வெள்ளி, 10 ஜனவரி, 2014

எம்கடன் பணி செய்து கிடப்பதே


நான் நடந்து வந்த பாதைகளில்,
 என்னைக் கடந்து சென்ற உறவுகளில்,
 என்னைக் கவர்ந்து சென்ற உறவுகளே!
 என்னைக் கண்டு கொண்டு சென்றவரே!
 என் கை குலுக்கிச் சென்றவரே!
 என்னைக் காணாது சென்றவரே!
 என்னைக் காணாதது போல் சென்றவரே!
விண்ணை முட்டும் வேதனைகளோடும்,
 கண்ணை மூடிக்கதறியழத் தோன்றும்
 கலைந்து போன கனவுகளின்
 காரிருள் சூழ்ந்த நினைவுகளோடும்,
 வாழும்எம் தேசத்து உறவுகளின்
 திக்கற்ற வாழ்வு காண ,
 திரும்பி வரும் பொங்கலொன்று
 வழக்கம் போல் திரும்பிச் செல்லுமா?
 எம் வாழ்வை திருத்திச் செல்லுமா?
உங்கள் அனைவருக்கும் என் இனிய
 தைத்திரு நாள் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக