செவ்வாய், 29 ஜனவரி, 2013

யா(பா)ழ்ப்பாணம்....!!! -----------------------------



தம்பி பாத்து மெதுவா ஆடு- உன் 
காலடிக்கு கீழே இன்னொரு “கிருசாந்தி” புதைக்கப்பட்டிருக்கலாம்.

நீ பிடித்திருக்கும் “பியர்” போத்தலுக்குள்ளே
கனடாவில் குளிரிலும் பனியிலும்
நித்திரையில்லாமல் ஓடி ஒடி உழைக்கும் - உன்
அண்ணனின் வியர்வை இருக்கிறது.
சிந்தாமல் வீணாக்காமல் குடி..!!!

கனடாவில் உன் அண்ணன் கடற்கரை பக்கம் போனதேயில்லை...
அதற்கு நேரமும் இல்லை ... நிம்மதியும் இல்லை...!!
“கசூறினா” கடற்கரையில் “கையேஸ்” வாகனம் “கயர்”
பண்ணி நீ காற்று வாங்கு...
உன் அண்ணன் மூச்சு வாங்கி உழைக்கும் காசில்...!!!

என் தம்பி “கம்பஸ்” என்று கருவத்தோடு உன் அண்ணன்
அவன் தம்பி நீயோ ஒண்டரைக்காலில் “பைலா” பாடு..

நீ “கலோ” என்றால் உனக்கு “காசு” வரும்.
அந்த காசைத்தேடி நாலு “கூட்டு” வரும்.
கூட்டுகளோடு சேர்ந்து “கும்மாளம்” வரும்.

பாக்கும் போது சந்தோசமாத்தான் இருக்கு..
எப்படி இருந்த நாங்கள் இப்படியும் இருக்கலாம் எண்டு.
ஆனால் கூடவே பயமும் வருகுது.

அடையாளங்களை தொலைத்துவிட்டு
அம்மணமாக வாழ்வது இழிவு
அம்மணத்தோடு வாழ்வதை விட கோமணத்தோடு
வாழ்வது உயர்வு...

போடாங்.. கொய்யாலே உனக்கு பேச என்ன தகுதி
என்று நீ கேட்பது நியாயம் - ஆனால்
நீ போட்டிருக்கும் அரைக்காச்சட்டையில் உன்
அண்ணனின் வேர்வை நாற்றம் இருப்பதை மறந்தது அநியாயம்.

உங்கே நீங்கள் போடாத ஆட்டமோ ? என்று கேட்பதும்
நியாயம்- ஆனால்
உன் காலடிக்கு கீழே இருப்பது “தாய்மண்” என்பதை
உணராதது அநியாயம்.
உன் வயதை நீ மறந்தது அவமானம்.

குண்டு மழையிலும் குருதிச்சகதியிலும்
கந்தக வாசத்திலும் கைவிடாத “கல்வி”
இன்று கவனிப்பாரற்று அனாதையாய் கிடக்குது.

கொஞ்சாமவது சிந்தியுங்கோடா
தம்பியவை படியுங்கோடா...



தம்பி பாத்து ஆடு- உன்
காலடிக்கு கீழே இன்னொரு “கிருசாந்தி”
புதைக்கப்பட்டிருக்கலாம்.

திருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.? அறிவியல் உண்மை.!!



மதன் புதிய உலகம் No comments
அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். 
இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது. 

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும் அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள். 

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்றதல்லவா! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான். பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது. 


இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா! 

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. 

இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது விளக்கம் மறைந்தது. 


விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்
1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

வெள்ளி, 18 ஜனவரி, 2013

பிரச்சினை ஏன்?

ஒருவருக்கு ஏன் பிரச்சினை வருகிறது என்று சிந்தித்துப் பாருங்கள்.நிகழ்வுகளையும் சம்பவங்களையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு  இருப்பதால்தான் ஒருவருக்குப் பிரச்சினைகள் வருகின்றன.வாழ்க்கையில் சிக்கல்,தெளிவு இரண்டுமே சம அளவில் இருக்கின்றன.இவை இரண்டையும் எப்படி சமன் செய்கிறோம் என்பதில்தான் வாழ்வின் சூட்சுமம் இருக்கிறது.சிக்கலான தருணங்கள் வரும்போது,டென்சன் உச்சத்தை அடையும்போது, சிக்கலான விசயங்களை ஒதுக்கி வைத்து விட்டு, உங்கள் முன் தெளிவாக இருக்கும் எளிமையான விசயத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.தானாக அமைதி பிறக்கும்.மனதில் அமைதி தவழும் தருணங்களில், அதிக கவனம் தேவைப்படும் சிக்கலான விசயங்களுக்கு தீர்வு காணுங்கள்.வாழ்க்கை எளிய விஷயங்கள் மட்டும் கொண்டதாயிருந்தால் விரைவில் ஒருவர் சோம்பேறியாகக் கூடும்.அதேபோல வாழ்க்கை சிக்கலானதாக மட்டும் இருந்தால் ஒவ்வொரு நாளும் டென்சன் தான்.இரண்டையும் சாமர்த்தியமாக சமாளித்தால்  வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும்.
                                                         --ரவிசங்கர்ஜி.

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

கிறிஸ்தவ பொங்கல்


விளக்கமும், வழிபாடும்
(மூலநூல் : சுவாமி ஆஸ்வால்டு, தூத்துக்குடி, 1972)
ஒரு சமுதாயத்தின் பண்பாடு, அச்சமுதாயத்தில் நிலவும் சமயத்தோடு நெருங்கிப் பிணைக்கப்பட்டுள்ளது. இவ்வுண்மையை நன்குணர்ந்த திருச்சபை, பண்பாட்டிற்க்குப் பெரும் மதிப்பு அளித்து வந்துள்ளது. திருச்சபைக்கும் பண்பாட்டிற்குமுள்ள நெருங்கிய தொடர்பை 2-ம் வத்திக்கான் சங்கம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. (காண்க, "இன்றைய உலகில் திருச்சபை எண். 53 தொடர்ச்சி) மேலும் திருச்சபையின் "அமைப்பிற்க்கு வெளியே தூய்மை, உண்மை என்னும் அம்சங்கள் பல காணப்படுகின்றனஷ", (திருச்சபை-3) என்று இச்சங்கம் ஏற்றுக்கொள்ளுகிறது. எனவே "பிற மறைகளிலே காணக் கிடக்கின்ற உண்மையானதும், தூய்மையான எதையும் திருச்சபை உதறித் தள்ளுவதில்லை". மாறாக அவைகளை "உண்மையாகவே மதிக்கிறது". (கிறிஸ்தவமில்லா மறைகள்-2) "இயலுமாயின் ...... இறைபணியிலும் கூட அதை ஏற்றுக்கொள்ளுகிறது" (இறைபணி-37, 40).
ஆகவே தமிழர் பண்பாட்டின் சிறப்பு அம்சமான பொங்கல் விழா கிறிஸ்தவ இறைபணியில் ஏற்றுக்கொள்ளப்பட தகுதிவாய்ந்ததா என்று ஆராய்ந்து, ஆவன செய்து நமது பண்பாட்டையும், கிறிஸ்தவ மறையையும் இன்னும் சிறக்கச்செய்வது தமிழகத்திலே வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவனின் தலையாய கடமை.
பொங்கல் விழா
தமிழ்நாட்டில் தை மாதத்தின் முதல் நாளில் பொங்கல் விழா மங்களச் சிறப்போடு கொண்டாடப்படுகிறது. இது ஓர் அறுவடைவிழா. இறைவன் நல்கிய நல் விளைச்சலுக்காக அவருக்கு நன்றி செலுத்தும் விழா. இவ்விழாவிற்க்கு முந்திய நாளை, மக்கள் தயாரிப்பு நாளாக கொள்கின்றனர். இது "போகிப் பொங்கல்" என்று அழைக்கப்படுகிறது.
மூன்று நாள் கொண்டாட்டத்தில் முதல்நாளில், மக்கள் ஞாயிற்றை நன்றியுணர்ச்சியுடன் நினைக்கின்றனர். ஏனெனில் அவன்தான் தன் கிரணக்கையால் பயிர்களைச் செழித்து வளரச் செய்தவன். இரண்டாவதுநாள், மாட்டைப் பெருமைப்படுத்துகின்றனர். ஏனெனில், மாடு உழவர்களின் வலக்கரமாய் இருந்து உதவுகிறது. மூன்றாம் நாள், உற்றார் உறவினர், ஒருவர் ஒருவரைச் சந்தித்துத் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர்.
பொங்கல் ஒரு முதற்கனி விழா
பொங்கலைக் கடவுளுக்குப் படைத்தல்தான் பொங்கல் விழாவின் முக்கியக் கட்டமாய் அமைந்துள்ளது. இப்பொங்கல், நிலத்திலிருந்து கிடைக்கும் முதற்கனியாகிய அரிசியிலிருந்து சமைக்கப்படுகிறது. நிலத்தின் முதற்கனியை இறைவனுக்குப் படைப்பது திருவிவிலியத்தில் எங்கும் காணப்படுகிறது.
பழைய ஏற்பாட்டின் முதற்கனி:
பழைய ஏற்பாட்டில், ஏப்ரல் மாதத்தில் பார்லியையும் (2 சாமு 21:9) மே மாதத்தில் கோதுமையையும் மக்கள் அறுவடை செய்தனர். அப்போது அவர்கள் எல்லாரும் மகிழ்ந்நிருந்தனர். (இச16:15) இம்மகிழ்ச்சியில் மக்கள் படைப்பின் இறைவனை மறந்துவிடவில்லை. அறுவடைக்காலம் இறையருட் பெருக்கின் அருங்குறி. ஆகவே நல்ல விளைச்சலை நல்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தினர் (திபா 67:6). அறுவடை விழாக் கொண்டாடி மகிழ்ந்தனர். இவ்விழாவின்போது அறுவடையின் முதற்கனியாகிய கதிர்கட்டை இறைவனுக்குக் காணிக்கையாக அளித்தனர் (லேவி 23:10). இதனால்தான் அறுவடைவிழா, 'முதற்கனியின் நாள்' என்று அழைக்கப்பட்டது (எண் 28:26).
இதன் தொடர்ச்சியாகவே, மிருகங்களின் தலைக்குட்டியையும், மனிதர்கள் தம் தலைப்பேற்றையும், குறிப்பாக ஆண்குழந்தையையும் (விப13:12,தொ.நூ22:2) இறைவனுக்குக் காணிக்கையாக அளிக்கும் வழக்கம் உருப்பெற்றது.
கிறிஸ்து - தலைப்பேறானவரும், முதற்கனியும்:
கிறிஸ்து விண்ணகத் தந்தையின் தலைப்பேறான மகன். ஆகவே மோசே சட்டப்படி மரியா, தன் தலைப்பேறான இயேசுவை ஆண்டவருக்கு அர்ப்பணித்தார் (லூக் 2:22-24). பழைய ஏற்பாட்டில் அறுவடை நாளன்று முதற்கனியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட கதிர்கள், ஐம்பதாம் நாள் அப்ப காணிக்கையாய் அளிக்கப்பட்டன (லேவி 23:16). அதுபோல பிறந்தவுடன் முதற்பேறான காணிக்கையாய் ஒப்புக்கொடுக்கப்பட்ட இறைமகன் கிறிஸ்து, இறுதியில் பெரிய வியாழன், புனித வெள்ளியன்று அப்பாமாய்க் காணிக்கையானார். ஆகவே இயேசுவின் வாழ்க்கையே ஓர் அறுவடை விழா.
கிறிஸ்து படைப்பனைத்திலும் தலைப்பேறு (கொலோ 1:15) திருச்சபையில் திருமுழுக்கு பெற்ற அனைவரும் முதற்கனியாக ஒப்புக்கொடுக்கப்படுகின்றனர் (யாக் 1:18, 1கொரி 16:15). ஆகவே ஒவ்வொரு அறுவடைவிழாவும் அல்லது முதற்கனி விழாவும் நாம் பெற்ற திருமுழுக்கை நமக்கு நினைவு+ட்டுகிறது.
பொங்கலும் கிறிஸ்தவரும்:
பொங்கல் விழா, அறுவடையின் முதற்கனியை இறைவனுக்குப் படைக்கும் விழா என்பதாகக் கண்டோம். அறுவடையின் முதற்கனியை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தல், விவிலிய பொருட்செறிவு கொண்ட ஓர் இறையியல் கோட்பாடு என்றும் நோக்கினோம். எனவே தமிழகக் கிறிஸதவர்கள் பொங்கல் விழாவைச் சிறப்புடன் கொண்டாடுவது மிகவும் பொருத்தமாகும்@ பொருளுடையதாகும். ஒரு தமிழ்க் கிறிஸ்தவர், தமிழர் என்ற முறையிலும் பொங்கல் விழாவைக் கொண்டாடத் தகுதியுடையவராகிறார். ஏனெனில் இவ்விழா, கிறிஸ்தவனின் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பித்து, உயிர்த்தெழுதலில் அவரது நம்பிக்கையையும் உறுதிப்படுத்தி, விண்ணுலக வாழ்வை இம் மண்ணுலகிலேயே முன்சுவையாக அனுபவிக்க உதவுகிறது.
பொங்கல் ஓர் அறுவடை விழா. ஆகவே எல்லாருக்கும் பொதுவான ஒரு சமூக விழா. பொதுப்படக் கூறின் இந்திய விழாக்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புராணக் கதையின் அடிப்படையில் எழுந்ததாகவே இருக்கும். ஆனால் பொங்கல் விழாவைப் பொருத்தமட்டில், அது எத்தகைய புராணத்தையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. இறைவன்பால் மக்கள் கொண்டிருந்த நன்றிப் பெருக்கே பொங்கல் விழாவாக உருவெடுத்தது.
ஆகவே பொங்கல் விழா இன,மத வேறுபாடின்றி தமிழக மக்கள் அனைவருக்குமுரிய ஒரு பொது விழா. ஒரு சமூக விழா. நிலத்தை பண்படுத்திப் பயிர் செய்யும் உழவர்கள் மட்டுமல்ல, அதன் பலனை உண்டு மகிழும் அனைவருமே இந்நன்றிப் பெருவிழாவைக் கொண்டாட
வேண்டும்.

