சனி, 18 ஜனவரி, 2014

வடமாகாண சபையுடன் தொடர்பு கொள்ளவதற்கு...!



கௌரவ க.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் 
வடமாகாண சபை
தொலைபேசி இலக்கம் : 021-320 2465 
தொலைநகல் இலக்கம் : 021-221 7227
 மின்னஞ்சல்: cv.wigneswaran@gmail.com

 **************************************
 கௌரவ கந்தையா சிவஞானம் பேரவைத்தலைவர் 
 வடமாகாண சபை தொலைபேசி இலக்கம் : 021-205 708
 ----------------------------------------------- 
திரு.கே.கிருஸ்ணமூர்த்தி செயலாளர் - 
பேரவைச் செயலகம் 
தொலைபேசி இலக்கம் : 021-205 7085 
தொலைநகல் இலக்கம் : 021-205 7086 
கைபேசி இலக்கம் : 0777750017
 மின்னஞ்சல் : secretary1942@gmail.com 
****************************************** 
கௌரவ தம்பிராசா குருகுலராசா
 கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர்
 தொலைபேசி இலக்கம் : 021-205 4094 
தொலைநகல் இலக்கம் : 021-205 4093 
மின்னஞ்சல் : edumin.14@gmail.com
 --------------------------------------------- 
திரு.சி.சத்தியசீலன் 
செயலாளர்-கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சு
 தொலைபேசி இலக்கம் : 021-221 925
தொலைநகல் இலக்கம் : 021-222 0794 
கைபேசி இலக்கம் : 0774933994
 மின்னஞ்சல் : sathiyaseelan1964@gmail.com

 *************************************** 
கௌரவ. வைத்தியக் கலாநிதி. பத்மநாதன் சத்தியலிங்கம்
 சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சர். 
தொலைபேசி இலக்கம் : 021-221 7403
 தொலைநகல் இலக்கம் : 021-221 740
2 மின்னஞ்சல் : sathiyaitak@gmail.com
 -----------------------------------------------
 திரு.இ.இரவீந்திரன் 
செயலாளர்-சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சு
 தொலைபேசி இலக்கம் : 021-222 0800
 தொலைநகல் இலக்கம் : 021-222 0806
 கைபேசி இலக்கம் : 0773868588
 மின்னஞ்சல் : rasar60@gmail.com
 ********************************
 கௌரவ பொன்னுத்துரை ஐங்கரநேசன் 
விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மற்றும் சுற்றாடல் அமைச்சர். தொலைபேசி இலக்கம் : 021-221 1266 
தொலைநகல் இலக்கம் : 021-221 1267
 மின்னஞ்சல்: aygaranesan59@gmail.com 
------------------------------------------------- 
திரு.யு.எல்.எம்.ஹால்டீன் செயலாளர்
விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, சுற்றாடல் அமைச்சு
 தொலைபேசி இலக்கம் : 021-222 0880 
தொலைநகல் இலக்கம் : 021-222 0882 
கைபேசி இலக்கம் : 0777864242
 மின்னஞ்சல்: npminagri@yahoo.com
 *******************************
 கௌரவ பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன்
 மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர்.
 தொலைபேசி இலக்கம் : 021-2217301
 தொலைநகல் இலக்கம் : 021-2217302 
மின்னஞ்சல்: denisllb@yahoo.com 
---------------------------------------- 
திரு.இ.வரதீஸ்வரன் 
செயலாளர்-மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமஅபிவிருத்தி அமைச்சு.
 தொலைபேசி இலக்கம் : 021-221 7303 
தொலைநகல் இலக்கம் : 021-221 7304 
கைபேசி இலக்கம் : 077-6422838
 மின்னஞ்சல் : mfisherynp@gmail.com 

வியாழன், 16 ஜனவரி, 2014

நிதான வாசிப்பு ஒரு கலை

இக்கட்டுரையை நீங்கள் அச்சில் படித்தால் நான் எழுதியதில் பாதியைத்தான் நீங்கள் படிப்பீர்கள். இணையத்தில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் ஐந்தில் ஒரு பகுதியைக்கூட முடித்திருக்க மாட்டீர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் கட்டுரை களை முழுவதுமாகப் படிப்பதற்கான பொறுமை பெரும்பாலானோருக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கல்வியாளர்களே ஈடுபாட்டோடு நூல்களைப் படிப்பதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலைத் தான் சுருக்க வேண்டியிருந்ததாக விரிவுரையாளர் ஒருவர் கூறினார். இளைய ஆசிரியர்கள் முழுமையாகப் படிப்பதற்குப் பதிலாக தேடுபொறியை மட்டுமே வைத்து எளிதாக வேலையை முடித்துவிடுகிறார்கள்.

