திங்கள், 11 அக்டோபர், 2010
அமெரிக்க லொத்தர் விசா 2012 க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கான அமெரிக்க லொத்தர் விசாவிற்கு இணையத்தினூடாக விண்ணப்பிக்க முடியும். ஒக்டோபர் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் நவம்பர் 3 ஆம் திகதி புதன்கிழமை வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடாந்தம் வெவ்வேறு வகைப்பட்ட குடியேற்ற விசா திட்டத்தின் மூலம் 50,000 விசாக்களை அமெரிக்கா வழங்குகிறது. பிரேஸில், கனடா, சீனா, கொலம்பியா, டொனிக்கன் குடியரசு, ஈகுவாடோர், எல்சல்வடோர், குவாட்டமாலா, ஹெய்டி, இந்தியா, ஜமேக்கா, மெக்ஸிக்கோ, பாகிஸ்தான், பெரு, பிலிப்பைன்ஸ், போலந்து, தென்கொரியா, ஐக்கிய இராச்சியம், (வடஅயர்லாந்து விதிவிலக்கு) வியட்நாம் போன்ற நாடுகளைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அதேசமயம், ஹொங்கொங், மக்காவூ, தாய்வானைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
2005 இலிருந்து இலத்திரனியல் பதிவுமுறையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த விசா முறை தொடர்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. சட்டவிரோத குடியேற்றத்துக்காக மோசடியில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டுகொள்ள நவீன தொழில்நுட்பமுறையை திணைக்களம் பயன்படுத்துகிறது. முழுமையான விபரங்களையும் அறிவுறுத்தல்களையும் srilanka.usembassy.gov/visas/diversity-visa-lottery-program.html இதனூடாகப் பெற்றுக்கொள்ள முடியும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக