எங்களுடைய தமிழ் மாமிமார்களுக்கு ஒரு திமிர் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இருக்கத்தான் செய்கிறது. மாமியாருக்கும் மருமகளுக்குமிடையிலான சண்டையை யார் தொடக்கினார்களோ அது இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
கடந்தவாரம் லண்டனில் எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டுக்குப் போய் இருந்தேன். அங்கு இருந்த தமிழ் மாமி தனது மருமகளோடு முறைத்துக்கொண்டே இருந்தா. அவ போன மாதம்தான் மகனின் ஸ்பொன்சரில் மட்டக்களப்பிலிருந்து வந்திருந்தா.
இங்கு லண்டனிலிருந்து ஒருவரை ஸ்பொன்சர் பண்ணி எடுப்பதென்றால் அவ்வளவு லேசான விடயமல்ல. வங்கியில் போதுமான பணம் இருக்கவேண்டும், தொழில் வருமானம் காட்டவேண்டும், வீடு சம்பந்தமான ஆவணங்கள் கவுன்சிலில் உறுதிப்பாட்டுடன் காட்டவேண்டும், ஸ்பொன்சர் பண்ணுறவர் இலங்கையிலிருந்து அழைத்து தங்குமிடம், உணவு, போக்குவரத்துக்களை எல்லாம் சரியாக செய்வார்களா என்று உறுதிப்படுத்தும்படியான எல்லா எழுத்துமூலமான ஆவணங்களும் சரியானது என சென்னையில் உள்ள விசா ஒபிசருக்கு துல்லியமாக புரியவேண்டும்.
(சிலோன் விசா கோரிக்கைகள் எல்லாம் இப்பொழுது சென்னையிலுள்ள பிரித்தானியத் தூதுவராலயத்திற்குத்தானே போகின்றன. பின்னை சிலோனிலுள்ள பிரித்தானியத் தூதுவரை கொடும்பாவி கட்டி எரிப்பீர்கள். டேவிட் மிலிபாண்டை வெள்ளைப்புலி என்பீர்கள். இத்தனைக்கும் தூதுவராலயத்தையும் வைத்துக்கொண்டு இந்தக் கொடுமைகளையும் தாங்கிக்கொள்ள அவர்கள் என்ன குப்பனா, சுப்பனா?) அதுதான் விசா சம்பந்தப்பட்ட என்னவென்றாலும் வி.எப். எஸ் உடன் தொடர்புகொள்ளுங்கள். ஒன்றுக்கும் பிரித்தானிய தூதரகத்திற்கு வராதீர்கள் என்கிறார்கள். அது கொழும்பிலுள்ள அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.
முந்தி என்றால் விசா றிஞக்ட் பண்ணினால் கொழும்பு தூதுவராலயத்திற்கு போன் பண்ணியாவது கேட்கலாம். இப்ப வாய்மூடி இருக்கவேண்டியதுதான். ஒரு வார்த்தை யாரோடும் பேச முடியாது. அம்மம்மா ஒரு பழமொழி சொல்லுவா. வாய்க்கொழுப்பு சீலையால போகுது. அதுதான் இது. அப்பவும் விசா ஒபிசர் ஒரு கொன்சவேட்டிவ் கட்சிக்காரராக இருந்தால் வெளிநாட்டுக்காரர் ஏன் லண்டன் போகினம் என்று ஒரு தடவைக்கு இரு தடவை யோசிக்கலாம். விசாவை றிஞக்ட் பண்ணலாம். அவ்வளவு நெருக்குவாரங்களுக்குப் பிறகுதான் லண்டன் விசா கிடைக்கிறது.
மாமி ஒருவாறு லண்டன் வந்ததால், மாமி நினைக்கிறா மருமகள் தனது மகனை முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறா என்று. அந்த வீட்டில் நான் எப்பொழுதும் பார்த்திருக்கிறேன். கணவரும் மனைவியும் நல்ல ஒற்றுமை. லண்டனில் இப்படி ஒற்றுமையாக இருப்பது மகிழ்ச்சியான விசயம்தான். கணவன் வேலைக்குப் போக மனைவி வீட்டில்தான் இருக்கிறா. மனைவி பிள்ளைகளின் பணிவிடைகள், கணவனின் பணிவிடைகள் என்று பிசியாக இருக்கிறா. கணவனும் மனைவியும் வேலைக்குப் போனால்தான் இங்கு காலம் தள்ள முடியும். ஆனால் மனைவியை வேலைக்கு அனுப்பாமல் அன்பாகப் பார்த்துக்கொள்ளும் கணவர் அவர். மனைவியும் கணவனின் சம்பாத்தியத்தில் அழகாக குடும்பம் கொண்டுபோகிறா. கணவனை அதுவேண்டும், இது வேண்டும் என்று நச்சரிப்பது இல்லை.
இங்கு லண்டனில் பக்கத்து வீட்டுக்காரர் என்ன வைத்திருக்கிறாரோ அதுவேண்டும் என அடம் பிடிக்கும் மனைவிமார்கள் மத்தியில், அதற்காக மூன்று வேலை செய்யும் கணவன்மார்கள் மத்தியில், இந்தக் குடும்பம் எனக்கு எப்பொழுதும் அபூர்வமாகவே தெரியும்.