ப்படியென்றால் நாம் மேலும் முட்டாள்களாக ஆகிக்கொண்டிருக்கிறோமா? கிட்டத்தட்ட அப்படித்தான். இணையத்தில் தொடர்ந்து மேற்கொள்ளும் வாசிப்பு நம் மனதில் சில பாதிப்புகளை உண்டாக்குகின்றன. நீண்ட கட்டுரைகள், புத்தகங்கள் போன்ற வற்றைப் படித்து அவற்றிலுள்ள தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும் திறன் பாதிக்கப் படுகிறது. ஒரு கட்டுரையைப் படிக்கும்போதே அடுத்த கட்டுரைக்குத் தாவும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் முழுமையாக ஒரு கட்டுரையையும் படிப்பதில்லை. அதைவிட அவ்வப்போது நமக்கு வரும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதன் காரணமாகவும் தடை ஏற்படுகிறது. இது தவிர ‘ட்விட்ட'ரும் ‘ஃபேஸ்புக்'கும் இத்தகைய தடைக்குத் தம்மாலானவற்றைச் செய்கின்றன.
தாவும் மனம்
இணையம் மூலம் பலதரப்பட்ட குட்டிக் குட்டிச்செய்திகளை, தகவல்களைத் தொகுக்கும் வசதியைப் பெற்றுள்ளோம். ஆனால், பொறுமையாக அமர்ந்து அவற்றைப் பற்றி யோசிப்பதையும் அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புப்படுத்திப் பார்ப்பதையும் மறந்துகொண்டிருக்கிறோம். எப்போது பார்த் தாலும் நமது மனம் இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இன்னோரிடம் என்று நிலை கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இந்தக் கட்டுரையை இன்னும் வாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால் சிறுபான்மையினராக ஆகிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் நீங்கள்.
பெரும் புரட்சி
அண்மையில் இலக்கிய வாசிப்பு தொடர்பான‌ பெரும் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. முன்பு நிதான உணவு என்றொரு புரட்சி, பின்னர் நிதானப்பயணம் என்றொரு புரட்சி. அவற்றோடு இப்போது நிதான வாசிப்புக்கான இயக்கம். வெவ்வேறு வகையான கல்வியாளர்களும் அறிவுஜீவிகளுமான இவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் வாசித்ததைத் திரும்பத்திரும்ப வாசிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகின்றனர். இவர்களின் வேண்டுகோள்: “அவ்வப்போது கணினியை அணைத்துவிட்டு, அச்சிட்ட பிரதிகளுடன் உறவுகொள்வதன் சந்தோஷத்தையும் அவற்றை முழுமையாக‌ உள்வாங்கிக்கொள்ளும் திறனையும் நாம் மறுகண்டுபிடிக்க வேன்டும்.”
‘‘ஒரு புத்தகத்தை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டுமென்றால், அதை உங்களுக்குள்ளே இரண்டறக் கலக்கச் செய்யவேண்டுமென்றால், ஆசிரியரின் எண்ணங்களோடு உங்கள் எண்ணங்களையும் கலந்து அதை உங்களின் தனிப்பட்ட அனுபவமாக மாற்றிக்கொள்ள வேண்டுமென்றால் அதை நீங்கள் நிதானமாகப் படித்தேயாக வேண்டும்’' என்கிறார் ‘ஸ்லோ ரீடிங்’ புத்தகத்தின் ஆசிரியரான ஜான் மீய்டெமா.
ஆனால் நிதான வாசிப்பு என்ற பதத்தைப் பிரபலப்படுத்திய லான்ஸ்லாட் ஆர். ப்ளெட்சர் இக்கருத்தை ஏற்கவில்லை. ‘‘நிதான வாசிப்பு என்பது வாசகனின் கற்பனையைக் கட்டவிழ்த்துவிடுவதற்காக அல்ல, மாறாக ஆசிரியரின் படைப்பாற்றலை, கற்பனையைக் கண்டறிவதற்கானது; ஒரு நூலின் ஆசிரியர் எழுதியதை முற்றிலும் கண்டுணரும் நிலையை ஊக்குவிப்பது’’ என்கிறார்.
நிதான வாசிப்பு புதிய கருத்தாக்கமா?
நிதான வாசிப்பு என்பது ஒரு புதிய கருத்தாக்கம் அல்ல. 1623-ல் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் ஃபோலியோ பதிப்பு அவருடைய நாடகங்களை திரும்பத்திரும்பப் படிக்குமாறு நம்மை வலியுறுத்துகிறது. 1887-ல் ஃப்ரெடரிக் நீட்ஷே தன்னை ‘நிதான வாசிப்பைப் போதிப்பவன்' என்று கூறிக்கொண்டார். 1920-களிலும் 1930-களிலும் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றோர் கல்வியாளர் மத்தியில் நூலை ஆழ்ந்து படிக்கும் முறையைப் பிரபலப்படுத்தினார்.
ஒன்று மட்டும் தெளிவு. இன்றைய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்திய வெறுப்பு நிதான வாசிப்பாளர்கள் பலரையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர ஆரம்பித்துவிட்டது. ஆக்ஸ்போர்டு வரலாற்றுப் பேராசிரியரான கீத் தாமஸ் என்பவர் அத்தகையோரில் ஒருவர். “ஒரு செய்தியில் உள்ள சில முக்கியமான சொற்களைக் கண்டறிய தேடுபொறியைப் பயன்படுத்துதல் என்பது அதை ஒழுங்காகப் படிப்பதற்கு ஈடாகாது. அப்போது பணியில் ஓர் ஒழுங்கு காணப்படுவதில்லை. அதன் உள்ளடக்கத்தை யும் புரிந்து கொள்ள முடிவதில்லை. அந்த நிலை யில் நிதான வாசிப்பில் நிகழ்வது போன்ற‌ தற்செயலான‌ கண்டுபிடிப்புகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் இடமே இல்லை. என் ஆய்வின் பாதிக்கு மேற்பட்டவை நான் எதிர்பாராத நிலையில் அதிர்ஷ்டவசமாகக் கண்டுபிடிக்கப்பட்டவையே” என்கிறார் அவர்.