சித்தர்கள் வகுத்த தமிழ் ஆண்டுகளும், தமிழர்கள் இயற்கைக்குச் செலுத்தும் நன்றியும்...!



சித்திரையைத் தமிழ்ச்சித்தர்கள் ஆண்டின் தொடக்கமாக வைத்ததற்கு வானவியல் காரணங்கள் பலவுண்டு. அதை இன்னொரு பதிவில் ஆராய்வோம். பலரும் தமிழ் மாதங்கள் செந்தமிழில் இல்லை எப்படி அவை தமிழருக்குரிய ஆண்டுகளாக இருக்கும் என்கின்றனர். அறுபது(60) ஆண்டுச் சுழற்சிக்கும் தமிழ்ப் பெயர்களுண்டு. அவற்றைப் பதிவின் இறுதியிற் காண்க. சம(ஸ்)கிருதத்தைப் பலரும் வடமொழியென அழைக்கின்றனர். இது மிகத்தவறானது. ஹிந்தி, உருது போன்றவற்றை வடமொழியெனலாம். சம(ஸ்)கிருதத்தையல்ல.

ஹிந்தி, உருது போன்றவை சம(ஸ்)கிருத சொற்களைப் பயன்படுத்திப் பிறந்த மொழிகளேயன்றி இலக்கண அடிப்படையில் ஹிந்தி, உருது போன்ற வடமொழிகளைவிட தமிழ்மொழிக்கே தொடர்பதிகம். மாபெரும் தமிழாசான், தமிழ்ச்சித்தர் வியாசரால் தமிழுக்குச் சமமாக(சம) உருவாக்கப்பட்ட கிருதமே(கிருதம்=மொழி) சம(ஸ்)கிருதம். சித்தர்களால் வழிபாட்டிற்காகப் பயன்படுத்ப்பட்ட மொழியேயன்றி, பேச்சுமொழியல்ல சம(ஸ்)கிருதம். தமிழே சித்தர்களின் உயர்வான ஞானமொழி. .சம(ஸ்)கிருதத்தைவிடப் பலயுகங்கள் காலத்தால் மூத்ததும் தமிழே. இதை ஆழமாக இன்னுமொரு பதிவிற் பார்ப்போம்.

தை முதல்நாள் தமிழர்களின் திருநாள். உழவர்களின் பெருநாள். தமிழர்கள் இயற்கைக்கு நன்றிகூறி விழா எடுக்கும் இனிய நாள். தமிழ்கூறும் நல்லுலகம் போற்றும் இன்ப நாள். இந்த நாளன்று உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் சாதி, மதம் என்ற எந்த ஒரு வேறுபாடில்லாமல், அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. சொல்லப்போனால், அது தமிழர்களின் ஒரு தேசியத் திருவிழா என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த பொங்கல் பண்டிகை உலமெங்கும் இருக்கும் தமிழர்களால் இன்றும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால், பலருக்கும் இந்த பொங்கல் பண்டிகை எதற்கு கொண்டாடுகின்றோம் என்றே தெரியாது. தெரியாமலேயே இத்தனை வருடங்களாக பலரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றார்கள்.

பொங்கல் விழாவானது களனி திருத்தி, வயல் உழுது, எரு இட்டு, நீர் பாய்ச்சி, நெல் விதைத்து, களை எடுத்து,விளைந்த நெல்மணிக் கதிர்களை அரிவி வெட்டி, சூடு மிதித்து, நெல்லை வீட்டுக்குக் கொண்டு வந்து கூடையில் போட்டு பின்னர் அதில் கொஞ்சம் எடுத்து உரலில் போட்டுக் குத்தி அரிசியாக்கி, புதுப்பானையில் பாலும் சர்க்கரையும், பாகும் பருப்பும் இட்டுப் பொங்கி, மஞ்சளும், இஞ்சியும், கரும்பும், கற்கண்டும் இயற்கைத் தெய்வமான ஞாயிறுகுப் படைத்து மனைவியும் மக்களும் கொண்டாடி மகிழும் விழா ஆகும்.

அறுவடைக்கு முன்னதாக நல்ல நாளில் வயலில் தலைசாய்த்து காற்றினால் தலையசைத்து நிற்கும் நெல்மணிக் கதிர்களில் கைப்பிடி அரிந்து, தட்டில் எடுத்து வந்து வீட்டு வாசலில் கட்டுவார்கள். இதற்குப் புதிர் எடுத்தல் என்று பெயர். பின்னர் தைப்பூசத் திருநாளில் புதிர் குழைத்தல் இடம்பெறும். புத்தரிசி பொங்கி, சர்க்கரையும் வாழைப் பழமும் சேர்த்துப் படைக்கும் இப்புதிர் சோற்றை சுற்றமும் நட்பும் சூழ இருந்து உண்டு மகிழ்வர்.

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். இந்நாளில் வயல் உழவும், வண்டி இழுக்கவும், பால், தயிர், நெய் கொடுக்கவும், எரு எடுக்கவும் காரணமாக இருந்த எருதுகளையும், பசுக்களையும், கன்றுகளையும் குளங்களில் குளிப்பாட்டி, குங்குமம், சந்தனம், மலர் மாலைகளால் அலங்கரித்து குடிக்கக் பச்சையரிசிக் கஞ்சி கொடுப்பர். உழவன் கமத்துக்கு துணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடப் படுகிறது. இந்த விழா பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படும்.

இந்தத் தமிழர் திருநாளைச் சாகடிக்காமல் வளர்த்து வருவது நமது கடமை. கொஞ்சம் கொஞ்சமாக கலை இலக்கியங்களை வேலைப்பளுவாலும் அரசியல் சூழ்ச்சியாலும் மறந்து வரும் தமிழர்கள், இனம் வாழ வேண்டுமெனில், நமது கலை கலாச்சாரத்தை மீட்டெடுப்போம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. அதாவது தமிழ் உறவுகளது வாழ்வில் அல்லல்கள் நீங்கி, துன்பங்கள் தொலைந்து, கோடி இன்பங்கள் குவிந்து ஒளி பிறக்கும். இன்பம் சேரும் மகிழ்ச்சி பொங்கும் என எதிர்பார்ப்போமாக!

தமிழப் புத்தாண்டு..!

தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் தை, சித்திரை என்று இருவேறு பிரிவினர்களால் வகைப்படுத்தப்படுகிறது. இதில் எது உண்மையாக இருக்கும்?

தமிழர்கள் இந்தத் தமிழ்நாட்டில் மட்டுமா இருக்கின்றனர்? இந்தியா தவிர, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், பிஜூ தீவுகள் மற்றும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு எனக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருக்கும் நாம் பன்னெடுங்காலமாக சித்திரை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம். உலகம் முழுவதும் கதிரவனை (ஞாயிறு) அடிப்படையாகக் கொண்டு காலத்தை வரையறுத்திருக்கிறார்கள். இந்தக் காலத்தின் அளவை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து நம் முன்னேர்கள் முன்பே தெரிவித்திருக்கிறார்கள். இதைத் தமிழில் “தெறிப்பளவு” என்பார்கள். ஆங்கிலத்தில் “Time Measure ” என்பார்கள். அதாவது,

2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 நாடி – நாழிகை
2½ நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
360 ஆண்டு = 1 தேவ ஆண்டு
12 ஆயிரம் தேவ ஆண்டு = 1 சதுர்யுகம்

இந்த சதுர்யுகத்தில் பார்த்தம், பரமம் போன்றவைகளைக் கடந்து யுகம் இருக்கிறது. இந்த யுகங்களில் கிருதயுகம், திரேதாயுகம் மற்றும் துவாபரயுகம் போன்றவை முடிந்து போய் விட்டன. தற்போது கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி பல லட்சம் ஆண்டுகளுக்குக்கும் மேலான காலக் கணக்குகளை நம் முன்னோர்கள் சிறப்பாக வகுத்து வைத்திருந்திருக்கிறார்கள்.

இக்காலச் சுழற்சியில் தமிழர்கள் நாள் மற்றும் ஆண்டைப் பொழுதுகளாகப் பிரித்துள்ளனர்.

"பெரும்பொழுதென்றா சிறுபொழுதென்றா
இரண்டு கூற்றத் தியம்பிய பொழுதே"

என்று நம்பியகப்பொருள் நூற்பா மொழிகிறது

ஒவ்வொரு நாளையும் நான்கு மணிகளாகக் கொண்டு பகுத்து, ஆறு பொழுதுகளாகப் பிரித்துள்ளனர். அந்தப் பொழுதுக்கு தனித்தனியாகப் பெயரையும் வைத்திருந்தார்கள். அவை;

2 முதல் 6 மணி வரை – இராப்பொழுதின் பிற்கூறு - வைகறை
6 முதல் 10 மணி வரை – பகற்பொழுதின் முற்கூறு – விடியல் (காலை)
10 முதல் 2 மணி வரை – பகற்பொழுதின் நடுக்கூறு - நண்பகல்
2 முதல் 6 மணி வரை – பகற்பொழுதின் பிற்கூறு - ஏற்பாடு
6 முதல் 10 மணி வரை – இராப்பொழுதின் முற்கூறு - மாலை
10 முதல் 2 மணி வரை – இராப்பொழுதின் நடுக்கூறு - யாமம்

இந்த ஆறு பொழுதுகளும் சேர்ந்தது சிறு பொழுது என்கிறார்கள்.

