திய நாடுகள் தமது அமெரிக்க, ஐரோப்பிய மண்ணில் வெடிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டாது. ஆதலால் அந்த யுத்தம் ஆசிய, இந்து சமுத்திர பிராந்தியத்தில் தான் வெடிக்கப் போகிறது. அப்படி ஒரு யுத்தம் வெடிக்கும் போது மேற்குலகம் இந்தியா பக்கம் சாய்வதை தவிர அதற்கு வேறு வழி இருக்காது.
2012ஆம் ஆண்டுக்கு முன் சீன – இந்திய யுத்தம் வெடிக்குமென்று பாரத் வர்மா கடந்த ஆண்டு ஒரு கட்டுரை எழுதியுள்ளார். 2020ஆம் ஆண்டுக்குள் சீன – இந்திய யுத்தம் வெடிக்குமென்று 1991ஆம் ஆண்டு ஈழத்திலிருந்து வெளியான நூலொன்று கூறுகின்றது. எப்படியோ 2015ஆம் ஆண்டுக்கு முன் யுத்தம் வெடிப்பதற்கான தர்க்கபூர்வ அரசியற் பொருளாதாரப் போக்கு கூர்மை அடைந்து செல்கின்றது.
சீனாவின் ‘அபிவிருத்திக்கான அமைதிக் காலம்’ நிறைவடைந்து யுத்தத்திற்கான மோதற் காலம் தோன்றியுள்ளது. சீனாவுக்கும், இந்தியாவிற்கும் இடையே தற்போது தோன்றி வரும் முறுகற் போக்கு இதனை நிரூபித்து நிற்கின்றது.
தவிர்க்க முடியாதவாறு நிகழப் போகும் இந்த யுத்தத்தின் பின்னணியில் இலங்கைத் தீவு இரண்டாக உடைவதைத் தான் இந்தியா தனது இறுதி தெரிவாக மேற்கொள்ளும் என்பதிற் சந்தேகமில்லை. அதாவது தெற்கே இந்திய உபகண்டத்தின் பாதுகாப்பு ஈழத்தமிழரின் பாதுகாப்பிற்தான் தங்கியுள்ளது. அது தான் முழு இந்தியாவினதும் பாதுகாப்பிற்கான அடிப்படையாகவும் அமையும்.
மகிரிஷி

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்? மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை நான்கு சதவீதம் அதிகம்.

புத்திசாலிதனத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் மூளையின் அமைப்பில் சின்ன,சின்ன வித்தியாசங்கள் உண்டு.பெண்களின் மூளையில் உள்ள செல்களை விட ஆண்களின் மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை நான்கு சதவீதம் அதிகம். அதனால்,மூளையின் எடையும் ஒரு 100 கிராம் அதிகம்.( அதாவது ஆண்களுக்கு தலைக்கனம் அதிகம்) பெண்களின் மூளையில் செல்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும்,செல்களுக்கிடையே உள்ள இணைப்பு அதிகம். அதாவது, பெண்கள் குறைந்த அளவு செல்களை வைத்துகொண்டு விரைவாக வேலை செய்கிறார்கள்.

மூளையில் லிம்பிக் சிஸ்டம் என்றொரு அமைப்பு இருக்கிறது.இதுதான் நமது பலவித உணர்ச்சிகளைக் கையாள்கிறது. இது,ஆண்களைவிடப் பெண்களுக்கு சற்று பெரிதாக இருக்கும். இதன் விளைவாக மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துவது,உணர்வு ரீதியான பிணைப்பை ஏற்படுத்திகொள்வது,ஆகியவற்றில் ஆண்களை விட பெண்கள் மேலானவர்கள். இதனால்தான் குழந்தைகளைக் கவனிப்பது,வீட்டைப் பராமரிப்பது, போன்ற விசயங்களைப் பெண்கள் சிறப்பாகக் கையாள்கிறார்கள்.உலகத்தின் எந்தக் கலாச்சாரமாக இருந்தாலும் இதுதான் நியதி. மூளையின் இடப்பக்கம் ,கணக்குப் போடுவது, தர்க்க ரீதியான சிந்தனைகள் இதற்கு பொறுப்பு.