கணவன் மனைவியின் சொல்லை மீறி எதையும் செய்வதில்லை. மனைவியிடம் கேட்டுத்தான் எதனையும் செய்வார். அதனால் குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக ஓடுகிறது. இதுதான் மட்டக்களப்பிலிருந்து வந்த மாமிக்குப் பொறுக்கமாட்டன் என்கிறது. நான் அங்கு போன நேரத்திலிருந்து மாமி காலில் சுடு தண்ணி ஊத்துப்பட்ட மாதிரி ஏதோ துடித்துக்கொண்டிருந்தா. மருமகளைப் பார்த்து முறைத்தவண்ணமே இருந்தா.
நான் மாமிதானே. மகனைப் பெற்றுக்கொடுத்த நான்தானே என்னும் ஒருவகைத் திமிர் எங்களுடைய தமிழ் மாமிகளுக்குக் காலங் காலமாக இருந்து வருகிறது. இது தமிழ் நாட்டிலிருந்து வந்த ஒரு பரம்பரை வியாதி. தமிழ் நாட்டில் மாமி மருமகள் சண்டை பத்திரிகை தலைப்பு செய்திகளாக இன்னும் வெளிவருவதை நாம் காண்கிறோம். மகன் என்னும் வைரத்தை மருமகளிடம் கொடுத்ததற்காக காலம் காலமாக மருமகள் தனக்கு ஊழியம் செய்யவேண்டும் என்றதொரு மனோபாவம் மாமியார்களிடம் இருக்கிறது.
இங்கு லண்டனில் ஒரு மாமியார் இப்படித்தான் ஊரிலிருந்து வந்தவா. வந்த நாள் முதல் ஒரே வீட்டில் கெடுபிடி. ஊரிலிருந்து வந்த நாளிலிருந்து மருமகளுக்கு ஒரே தொல்லை. அதை அங்க வை, இதை இங்கை வை என்று ஊரில் உள்ள வீட்டில் சட்டம் போடுவது போல இங்கையும் வந்த இடத்தில் சட்டம் போட்டா மாமி.
மருமகள் வேலைக்குப் போறவா. மாமியின் கெடுபிடி தாங்க முடியாமல் கணவன் வேலைக்குப் போன பிறகு அவ வேலைக்கு லீவு போட்டுவிட்டு மாமியை உட்காரவைத்து நல்ல பேச்சுக்கொடுத்தா. இவ்வளவு காலம் பொறுத்துக்கொண்டிருந்த மருமகள் அன்று சன்னதம் கொண்டுவிட்டா. இங்குள்ள விசா நிலவரங்கள் எல்லாவற்றையும் சொல்லி நன்றாக ஏசிவிட்டு கடைசியாக இதுக்குப் பிறகு வாயைத் திறந்தால் பொலிசை கூப்பிட்டு பிடிச்சுக் கொடுத்துவிட்டு விசாவையும் கான்சல்பண்ணி ஊருக்கு பெட்டி கட்டிவிடுவேன் என்று நல்ல மிரட்டல். அதுக்குப் பிறகு மாமி சாப்பாட்டுக்குத் தவிர வாயைத் திறப்பதில்லை.
மருமகளை மகளாக நினைக்கும் மாமிமார்கள் இருக்கிறார்கள். ஆனால் மருமகளின் மனநிலையைப் புரிந்துகொண்ட மாமிமார்கள் தமிழ் சமூகத்தில் குறைவு.
ஆனால் இங்கு புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்த பிள்ளைகளுக்கு மாமியார் கொடுமை என்பது தெரியாது. அப்படி யாராவது ஒரே ஏசிக்கொண்டிருந்தால் 999 இற்கு அடித்து உளவியல் ரீதியாக என்னைத் துன்புறுத்துகிறார்கள் என்றால் பொலிஸ் வந்து உடனே அள்ளிக்கொண்டுபோய்விடும்.
கொலண்டில் ஒரு சாமத்திய வீட்டுக்குப் போயிருந்தேன். அது அந்த வீட்டில் நடக்கும் முதலாவது பிள்ளையின் சாமத்தியவீடு. மாமா, மாமியை ஊரிலிருந்து அழைத்திருந்தார் புருஷன். அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஓரளவு வசதியாக வாழ்ந்தவர்கள். மகன் ஹொலண்ட் வந்து இப்போது சுமாரான ஒரு வாழ்க்கை வாழுகிறார்.
மகன் இங்குவந்து தங்களிலும் சாதிகுறைந்த ஒரு பெண்ணை காதலித்து கலியாணம் முடித்துவிட்டது பெற்றோர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனை இவ்வளவு செலவழித்து இங்கு வந்து காட்டிக் கொண்டிருந்தார்கள். மருமகளையோ அல்லது மருமகளின் வீட்டுக்காரரையோ ஒரு துளிகூட மதிக்கவில்லை. அத்தனைக்கும் மருமகளின் வீட்டில் அவள் சமைத்துப்போடுவதை சாப்பிட்டுவிட்டு அவளுக்கே பேசுகின்ற கூட்டமாக இருந்தது அது.
ஊரிலிருந்து வந்த நாள் முதல் மருமகளை மட்டந்தட்டிப் பேசுவதில்தான் நாட்களைக் கழித்தார் மாமி. சீதனம் இல்லாத இடத்தில் எடுத்தது, சாதி குறைந்த இடத்தில் கலியாணம் செய்தது என்று ஒரே புறுபுறுத்துக்கொண்டிருந்தார்.