முப்பது நொடிகள்தான்
தன்னுடைய சில மாணவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்ட டிரேசி சீலி என்ற ஆசிரியர், பெரும்பாலான மாணவர்கள் ஒரு பிரதியை ஒரேசமயத்தில் 30 நொடிகளுக்கு மேலோ ஒரு நிமிடமோ தொடர்ந்து ஈடுபட்டுப் படிப்பதில்லை என்கிறார்.
பெரும்பாலான நிதான வாசிப்பாளர்கள் முற்றிலுமாக இணையத்தை ஒதுக்குவது நடைமுறைக்குப் பொருந்தாதது என்றும், அதற்குத் தீர்வு தொழில்நுட்பத்திலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்வதே என்றும்கூறுகிறார். உதாரணமாக டிரேசி சீலியின் மாணவர்கள் வாரம் ஒரு நாள் கணினியின் முன் அமர்வதில்லை. அதே சமயம் நாம் வாழும் சூழலை எடுத்துக்கொண்டால் நமக்கு முதலில் நேரம் உள்ளதா என்ற வினாவை முன்வைக்கிறார். கர்ரார்ட் என்பவரின் சிந்தனை வேறுவிதமானது. அவர் தற்போதுதான் ஐபோனில் இருந்ததாகவும், தனக்கு வந்த மின்னஞ்சல்களைப் பார்த்ததாகவும் கூறுகிறார். வாரத்தின் நடுவில், நான்கு அல்லது ஐந்து மணி நேரம் இணையத்துடனான தொடர்பை அறுத்துக்கொண்டு, படிப்பதற்கான விடுமுறை நாள்களை ஒதுக்கிக்கொள்வதாக அவர் கூறுகிறார்.
நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு
நிதான வாசிப்பு ஒரு சமூக நிகழ்வு. இது கருத்துகளையும் மக்களையும் ஒன்றிணைக் கிறது. படிப்பதன் மூலமாகக் காணப்படும் உறவின் தொடர்ச்சி நண்பர்களிடமிருந்து நாம் நூலைக் கடனாகப் பெறும்போதும், நீண்ட கதைகளை நம் குழந்தைக்கு அது தூங்கும்வரை படித்துக்காட்டும்போதும் உணர முடியும்
கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: பா. ஜம்புலிங்கம்

திங்கள், 13 ஜனவரி, 2014

பொங்கல் அன்று சூரிய வழிபாடு ஏன்?