மூளையின் வலப்பக்கம் மொழியாற்றல், பேச்சுத்திறன் இதற்கு பொறுப்பு. இடப்பக்க மூளையையும் வலப்பக்க மூளையையும் கோர்பஸ் கோலோசம் (corpus colosum) என்ற ஒரு " சாலை : இணைக்கிறது. ஆண்களைவிடப் பெண்களின் மூளையில் இந்த சாலை பெரியது. அதன் காரணமாகப் பெண்களின் மூளையில் தகவல் பரிமாற்றங்கள் மிக வேகமாக நடக்கின்றன. இதனால் பெண்கள், மூளையின் இரண்டு பக்கங்களையும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மொழியை கற்றுகொள்வதில் ஆரம்பித்து, உள்ளுளணர்வு என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கு திறன் சற்று கூடுதல். ஆண்கள் கணக்குப் போடுவதில் பலே கில்லாடிகள் பாருங்க

உங்கள் குழந்தையின் உணர்வைப் புரிந்து கொள்ளுங்கள்! பிள்ளை நல்லவராவதும் தீய வராவதும் அன்னை வளர்ப்பினிலே..

குழந்தைகளுக்கு வகை வகையான உணவுகளை ஆக்கித் தருகிறீர்கள். விதவிதமான உடைகளை வாங்கித் தருகிறீர்கள். இது போதுமா? நிச்சயம் போதாது. குழந்தையின் மன உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நாம் நடந்து கொள்ளவேண்டும். ஆனால் நாம் என்ன நினைக்கிறோம்? நம்முடைய இயல்புகளைப் புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தபடி இருக்கவேண்டும் என்று நினைக்கிறோம். இது தவறானது. குழந்தைகள் பெற்றோர்களிடம் பாதுகாப்பை மட்டுமல்ல, பரிவையும் எதிர்பார்க்கிறார்கள்.

அன்புடன் அக்கறையையும் தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மையையும் எதிர்பார்க்கிறார்கள். உங்கள் குழந்தைகளை நீங்களே புரிந்து கொள்ளாவிட்டால் பின்பு யார் புரிந்து கொள்ளப் போகிறார்கள்? அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கும் தன்மை மனிதர்களிடம் காணப்படுகிற ஒரு விசேஷப் பண்பு. உங்கள் குழந்தை உங்கள் சக மனிதர்தான். அடிமைகளைப் போல அவர்களை நடத்தாமல் நண்பர்களிடம் நடந்து கொள்வதைப் போல நடந்து பாருங்கள். உங்கள் குழந்தை வளர்வதை உணர்வீர்கள்.

உங்கள் குழந்தையும் பிறர் உணர்வும்:

எந்தக் குழந்தையின் உணர்வுகளை அதன் பெற்றோர்கள் அக்கறையோடு புரிந்து பரிவு காட்டுகிறார்களோ, அந்தக் குழந்தைதான் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கிறது என்று டாக்டர் பார்னெட் தெரிவிக்கிறார். பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மை குழந்தைகளிடம் எப்படி இருக்கிறது? இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் விரிவான ஆய்வு செய்து தங்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள்.

குழந்தைகள் வளர்ந்து வரும் சூழல்கள் அவர்களது குணத்தில் ஏற்படுத்துகிற மாற்றத்தை அந்த ஆராய்ச்சிகள் துல்லியமாகக் கண்டறிந்துள்ளன. இரக்ககுணம், அலட்சிய மனோபாவம், விரோத மனப்பான்மை போன்றவற்றைக் குழந்தைகள் சூழ்நிலைக்குத் தக்கவாறு பெற்று வளர்வதாகத் தெரிந்தது. "பாதுகாப்பற்ற சூழலில் வளரும் குழந்தைக்குப் பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும்" என்று டாக்டர் பார்னெட் கூறுகிறார்.