அதுமட்டுமல்ல, சாமத்தியவீட்டுக்கு வருகிறவர் போகிறவர்கள் எல்லோரிடத்திலும் மருமகளைப்பற்றி குறை சொல்லிக்கொண்டிருந்தா. இவ்வளவுக்கும் அந்த மருமகளை எல்லோருக்கும் தெரியும் அவ நல்லவா என்று.
இப்படி அவ மருமகளை குறை சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது மருமகளின் நண்பி ஒருத்தி அவள் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுகிறவள்.
மாமி மருமகளைப்பற்றி அவவிடமும் குறையாகப் பேசினா. உடனே சாமத்திய வீட்டுக்கு வந்த எல்லோரையும் கூப்பிட்டு சத்தம்போட்டு சொன்னாள். மாமி இங்கை வந்து மருமகளை அடக்கப்பார்க்கிறா. வயதுபோயும் உந்தக் கிழவிக்கு இன்னும் புத்தி இல்லாமல் முட்டாள் தனமாக இருக்கு. எல்லாரும் கேளுங்கோ என்று சத்தம்போட்டு சொல்ல ஊர்விட்டு ஊர் வந்து சண்டை பிடிக்கிறா. இப்பவே ஹொலண்ட் பொலிசுக்கு போன் பண்ணுங்கோ. இந்த மனிசியை பிடிச்சுக்கொடுங்கோ என்று கத்திவிட்டாள்.
மாமி மானபங்கப்படுத்தப்பட்ட உணர்வோடு பிறகு மருமகளைப்பற்றி யாரிடமும் எதுவும் சொல்ல வாய் திறக்கவில்லை. மூன்று மாதம் இருக்க வந்தவா, 15 நாளிலேயே வீட்டைவிட்டு ஊருக்குப் பிளேன் ஏறிப்போய்விட்டா.
சீதனம் வாங்குவது, மருமகள்களை அடக்குவது என்று தொடருகின்ற மாமியார் அடக்குமுறைப் பயணம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு சில மாமிகள்தான் தன்னுடைய மகளைப்போல் மருமகளையும் பார்ப்பார்கள்.
எனக்குத் தெரிந்த இன்னொரு மாமி இருக்கிறா. அவவுக்கு மருமகள் என்றாலே பிடிக்காது. மூத்த மருமகளை கலியாணம் முடித்து மகள் வீட்டுக்கு மருமகளை அழைத்துவந்த முதல் நாளில் இருந்தே கெடுபிடியை ஆரம்பித்தா. ஒரே வேலை. சும்மா இருக்க மருமகளை விடவில்லை. அதை செய். இதை செய் என்று ஒரே ஆய்க்கினை. சும்மா ஒரு நிமிஷமும் இருக்க விடமாட்டா. அந்தப் பிரச்சினையில் மகன் தாயைவிட்டு தனியே வீடு எடுத்துப் போய்விட்டார்.
ஏழையாக இருந்த மகன் உழைத்து மருமகளின் சேமிப்பால் நன்றாக வளர்ந்து ஓரளவு பணம் வந்துவிட்டது. மாமி தனக்கு செய்த 10 வருட கொடுமையை நினைத்து மருமகள் இப்பொழுது மாமியோடு ஒட்டுறவு குறைவு. கதைத்தால் மட்டும் ஆ.. மாமி, எப்படி இருக்கிறீர்கள், சுகமா? அவ்வளவுதான்.
மாமிக்குத் தெரியாது மருமகள் வசதியாக மாறுவா என்று. இத்தனைக்கும் மருமகள் கொடுமைக்காரி இல்லை. மாமி போட்டு துன்புறுத்தியதால் மருமகள் இப்படி மாறிவிட்டார். அதன் பிறகு அந்த மாமிக்கு இரண்டு மருமகள்மார் வந்தார்கள். அவர்கள் மாமியை ஒரு பொருட்டாகவும் மதிப்பதில்லை. இத்தனைக்கும் அந்த மாமி இரண்டு மருமகள்களையும் தன்னோடு வைத்திருப்பதற்கு வீடு கட்டினா. ஆனால் மாமியின் சட்டாம்பித்தனம் அந்த இரண்டு மருமகளிடமும் எடுபடவில்லை. மகன்மார் உழைத்து தன்னிடம் தரவேண்டும் என்று எதிர்பார்ககிறா. இது இந்தக் காலத்தில் நடக்கும் காரியமா?
மகன்மார் உழைத்து மனைவியிடம் தானே கொடுப்பார்கள். அதுதானே முறை. எப்படி மாமியிடம் கொடுப்பது? இதுதான் அந்த மாமிக்கு பெரும் பிரச்சினையாக மாறி இப்ப தனிமைப்பட்டுத்தப்பட்டுக் கிடக்கிறா.
அவவுக்கு மருமகனும் ஒத்து வராது, மருமகளும் ஒத்து வராது. அப்படிப்பட்ட மாமா மாரும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள்.
லண்டனில் எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஒரு மாமி ஒவ்வொரு நாளும் மருமகளை நச்சரித்த வண்ணம்தான் இருப்பா. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மருமகள் குசினிக்குள் வைத்து 'நொய் நொய்' என்று சத்தம் போட கன்னத்தைப் பொத்தி ஓங்கி ஒரு அறை. இனிமேல் கத்தினா அல்லது இதை வெளியில் சொன்னால் பொலிசீல் பிடித்துக் கொடுத்துவிடுவேன். ஒரு மிரட்டல். அவ்வளவுதான் மாமி இப்பொழுது அந்த வீட்டுக்குப் போனால் பிள்ளைப்பூச்சி போல, இருக்கிறாவா அல்லது இல்லயா எனக்கூடத் தெரியாமல் இருக்கிறது.
மருமகள் என்னிடம், என்னாலும் எத்தனை காலத்தக்கென்று பொறுத்துக்கொள்வது என்று சொன்னா.
ஊரில் உள்ள மாமிமார்கள், மருமகள் மகன் அல்லது மகள் மருமகன் சண்டையில் தலைபோட்டு நியாயம் சொல்லப் போகிறேன் என்று முட்டாள்தனமாகக் குடும்பத்தைப் பிரித்து விடுவார்கள்.
மாமி மார்கள் இப்பொழுதும் விடாப் பிடியாக மருமகள் தனது வேலைக்காரி என்ற எண்ணத்தை மாற்றவேண்டும். அல்லது அவர்கள் மானபங்கப்படுத்தப்படுவார்கள். முந்தி என்றால் மாமி வீட்டின் ராசாத்தி மாதிரி எல்லா அதிகாரங்களையும் சாவிக் கொத்தாக்கி இடுப்பில் சொருகியபடி வலம் வருவா.
ஆனால் இந்ததத் தொழிநுட்ப யுகத்தில் மாமி மார்கள் மாறவேண்டும். அல்லது மாற்றப்படுவார்கள்.
மாமியின் வீடுதான் நிம்மதியான வீடு என்று சொல்லி மருமகள்மார் மாமியின் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அந்த மாமி மார்கள்தான் சிறந்த மாமிமார்கள். இல்லை என்று அடம்பிடிக்கும் மாமிமார்களை விட்டு விட்டு புறம்தள்ளியபடிக்கு மருமகள்மார் போய்க்கொண்டே இருக்கிறார்கள். கடைசி காலத்தில் நோய் வாய்ப்படுகிற நேரம் ஒரு மருமகளையாவது பக்கத்தில் இருக்கவைக்க பாசத்தோடு மாமி மார்கள் முயற்சிக்க வேண்டும். அல்லது சும்மா கஸ்டப்பட்டுச் சாகவேண்டிவரும். மாமிமார்களே கவனமாக இருங்கள்.
(இடங்களின் பெயரை மாற்றியிருக்கிறேன்.)
திங்கள், 28 ஜூன், 2010
இணையத்தில் பணம் சம்பாதிக்க...
வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசை நம்மில் பலருக்கும் உண்டு. அதிலும் இணையத்தின் மூலம் சம்பாதிக்க முடியுமா என்று தேடினால், பணம் கட்டுங்கள் வேலை தருகிறோம் என்று நிறைய விளம்பரங்கள் பார்க்கலாம். அதை நம்பி பணம் கட்ட பயமாக இருக்கும். அதை விட்டால், நமக்கு பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த ஒன்று கூகுள் ஆட்சென்ஸ் மட்டுமே. ஆனால், அதில் சாமானியர்கள் பெரிய வருமானமெல்லாம் ஈட்ட முடியாது.
உங்களுக்கு ஆங்கில அறிவு இருந்தால்...அதாவது பிழையில்லாமல் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்தால், அதோடு, சற்று வேகமாக டைப் செய்ய முடியும் என்றால், தாராளமாக நமக்கான பாக்கெட் மணியை எந்த முதலீடுமின்றி சம்பாதிக்க முடியும். தேவை கொஞ்சம் கற்பனைத் திறனும் பொறுமையும் விடாமுயற்சியுமே!
இந்த கட்டுரை அமேசான் டாட் காமின் எம்டர்க் பற்றியது. இது என்ன மாதிரியான ஒர்க் என்று தெரிந்து கொள்ள ஒரு சிறு உதாரணம் தருகிறேன். உங்க மகன் பள்ளியில் கட்டுரைப் போட்டிக்காக ஒரு சிறு கட்டுரை எழுதித் தரச் சொல்லுகிறான். ‘தொலைக்காட்சியின் பயன்கள்’ என்ற தலைப்பு என்று வைத்துக் கொள்வோம். உங்களுக்குத் தெரிந்தால் எழுதித் தருவீர்கள், அல்லது தெரிந்தவர்களிடம் எழுதி வாங்குவீர்கள். அப்படி யாருக்குமே தெரியாவிட்டால் என்ன செய்வீர்கள்???
ஒன்றும் செய்ய வேண்டியதில்லை, எம்டர்க் டாட் காம் சென்று கட்டுரையின் தலைப்பு, தேவைப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கை அதற்கு நீங்கள் தர சம்மதிக்கும் தொகை சுமாராக ஒரு நூறு ருபாய்கள் என்று கொடுத்து, க்ரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தி விட்டால் போதும், உலகின் எந்த மூலையில் இருந்தாவது யாராவது ஒருவர் அதை உங்களுக்காக எழுதித் தந்து விடுவார்கள். பணம் அவருடைய் கணக்கில் சேர்ந்து விடும். இதற்கு ஒரு சிறு தொகையை நீங்கள் அத்தளத்துக்கு கமிஷனாக செலுத்தினால் போதும்.