பொங்கல் அன்று சூரிய வழிபாடு ஏன்? 'தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருபவன் சூரியன்' என்று நயமாகப் பாடியுள்ளார் கவியரசு கண்ணதாசன். இது மாபெரும் உண்மை. ஆதவனின் சாரமாகிய வெப்பம் மற்றும் வெளிச்சத்தின் சக்தியைக் கொண்டுதான்இ இப்புவியில் மரம்இ செடிஇ கொடிஇ புல் பூண்டு மற்றும் மிருகம்இ பறவை இன்னும் புழு- பூச்சி இனங்கள்... ஏன் மனித குலம் வரை அனைத்துமே தோன்றி வளர்ந்துஇ இப்புவியைத் தழைக்கச் செய்கின்றன. மேலும்இ சூரியனின் பேருதவியின்றி எந்த ஓர் உயிரினமும் தனது உணவைப் பெற்றுவிட முடியாது. அதுமட்டும் அன்று! புவியின் அனைத்து உயிரினங்களின் வாழ்வுக்கும் ஒவ்வாதவற்றை அழித்துஇ அவற்றின் சுகாதாரமான நலவாழ்வை உறுதி செய்வதும் சூரியனே! இயற்கைப் படைப்புகளின் அழகின் வெளிப்பாடுஇ பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கும் மூலாதாரக் காவலனாக விளங்குவதும் சூரியன்தான். உலகின் தொன்மைப் படைப்பான வேதங்களில்இ 'சூரியனின் பெருமைகள்' கூறப்பட்டுள்ளன. பாரதத்தில் சூரிய வழிபாடுஇ மார்கழி முடிந்து தை பிறக்கின்ற நன்னாளில்இ 'மகர சங்ராந்தி'யாக அனுசரிக்கப்படுகிறது. இதுவே 'பொங்கல் திருநாள்' ஆகும். இந்தக் காலகட்டத்தில் சூரியன்இ தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குவதால்இ அந்தத் தினம் மிகவும் புனிதமானதாகும். சூரியனின் அந்தப் பயணம்தான் பூமத்திய ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ள நமது பாரதத்துக்கான கோடையின் தொடக்கமாகும். கோடைக்காலம் தரும் சூரியனின் வட திசைப் பயணம்இ அதாவது உத்தராயணம்இ தேவர்களின் பகல் பொழுது. அதன் தொடக்கம்இ இந்த 'மகர சங்கரமணம்' என்பதால்இ புலரும் சூரியனை அன்று வணங்குவது மிகவும் பொருத்தமானது; புண்ணியம் தரக் கூடியது. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைஇ மிகவும் பிரபலமானது. பண்டைக் காலத்திலிருந்தே சூரிய வழிபாட்டை தமிழர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது. அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால்இ அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனை நாம் வழிபடுகிறோம். இதனால்தான் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக 'உழவர் திருநாள்' கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளன்று பசும்பாலில் உலை வைத்துஇ அதில் புத்தரிசியும் புதுவெல்லமும் சேர்த்துப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறோம். அச்சமயத்தில் புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள்இ புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறோம். வாழைப் பழம்இ வெற்றிலைஇ பாக்கு போன்றவற்றையும் ஆதவனுக்கு நிவேதனம் செய்துஇ அகம் மகிழ்கின்றோம். பொங்கல் தினத்துக்கு முன் தினம்இ பழையன கழித்துப் புதியன புகுத்திப் போகிப் பண்டிகையும்இ மறுநாள் உழவுக்குத் துணை நின்ற மாடுகளுக்கான மாட்டுப் பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கலும் கொண்டாடப்படுகின்றன. நம் பாரதத்தில் மட்டுமல்லாதுஇ உலகின் பல பகுதிகளிலுமே சூரிய வழிபாடு ஏதாவது ஒரு வகையில் இருந்து வருகிறது. கிரேக்க நாட்டினர் சூரியனைஇ 'இவ்வுலகைப் படைத்தவர்' எனக்கருதி வழிபடுகின்றனர். மெக்சிகோவாசிகளும் அப்படியே! அவர்களின் திருமணச் சடங்குகளில் சூரிய ஆராதனைஇ முக்கிய இடம் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல... கிரேக்கர்கள் நம் பாரத தேசத்தவர் போலவே ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிளம்பி வந்துஇ இரவில் திரும்பிச் செல்பவர் சூரியன் என்று கூறிஇ அவரை ஆராதிக்கின்றனர். வேறு சில வெளி நாட்டினர்இ சூரியனுக்குத் தேக ஆரோக்கியத்துடன் நெருக்கமான தொடர்பு இருப்பதை உணர்ந்துஇ 'சூரிய உபாசனை செய்தால் கொடிய நோய்கள் தீரும்' என்ற நம்பிக்கையோடு வழிபடுகின்றனர். அரசனை சூரியனின் வம்சத்தில் உதித்ததாகக் கருதிஇ ஜப்பானியர்கள் சூரியனை வழிபடுகின்றனர். பண்டைய எகிப்தியர்கள் உதய ரவியை 'ஹோரஸ்' என்றும்இ நண்பகல் சூரியனை 'ஆமென்ரர்' என்றும்இ மாலைச் சூரியனை 'ஓசிரில்' என்றும் அழைத்தனர். 'டைஃபோ' என்ற இருளரக்கன்இ முதலை உருவத்தில் வந்துஇ மாலையில் 'ஓசிரிலை' விழுங்கிவிடுவதாகவும்இ மறுநாள் காலையில் 'ஹோரஸ்' அவனை வென்றுவிடுவதாகவும் நம்பினர். பண்டைய எகிப்தில் பல சூரியக் கோயில்கள் இருந்துள்ளன. சூரிய வழிபாடு மட்டுமல்லாமல்இ அங்கு நட்சத்திர ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இங்கிலாந்தின் பூர்வ குடிகள்இ திறந்த வெளியில் சூரிய பூஜையை நடத்தினர். வேறு சில நாடுகளில் சூரியச் சிலைகள் அரசனின் உருவத்தில் அமைக்கப்பட்டன. அவற்றுக்குத் தலைக் கவசம்இ உடற் கவசம் மற்றும் காலணிகள் இருந்தன. நேபாளத்தில் இன்றும் சூரியக் கோயில்கள் உள்ளன. அங்கு முறைப்படி சூரிய வழிபாடு நடைபெறுகிறது. இவ்விதம்இ பண்டைக்காலம் தொட்டே உலகின் பல்வேறு நாடுகளில்இ சூரிய வழிபாடு செய்யப்பட்டு வருகிறது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மையாகும். எனவே நாளது பொங்கல் திருநாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம். இது தமிழர் திருநாள்! ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் மகிழ்ச்சியொளி வீசஇ சூரிய பகவான் திருவருள் பொழிவார்.