தன்னுடைய இயல்புகளை உணர்ந்து கொள்ளும் விலங்குகளால்தான் பிற விலங்கு களின் உணர்வைப் புரிந்து கொள்ள முடியும் என்று விலங்கியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதைப்போல மற்ற விஷயங்களில் ஈடுபடுவதற்கு முன் தன்னுடைய தனித்துவம் மீது கட்டுப்பாடு இருப்பதை ஒரு குழந்தை உணர்ந்து கொள்ள வேண்டும். பிறரின் உணர்வு களைப் புரிந்து கொள் ளும் உணர்வு குழந்தை களிடம் நான்கு கட் டங்களில் உருவா கிறது என்கிறார்கள் மனவியல் வல்லுநர் கள்.

முதல் கட்டம்:

தனக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தெரியாத நிலையில் ஒரு குழந்தை இருக்கிறது. பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும்தன்மை அவ்வளவாக இருக்காது. மற்ற குழந்தைகள் துன்பப்படுவதை அது பார்த்தால் பொதுவான ஒரு உணர்வைத்தான் வெளிப் படுத்தும். உதாரணமாக, ஒரு குழந்தை தரையில் விழுந்து அதனால் சிராய்ப்பு ஏற்படுவதைப் பார்க்கும் இன்னொரு குழந்தை உடனே தன் முகத்தைத் தாயின் மடியில் புதைத்துக் கொள்ளும். இதுதான் ஏறத்தாழ 9 மாதத்தில் ஒரு குழந்தையின் வெளிப்பாடாக இருக்கும்.

இரண்டாவது கட்டம்:

குழந்தைகளின் வயது 14 மாத காலமாகும் போது அவை தனித்தன்மையைப் பெறத் துவங்கிவிடுகின்றன. அப்போது மற்ற குழந்தைகள் காயப்படுவதைப் பார்த்தால், இந்த குழந்தை காயம்பட்ட குழந்தையைச் சமாதானப்படுத்த முயற்சி செய்யலாம். அல்லது வேறு ஏதேனும் அரைகுறை முயற்சிகளை மேற்கொள்ளலாம். அடிபட்ட குழந்தையைத் தன் தாயிடம் அழைத்துச் செல்கிற நிலைமை வரையில்தான் இந்த அரைகுறை முயற்சிகள் தொடரும்.

மூன்றாவது கட்டம்:

இரண்டாவது வயது நிரம்பும்போது குழந்தை மூன்றாவது கட்டத்தை அடைகிறது. இப்போது தனக்கும் பிறருக்கும் உள்ள வேறு பாட்டை அறிந்து கொள்ளும் தன்மை அதனிடத்தில் ஏற்பட்டு விடுகிறது. இதனால் பிறரின் உணர்வுகளை உணரும் தன்மையும் உருவாகிறது.

நான்காவது கட்டம்:

குழந்தைப் பருவத்தின் இறுதி நிலையில்தான் பிறரின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்ளும் அறிவாற்றலை குழந்தைகள் பெறு கின்றன. இப்போது மற்ற குழந்தை அனுபவிக்கும் உணர்வை இந்த குழந்தை அப்படியே உணராது. மற்ற குழந்தைகளின் சூழல்களுடன் உணர்வையும் பொருத்திப் பார்த்து உணர்ந்து கொள்ளும் உதாரணமாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை சிரித்து விளையாடினால் அந்த குழந்தையின் மகிழ்ச்சியை இது அனுபவிக்காது.

குழந்தையை மதியுங்கள்:

பிறரின் உணர்வுகளை நம் குழந்தைகள் உணர்ந்து கொள்வதன் அடிப்படை நம் குழந்தை களின் உணர்வுகளை நாம் மதிப்பதுதான். கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் குழந்தைகள் பிற குழந்தைகள் துன்பப்படும்போது இரக்கம் காட்டுவதில்லை. துன்பத்துக்குள்ளான குழந்தையை இது வெறுமனே பார்த்துக் கொண்டு நிற்கும். அல்லது அதன்அருகில் சென்று கூக்குரலிட்டு விட்டு அதனைத் தள்ளிவிடும் என்கிறார் டாக்டர் பார்னெட். எனவே, �பிள்ளை நல்லவராவதும் தீய வராவதும் அன்னை வளர்ப்பினிலே� என்பதைப் பெற்றோர் புரிந்து கொண்டால் பிரச்சினை இல்லை.நம் பிள்ளையை நாம் மதித்தால் ஊரார் பிள்ளையை அது தானாய் மதிக்கும்.