இப்பொழுது உங்களுக்கு ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். கட்டுரை எழுதுவது மட்டுமல்லாமல், ப்ராடக்ட் ரிவ்யூ, ஆடியோ ட்ரான்ஸ்க்ரிப்ஷன், இமேஜில் குறைகள் கண்டுபிடிப்பது, வெப்சைட் பற்றி கமெண்ட் எழுதுவது என்று பல விதமான ஒர்க் வரும். ஒவ்வொரு நாளும் புதுவிதமன ஒர்க்களைப் பார்க்கலாம். சும்மா க்ளிக் செய்வதற்குக் கூட சிலர் பணம் கொடுக்கிறார்கள். காரணம், கூகுள் சர்ச் இன்ஞின் போய் அவர்களுடைய தளத்தைக் க்ளிக் செய்தால், அவர்களுடைய ரேங்க் ஏறும். இதற்கு நமக்கு பணம் தருகிறார்கள்.
சரி இப்போது கணக்கு துவங்குவது எப்படி என்று பார்ப்போம். www.mturk.com போய் worker என்ற லின்க்கில் நம் விவரங்களைக் கொடுத்து கணக்குத் துவங்கிக் கொள்ள வேண்டியது தான். துவங்கிய உடனே hits என்ற லிங்க்கை அழுத்தி எந்த விதமான வேலைகள் இருக்கின்றன என்று பார்த்து நமக்கு ஏற்றதைத் தேர்ந்தெடுத்து செய்ய ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு ஒர்க்குக்கும் ஒவ்வொரு விதமான தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதோடு, எவ்வளவு மணி நேரத்துக்குள் அதை முடிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருப்பார்கள்.
நாம் ACCEPT என்று இருப்பதைக் க்ளிக் செய்து ஒர்க் முடித்தவுடன் SUBMIT கொடுக்க வேண்டும். நாம் செய்து முடித்த வேலையை சம்பந்தப்பட்டவர்கள் பார்த்து ஓக்கே கொடுத்தால் மட்டுமே நம் கணக்கில் பணம் சேரும். REJECT செய்து விட்டால் பணம் கிடைக்காது. அவர்கள் எதிர்பார்த்தது இல்லாவிட்டாலோ, ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணப்பிழை இருந்தாலோ மட்டுமே REJECT செய்வார்கள்.
நாம் செய்து முடித்த ஒர்க்களை HIT என்று சொல்கிறோம். HIT APPROVAL RATE என்பது, நூற்றுக்கு எத்துணை ஒர்க்கள் நாம் சக்ஸஸ்ஃபுல்லாக முடித்திருக்கிறோம் என்று காட்டும். அதை 95 சதவீதத்துக்கும் மேல் இருக்கும்படி வைத்துக் கொண்டால், நல்ல ஒர்க்கள் நிறைய வரும். நாம் எடுத்த ஒர்க்கை நம்மால் செய்ய முடியாமல் போனால், அதை ரிடர்ன் செய்து விடலாம். அப்படி ரிடர்ன் செய்யாமல், அதை அப்படியே விட்டு விட்டால், அது ABANDONED என்று காட்டும்.
சரி, ஒர்க் எல்லாம் நல்லபடியாக நிறைவு செய்து ஓரளவுக்கு கணக்கில் பணம் சேர்ந்து விட்டது. அந்தப் பணத்தை எப்படி எடுப்பது? எப்போது வேண்டுமானாலும் நாம் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இந்திய ருபாயிலேயே செக் வந்து விடும். ஒவ்வொரு முறை எடுக்கும் போதும் ப்ராஸசிங் கட்டணமாக 4 டாலர் பிடித்துக் கொள்வார்கள். ஆனால், பணத்தை முதல்முறை எடுக்கும் முன்பாக, நாம் பாஸ்போர்ட், வோட்டர்ஸ் ஐடி, பேன் கார்டு இம்மூன்றில் ஏதாவது ஒன்றை ஸ்கேன் செய்து அனுப்ப வேண்டும். அந்த நபர் நாம் தான் என்பதற்கு நாம் தரும் அத்தாட்சி இது. அதோடு, ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருப்பதைத் தடை செய்ய இந்த வழியைப் பின்பற்றுகிறார்கள்.
இப்ப எங்களுக்கு புரிந்தது...ஆனால், நீ இதுவரை எவ்வளவு சம்பாதித்து இருக்கிறாய் என்று கேட்கிறீர்களா??? எனக்கு இது பற்றி முன்பே தெரியும் என்றாலும், நேரமின்மையால் இதில் இறங்கவில்லை. தற்போது ஒரு பதினைந்து நாட்களாகத்தான் கணக்குத் துவங்கி செய்து வருகிறேன். என் பெயரில் ஒன்றும் என்னவர் பெயரில் ஒன்றுமாக இரண்டு கணக்குகளில் ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கிறேன். தினமும் ஓரிரு மணி நேரம் மட்டுமே செய்வதால், மொத்தமாக 80 டாலர்கள் சேர்ந்துள்ளன. கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்...