வெள்ளி, 10 ஜனவரி, 2014

தமிழர் திருநாள் தைபொங்கல்

தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் பண்டிகை தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தமிழர்களுக்கே மிகவும் சிறப்பான ஒரு நாள். இந்த நாளன்று உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் சாதி, மதம் என்ற எந்த ஒரு வேறுபாடில்லாமல், அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. சொல்லப்போனால், அது தமிழர்களின் ஒரு தேசிய திருவிழா என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த பொங்கல் பண்டிகை உலமெங்கும் இருக்கும் தமிழர்களால் இன்றும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால் பலருக்கும் இந்த பொங்கல் பண்டிகை எதற்கு கொண்டாடுகின்றோம் என்றே தெரியாது. தெரியாமலேயே இத்தனை வருடங்களாக பலரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள் . சரி, இப்போது இந்த பொங்கல் பண்டிகை எதற்கு கொண்டாடப்படுகிறது?


 முதல் நாள்:போகி

 இந்தபண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாள் கொண்டாடப்படுகிறது. இது ஆடி மாதத்தில் பயிரிட்ட அரிசியை மார்கழியில் அறுவடை செய்து, மார்கழி கடைசி அன்று புதிதாக வீட்டிற்கு கொண்டு வருவார்கள். மேலும் இந்த நாளன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நோக்கத்தின் காரணமாக, மக்கள் தங்கள் வீட்டில் உள்ள அனைத்து தேவையில்லாத பொருட்களையும் எரித்து விடுவார்கள்.

 இரண்டாம் நாள்: பொங்கல்

 இந்த உலகில் மனிதன் உயிர் வாழ்வதற்கு வேண்டிய அடிப்படை தேவைகளுள் ஒன்று தான் உணவு. பழங்காலத்தில் மக்கள் உயிர் வாழ்வதற்கு உணவைத் தேடி அலைந்துள்ளனர். அப்போது அந்த நிலையை மாற்றுவதற்கு, மக்கள் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு விவசாயத்தில் ஈடுபட்டு, உணவை உற்பத்தி செய்ய முயன்றனர். அவ்வாறு அயராது உழைத்ததன் பலனாய், அவர்கள் நெல்லை பயிரிட்டு அறுவடை செய்தனர். இப்போது தமிழ்நாட்டின் முதன்மை உணவுப் பொருளே அரிசி தான். பொதுவாக இந்த நெல்லானது ஆடி மாதத்தில் இருந்து பயிரிடப்படும். அப்போது இந்த உணவுப் பொருளை விளைவிக்க உறுதுணையாக இருந்த இயற்கை மற்றும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தான் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றோம்.

 மூன்றாம் நாள்:

மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலை, திருவள்ளுவர் நாள் என்றும் சொல்வார்கள். பொதுவாக இந்த நாளில் விவசாயம் செய்வதற்கு பெரிதும் உதவியாக இருந்த கால்நடைகளுக்கு நன்றியை செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் பிறந்த திருவள்ளுவர் தமது திருக்குறளின் மூலம், தமிழின் பெருமையையும், தமிழர்களின் பெருமையையும் உலகிற்கு தெளிவாக என்றும் அழியாத வகையில் வெளிப்படுத்தியுள்ளதால், இந்த நாளை திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடுகின்றோம்.

 நான்காம் நாள்:

காணும் பொங்கல் இந்த நாள் தை மாதம் மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனை கன்னிப் பொங்கல் என்றும் அழைப்பார்கள். இந்த நாளன்று உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு செல்வது மற்றும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது போன்றவை அடங்கும். அதுமட்டுமின்றி இந்த நாளன்று தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் பலவும் நடைபெறும், முக்கியமாக இந்த நாளானது பெண்களுக்குரியது. ஏனெனில் இந்த நாளில் பெண்கள் பொங்கல் பானையில் கட்டியிருக்கும் மஞ்சள் கொத்தினை, முதிர்ந்த சுமங்கலிகள் ஐந்து பேரின் கையில் கொடுத்து வாங்கி, அதனை முகம் மற்றும் உடலில் பூசுவார்கள்.

எம்கடன் பணி செய்து கிடப்பதே


நான் நடந்து வந்த பாதைகளில்,
 என்னைக் கடந்து சென்ற உறவுகளில்,
 என்னைக் கவர்ந்து சென்ற உறவுகளே!
 என்னைக் கண்டு கொண்டு சென்றவரே!
 என் கை குலுக்கிச் சென்றவரே!
 என்னைக் காணாது சென்றவரே!
 என்னைக் காணாதது போல் சென்றவரே!
விண்ணை முட்டும் வேதனைகளோடும்,
 கண்ணை மூடிக்கதறியழத் தோன்றும்
 கலைந்து போன கனவுகளின்
 காரிருள் சூழ்ந்த நினைவுகளோடும்,
 வாழும்எம் தேசத்து உறவுகளின்
 திக்கற்ற வாழ்வு காண ,
 திரும்பி வரும் பொங்கலொன்று
 வழக்கம் போல் திரும்பிச் செல்லுமா?
 எம் வாழ்வை திருத்திச் செல்லுமா?
உங்கள் அனைவருக்கும் என் இனிய
 தைத்திரு நாள் வாழ்த்துக்கள்.