திருமணத்திற்கு தேவை மனப்பொருத்தம் மட்டுமே! காவியக்காதல், நட்பு, கூட்டுணர்வு, பாலியல் கவர்ச்சி...


சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது திருமணம் என்பார்கள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால்தான் இப்படி கூறுவதுண்டு. முதிர்ச்சிப்பருவம் என்கிற வாலிபம் தாண்டிய பருவத்தில் ஏற்படும் முக்கியமான பிரச்சனையாக இருப்பது திருமண பொருத்தம். இன்றைய வாழ்வின் லட்சியங்கள் என்பது - படிப்பது - வேலை செய்வது - திருமணம் செய்துகொள்வது - இருப்பிடத்தை அமைத்துக்கொள்வது என சுருங்கிவிட்டது. சாதனைகள் படைக்க வேண்டும் என்பது இரண்டாம்பட்சமாகவே மாறிவிட்டது. காரணம் என்னவெனில் அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்வதி லேயே நாம் காலத்தை அதிகமாக செலவிட்டு விடுகிறோம்.

திருணம் இணக்கமானதாக அமையாவிட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது இயலாத ஒன்றாகிவிடும். இது கலாச்சாரம் - பண்பாடு ஆகியவற்றால் மாறு படுகிறது. விவாகரத்து செய்து கொண்ட பெண், நமது சமூகத்தால் ஒதுக்கப்பட்டவராக கருதப்படுகிறார். ஆனால் சமோவா தீவினர்களில் இது ஒரு உயர்நிலை தன்மையாகவே கருதப் பட்டு வருகிறது.

காவியக்காதல், உறவு முறை காதல், பாலு ணர்வு தூண்டல்களின் புனித மார்க்கம் இவையனைத்தும் இணைந்த ஒன்றே திருமணம். நட்பு, கூட்டுணர்வு, பாலியல் கவர்ச்சி ஆகிய வற்றின் இணைப்பே திருமணம். மாற்றுப் பாலருடன் கொண்ட நெருக்கமான நட்பின் விளைவாக மலர்ந்திடும் காதலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட ஒருவருடன் கொள்ளும் உறவே திருமணம். திருமணமானவர்களே, திருமணமாகாதவர் களைவிட அதிக மகிழ்ச்சி உடையவர்களாக இருக்கின்றனர். மணமான நிலை, தனித்திருப்பதை விடஆரோக்கியமான வாழ்நாளை அதிகரிக்க செய்கிறது.

இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் திருமணம் செய்து கொள்ளவே விரும்புகின்றனர். பெண்கள் வேலைக்குச் செல்வதைவிட திருமணம் செய்து கொள்ளவே பொதுவாக விரும்புகின்றனர். முதியவர்களில் பெரும் பாலானவர்கள் தங்களின் திருமண வாழ்க்கை நாட்களையே - மனைவி யோடு அல்லது கண வோடு வாழ்ந்த நாட்க ளையே மகிழ்ச்சியான காலமாகக் கருதுகின்றனர். திருமணத்தில் வெற்றி கண்டவருக்கும், திருமணத்தில் கசப் பினை அனுபவித்தவர் களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை உளவியல் சோதனைகள் மூலம் அறிந்தோம். நட்பிற்கு தேவையான ஒத்த அக்கறைகள், விருப்பங்கள், ஆர்வங் கள், நோக்கங்கள் ஆகிய வை திருமண வெற்றிக்கு ஆதாரங்களாக விளங்கு கின்றன. மேலும் இவர் கள் பொழுதுபோக்க, மதநம்பிக்கை, பழக்க வழக்கங்கள் பழமையை பேணுவது, வாழ்வின் தத்துவங்கள், நண்பர்கள், குழந்தைகளை பராமரித்தல், பொருளாதாரம் ஆகியவற்றில் மனம் ஒத்து-இணக்கம் உடையவர் களாக இருப்பதை காண்கிறோம்.