இதுபோல் ஒவ்வொரு ஆண்டையும் இரு மாதங்களாகப் பகுத்து, ஆறு பொழுதுகளாகப் பிரித்துள்ளனர். அந்தப் பொழுதுக்கு தனித்தனியாகப் பெயரையும் வைத்திருந்தார்கள். அவை;

சித்திரை & வைகாசி மாதங்கள் – இளவேனில் காலம்
ஆனி & ஆடி மாதங்கள் – முதுவேனில் காலம்
ஆவணி & புரட்டாசி மாதங்கள் – கார் காலம்
ஐப்பசி & கார்த்திகை மாதங்கள் – கூதிர்க் காலம்
மார்கழி & தை மாதங்கள் – முன்பனிக் காலம்
மாசி & பங்குனி மாதங்கள் – பின்பனிக் காலம்

என்று இந்த ஆறு காலங்களும் சேர்ந்து பெரும் பொழுது என்கிறார்கள்.

இந்தப் பெரும் பொழுதின் தொடக்கம் இளவேனில் காலம்தான். இந்தக் காலத்தின் முதல் மாதம் சித்திரை மாதம். இம்மாதம் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாக இருப்பதுதான் சரி.

தை மாதம் ஆண்டிற்கான பெரும் பொழுதுகளில் முன்பனிக் காலத்தில் வருகிறது. இந்த முன்பனிக் காலமே ஆண்டின் முதல் தொடக்கமாக வைத்துக் கொண்டாலும் மார்கழி மாதம் ஆண்டின் தொடக்கமாக இருக்குமே தவிர, அதில் இரண்டாவதாக உள்ள தை மாதம் எப்படி ஆண்டின் தொடக்கமாகும்?

தமிழ் மாதங்கள் கதிரவனை அடிப்படையாகக் கொண்ட மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகக் கதிரவனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே காலங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பூமியிலிருந்து பார்க்கும் போது பூமியைச் சுற்றி வருவது போல் தோன்றும். கதிரவன் அவ்வாறு ஒருமுறை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை (degrees) எனும் அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் கதிரவன் 12 இராசிகள் வழியாகப் பயணம் செய்கிறது. அந்தப் 12 இராசிகளை;

1. மேடம் (‍ேமஷம்)
2. இடபம் (ரிஷபம்)
3. மிதுனம்
4. கர்க்கடகம் (கடகம்)
5. சிங்கம் (சிம்மம்)
6. கன்னி
7. துலாம்
8. விருச்சிகம்
9. தனுசு
10. மகரம்
11. கும்பம்
12. மீனம்

என்று குறிப்பிடுகின்றனர்.

கதிரவன் இந்த பன்னிரண்டு இராசிக்குள் நுழைந்து அதை விட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும்.

கதிரவன் மேட இராசியில் பயணம் செய்யும் போது நடைபெறும் மாதம் சித்திரை. இவ்வாறே அடுத்துள்ள ஒவ்வொரு இராசியிலும் கதிரவன் பயணிக்கும் காலத்தை மாதங்களாகக் கொண்டு மொத்தம் 12 மாதங்கள் என கணக்கிட்டுள்ளனர்.

அவை முறையே சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என 12 மாதங்களாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இம்மாதங்களை நல்ல தமிழில் சொன்னால்,

1. மேழம்
2. விடை
3. ஆடவை
4. கடகம்
5. மடங்கல்
6. கன்னி
7. துலை
8. நளி
9. சிலை
10. சுறவம்
11. கும்பம்
12. மீனம்

என்று சொல்லலாம்.

இப்படி காலக்கணக்கை கணிக்கும் நிலையைத் தமிழில் காலந்தேர் (காலம் + தேர்) என்று சொல்கிறோம். இதைத்தான் ஆங்கிலத்தில் Calendar என்கின்றனர்.

தமிழ்க் காலந்தேரில் இருக்கும் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்திற்கென்று சில சிறப்புகள் உண்டு. சித்திரை மாதம் ஆண்டுக்கான பெரும் பொழுதில் இளவேனில் காலத்தில் இருக்கிறது. இந்தக் காலத்தை வசந்த காலம் என்றும் சொல்வார்கள்.

ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்.!

தமிழ் ஆண்டுகள் அறுபது எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் இருபது ஆண்டுகள் உத்தம ஆண்டுகள் என்றும், அடுத்த இருபது ஆண்டுகள் மத்திம ஆண்டுகள் என்றும், கடைசி இருபது ஆண்டுகள் அதம ஆண்டுகள் என்றும் அழைக்கப் பெறுகின்றன. இந்தச் சம(ஸ்)கிருத பெயர்களுக்குச் சரியான தமிழ்ப் பெயர் உங்களுக்குத் தெரியுமா?

தெரியவில்லையே என்று கலங்க வேண்டாம். உங்களுக்காகவே சம(ஸ்கிருதப் பெயர்களும், அதற்கு இணையான தமிழ்ப் பெயர்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

சம(ஸ்கிருதப் பெயர் -தமிழ்ப் பெயர்

பிரபவ -நற்றோன்றல்

விபவ -உயர்தோன்றல்

சுக்கில-வெள்ளொளி

பிரமோதூத-பேருவகை

பிரசோத்பத்தி-மக்கட்செல்வம்

ஆங்கீரச-அயல்முனி

சிறிமுக-திருமுகம்

பவ- தோற்றம்

யுவ-இளமை

தாது-மாழை

ஈசுவர-ஈச்சுரம்

வெகுதானிய-கூலவளம்

பிரமாதி-முன்மை

விக்ரம-நேர்நிரல்

விச-விளைபயன்

சித்திரபானு-ஓவியக்கதிர்

சுபானு-நற்கதிர்

தாரண-தாங்கெழில்

பார்த்திப-நிலவரையன்

விய-விரிமாண்பு

சர்வசித்த-முற்றறிவு

சர்வதாரி-முழுநிறைவு

விரோதி- தீர்பகை

விகிர்தி-வளமாற்றம்

கர-செய்நேர்த்தி

நந்தன-நற்குழவி

விசய-உயர்வாகை

சய-வாகை

மன்மத-காதன்மை

துன்முகி-வெம்முகம்

ஏவிளம்பி-பொற்றடை

விளம்பி-அட்டி

விகாரி-எழில்மாறல்

சார்வரி-வீறியெழல்

பிலவ-கீழறை

சுபகிருது-நற்செய்கை

சோபகிருது-மங்கலம்

குரோதி-பகைக்கேடு

விசுவாவசு-உலகநிறைவு

பராபவ-அருட்டோற்றம்

பிலவங்க-நச்சுப்புழை

கீலக-பிணைவிரகு

சவுமிய-அழகு

சாதாரண-பொதுநிலை

விரோதி கிருது-இகல்வீறு

பரிதாபி-கழிவிரக்கம்

பிரமாதீச-நற்றலைமை

ஆனந்த-பெருமகிழ்ச்சி

இராட்சச-பெருமறம்

நள- தாமரை

பீங்கள-பொன்மை

காளயுக்தி-கருமைவீச்சு

சித்தார்த்தி-முன்னியமுடிதல்

ரவுத்ரி-அழலி

துன்மதி-கொடுமதி

துந்துபி-பேரிகை

உருத்ரோத்காரி-ஒடுங்கி

இரக்தாட்சி-செம்மை

குரோதன்-எதிரேற்றம்

அட்சய-வளங்கலன்

வெள்ளி, 11 ஜனவரி, 2013

ரிஸானா இனி எதற்காகவும் அழமாட்டாள் !


அது நடந்தே விட்டது….!
சட்டத்தின் பெயரில் 
மனிதாபிமானம் தோற்றுப் போனது.
நமது பிரார்த்தனைகள் எல்லாம் நிறைவேறாமல் போயின
நமது வேண்டுதல்கள் எல்லாம் வீணாக ஆகின.
நமது மன்றாட்டங்கள் எல்லாம் மண்ணாகிப் போகின.
நம்பிக்கைகள் எல்லாம் நாதியற்றுப் போயின.
ரிசானாவின் தலைக்கு கத்தி வைக்கப்பட்டாயிற்று
காம்பில் இருந்து மலரொன்று உதிர்ந்து விழுவதை விடவும் வலியுடன் அவளது மரணம் நிகழ்ந்திருக்கின்றது.

வறுமையின் கோரம்
கிழக்கு மாகாணத்தின் மூதூர் கிராமத்தின் ஒரு ஒதுக்குப் புறமாக இருக்கின்றது ரிஸானா நபீக்கின் குடிசை. பெண்பிள்ளைகளைக் கொண்;ட வறுமைப்பட்ட குடும்பம். சுனாமி அனர்த்தத்தின் காரணமாக மேலும் பாதிக்கப்பட்டது. அவரது தந்தையான நபீக் தொழில் இழந்தார். அன்றாடம் அடுப்பில் உலை வைப்பதற்கே திண்டாட வேண்டியிருந்தது. ஆயினும் தனது பிள்ளைகளை மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலும் நபீக் தம்பதியர் பாடசாலைக்கு அனுப்பி வந்தனர்.

ரிஸானா படிப்பில் கெட்டிக்காரி என்று அவரது ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகின்றார். கெட்டிக்காரியாக இருந்தென்ன இளமையில் வறுமைiயால் அவதிப்பட்டாள் ரிஸானா. ஒரு கட்டத்தில் ஏதோவொரு முடிவுக்கு வந்தவளாய் தனது தாயாரிடம் யோசனை ஒன்றை முன்வைத்தார். அதற்கு காரணமாக இருந்தவர் அவரது தந்தையின் தாயார் (பாட்டி). ஆனால் 17 வயதே பூர்த்தியாகாத பெண் பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்புவதா? ஏன எண்ணியவளாக அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டார் தாயார் பரீனா.