இதில், Total Earning, Your Hit Status, Hits Total, Hits Available to You ஆகியவற்றைப் பார்த்தால், நான் சொன்ன கான்செப்ட் சுலபமாகப் புரியும். இதில் affiliation எல்லாம் கிடையாது. நேரடியாக அத்தளத்துக்கு சென்று கணக்குத் துவங்கிக் கொள்ள வேண்டியது தான். எங்கள் ஊரில் ருபாய் 3000 பெற்றுக் கொண்டு இதில் கணக்குத் துவங்கித் தருகிறார்கள். அது போன்ற ஆட்களை நம்பி யாரும் ஏமாந்து விடக் கூடாது. எம்டர்க்கில் நீங்களும் பணம் சம்பாதிக்க வாழ்த்துக்கள்!
-சுமஜ்லா.
சனி, 26 ஜூன், 2010
55 மாடிக் கட்டிடத்திற்கு மேல் குளத்துடன் கூடிய சொகுசு ஹோட்டல்
உலகிலேயே மிக அதிக பணச் செலவில் கட்டப்பட்ட ஹோட்டல் வரிசையில் தற்போது இடம்பிடித்திருப்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் ஆகும். சில தினங்களுக்கு முன்னர் இந்த ஹோட்டல் திறந்துவைக்கப்பட்டது. சுமார் 650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நீச்சல் குள தடாகம், ஒலிம்பிக் நீச்சல் குள தடாகத்தைவிட 3 மடங்கு பெரியது எனவும், சிறு வள்ளங்கள் அங்கு பாவிக்கப்படுவதாகவும் அறியப்படுகிறது. உலகிலேயே கட்டிடத்திற்குமேல், இவ்வாறானதொரு பாரிய நீச்சல் தடாகம் கட்டப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.
55 மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலில் சுமார் 2,500 அறைகளைக் கொண்டதாகவும், சுமார் 350.00 ஸ்டேலிங் பவுண்களை அறை ஒன்றின் கட்டணமாக அறவிடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 650 அடி உயரத்தில் அமைந்துள்ள நீச்சல் தடாகமே பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் சுமார் 70,000 பார்வையாளர்கள் இந்த ஹோட்டலை தினமும் பார்வையிட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது. சுமார் 4 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல், ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் டாலர்களை இலகுவாகச் சம்பாதிக்கும் என அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திங்கள், 21 ஜூன், 2010
தமிழன் கட்டிய Petronas Twin Tower
இதை தெரியாதவர்கள் இருக்க முடியாது.ஆனால் எத்தனை பேருக்கு தெரியும் இதற்கு சொந்தக்காரன் ஒரு தமிழன் என்று?ஆமாம் !இந்த கோபுரத்திற்கு சொந்தக்காரர் யாழ்ப்பாணம், மானிப்பாயை சேர்ந்தவர் ஆவார்.
மானிப்பாயில் பிறந்து அங்கேயே கல்வி கற்று புலம் பெயர்ந்து சென்று மலேசியாவில் தொழிலதிபர் ஆனவர் தான் இவர்.இவரின் கை வண்ணமே மலேசியாவின் அதிசயம் என வர்ணிக்கப்படும் Petronas Twin Towers ஆகும்.
Description:
At a dizzying height of nearly 1500 feet, the Petronas Twin Towers, a pair of 88-story buildings, are the world’s tallest twin towers. Apart from offices, these awesome towers also house a state-of-the-art concert… More »
At a dizzying height of nearly 1500 feet, the Petronas Twin Towers, a pair of 88-story buildings, are the world’s tallest twin towers. Apart from offices, these awesome towers also house a state-of-the-art concert hall—the Petronas Philharmonic Hall, home of the Malaysian Philharmonic Orchestra—as well as shopping arcades, restaurants, and a science museum. The designs on the towers are based on geometric patterns common in Islamic architecture. Special features of the towers include the double-deck sky-bridge between the 41st and 42nd floors and double-decker elevators. Admission is free, however tickets are limited and issued daily on a first-come-first-served basis.
http://www.petronastwintowers.com.my/internet/pett/pettweb.nsf/frm_home_hi?OpenFrameset
வெள்ளி, 18 ஜூன், 2010
பழமொழிஎன்றால்
பழமொழிஎன்றால் பழமையான மொழி, பழம் போல் இனிக்கும் பொன்மொழி என்று கொள்ளலாம்.தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தங்கள் அநுபவத்தால் உணர்ந்த உண்மைகளைஉலகத்தோர் உணரும் பொருட்டு சுருங்கக் கூறி விளங்க வைக்கும் விதத்தில்உதிர்த்த வாய் மொழிகள் பிறருக்கு வழிகாட்டியாக விளங்கியதால் அவை பழமொழி,பொன்மொழி என்று அம்மொழிகளின் பொருளை உணர்ந்து அவற்றின் யதார்த்ததைஅனுபவித்தவர் கூறினர்.
பழமொழிப் பட்டியல்
(1) ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
(2) கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
(3) ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்
(4) வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்
(5) காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
(6) அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்
(7) அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
(8) அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்
(9) அடியாத மாடு படியாது
(10) குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
(11) தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை
(12) தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
(13) எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
(14) வரவு எட்டணா செலவு பத்தணா
(15) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
(16) ஊருடன் பகைக்கின் வேறுடன் கெடும்
(17) கிட்டாதாயின் வெட்டென மற
(18) ஆறிலும் சாவு நூறிலும் சாவு
(19) சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு
(20) இக்கரைக்கு அக்கரை பச்சை
(21) ஓரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம்
(22) ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை
(23) ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்
(24) ஆதாயமில்லாமல் வியாபாரி ஆற்றோடு போகமாட்டான்
(25) யானைக்கும் அடி சறுக்கும்
(26) ஊருடன் ஒட்டி வாழ்
(27) பதறாத காரியம் சிதறாது
(28) கூழானாலும் குளித்துக் குடி
(29) கந்தையானாலும் கசக்கிக் கட்டு
(30) நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு வார்த்தை
(31) ஆடையில்லாதவன் அரை மனிதன்
(32) ஆழம் தெரியாமல் காலை விடாதே
(33) ஆடிப் பட்டம் தேடி விதை
(34) ஆட மாட்டாத நடன மாதிற்குக் கூடம் கோணலாம்
(35) ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
(36) அறுக்க மாட்டாதவன் கையில் ஐம்பத்தெட்டு அறிவாள்
(37) விலை மோரில் வெண்ணெய் எடுப்பவன்
(38) மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே
(39) வழுக்கி விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை
(40) தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தான் தெரியும்
(41) நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்
(42) பானை பிடித்தவள் பாக்கியசாலி
(43) விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?
(44) தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்
(45) மனமிருந்தால் மார்க்கமுண்டு
(46) ஓருவனுக்கு ஒருத்தி
(47) தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன
(48) காமாலைக் காரனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்
(49) கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை
(50) காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம்
(51) போகாத ஊருக்கு வழி எது
(52) சாண் ஏறினால் முழம் வழுக்கும்
(53) தேனெடுத்தவன் புறங்கையை நக்காமலிருக்க மாட்டான்
(54) கொட்டினாள் தேள் கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி
(55) ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி
(56) தடி எடுத்தவன் தண்டக்காரன்
(57) உதைப்பானுக்கு வெளுப்பான் சலவைக்காரன்
(58) பக்கம் பார்த்துப் பேசு
(59) வெளுத்ததெல்லாம் பாலல்ல
(60) மாமியார் உடைத்தால் மண் கலம் மருமகள் உடைத்தால் பொன் கலம்
(61) வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ
(62) நாய் வாலை நிமிர்த்த முடியாது
(63) குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு
(64) தனக்கு மிஞ்சித் தான் தருமம்
(65) ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு
(66) ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை
(67) வெட்டு ஒன்று துண்டிரண்டு
(68) சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி
(69) சிறு துளி பெரு வெள்ளம்
(70) வருமுன் காப்பதறிவு
(71) கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?
(72) விளையும் பயிர் முளையிலே தெரியும்
(73) முடி சான்ற மன்னரும் முடிவில் பிடி சாம்பலாவர்
(74) மடியில் கனமிருந்தால் வழியில் பயம்
(75) தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
(76) பொறுத்தார் பூமியாள்வார் பொங்குவார் காடாள்வார்
(77) தருமம் தலை காக்கும்
(78) பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்
(79) நோயிருக்கும் இடத்தில் தான் வைத்தியனுக்கு வேலை
(80) நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
(81) கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்
(82) பனை மரத்தடியிலமர்ந்து பாலைக் குடித்தாலுள் கள்ளைக் குடித்ததாய்க் கொள்வார்கள்
(83) யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்
(84) மத்தளத்திற்கு இரு புறமும் இடி
(85) கழுதைக்குத் தெரியுமா கற்பூற வாசனை?
(86) சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது
(87) இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை
(88) பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்
(89) குனியக் குனியக் குட்டுவான், குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டினவன் ஓடுவான்
(90) ஓடும் நாயைக் கண்டால் துரத்தும் நாய்க்கு இளக்காரம்
(91) குட்டுப் பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப் பட வேண்டும்
(92) புத்திமானே பலவான்
(93) கற்றுக் கொடுத்த பாடமும் கட்டிக் கொடுத்த சாதமும் நீண்ட நாள் வருவதில்லை
(94) தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு
(95) தானாடா விட்டாலும் சதையாடும்
(96) ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்
(97) உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?
(98) எட்டாக் கனிக்குக் கொட்டாவி விடாதே
(99) நல்லவனைப் போலிருப்பான் நடுச் சாமத் துரோகி
(100) கல்லடிக்குத் தப்பினாலும் கண்ணடிக்குத் தப்பாது
(101) நுணலும் தன் வாயால் கெடும்
(102) அவுசாரி என்று யானை மேல் போகலாம், திருடி என்று தெருவில் போக முடியாது
(103) தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்
(104) வெயிலில் சென்றவனுக்குத் தான் நிழலின் அருமை புரியும்
(105) கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்
(106) விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்
(107) ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே
(108) கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே
(109) உயிர் காப்பான் தோழன்
(110) குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
(111) போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து
(112) ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு
(113) படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்
(114) சிறு துரும்பும் பல் குத்த உதவும்
(115) ஏழை என்றால் மோழையும் பாயும்
(116) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
(117) உதட்டில் உறவு உள்ளத்தில் பகை
(118) ஆடு பகை குட்டி உறவா?