மகிழ்வற்ற மணவாழ்க்கை கொண்டவர் களிடம் மிகுந்த வேற்றுமைகள் காணப்படுகின்றன. பெண்களிடம் உள்ள ஆர்வங்கள், பாலின்பம் பெறுவது பற்றிய எண்ணங்கள், ஆசைகள் வேறுபட்டிருப்பதே குடும்பம் முரண்பட்டிருக்க காரணங்களாக உள்ளன.

பொருளாதார நோக்கங்கள்

மணவாழ்வில் பொருளாதார வசதிகள் அதிகமான பங்கு பெறுவதில்லை என்றும் கடன்பட்ட நிலையிலும், வேலையில்லாத திண்டாட்ட வேளையிலுமே இவைகள் மணவாழ்வில் சிக்கல்களை மிகுதிப்படுத்துகின்றன. வருவாயை எவ்வாறு செலவிடுவது என்பதில் ஒத்தநோக்கு இல்லாததால் பொருளாதாரப் போராட்டங்கள் மணவாழ்வில் தோன்றுகின்றன. ஒத்த நோக்கு இருக்கும் நிலையில் அவை ஏற்படுவது அரிது. பொருளாதார அளவு நிலையைக் காட்டிலும் ஒழுங்கான நீடித்த அலுவலின் மூலம் வரும் பாதுகாப்பும் நிலைத்த பொருளாதாரத் தன்மையுமே மணவாழ்வின் மகிழ்விற்கு அடிப்படையாக அமைகின்றன.

சொந்த பண்புகள் ஒத்திருக்குமா?

சொந்த பண்புகள் அனைத்தும் ஒருங்கே ஒத்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கில்லை. தம்பதியினரின் வயது வேறுபாட்டால் மணவாழ்வு பாதிக்கப்படுவதில்லை. அன்றியும் மணவாழ்வு மகிழ்சசியாக இருக்க கணவனின் வயது மனைவியின் வயதைக் காட்டிலும் அதிகமாக இருக்கவேண்டும் என்று கூற ஆதார மில்லை. மணவாழ்வுப் பொருத்தப்பாட்டிற்கு குணநலன்கள் ஒத்திருத்தலே மிக அவசியமாகும்.

பொதுவாக 20 வயதுக்கு முன் மணம் செய்பவர் மணவாழ்வு வெற்றி பெறுதல் அரிது. அதே போல் 30 வயதிற்கு மேல் மணம் புரியும் பெண்களும் 35 வயதிற்கு மேல் மணம் புரியும் ஆண்களும் நீடித்து மகிழ்வான மணவாழ்வு நடத்துவதில்லை என்ற மணமுறிவு பற்றிய புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. எனவே, மணவாழ்வின் வெற்றிக்கு ஒர் குறிப் பிட்ட வயது சிறப்பாக கருதப்படுகிறது. அதற்கு மனவெழுச்சி முதிர்ச் சியே அடிப்படையாக அமைகிறது. விரும்பத் தகாத பண்புகளைப் பெற்ற நிலையிலும் மணவாழ்வு வெற்றி கரமாக விளங்குவ துண்டு. இதற்குத் தம்ப தியினர் இருவருமே அத்தகைய பண்புகளைப் பெற்றிருத்தலே அடிப்படைக் காரணம் ஆகும்.

மகிழ்ச்சிக்கு வேண்டிய குடும்பப் பின்னணி :

மண வாழ்க்கையில் வெற்றி தோல்வி இவைகளுக்கு அடிப்படையாக மகிழ்ச்சி நிலை அமைகிறது. மணவாழ்வில் வெற்றி காண்போரின் பெற்றோரும் மணவாழ்வில் மகிழ்வானவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களிடம் தங்கள் பெற்றோரிடம் அதிக ஒட்டுதல் காணப்படுகின்றது. இவர்களுக்கும் பெற்றோர்க்கும் இடையே சிக்கல்கள் காணப்படுவதில்லை. மேலும், தனது தந்தையைப் போன்று தன் கணவன் உடற்கவர்ச்சி யற்று இருப்பதாக கருதும் மனைவியும், தனது மனைவி தன் தாயினைப் போல் உடல்வாகு பெற்றிருக்கவில்லை என்று எண்ணும் கணவனும் மணவாழ்வில அவ்வளவாக மகிழ்ச்சி பெற்று இருப்பதில்லை. இதற்கு மாறாகக் கணவன், மனைவியின் தந்தையைப் போல இருக்கும் இல்லங்களிலும், மனைவி கணவனின் தாயைப் போல இருக்கும் இல்லங்களிலும், மணவாழ்வின் மகிழ்ச்சி நிறைவாகவே விளங்குகிறது. நூறு மணமான ஆண்களையும், 100 மணமான பெண்களையும் பேட்டி கண்டதில் மணவாழ்வில் மகிழ்ச்சியாக விளங்கும் கணவர்கள் தங்கள் தாயிடம் போதிய அளவு அன்பு கொண்டவர் களாக இருப்பதையும், மகிழ்வான மனைவியர் தங்கள் தந்தையிடம் அன்பு கொண்டவர்களாக இருப்பதையும் கண்டுள்ளோம்.

குழந்தைகள் நிறைந்த குடும்பங்களில் பிறந்தவர்கள் மணவாழ்வில் நல்ல இணக்கமான பொருத்தப்பாடு கொண்டிருக்கின்றனர். பெற்றோர்களது மணவாழ்வின் அமைப்பினை ஒட்டியே பிள்ளைகளின் மணவாழ்வின் அமைப்பு பெரும்பாலும் அமைகிறது. மாற்றுப்பால் பெற்றோருடன் ஒருவர் கொள்ளும் உறவு பிற்காலங்களில் காதலில் ஈடுபடுவோரது காதலரைத் தீர்மானிக்கிறது. பெற்றோரது கவனத்தைப் பெறாது மணமுறிவுற்ற குழந்தை மட்டுமே பின்வாழ்வில் தன் பெற்றோரினும் முற்றிலும் மாறுபட்ட வரைக் காதலிக்கிறது. ஒருவர் தன் பெற்றோரு டன் கொண்ட உறவு மட்டும் மணமக்களது வாழ்வை பாதிப்பதில்லை ஒருவர் தன் மாமனார், மாமியார் பற்றிக் கொண்டுள்ள மனப் பான்மைகளும், கருத்துக் களும் ஒருவரது மணவாழ்வைப் பெரிதும் பாதிக்கிறது. மண உறவு கொள்ளும் இரு குடும்பங்களும் ஒரே மாதிரியான சமூகப் பின்னணி கொண்ட நிலையிலும் மணவாழ்வு மகிழ்ச்சியாக அமைகிறது.

கணவனும் மனைவியும் ஒத்த கல்வி உடையவர்களாக இருக்கும் நிலையில் மண வாழ்வின் மகிழ்ச்சி பெருகும். உயர்ந்த கல்வியும் மணவாழ்வின் மகிழ்ச்சிக்கு உதவுகிறது. அதேபோல் நாட்டு வேறுபாடும் மதவேறுபாடுகளும் மிகக் குறைவாக இருந்தால் நல்லது. திருமணத்திற்கு முன்பு கற்பு வழுவாமல் வாழ்ந்தவர்களது மணவாழ்வு மிக மகிழ்ச்சிகரமாக இருப்பதாக உளவியல் அறிஞர்கள் கண்டிருக்கின் றனர். பாலுணர்வு மிகையாக இருப்பவர்களின் மணவாழ்வு அத்தனை மகிழ்ச்சியாக இருப்ப தில்லை. ஒத்த பாலுணர்வு கொண்ட மண மக்க ளது வாழ்வே மகிழ்ச்சிகரமாக இருக்கிறது.