ஆனாலும், குடும்பநிலை ரிஸானாவை வாட்டிக் கொண்டிருந்தது. தான் வெளிநாட்டுக்குச் சென்று உழைத்து வந்தால் நமது கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துபோகும் என கூறிக்கொண்டே இருந்தாள். அப்போது ஊரிலுள்ள வேறொருவரின் தொடர்பு அவர்களுக்கு கிடைக்கின்றது. அவரும் ரிஸானாவின் எண்ணத்தை நியாயப்படுத்தினார். பெற்றோரின் கருத்துநிலை மெல்ல மெல்ல மாற, ரிஸானா சவூதி அரேபியா செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
 சவூதி பயணம்
தமது வீட்டிலிருந்து சில கிலோமீற்றர் தொலைவிலுள்ள திருகோணமலைக்கே போக தைரியமில்லாத ரிஸானா, கடல் கடந்து பயணித்து 2005 மே 04ஆம் திகதி சவூதி அரேபிய மண்ணில் காலடி எடுத்து வைத்தார். பெற்றோரையும் பாடப் புத்தகங்களையும் தவிர வேறு எதனுடனும் பரிச்சயமில்லாத இளம் யுவதியான இவளிடம்;, கண்காணாத தேசமொன்றில் வந்திறங்கியபோது சவூதி பற்றிய முன்னறிவோ மொழியறிவோ இருக்கவில்லை.
சவூதி அரேபியாவுக்கு சென்றவுடன் ஒரிரு தினங்கள் வேறொரு வீட்டில் ரிஸானா தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னரே நயிப் ஜிசியான் கயிப் அல் ஒடைபி என்பவரின் வீட்டில் வீட்டு பணிப்பெண்ணாக (வேலைக்காரியாக) பணிக்கமர்த்தப்பட்டு இருந்ததாகவும் அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன.
அந்த வீட்டில் உடு துணிகளை துவைப்பது, வீட்டை சுத்தப்படுத்துவது போன்ற வேலைகளுடன் சில வேளைகளில் ஜிசியானின் 4 மாதக் குழந்தையை பராமரிக்கும் வேலையையும் அவரது மனைவி இந்த யுவதியிடம் ஒப்படைத்துள்ளார். தனது கஷ்டங்களுக்கெல்லாம் விடிவுகாலம் பிறந்து விடும் என்ற நம்பிக்கையில் எந்த வேலையையும் முகம் சுழிக்காமல் இவர் செய்து கொடுத்துள்ளார். அத்துடன் தனது பெற்றோருக்கு கடிதமொன்றையும் எழுதியிருந்தார்.
 அந்த சம்பவம்
அன்று ஞாயிற்றுக் கிழமை. 2005 மே 22 ஆம் திகதி. ஜிசியானின் மனைவியான வீட்டு எஜமானி தனது பச்சிளம் குழந்தையை ரிஸானாவின் பராமரிப்பில் விட்டுவிட்டு வெளியில் எங்கோ சென்றிருக்கின்றார். அப்போது குழந்தைக்கு சிறிது நேரத்தில் புட்டிப்பால் (கவனிக்க – புட்டிப்பால்) ஊட்டுமாறும் கூறிச் சென்றுள்ளார். வீட்டுப் பணிப்பெண்ணான இவளுக்கு குழந்தை பராமரிப்பாளர் பணியை ஒப்படைப்பது தவறானது என்பது எந்த அதிமேதாவிக்குப் படவில்லை.
 தனது தினசரி பணிகளை முடித்துவிட்டு ரிஸானா குழந்தைக்கு போத்தலில் இருந்த பாலை ஊட்ட ஆரம்பித்துள்ளார். குழந்தைப் பராமரிப்பில் சற்றும் முன் அனுபவம் அற்றவரான இவ் யுவதி, தான் பார்த்தறிந்த விடயங்களை வைத்தே குழந்தைக்கு பாலூட்டி இருப்பார் என்பதை நன்றாக ஊகிக்க முடிகின்றது. பாலூட்ட ஆரம்பித்து ஒரிரு நிமிடங்களில் மூச்சுத் திணற ஆரம்பித்து விட்டது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குழந்தையின் முதுகைத் தட்டிக் கொடுத்தாள். அந்தப் பிள்ளைக்கு ஏதும் நடந்து விடக் கூடாது என்பதற்காக தனக்கு தெரிந்தவற்றை எல்லாம் செய்தார்.
ஆனால், அப்பச்சிளம் குழந்தை மூர்ச்சையாகிவிட்டது. அந்த நேரத்தில்தான் வீட்டு எஜமானி திரும்பி வந்தாள். பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதைக் கூட சரியாக சொல்வதற்கு ரிஸானாவுக்கு மொழி அறிவு இருக்கவில்லை. ஏதோ புரியாத அரபு வார்த்தைகளால் ரிஸானாவை திட்டித் தீர்த்த வீட்டுக்காரி, குழந்தையை வைத்தியசாலைக்கு அவசரமாக எடுத்துச் சென்றார். இருப்பினும் ஏற்கனவே அக்குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறினர்.
சற்று நேரத்தில் வீட்டுவாசலில் பொலிஸார் நின்றனர். வீட்டு எஜமானி அழுதவாறே, புரியாத மொழியின் மோசமான சொற்கள்கொண்டு ரிஸானாவிற்கு வசை பாடினார். மறுபுறத்தில் தனது பிள்ளையை இவள் கொலை செய்து விட்டாள் என முறைப்பாடு செய்தாள். பொலிஸார் ரிஸானாவை கைது செய்து சென்றனர்.
பொலிஸார் ரிசானாவிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்று வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு விசாரணையின்போது ரிஸானாவிற்கு மொழி பெயர்ப்பாளராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். பிரதிவாதியான ரிஸானா தரப்பில் வாதாடுவதற்கு யாருமற்ற ஒரு சூழலில் சட்ட ஆலோசனையைக் கூட பெற்றுக் கொள்ள முடியாதவராக இவர் இருந்தார். தன்பக்க நியாயங்களுக்கான சாட்சியங்களை நிரூபிக்க முடியாத ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொண்டிருந்தார்.
 நீதிமன்ற தீர்ப்பு
 நீதி மன்றத்திற்கு தேவை சாட்சியங்களும் ஆதாரங்களும்தான் என்ற நிலையில், அவை ஒன்றும் ரிசானாவிடம் இருந்து முன்வைக்கப்படவில்லை. அதற்கான உதவியோ வாய்ப்போ அறிவோ அந்த அப்பாவிக்கு இருக்கவில்லை. இந்நிலையில், இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தின் பிரகாரம் ரிஸானாவை குற்றவாளியாக இனங்கண்ட தவாத்மி  மேல் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
நீதிபதி அப்துல்லா அல்- றொசைமி தலைமையிலான மூவரடங்கிய நீதிபதிகள் குழு 2007 ஜூன் 16ஆம் திகதி இத்தீர்ப்பினை வழங்கியபோது, ரிஸானா தரப்பினர் விரும்பினால் மேன்முறையீடு செய்யலாம் என்று அறிவித்தது. இதன்படி சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், மேன் முறையீட்டு நீதிமன்றினால் முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பினை மீள வலியுறுத்திய போது, மனிதாபிமானிகளுக்கு இருந்த கொஞ்சநெஞ்ச நம்பிக்கையும் இல்லாது போய்விட்டது.
அதற்குப் பிறகு மனிதாபிமானத்தின் பெயராலேயே மன்னிப்புக் கோர வேண்டியிருந்தது. சவூதி மன்னரிடம் 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரும் கடிதமொன்றை அனுப்பினார். அக்கடிதம் றியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் மன்னருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆராய்ந்த மன்னர் உள்துறை அமைச்சின் ஊடாக வீட்டு எஜமானருக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தினார்.
ஷரிஆ சட்டத்தின் அடிப்படையில், குற்றமொன்றின் மூலம் பாதிக்கப்பட்டவரே அதற்கான மன்னிப்பை வழங்கும் மீயுயர் அதிகாரத்தைக் கொண்டுள்ளார். அதற்கான வேண்டுகோளை மன்னர் விடுக்க முடியுமே தவிர உத்தரவிடவோ, மன்னிப்பு வழங்கவோ முடியாது என்பதே அதற்கான காரணமாகும்.
அதன்படி, மரணித்த குழந்தையின் தந்தையை நாடிச் சென்று காலைப் பிடித்து கதறுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. ஆனால், இதற்கென அனைத்துத் தரப்பினரும் கடைசி வரையும் முயற்சித்தனர்.
இதுதான் இதுவரைக்குமான முன்கதைச் சுருக்கம்.

விடுவிக்கும் முயற்சி
இலங்கை யுவதி ஒருவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக இலங்கைத் தூதரகத்திற்கு தெரியவந்திருந்த போதிலும் அது குறித்து தூதரகமோ, வெளிவிவகார அமைச்சோ விரைந்து செயற்படவில்லை என்பதுதான் மனித உரிமை அமைப்புக்களின் பிரதான குற்றச்சாட்டாகும். இலங்கை அரசாங்கம் உள்ளார்ந்த அக்கறையுடன் இதனை அணுகவில்லை என்பதும் இன்னுமொரு குற்றச்சாட்டாகும்.
2005ஆம் ஆண்டு மே மாதம் ரிஸானா நபீக் சிறைக்குள் சென்றிருந்த போதும் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக இவ்விடயம் வெளியுலகுக்கு மட்டுமன்றி அவரது பெற்றோருக்கே தெரியவரவில்லை என்பதுதான் மன வருத்தமான செய்தி. தங்களது மகள் கடிதம், பணம் எதுவும் அனுப்பாவிட்டாலும் எங்கோ சந்தோசமாக இருக்கிறாள் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தனர் பெற்றோர்.
இது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியானதும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விழித்துக் கொண்டனர். முதன்முதலாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவே இவ்விடயத்தை வெளியுலகுக்கு கொண்டு வந்தது. ஊடகங்களோடு பரிச்சயமற்ற ரிஸானாவின் பெற்றோருக்கு அயலவர்கள் யாரோதான் சாடை மாடையாக இதனைச் சொல்லியிருக்கின்றனர்.
ரிஸானாவின் விடுதலைக்காக ஹொங்கொங்கை தளமாகக் கொண்டியங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை என்பன மிகுந்த பிரயத்தனத்தை எடுத்துக் கொண்டன. இவ்விவகாரம் சர்வதேச அளவில் பேசப்பட ஆரம்பித்த பின்னரே இலங்கை அரசாங்கம் இவ்விடயத்தில் கூடிய சிரத்தை காட்ட ஆரம்பித்ததென கூற முடியும்.
அப்போது பிரதி வெளிவிவகார அமைச்சராக இருந்த ஹ{சைன் பைலா தலைமையில் ரிஸானாவின் பெற்றோர் சவூதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பிறகு - ரிசானாவின் தந்தை பல முறை எஜமானருக்கு கடிதம் எழுதியிருந்தார். 2006இல் ஒரு தடவையும் இவ்வாரத்தில் ஒரு தடவையுமாக இலங்கை ஜனாதிபதி 2 தடவைகள் ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்குமாறு சவ+தியைக் கோரி இருந்தார். இது தவிர தனது சவூதி பயணத்தின் போது ரிஸானாவின் விடுதலையை வலியுறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்தது.
சர்வதேச மனித நேய செயற்பாட்டாளர்கள் அனைவருமே இவரது விடுதலைக்காக இடைவிடாது குரல் கொடுத்தனர். வழக்கிற்காகவும் ஏனைய சட்ட ஆலோசனைகளுக்காகவும்  இலங்கை அரசாங்கத்தை விட அதிகளவான தொகையை ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற அமைப்புக்கள் செலவிட்டன. இலங்கையும் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டதுதான் இருந்தாலும், தனது நாட்டுப் பிரஜையை காப்பாற்றுதவற்கான பணியில் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு போதாது என்பதே ஆ.மனித உரிமை ஆணைக்குழுவின் விசனமாகும். இதற்கான கொடுப்பனவுகளைக் கூட வழங்குவதற்கு இலங்கை பின்வாங்கியதாக இவ் அமைப்பு குறிப்பிட்டுள்ளதுடன், அதனையிட்டு வெட்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை இங்கு அவதானத்திற்குரியது.
வீட்டில் இருந்துகொண்டு அறிக்கைவிடும் முஸ்லிம் அரசியல் தலைவர்களைப் போலன்றி ரிஸானாவின் நலனில் எந்நேரமும் அக்கறை செலுத்தி, அடிக்கொரு தடவை தவாத்மி சிறைக்குச் சென்று அவரைப் பார்த்து வந்தவர் பல் வைத்தியரான கிபாயா இப்திகார்தான். இவர் இல்லாவிட்டால் உலகுக்கு பல செய்திகள் மறைக்கப்பட்டிருக்கும். இலங்கையைச் சேர்ந்த இவர் தானிருக்கும் இடத்திலிருந்து பலநூறு கிலோமீற்றர் பயணம் செய்து சிறைக்கு செல்வார். அப்போதெல்லாம் இலங்கைக்கு தொலைபேசி தொடர்பை ஏற்;படுத்தி பெற்றோருடன் ரிஸானாவை பேச வைப்பார். ரிஸானாவின் உயிர் பறிக்கப்படுவதற்கு முன்னர் அவரை கடைசியாகப் பார்த்த நம்மவரும் கிபாயாதான்.
 மறுக்கப்பட்ட நியாயங்கள்
சவூதி அரேபிய சட்டத்தின் முன்னால் ரிஸானாவின் பக்கமுள்ள நியாயங்கள் அச்சொட்டாக எடுத்துரைக்கப்படவில்லை, அதற்கான சந்தர்ப்பமும் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்பதுதான் அழுத்தமாக உரைக்க வேண்டிய விடயம்.
குழந்தைக்கு புரையேறியது அல்லது மூச்சுத் திணறியே உயிர் பிரிந்துள்ளது’ என்று சொல்லுமளவுக்கு அரபுச் சொற்கள்; ரிஸானாவுக்கு தெரிந்திருக்கவில்லை. அவள் என்ன சொல்கிறாள் என்பதைக் கேட்பதற்கு எஜமானி தயாராக இருக்கவில்லை. உண்மையாகவே கொலை செய்துவிட்ட ஒரு கொத்தடிமையை பிடித்துக் கொடுப்பதுபோல் அவள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஆராய்ந்த போது பொலிஸாரினால் வற்புறுத்தலின் பேரிலேயே ரிஸானாவின் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளமை தெரியவந்தது. இது ஷரிஆ சட்டங்களையே மீறுகின்ற நடைமுறை என்பதை சுட்டிக்காட்டியும், இது விடயத்தில் தலையிடுமாறு கோரியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கையும் கண்டு கொள்ளப்படவில்லை.
அடுத்து, நீதிமன்றத்தில் ரிஸானா தமிழில்தான் தம்பக்க நியாயங்களை எடுத்துக் கூறினார். இதனை இந்தியாவைச் சேர்ந்தவரும் தொழில்ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளரில்லாதவருமான ஒரு நபரே மன்றுக்கு மொழி பெயர்த்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவரது மொழிபெயர்ப்பில் மாறுபட்ட தன்மை காணப்படுவது பின்னர் தெரியவந்தது. அப்போது இது தொடர்பில் விசாரிப்பதற்காக அந்த மொழிபெயர்ப்பாளரை தேடிய போதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
1988ஆம் ஆண்டு பிறந்த ரிஸானா 1982ஆம் ஆண்டு பெப்ரவரி 02ஆம் திகதி பிறந்தவரென போலித் தகவல்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டது இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிய முகவர்களுக்கு இலங்கை நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போதும், சவூதி நீதிமன்றமோ சட்ட கட்டமைப்போ கடவுச் சீட்டில் இருக்கின்ற திகதியையே கவனத்தில் எடுத்துக் கொண்டது.
இவ்வாறான விடயங்கள் பிரதிவாதியின் தரப்பை தொடர் தோல்விகளின்பால் இட்டுச் செல்வதாகவே அமைந்தது.
கரையாத கல்மனது
 கடைசியாக ஒரு சிறு நம்பிக்கை துளிர்விட்டது. மரணித்த குழந்தையின் பெற்றோரது மன்னிப்பை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் அது.
இதற்காக எல்லோரும் பாடுபட்டனர். ஜனாதிபதி கடிதம் எழுதினார், சவூதி மன்னர் வேண்டிக் கொண்டார், ரிஸானா மன்றாடினாhர், அவரது தந்தை கெஞ்சிக் கூத்தாடினார், அரசியல் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு நூற்றுக் கணக்கான கோரிக்கைகளை தினமும் முன்வைத்துக் கொண்டே இருந்தது.
ஆனால், அல் ஒடைபி எனும் வீட்டு எஜமானனும் அவனது மனைவியும் இது எதனையும் பொருட்படுத்தவில்லை. உண்மையாகச் சொல்வதானால், தங்களுக்கு இன்னுமொரு குழந்தை பிறந்துவிட்ட போதிலும் இதுபற்றிப் பேசுவதற்குக் கூட அவர்கள் விரும்பவில்லை. ஷரீஆ சட்டத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு பழி தீர்ப்பதிலேயே குறியாக இருந்தனர்.
 அந்தக் கணங்கள்
2007ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறைவேற்றுவதற்காக சவூதி உள்துறை அமைச்சு காத்திருந்தது. ‘இரத்த உறவு இழப்பீட்டிற்கான’ நட்ட ஈட்டையேனும் பெற்றுக் கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்த எஜமானும், எஜமானியம்மாளும் கடைசி வரையும் தமது பிடிவாதத்தில் இருந்து இம்மியளவும் இறங்கி வரவில்லை என்பதை நினைக்கின்ற போது நெஞ்சு கனக்கின்றது.
இந்நிலையிலேயே டாக்டர் கிபாயா இப்திகார் இரு தினங்களுக்கு முன்னர் றிஸானாவைச் சந்திக்கச் சென்றிருந்தார். அப்போது ரிஸானாவுக்கு அவரது குடும்ப புகைப்படத்தை காண்பிக்குமாறு சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட டாக்டருக்கு உள்மனது ஏதோ சொன்னது. அதானாலேயே ரிஸானாவுக்காக பிரார்த்திக்குமாறு அவர் பகிரங்க அழைப்பு விடுத்தார். இலங்கையில் இருந்து புகைப்படத்தை தருவித்து அதனை காட்டுவதற்காக புதன்கிழமை நேர காலத்துடன் தவாத்மி சிறைக்கு கிபாயா சென்றிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட ஒடைபியின் குடும்பம் ரிசானாவை விடுதலை செய்தவற்கு விரும்பவில்லை என்பதை கருதியோ என்னவோ சவூதி உள்துறை அமைச்சு ஒரு முடிவுக்கு வந்தது. உலகமே கொந்தளித்துக் கொண்டிருக்க, மிகச் சுலபமாக சட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானமெடுத்தார் உள்துறை அமைச்சரான இளவரசர் நயீப் பின் அப்துல் அஸீஸ்.
அதிகமாக வெள்ளிக்கிழமைகளிலேயே மரண தண்டனை நிறைவேற்றப்படுவதுண்டு. ஆனால் ரிசானாவுக்கு புதன்கிழமையென நாட்குறிக்கப்பட்டது. 18 வயதிற்குட் பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது சட்ட விரோதமானது என்ற சிறுவர்களுக்கான சர்வதேச பிரகடனத்தில் கைச்சாத்திட்டிருந்த சவூதி அரேபியா, கடவுச்சீட்டின் பிறப்புத் திகதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பை நிறைவேற்றத் துணிந்தது. உள்ளுர் நேரப்படி முற்பகல் 11.40 (இலங்கை நேரப்படி பிற்பகல் 2.10) மணிக்கு ரிஸானாவின் உயிரற்ற உடல் நிலத்தில் சாய்ந்தது.
சவூதி அரேபியாவே கனவென்றிருந்த எங்கள் ரிஸானாவின் உயிர் பறிக்கப்பட்டது.
உலகெங்கும் வாழும் கோடான கோடி மக்கள் மரித்துப் போயினர்.
இந்த செய்தி, ரிஸானாவின் தாய்க்கு முதன்முதலாக சொல்லப்பட்டபோது அவர் பேசிய வார்த்தை – ‘மகன் என்ட மகள மௌத்தாக்கி விட்டாங்களா….?’ என்பதுதான்.
ஷரீஆ சட்டமென்பது இறைவனால் அருளப்பட்டது. நபிகள் நாயகத்தினால் உலகுக்கு முன்மொழியப்பட்டது. இந்த சட்ட ஏற்பாடுகளில் எவ்வித வாதப் பிரதிவாதங்களோ மாற்றுக் கருத்துக்களோ இல்லை. இந்த சட்டத்தில் எல்லா விடயங்களும் மிகவும் நுணுக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
ரிஸானா தனது தரப்பு நியாயங்களை முன்வைப்பதில் எவ்வாறான தடைகளை எதிர்கொண்டார் என்பது நமக்குத்தெரியும். சவூதி சட்டத்தை நடைமுறைப்படுத்துவோரினால் இவர் கையாளப்பட்ட விதம் எந்தளவுக்கு நேர்மையானதென்பதில் சந்தேகங்கள் இருக்கின்றன. எவ்வாறிருப்பினும், நீதி மன்றுக்கு தேவை மனச்சாட்சியல்ல சாட்சியங்களே என்ற அடிப்படையில் நோக்குகையில் ஷரீஆ சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பினை விமர்சிக்க முடியாது.
ஷரீஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டாயிற்று. அந்த தீர்ப்பை மாற்ற முடியாது என்பது உண்மைதான். ஆனால், தவறிழைத்த ஒருவருக்கு மன்னிப்பு அளிப்பது பெரும்பாவம் என்று இஸ்லாத்திலோ அல்லது அந்த சட்டத்திலோ எங்கும் சொல்லப்பட வில்லை என்பதை அழுத்தமாக உரைக்க விரும்புகின்றேன்.
இந்த அப்பாவிச் சிறுமி, 18 நாட்களே தங்களது வீட்டில் வேலை செய்திருந்த நிலையில் பச்சிளம் குழந்தையை ஏன் வலிந்து கொலை செய்ய வேண்டும் என்று எஜமானர்கள் ஒரு கணம் சிந்தித்திருக்க வேண்டும். பணம் உழைப்பதற்காக வெளிநாடு சென்ற தன்னால் தாயாருக்கு எதனையும் அனுப்ப முடியவில்லை என்ற மன வருத்தத்தில், சிறையில் இருந்தவாறே தன் கையால் போர்வை ஒன்றைப் நெய்து, தனது தாய்க்கு அனுப்பி வைத்த பிள்ளையா… கொலை செய்திருக்கப்போகின்றது.
சரி. அப்படித்தான் கொலை செய்திருந்தாலும் 7 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து விட்டாள்தானே என மன்னித்து விட்டிருக்கலாம். இவ்வாறு ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு ஒரிரு நாட்களல்ல 7 வருடங்கள் கால அவகாசம் இருந்தன.
உலகளவில் சில சக்திகள் ஷரிஆ சட்டத்தை மோசமான சட்டமென விமர்சித்து வருகின்றது. இந்நிலையில், ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்குவதன் மூலம் - ஷரீஆ சட்டம் கண்டிப்பானது என்ற போதிலும், மன்னிப்பு வழங்குவதற்கு இஸ்லாத்தில் இடமுள்ளது என்பதை காண்பித்திருக்க வேண்டும். சவூதி மற்றும் அரபுலக மக்கள் தனது மனிதாபிமானத்தையும் நல்லெண்ணத்தையும் இதனூடாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.  கடைசி மட்டும் எஜமான் குடும்பம் அதனைச் செய்யவில்லை என்பதுதான் மிக மிக வருத்தமான செய்தி.
சவூதி அரேபியா முஸ்லிம்களின் புனிதபூமி, ஷரீஆ சட்டத்தை கட்டாயமாக அமுல்படுத்தும் நாடு. எமக்கு வாழ்வளித்த பூமிதான். ஆனாலும், சவூதியில் நமது நாட்டு ஆண்களும் பெண்களும் தொழிலிடங்களில் படும் இவ்வாறான அவஸ்தைகளை பார்க்கும் போது - இஸ்லாத்தின் அடிப்படையாக இருக்கின்ற மனிதாபிமானம், இரக்கம் காட்டுதல் போன்றவை தொடர்பில் சவூதி தன்னை மீள் பரிசீலனை செய்யவில்லை என்று நான் கூறினால், நியாயங்களை ஏற்றுக் கொள்ளத் தெரியாத சிலர் சண்டைக்கு வருவார்கள்.
தனது பெற்றோர் சிறையில் சந்தித்தபோது, “உம்மா என்னக் கூட்டிக்கு போகவா வந்திருக்கயள்? என்ன எப்படியாவது நாட்டுக்கு கூட்டிக்கு போங்கம்மா’’ என்று  கூறி கழுத்தைக் கட்டிக்கொண்ட கத்திய ரிஸானா, மறைமுக இடமொன்றில் கழுத்தறுபட்டுப் போனாள்.
தனது குடும்பத்தை பார்ப்பதுதான் அவளது கடைசி ஆசையாக இருந்திருக்கும். ஆனால், புகைப்படம் கூட அவளுக்கு காண்பிக்கப்படவில்லை என்பது உண்மையாக இருக்குமானால், அந்த ஆசைகூட நிறைவேற்றப்படாமல் சட்டம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
ஒன்றுமட்டும் நிச்சயம் –
பிழைப்புத் தேடிப் போனவளின் உயிர் வாழ்தலுக்கான மிகக் குறைந்தபட்ச மன்றாட்டத்திற்கு கூட மனமிரங்காத எஜமானியதும் அவரது கணவனதும் உள்ளத்தை கல்லாகப் படைத்த இறைவன் மீது சத்தியமாக….
ரிஸானா இனி எதற்காகவும் அழமாட்டாள் !

செவ்வாய், 8 ஜனவரி, 2013

காதலிகளுக்கும் காதலிகளை "பெற்றவர்களுக்கும்"

காதல் தினத்தன்று இந்த பதிவு வருவது மிக யதேச்சையானது தான். ஆனால் மிக பொருத்தமானதும் கூட. நீங்கள் ஒரு இளம்பெண்குழந்தைக்கு தந்தையா...? நீங்கள் ஒரு காதலரா..? மேற்கொண்டு படியுங்கள். நீங்கள் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

என் குடும்ப நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்த பதிவை எழுத தூண்டியது. பெற்றோர்களே ஜாக்கிரதை என்றும், பெண்குழந்தைகளே உஷார் என்றும் காத்த தோன்றினாலும் என்ன செய்ய இது இங்கே தினம் தினம் அரங்கேறும் ஒரு சோகம். காலத்தின் மறுக்க முடியாத யதார்த்தம். நாகரீக மோகத்திற்கு நாம் கொடுத்துகொண்டிருக்கும் விலை.

18 வயது பெண் குழந்தை. பார்த்து பார்த்து பெற்றோராலும், உறவினர்களாலும் கொண்டடி வளர்க்கப்பட்ட குழந்தை இன்று ஒரு வாலிபனோடு ஓடி போய்விட்டாள். பெற்றவர்களை விட, உறவுகளை விட, படிப்பை விட அவளுக்கு காதல் பெரிதாகி போன காரணம் என்ன என்று புரியாமல் நடைபிணமாக போய்விட்டனர் பெற்றோர்கள். அவர்களுக்கு தெரியாது இத்தனைக்கும் காரணம் அவர்களின் வளர்ப்பும் தானென்று. எத்தனை சமாதானம் சொன்னாலும், காரண காரியங்களை அடுக்கினாலும் நடந்தது நடந்தது தான். அவள் திரும்பி வர போவததுமில்லை. வர விரும்பவுமில்லை. ஆனால் அவர்களின் இந்த அனுபவம் கோடான கோடி பெற்றோருக்கு தெரிய வேண்டும்...இளம்பெண்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காகவே இந்த பதிவு.

இந்த அப்பனுகளே இப்படித்தாண்ட..எப்ப பார்த்தாலும் நை நை நைன்னு...!!
பெரிசு தொல்லை தாங்கலை...!!
உனக்கென்ன தெரியும் இதைபத்தியெல்லாம்...

இது ஒவ்வொரு வீட்டிலும் தினம் தினம் கேட்கும் வார்தைகள் தான். கல்லூரி போகும் பெண்ணோ, பையனோ இருந்தால் கண்டிப்பாக ஏதோ ஒரு ரூபத்தில் இந்த வசனங்கள் கேட்கும். தேவையற்ற கட்டுப்படும் சரி வரம்பு மீறிய சுதந்திரமும் சரி தவறான வளர்ப்பு தான். அளவுக்கதிகமான செல்லம், கேட்கும் போதெல்லாம் செலவிற்கு பணம் இவையெல்லாம் உங்கள் மகனோ மகளோ தவறான வழிக்கு தள்ளபடுவதர்க்கு போதுமான சூழ்நிலைகளை நீங்களே ஏற்படுத்திகொடுப்பதற்க்கு சமம்.

அவள் பிறந்ததிலிருந்தே செல்லமாக வளர்க்கப்பட்டவள். பெற்றவர்கள் ஒன்றும் டாட்ட பிர்லா இல்லையென்றாலும் அவள் கேட்டதெல்லாம் கிடைத்தது. தங்களை வருத்தி கொண்டாவது பெற்றோர்கள் அவளின் ஆசையை பூர்த்தி செய்தார்கள். உறவினர்களும் அப்படியே. அவள் ஒரு தேவதையாக வளர்ந்தாள். கல்லூரியில் எத்தனையோ கனவுகளுடன் அடியெடுத்து வைத்த அன்றைய தினம் அவளின் தகப்பனுக்கு அப்படியொரு பூரிப்பு. ஆனால் ஒரு கேடுகெட்ட கிழம், அவளின் பாட்டியின் வார்த்தையில் வந்தது அவளுக்கான சனி.

அவளின் அழகும், பேச்சும் எல்லோருக்கும் பிடிக்கும், அவளை கொத்திக்கொண்டு போக எத்தனையோ சொந்தங்கள் தயாராக இருந்தன. தன் மகள் வயிற்று பேரனுக்கு தான் அவளை மணமுடித்து தரவேண்டும் என்று பாட்டி உறுதியுடன் இருந்தாள். கல்விகனவுகளோடு இருந்தவள் நெஞ்சில் காதல் கனவுகளை நஞ்சென விதைத்தால் பாட்டி. ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றி கொண்டு எல்லா கெட்ட பழக்கங்களுக்கும் ஆளான அவனை இவளால் தான் திருத்த முடியும் என்று அந்த பிஞ்சு மனதில் வஞ்சகமாக வாளை சுழற்றினாள். தன்னால் தான் ஒரு இளைஞன் வாழ்வு வளம் பெறுமா...?

யோசித்தாள்...யோசித்தாள்...அவளது வயது அப்படி.
திரைப்படங்கள் அவளை நம்ப வைத்தன...அவள் காதலில் விழுந்தாள்.
நட்புகள் அவளை உசுபேற்றின..? அவள் கதாநயகியானாள்..
ஊருக்கு பொறுக்கியானவன் அவளுக்கு நண்பனான்..!! அவள் காதலியானாள்

தாயிற்கும் தகப்பனுக்கும் விஷயம் தெரிந்ததும் வானுக்கும் பூமிக்கும் குதித்தார்கள். தன் தாய் தான் எல்லாவற்றிக்கும் காரணம் என்றறிந்து பெற்றவளின் உறவை முறித்தான் தகப்பன். அது அவன் முதல் தவறு. கல்லூரிக்கு தானே கொண்டுபோய் விட்டு கூட்டி வர தொடங்கினான் அது இரண்டாவது தவறு. செலவிற்கு அஞ்சு பைசா கூட தரக்கூடாது என்று கட்டைளையிட்டான். மூன்றாவது தவறு. ஆசை ஆசையாய், பார்த்து பார்த்து மகள் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஒன்றை செய்து விட்டாளே என்ற கவலையில் தண்ணி அடிக்க தொடங்கினான். அது அவனின் பெரும் தவறு.

எந்த மாதிரியான சூழ்நிலையில் பெற்றவர்களுக்கு மகளின் காதல் தெரியவந்தது என்பதை நான் விளக்க விரும்பவில்லை. காரணம் என் நண்பரின் மரியாதை கருதி தான். அவர் நல்லவர். நடுத்தர வர்க்கத்தின் கடினமான உழைப்பாளி, தன் குடும்பத்தின் மேல் உயிரையே வைத்திருந்த ஒரு சராசரி யதார்த்த மனிதர். அவரின் அறிவிற்கும், வளர்ப்பிற்கும் அவர் செய்தது சரி, அவரால் அவ்வளவு தான் சிந்திக்க முடியும். ஆனால் காலம் வேறொரு முடிவை எடுத்திருந்தது அவருக்கு தெரியாமலே போனது.

பெற்றவளின் உறவை முறித்ததால் அவள் வழி உறவுகள் எதிரியாயின. என்ன பொல்லாத தப்பு பண்ணிட்டாள், முறைபையன் தானே..வேற எவனுக்கு கட்டி கொடுத்தாரான்னு பார்த்தறேன். தகப்பனை வீழ்த்த சூழ்ச்சிகள் அரங்கேறின.. முதல் தவறின் பயன்.

காலையும் மாலையும் தந்தை உடன் வருவது திடீரென அவளுக்கு சுமையாயின. நான் இனி தவறு செய்யமாட்டேன் என்னை நம்புங்கள் என்று மகள் கதறியதை தகப்பன் பொருபடுத்தவில்லை. கல்லூரி முடித்து உன்னை நல்லவன் ஒருவனுக்கு மணமுடித்து கொடுப்பது எனது கடமை. இனி என்னோடு தான் நீ வரவேண்டும் என்று சொல்லிவிட்டான். தன் மேல் ஒரு துரும்பு பட்டால் கூட தங்க முடியாத அப்பா, தனக்காக எதையும் செய்யும் அப்பா இன்று தன் மேல் நம்பிக்கை இல்லாமல் கூடவே வருவது அவளுக்கு எதிர்ப்புணர்ச்சியை தூண்டியது. அப்பன் வில்லனாகி போனான். அவனின் இரண்டாவது தவறின் பயன்.

இன்றைய இளைஞர்களுக்கு குறிப்பாக காதலர்களுக்கு பெற்றவர்களை ஏமாற்றவது என்பது ஒன்றும் பெரிய விசயமில்லை. அதை வெகு விமரிசையாக சினிமாக்கள் சொல்லி தந்து விடுகின்றன. அதுவும் தொலைக்காட்சி வழி ஒரு பைசா செலவில்லாமல் வீட்டிற்குள்ளேய..அவள் பொய் சொல்லி கல்லூரி விட்டு வெளிய வந்தாள். காத்திருந்த காதலனுடன் ஊர் சுற்றினாள். தன்னை நம்பாத தகப்பனுக்கு அவளை பொறுத்தவரை இது ஒரு நல்ல பாடம். பாட்டியின் தயவில் அவனிடம் காசு புழங்கியது. அவள் அவனுக்காக செலவழித்தான். அவள் வாழ்க்கையையும். இது தகப்பன் செய்த மூன்றாம் தவறின் விளைவு.

இதுவரை தன் வாழ்வில் முன்மாதிரியான ஒரு தந்தை இன்று எதிரியானார். அவர் ஒன்றும் மது வாசனை அறிந்திராத நல்லவர் இல்லை. எப்போதாவது காதும் காதும் வைத்த மாதிரி குடித்துவிட்டு பிள்ளைகள் உறங்கிய பின் வீட்டிற்கு வருவார். அவர் மனைவிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் அவர் மது அருந்துவது. இன்று எல்லாம் மாறிபோயவிட்டது. பகலில் கூட அவர் தண்ணி அடித்துவிட்டு வருவார். ஒரு பத்திரிகை செய்தியோ, தொலைக்கட்சியில் வரும் ஒரு காதல் வசனமோ கூட அவரை உணர்ச்சி வசப்பட வைத்தது. தன் மகள் தன்னை விட்டு பிரிந்து விடுவாளோ, அவளின் எதிர்காலம் இருண்டு என்னாகுமோ.. என்ற கவலையில் கிட்டத்தட்ட மன நோயாளியானர். இந்த மாதிரியான சமயங்களில் எல்லாம் மதுவே அவருக்கு பக்க துணையாக இருந்தது. தன்னை மறந்துவிட குடிப்பார். தன்னை நினைத்தும் குடிப்பார்.

அக்கம் பக்கம் இதுவே பேச்சாகி போக, அவர் எதன் பொருட்டு குடிக்கிறார் என்பது மறந்து அந்த 18 வயது பெண் குழந்தை அப்பனை வெறுக்க தொடங்கியது. அவள் காதலனும் ஒரு குடிகாரன் தான் ஆனால் அவனை மன்னித்து விட தயாரானாள். தன் பொருட்டு அவன் திருந்திவிடுவான் என்று நினைத்தாள். அவனை நம்பினாள். ஆனால் அப்பனை அவள் மன்னிக்க தயாரில்லை. இது மனித மனத்தின் வினோதம். வாழ்வின் சுவராசியமும் இது தான். பிடித்தமானவர்கள் எது செய்தாலும் இனிக்கும்.

ஒரு சாரயக்கடை திண்ணையில் தான் அந்த தேவைதையின் வாழ்க்கையில் புயலை கிளப்பிய செய்தியொன்று அவள் அப்பனின் காதுகளை வந்தடைந்தது. அது அவனோடு எங்கயோ வண்டியில் சென்றதை பார்த்தாய் ஒரு செய்தி. ஊரார் பேசும் அளவிற்கு அவளின் நடத்தை ஆகிவிட்டதே என்ற ஆத்திரத்துடன் தன்னிலை மறந்து குடித்தான். அவள் ரத்தத்தையும் குடித்து விடும் வெறியுடன் வீடு நோக்கி நடந்தான். அவனின் வேகம் கண்டு, கோபம் உணர்ந்து வீட்டிற்கு செய்தி பறந்தது. அவள் அசரவில்லை. தாயார் துடித்தாள். அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கணவனை தடுக்கவும் முடியவில்லை. அவன் அடித்து துவைத்தான். கொன்று விட துடித்தான். அக்கம்பக்கம் தடுத்தது. உறவுகள் அவனை ஆசுவாசபடுத்த வந்தது. வார்த்தைகள் இரைந்தன...நாற்றத்தில் உணவெடுக்கும் காகங்கள் கூட கதை பொத்திக்கொண்டு பறந்தன..வார்த்தைகள் நாறின. காட்சிகள் மாறின. கொல்லைபுறமாக கட்டிய துணியோடு அவள் அவன் வீடு நோக்கி பறந்தாள். அப்பனை காரி உமிழ்ந்தாள்.

போதை தெளிந்ததும் விஷயமறிந்து கதறி துடித்தான். எது நடக்க கூடாது என்று அல்லும் பகலும் தன்னை வருத்தினானோ அது நடந்துவிட்டது. அதுவும் தன்னாலேயே முடிந்து விட்டது தெரிந்து நடைபிணம் ஆனான்.

இது நடந்து ஒரு மாதத்திற்கு பின் தான் நான் அவரை சந்தித்து விஷயமறிந்தேன். இதை நாலு பேருக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்க்க்காகதான் இந்த பதிவு. அது மட்டுமல்ல ஒரு தகப்பனாக அவர் மனநிலையை என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. நான் ஒரு 3 வயது பெண் குழந்தையின் தகப்பன் என்ற முறையில் இன்னும் ஒரு சில விசயத்தை காதலர்களோடு பகிர்ந்து கொள்ள விருப்பம்.



சார் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது...உங்கள் மனைவி உங்களிடம் தான் முதலில் காட்ட சொன்னார் என்று அந்த வெள்ளுடை நர்ஸ் ஒரு ரோஜா குவியலாக கொண்டு வந்து காட்டியபொழுது மணி இரவு பதினொன்று இருபது... அந்த முதல் நிமிடம் என்னும் ஏற்படுத்திய பரவசம் எந்த வார்த்தைகளாலும் கொண்டு நிறைத்து விட முடியாது. வள்ளுவனும் வார்த்தையின்றி திணறும் இடம் அது.



முதல் சிரிப்பு, முதல் வார்த்தை, அந்த பால்மண வாசம், கோடி கொடுத்தாலும் கிடைத்துவிடாத அந்த எச்சிலின் சுவை, சொல்ல ஆயிரம் அனுபவங்கள். அந்த செல்ல குழந்தையின் மல ஜாலங்கள் கூட முகம் சுளிக்க வைத்ததில்லை. பார்த்து பார்த்து அந்த குழந்தையை நாங்கள் வளர்கிறோம். நான் மட்டுமல்ல எல்லா பெற்றோரும் தான். கல்லூரி படிக்கும் போது, ஏன் கல்யாணத்திற்கு முன்பு வரை கூட சில விஷயங்களில் என் பெற்றோரை நான் கடிந்திருக்கிறேன். ஆனால் என்றைக்கு நான் ஒரு தகப்பன் ஆனேனோ, எந்த குழந்தைக்காக என் உயிரை தியாகம் செய்யவும் தயங்க மாட்டேனோ...அப்படித்தானே என் தகப்பனும், தாயும் தன் உதிரம் கொட்டி என்னை வளர்த்திருப்பார்கள். நானாவது ஒரு கௌரவமான வேளையில், நல்ல சம்பளத்தில் இருக்கிறேன். என் தாயும் தகப்பனும் மழையிலும், வெயிலிலும் வியாபாரம் செய்தல்லவா என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள் என்று நினைத்த நாள் முதல் என் தகப்பன் எனக்கு தெய்வமாகி போனான். அவர்களை இன்று நினைக்காத நாளில்லை.

காதலிகளே..காதலர்களே.. காதலின் வெற்றி எது..? திருமணமா...? இல்லை. காதலின் வெற்றி என்பது கௌரமான வாழ்க்கை. அதுவும் பெற்றவர்களுடன், உறவுகளுடன், சமூகத்துடன் இணைந்த ஒரு இனிமையான அனுபவம். காதலின் வெற்றி வெறும் உடற்சேர்க்கை மட்டுமல்ல. உங்கள் காதலியை பெற்றவர்களுக்கும் கௌரவத்தை, ஒரு சமூக அந்தஸ்தை கொடுப்பது தான். அவர்களின் இருபது வருட கனவு அந்த பெண் குழந்தை, அதை தட்டி பறிக்கையில் ஏற்படும் பதட்டம் ஒரு சில வேண்டாத சம்பவங்களை ஏற்படுத்திவிடும். அவர்களை புரிந்து கொள்ளுங்கள். உங்களை பக்குவமாய் புரிய வையுங்கள். எல்லாம் சுபமாகும்.

பாலியல் வன்கொடுமை..! ஒரு தீர்வு..!!


என் அனுபவத்தில் சொல்லும் சில விஷயங்கள் உங்களில் பலருக்கும் ஒத்து போகலாம். சிலர் முரண்படுவார்கள் என்பதையும் நானறிவேன். சமீபத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள், சீர்கேடு அடைந்துவரும் குடும்ப உறவுகள், சமுதாயத்தில் நிலவும் பொறுப்பற்ற வணிகம் சார்ந்த சாதக, பாதகங்கள் எல்லாவற்றிற்கும் அடிப்படை காரணம் குறித்தான ஒரு விரிவான பார்வையை முன் வைக்க நினைத்தே இந்த பதிவு.
தொடர்ந்து அதிகரித்து வரும் விவாகரத்து, பெண் பாலியல் வன்கொடுமை போன்ற விஷயங்களால்



உலகம் கண் முன்னால் விரிந்துபட்டு கிடக்கும் தொழில் நுட்ப வளர்ச்சி, இருபது, இருபத்தைந்து வருடங்களாக கடுமையான உழைப்பின் பலனால் தான் பெற்ற வாழ்வின் அதிகபட்ச ஊதியத்தை, இன்று இளைய தலைமுறை கல்லூரியை விட்டு வெளியே வந்தவுடனே வாங்க தொடங்கி விடுவதன் பிரமிப்பால் எதையும் ஆலோசனையாக கூட சொல்ல முடியாத நிலையில் பெற்றோர்கள், ஏற்று கொள்ள விரும்பாத இளசுகள். ரசனைகள் முற்றிலும் மாறிபோய்விட்ட நிலையில் அதன் விளைவுகளையும் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டிய சூழ்நிலை கைதிகளாக நாம்.


அதிகார மனோபாவம் என்பது பணிசார்ந்த விஷயமாகி, நடைமுறை சமுதாயத்திற்கும் பரவி, இன்று இயல்பான குணமாகவும் மாறி போய்விட்டது. வீட்டில் எலி, வெளியே புலி என்பது போய் இன்று எப்போதும் புலியாக உருமிகொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இழந்து கொண்டிருப்பது என்ன...? அதனால் அடைந்து விட்டிருப்பது என்ன..?
முந்தய தலைமுறை வரை நம்மவர்களுக்கிருந்த சகிப்புத்தன்மை என்கிற ஒரு வஸ்து இன்று காணாமலே போய்விட்டது. "ஜஸ்ட் லைக் தட்" என்கிற மேற்கத்திய கலாசாரத்தின் வரவால் நாம் பெற்று கொண்டதை விட இழந்தது மிக அதிகம். அத்தகைய இழப்புகளில் ஓன்று தான் இந்த சகிப்புத்தன்மை. எடுத்ததுமே இந்த சகிப்புத்தன்மையை பற்றி பேசி உங்களை இம்சிப்பதற்கு காரணம் பெண்கள் மிக மிக அவசியமாக கொள்ளவேண்டிய ஒரு குணம் இது. கிட்டத்தட்ட இது அவர்களின் ஒரு உடலின் பாகமாக தான் இருந்திருக்கிறது முந்தய காலங்களில். " பொண்ணு ரொம்ப அமைதியான குணம் " , " முகத்தை பார்த்தாலே சாந்தமா, மகாலக்ஷ்மியாட்டம் இருக்க போங்கோ " என்றெல்லாம் பெண் பார்க்கும் வீடுகளில் எப்போதும் நாம் கேட்கும் வார்த்தை இது. ஆனால் இன்று இது ஒரு குறையாக கருதபடுகிறது. பொண்ணு active - அ இல்லமா.. ரொம்ப டல்லடிச்ச மாதிரி இருக்கா.."

கூட்டு குடும்ப வாழ்க்கை சிதைந்து போய்விட்டத்தின் எதிரொலியாக நமக்கு கிடைத்திருக்கும் தனி மனித சுதந்திரத்தை அனுபவிக்க கூட முடியாமல் மனநெருக்குதலுக்கு உள்ளாக்கும் பொருளாதார சுமைகள், கூடுதல் பொறுப்புகளால் விழிபிதுங்கும் நிலையில், போட்டி நிறைந்த வியாபார உலகில் நீடித்திருக்க மேற்கொள்ளபடுகின்ற அலுவலக நடைமுறைகள் நம்மை மேலும் சோர்வடைய செய்வதுடன் ஒரு தன்னிரக்க நிலைக்கு தள்ளப்பட்டு, தன்னை தவிர உலகில் எல்லோரும் சுகமாக இருக்க தனக்கு மட்டும் ஏன் இந்த கொடுமை என மனம் வெம்ப செய்கிறது.

சரி இதெல்லாம் பொதுவான இன்றைய யதார்த்த உலகின் அம்சங்கள் தானே, இதில் ஆண்பால், பெண்பால் எங்கு வந்தது...? உங்கள் கேள்வி நியாயம் தான். நாம் இழந்ததை எல்லாம் பெண்கள் நினைத்தால் தான் திரும்ப பெறமுடியும் என்பதால் தான் இந்த பதிவு பெண்பாளிர்கானது என்று தலைப்பிட்டேன். பெண்களால் மட்டும் தான் என்று கூட நான் குறிப்பிடலாம். ஆனால், அதனாலேயே முளைத்துவிட காத்திருக்கும் கொம்புகளுக்கு நான் வேலை கொடுக்க போவதில்லை. அதே சமயம் ஆண்களுக்கென்று எந்த பொறுப்பும் இல்லையென்று அர்த்தமல்ல. பெண் எடுக்கும் ஒரு முயற்சிக்கு ஆண் துணை நிற்பான் என்ற நம்பிக்கை தான்.

" If you are not going to be a looser, why dont you try something new "

இந்த வாசகத்தை எப்போதாவது கேள்விபட்டிருகிரீர்களா...? இப்போது நான் சொல்லபோவதும் இது தான். 3 ரூபாய் கொடுத்து வாங்கும் தினசரி அன்று மதியமே கிழிபடுவது போலதான். ஒருமுறை இதை படித்துவிட்டு மறந்தாலும் சரி, மண்டையில் ஏற்றினாலும் சரி. நீங்களோ நானோ இழக்கபோவது எதுவுமில்லை. ஏதாவது கிடைத்தா என்பதை உங்கள் பின்னூட்டம் தான் சொல்லவேண்டும்.

மிக படித்தவர்கள் வாழும் கேரளாவில் இன்றைய விவாகரத்து நிலவரம் என்ன தெரியுமா. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் எந்த மாநிலத்தையும் விட மிக அதிகமாக பதிவு செய்யப்பட்ட சதவிகிதம் 350%, இதற்கு அடுத்து தான் டெல்லி மற்றும் பெங்களூர். ஒட்டுமொத்த இந்தியாவின் விவாகரத்து சதவிகிதம் அதிகரித்து கொண்டே போவதாகவும் ஒரு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. அதிகமான படிப்போ, வங்கி கணக்கை நிரப்பும் ஐந்து இழக்க சம்பளமோ தொலைத்து கொண்டிருக்கும் உங்களின் நிம்மதியையும், கனவுகளை கருவாக்கி சுமந்த வாரிசின் பாதுகாப்பற்ற எதிர்கால வாழ்க்கையையும் உங்களின் ஒரு நிமிட சகிப்புதன்மை மீட்டெடுக்கும் என்பது நிதர்சனமான உண்மை. பொறுமையோ, விட்டுகொடுதலோ அவமானமல்ல..அது காதலின் உச்சகட்டம். அதிகார போட்டி, பணப்போட்டி, ஆணவ போட்டி இதெல்லாம் உங்களக்கு தெரியும். சிலருக்கு இயல்பான குணமும்மாக கூட உண்டு. விட்டுகொடுதலில் யாரேனும் போட்டி இட்டதுண்டா...முயற்சி செய்து பாருங்கள். அதன் இனிமை புரியும். காதலின் இன்னொரு பரிணாமும், அதன் நீட்சியாக நீங்கள் மலர்வதை உங்களால் உணர முடியும். காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற ஓஷோவின் தத்துவார்த்தம் இதே தான் சொல்கிறதோ என்னவோ.