கண்டதும் கொண்ட காதல்கள் நீடித்து மகிழ்வான மணவாழ்விற்கு வழி கோலுவதில்லை. நீடித்துத் தொடர்ந்து ஏற்படும் பழக்கங்களால் நீண்டகாலம் தொடரும் தொடர்பே மணவாழ் வினை மகிழ்ச்சிகரமானதாக்குகிறது. விவாதங்கள், பொறாமை, ஒழுக்கமின்மை போன்றவற்றால் மணவாழ்வில் துன்பமே மிகுதியாக இருக்கிறது என்று 1500 வரலாறுகளை ஆராய்ந்த அமெரிக்கச் சமூகப் பணி நிறுவனத்தின் ஆராய்ச்சி எடுத்துக் காட்டுகிறது. 9 சதவீதத்தினர் பொறாமையினாலும், 30% ஒழுக்கமின்மையாலும் 41% தூற்றுதலினாலும் தங்கள் மணவாழ்வு முறிந்ததெனக் குறிப்பிட்டுள்ளனர். பணம் பற்றிய விஷயங்களை, நாத்தனார், கொழுந்தி, மாமனார், மாமியார், மைத்துனி போன்றோர் பழக்கங்கள் சரியாகக் கவனியாதிருத்தல் கணவரது அல்லது மனைவியின் நண்பர்கள் மற்றும் அவர்களது பழக்க வழக்கங்கள், தரங்கள் போன்றவை தங்கள் மணவாழ்வின் மகிழ்ச்சியை பாதிப்பதாக கூறுவதனை நாம் அவ்வாறே ஏற்பதற்கில்லை. திருமணப் பொருத்தப்பாட்டிற்கு ஏற்ற பக்குவமின் மையையே இவை குறிக்கின்றன என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.

நிலையான சூழ்நிலை

விவாகரத்து பொதுவாக ஒவ்வொருவரது பண்பாட்டுப் பின்னணியைப் பொறுத்தே ஏற்படு கிறது. மதச் சடங்குகளுடன் நடைபெற்ற திரும ணங்களில் ஏற்படும் விவாகரத்தைப் போன்று இரு மடங்கு வேறு வகைகளில் நிகழ்ந்த திருமணங் களில் ஏற்படுகிறது. நல்ல முன்மாதிரி யாக விளங் கும் குடும்பத்தினர் வாழும் பகுதிகளில் வாழ்வோ ரது மணவாழ்க்கையே நிலைத்து நீடிப்பதாக அமைகிறது. சிறந்த மண வாழ்க்கைக் கான அடிப் படைக் காரணிகள் பத்து. இவற்றைக் கொண்டே திருமணம் எவ்வாறு அமையும் என தீர்மானிக்கலாம்.

1. பெற்றோரின் பெருமகிழ்ச்சி.

2. குழந்தைப் பருவ மகிழ்ச்சி.

3. தாயுடன் பூசல் இன்மை.

4. கண்டிப்பான ஆனால் கொடூரமற்ற வீட்டு ஒழுக்கப்பயிற்சி.

5. தாயுடன் அதிக ஒட்டுதல்.

6. தந்தையுடன் அதிக ஒட்டுதல்.

7. தந்தையுடன் பூசல் இன்மை.

8. பெற்றோர் பாலியல் பற்றி வெளிப்படையாக இருத்தல்.

9. குழந்தைப்பருவத்தில் தண்டனைகள் அடிக்கடி அளிக்கப்படாதிருத்தல், தண்டனை பெறும் நிலையிலும் கடுமையற்ற மென்மையான தண்டனைகளையே பெறுதல்.

10. திருமணத்திற்கு முன்பு பாலியல் பற்றி வெறுப்போ அருவெருப்போ கொள்ளாத நோக்கினைக் கொண்டிருத்தல் ஆகிய பத்தும் திருமணத்திற்கு மணமூட்டும் மலர்கள்.

உளவியல் மருத்துவ நிபுணர்
டாக்டர். ஜி.ராஜமோகன்

பெண்களின் உடலில் எங்கு மச்சமிருந்தால்.....? மச்சங்களும் குணநல பலன்களும்.


மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரிதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

தலையில் மச்சம் :

தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.

நெற்றியின் நடுவில் மச்சம்:

நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகாரமிக்க பதவியில் அமர்வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.

கன்னத்தில் மச்சம்:

காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.

இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.

கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.

மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.

காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய் தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.

கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.

இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதி யாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.

மார்பில் மச்சம்:

பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.

நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.

தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.

தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் மச்சம்:

கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.

பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

தொடை:

இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி என்கின்றனர்

புதன், 4 ஆகஸ்ட், 2010

சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்..? உளவியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

"எனக்கு கொஞ்சம் கலரான பொண்ணு பாருங்க" பெண் தேடும் படலம் ஆரம்பித்துவிட்டால், பல மாப்பிள்ளைகளின் முக்கியக் கோரிக்கை இதுதான். குணம், கல்வி, குடும்ப பின்னணி என்று வாழ்க்கைக்கு அவசியமான எத்தனையோ இருக்க, சிவப்பு நிறத்தில் ஏன் மோகம் அதிகமாக இருக்கிறது. 'இது ஒரு குழந்தை மனபான்மை� என்கிறார்கள், உளவியல் நிபுணர்கள்.



டீன் ஏஜ் பருவத்தில் பெண்களுக்கு சிவப்பு நிற சருமத்தின் மீது ஆசை வருகிறது. ஆண்களுக்கு உயரமாக வளர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. பெண், தனக்கு வரும் கணவன் திடகாத்திரமாகவும், உயரமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். ஆணோ, தனக்கு துணைவியாக வருபவள் அழகில் சிறந்தவளாக, அதுவும் செக்கச் சிவந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.

மனோதத்துவ ரீதியாக இப்படி நிறம், உயரம் போன்றவற்றில் அக்கறை கொள்வதை "காம்ப்ளக்சன்" என்று கூறுகிறார்கள்.

சமுதாயத்தில் இயல்பாகவே உடல்தோற்றத் திற்கு மிகுந்த மதிப்பு அளிக்கபடுகிறது. ஒரு குழந்தை பிறந்ததும் ஆணா, பெண்ணா என்று கேட்ட மறுநிமிடம் குழந்தை கறுப்பா, சிவப்பா? என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கிறது. திருமண ஊர்வலம் நடந்தாலும், `பெண் நல்ல நிறமாக இருக்கிறாளா? என்பது பற்றிய பேச்சு எழுவதை பார்க்கிறோம்.

இயல்பாக நமது மனம் இல்லாத ஒன்றை பற்றி ஏங்கும். அதை எப்படியாவது பெற வேண்டும் என்றும் விரும்பும்.

மேனி நிறத்தை மெருகூட்டுவதாக நிறைய விளம்பரங்கள் வருவது பெரும்பாலானவர்களுக்கு சிவந்த தேகத்தில் இருக்கும் அக்கறையை எடுத்துக் காட்டும் சிறந்த உதாரணமாகும். உண்மையிலேயே எந்த பொருளும் இயல்பான வண்ணத்தை மாற்றிவிடாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அதன்மீது உள்ள ஏக்கத்தால் அத்தகைய பொருட்களை உபயோகபடுத்தத் தொடங்குகிறோம். அப்படி நிறம் மாறிவிடுவது நிஜமென்றால் உலகில் ஒரு கறுப்பு மனிதனையும் காணவே முடியாது. ஏக்கம் கொண்டவர்களின் மனம் சமாதானம் அடைவதற்கு இந்த தயாரிப்புகள் உதவுகின்றன அவ்வளவுதான்.

சிவந்த நிறத்திற்காக ஆசைபட்டு ஒவ்வொரு தயாரிப்புக்காக மாறுவது, பெண் தேடும்போதும் நிறத்தை காரணம் காட்டி மறுத்துவிடுவது என்று காலம் நகரும்போது ஒருவித சலிப்பும், மாற்ற இயலாத காரணத்தால் ஒருவித இயலாமையும் ஏற்படும். இது மன இறுக்கத்தைக் கொண்டு வரும். நீண்டநாள் பாதிப்புகள் மனவியாதியாக பரிணமிக்கலாம்.

படிக்கும் பருவத்தில் அல்லது பணியாற்றும் பருவத்தில் ஏற்படும் இதுபோன்ற நிறத் தோற்ற மனபான்மை ஒருவரின் படிப்பு அல்லது முன்னேற்றத்தை பாதிப்படையச் செய்யும்.

பெற்றோர், குழந்தை பருவத்தில் இருந்தே தங்களது குழந்தையின் தோற்றம், நிறம் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்த்து வளர்த்து வந்தால் இளம் பருவத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஒருவரை அழகு என்று கொண்டாடுவதும், மற்றவரை அழகற்றவர் என்று ஒதுக்கி வைப்பதும் பிற்காலத்தில் பிரச்சினைகளைத் தரலாம் என்பதால், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்