ஏன் தாய்வழி பாட்டியும், தாத்தாவும் எப்போதும் சண்டையிட்டு கொண்டையிருப்பர்கள். ஆனால் வயதாக வயதாக அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு விட்டுகொடுத்தல் இருந்தது. "தாத்தா எனக்கு முன்னாடியே போய் விடணும். பாவம் அதுக்கு ஒன்னும் தெரியாது" என்பார் பாட்டி. தாத்தாவோ எனக்கு முன்னாடியே அவ போய்டணும், நான் போய்ட்ட அவள கஷ்டபடுதிருவாக" என்பார். அந்த வயதில் எனக்கு புரியவில்லை. அவர்களின் அன்பும் காதலும், அவர்களுக்குள் இருந்த விட்டுகொடுத்தலும். அவர்கள் சண்டை இட்டது தங்களின் ஈகோவை திருப்தி படுத்த. மற்றபடி அவர்களுக்குள் அந்தரங்கமாக இருந்த விட்டுகொடுதலை அவர்கள் யாருக்கும் சொல்லி கொண்டிருக்கவில்லை.

பணம் பணம் என்று அலைகிறோமேயொழிய அதை ஆளுமை செய்யகூடிய திறன் 99% பேருக்கு கிடையாது என்பது தான் கசப்பான உண்மை. இதைதான் நம்ம சூப்பர் ஸ்டார் முத்து படத்தில்

"கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்க்கு எஜமானன்
கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்" என்று பாடினார்.

கழுத்து வரைக்கும் காசு இருந்தாலும் அதற்கு எஜமானனாக இருக்க கூடிய பக்குவம் நம்மில் பலருக்கும் கிடையாது. இன்றைய இளைஞர்கள் ஆணோ பெண்ணோ கை நிறைய சம்பாரிப்பது சந்தோசம் தான். ஆனால் அதற்கு விலையாக நீங்கள் கொடுப்பது உங்களின், உங்களை சார்ந்தோரின் அமைதியான வாழ்க்கையை. எப்படி வேண்டுமானாலும் வாழ்வது மேற்கத்திய வாழ்க்கை முறைக்கு சரி. நம் கலாசாரத்திற்கு அது ஏற்றதல்ல. இன்னும் சொல்லபோனால் அவர்களே கூட நம் கலாசாரத்தை நோக்கி வந்து கொண்டிருப்பது அதில் எங்கோ தவறிருக்கிறது என்பதை தான் நமக்கு காட்டுகிறது. காசை தண்ணீராய் செலவழிப்பதும், பணத்தால் எதையும் சாதித்துவிடலாம் என்கிற ஹீரோயிச மனோபாவத்தால் இன்றைய இளைஞர்கள் பிரச்னைகுள்ளாகிரார்கள். இன்னொரு பக்கம் காசை சிக்கனமாக சேர்த்து வைப்பவர்களும், சேமித்து சொத்து சேர்ப்பவர்களும் தலையில் கொம்பு முளைத்தது போல் திரிகிறார்கள். தவறுகளை திரும்பி பார்கவோ, திருத்தி கொள்ளவோ நேரமில்லாத வேகமான உலகில் இழப்புகள் தவிர்க்க முடியாததாகிறது.



உங்கள் கல்வி தகுதியோ, வசிக்கும் தலைமை பதவியோ வீட்டின் நான்கு சுவர்களுக்குள் பட்டை தீட்டப்பட்டு, வெளியே சோதித்தறிய பட வேண்டுமேயொழிய, கத்தியை வீசுவதற்கு உங்கள் தகப்பனோ, மனைவியோ, கணவனோ இலக்கு அல்ல. உங்கள் சாதனையை சொல்லி சிரிக்க வேண்டிய வீட்டில் அதை அதிகாரத்தோடு நிலை நிறுத்த விரும்புவது பிரச்சனையை விலை கொடுத்து வாங்குவது போல் தான். உங்களின் தகுதிக்காக கொடுக்கப்பட்ட அதிகாரம் உங்களை சுவீகாரம் செய்து கொண்டு உங்களின் சுயதன்மையை மழுங்கடித்து விடுகிறது. நீங்கள் விரும்பி அணிந்து கொண்ட முகமூடியே உங்களின் உண்மை தன்மையாக மாறிவிடும் அதிசயம் இது. ஆனால் இது உங்களின் இயல்பான வாழ்விற்கும் அமைதியான தோற்றத்திற்கும் நீங்கள் கொடுக்கும் விலை.

நகரில் பேர் சொன்னால் தெரியும் அளவிற்கு பிரபலம். Used Car Dealer. வேகமாக வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர். சமீபத்தில் அவரை சந்திக்க நேர்ந்த பொழுது அவர் சொன்ன ஒரு வார்த்தை. " சொந்த பந்தங்களை காணும் போது அவமானம் பிடுங்கி தின்கிறது சார்...அப்ப கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்" என்றார். என்ன சார்.. என்ன விஷயம்.. என்றேன்.

அவர் சொன்னது. கல்யாணமான முதல் வருடம் நல்ல இருந்தது. அதன் பின் தான் பிரச்சனைகள் ஆரம்பம். வியாபாரத்தில் ஏற்பட்ட திடீர் சுணக்கம், வீட்டிலும் பிரதிபலிக்க ஆரம்பித்தது. பணபிரச்சனை தலை விரித்தாடியது. வேறு எங்கும் முடியாமல் மனைவி வழியில் ஏதாவது புரட்ட முடியுமா என்று முயற்சிக்க பிரச்னை இன்னும் பெரிதானது. தன் மகளை வரதட்சணை கொடுமை செய்வதாக அவர்கள் வீட்டில் குற்றம் சாட்டினார்கள். இதை விட பெரிய கொடுமை எல்லா விஷயமும் தெரிந்த மனைவியே நான் கொடுமை செய்வதாக பச்சை பொய் சொன்னது தான். அதன்பின் தினமும் சண்டை தான். தினம் தினம் பஞ்சாயத்து. ஒருவருக்கொருவர் சேற்றை வாரி முகத்தில் அடித்து கொண்டோம். அந்தரங்கத்தில் நாங்கள் பரிமாறிகொண்ட எங்களின் இளவயது சிறு சிறு தவறுகள் நான்கு பேர் முன்னிலையில் பூதாகரபடுத்தபட்டு அசிங்கபடுத்தி கொண்டோம்.

பத்து வருடங்களாகி விட்டது. எல்லாம் தாண்டி வந்தாயிற்று. பணம், புகழ், வீடு என எல்லாம் சம்பாதித்து விட்டோம். ஆனால் ஒரு நல்லது, கெட்டதில் கலந்து கொள்ளும் பொது அன்று பஞ்சாயத்து செய்தவர்கள் எல்லாம் தவறாமல் கேட்பது " இப்பெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லேய...அனுசரிச்சு போப்பா.." இதை கேட்டாலே அவமானம் பிடுங்கி தின்கிறது சார். தலை குனிந்து விலகுவதை தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை என்றார்.

நான் சொல்ல வருவதும் இது தான். குறைகள் இல்லாத மனிதர் இங்கு யாரும் இல்லை. பொறுமைதான் நமது உண்மையான செல்வம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஆணாதிக்கம், பெண் சமத்துவம், பெண் சமஉரிமை என்பதெல்லாம் "பொழப்பு கேட்ட வேலை" தான் என்னை பொறுத்தவரை. உங்களிடம் காசும், அதிகாரமும் இருந்து விட்டால் நீங்கள் எது செய்தாலும் மூடி மறைக்கலாம். எல்லா அமைப்புகளும் உங்கள் பின்னால் நின்று பாதுகாப்பு கூட கொடுக்கும்.

வயிற்று பிழைப்புக்காக தன்னை நொந்துகொண்டு வரப்பு ஓரம் ஒதுங்கும் பெண்களை பிடித்து விபசாரத்தில் தள்ளும் சமூகம், காசு வாங்கி கொண்டு, தான் செய்யும் காரியத்தால் ஒரு தலைமுறையே பாதிக்கப்படும் என்று தெரிந்த, நன்கு படித்த சினிமா நடிகைகளை ஒன்றும் செய்வதில்லை. அவர்களுக்கு குடை பிடிப்பதும், கால் பிடிப்பதும் சமுக அந்தஸ்தாக கருதிகொள்கிறது. என்ன செய்கின்றன இந்த மாதர் சங்கங்கங்கள். புருஷன் மனைவி குடும்ப சண்டையில் மூக்கை நுழைத்து, மனைவியின் மனதை கெடுத்து விவாகரத்து வரை கொண்டு செல்வது தான் இவர்களின் வேலை போலிருக்கிறது. சினிமா, டிவி, வெகுஜன பத்திரிக்கை போன்ற எல்லா ஊடகங்களிலும் பெண் தன் உடலை, விற்பனை பொருளாக, சந்தை படுத்துவதை யாரும் தட்டிகேட்பதில்லை. தட்டி கேட்கவேண்டியவர்களே வியாபாரிகளாக, விற்பனை பொருளாக உள்ள போது ஆரோகியமான சமூகத்தை எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய தவறு. குறைந்தபட்சம் நம்மை நாம் காபந்து செய்து கொள்வதை தவிர நம் எதுவும் செய்துவிட முடியாது.

திருமணதிற்கு பின்னும் ஏற்படும் தனிமை மிக மிக கொடியது. அவளை பிரிந்து என்னால் வாழமுடியும் என்று நினைத்தேன். ஆனால் நான் அவளின் ஆளுமைக்கு எவ்வளுதூரம் உட்பட்டிருக்கிறேன் என்பது இப்போது புரிகிறது. சமைப்பதோ, வீட்டு வேலையோ எனக்கொரு பிரச்சனையல்ல. ஆனால் அவளிலாத தனிமையை தாங்க முடியவில்லை. அவள் பேசாமல் இருந்த போது கூட நான் இந்தளவு தனிமையை உணரவில்லை. முறைப்படி விவாகரத்திற்கு அப்பளை செய்து விட்டு தனி தனியாக வாழும் என் நண்பரின் வரிகள் தான் இது. எத்தனை சத்தியம் இந்த வரிகள் என்பது குடும்பஸ்தர்களுக்கு நான்றாகவே புரியும். கட்டில் சுகம் மட்டுமல்ல தாம்பத்யம்.

நாட்டில் நிலவும் அணைத்து பிரச்சனைக்கும் நம்மால் தீர்வு காண முடியாது தான். குறைந்தபட்சம் நமது வீடு சந்தோசமாக இருந்தால், ஒரு ஆரோகியமான தலைமுறை நம்மால் உருவாக்கபட்டால் உங்கள் வாழ்வை நிறைவாக வாழ்ந்தவர்கள் ஆவீர். பெண்ணே வீட்டின் சந்தோசம். அமைதி. செழிப்பு எல்லாம். ஆணின் உண்மையான சந்தோசம் ஒரு பெண்ணின் அரவணைப்பில் தான். ஒரு பெண் தன் கணவனுக்காக, குடும்பத்திற்காக தன்னை அர்பணிப்பது எவ்வகையிலும் அடிமைத்தனம் அல்ல.