(119) இளங்கன்று பயமறியாது
(120) பேராசை பெரு நஷ்டம்
(121) மின்னுவதெல்லாம் பொன்னல்ல
(122) கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
(123) அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி
(124) வெறுங்கை முழம் போடுமா?
(125) குரைக்கிற நாய் கடிக்காது
(126) பந்திக்கு முந்து படைக்குப் பிந்து
(127) இனம் இனத்தோடு சேரும்
(128) புயலுக்குப் பின்னே அமைதி
(129) பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்
(130) யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே
(131) எறும்பு ஊறக் கல்லும் தேயும்
(132) தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
(133) ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
(134) கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்
(135) இரைக்கிற ஊற்றே சுரக்கும் (136) எலி வளையானாலும் தனி வளை
(137) நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும்
(138) பெண் என்றால் பேயும் இரங்கும்
(139) யானைகொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
(140) கெடுவான் கேடு நினைப்பான்
(142) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
(143) தோல்வியே வெற்றியின் முதல் படி
(144) சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா
(145) ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது
(146) பழகப் பழகப் பாலும் புளிக்கும்
(147) முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?
(148) பதறிய காரியம் சிதறும்
(149) பசி வந்திடப் பத்தும் பறந்து போம்
(150) நண்டு கொழுத்தால் வளையில் தங்காது
(151) பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்
(152) பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி
(153) வீட்டில் எலி வெளியில் புலி
(154) உப்பிட்டவரை உள்ளளவும் நினை
(155) உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே
(156) வாழு, வாழ விடு
(157) எறிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம்
(158) நாம் ஒன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கிறது
(159) பணமில்லாதவன் பிணம்
(160) கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
(161) பணம் பத்தும் செய்யும்
(162) தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே
(163) முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்
(164) நெருப்பில்லாமல் புகையாது
(165) ஜென்ம புத்தி செருப்பாலடித்தாலும் போகாது
(166) பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்
(167) தனி மரம் தோப்பாகாது
(168) ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்
(169) ஏழை சொல் அம்பலம் ஏறாது
(170) பூசனிக்காய் போவது தெரியாது, கடுகுக்குக் காதை அறுத்துக் கொள்வான்
(171) சித்திரமும் கைப்பழக்கம்
(172) வெள்ளம் வருமுன் அணை போடு
(173) தன் கையே தனக்குதவி
(174) பருவத்தே பயிர் செய்
(175) பிள்ளையையுள் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே
(176) கொழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகிவிடாது
(177) வேலியே பயிரை மேய்ந்தால் விளைவு என்ன?
(178) அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
(179) துள்ளுகிற மாடு பொதி சுமக்காது
(180) தன்னைப்போல் பிறரை நினை
(182) ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்காது
(183) காலமும் கடலலையும் காத்திருக்காது
(184) இறந்த காலத்தை என்றும் பெற இயலாது
(185) கொல்லன் பட்டறையில் ஊசி விற்கலாமா?
(186) இளமையில் கல்
நீ அனுபவி -- அது தான் ஞானம். பிறரை அனுபவிக்கச் செய்--அது தான் தர்மம். ---பெர்சீன் பழ்மொழி.
உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்; பணத்தை நம்பிக்கையான இடத்தில் வையுங்கள்.
உப்பு விளைவதும் தண்ணீரிலே, கரைவதும் அதிலேயேதான்.
ஜலதோஷத்திற்குச் சாப்பாடு போடுங்கள்; ஜுரத்திற்கு பட்டினி போடுங்கள்.
கனவுகளை நேசியுங்கள். ஆனால்- நிஜத்தோடு நெருங்கி வாழுங்கள்.
கந்தலானாலும் அதிகமாக கசக்காதீங்க, மேலும் கந்தலாகும்.
வளமான் காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்து கொள்கிறார்கள். வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்துகொள்கிறோம்.
அகத்தினழகு முகத்தில் தெரியும்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
அடியாத மாடு படியாது.
அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
எறும்பூரக் கல்லும் தேயும்.
ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
கழுதை அறியுமா கற்பூர வாசனை?
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
காகம் திட்டி மாடு சாகாது.
காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
குரைக்கிற நாய் கடிக்காது.
கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
தடியெடுத்தவன் தண்டக்காரன்.
தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
தன் வினை தன்னைச் சுடும்.
தனிமரம் தோப்பாகாது.
தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
நிறைகுடம் தளம்பாது.
பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
விரலுக்குத் தக்கதே வீக்கம்.
விளையும் பயிரை முளையிலே தெரியும்.
வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
வெளுத்ததெல்லாம் பாலல்ல.
வேலிக்கு ஓணான் சாட்சி.
வைக்கோற் போர் நாய் போல

புதன், 16 ஜூன், 2010
பெண்கள் மீதான வன்முறைகள்
சில அதிர்ச்சித் தரவுகள்
- நிஷா
பெண் மீதான அடக்குமுறை காலத்துக்குக் காலம் வெவ்வேறு வடிவம் பெறுகின்றது. கடந்த சில தசாப்தங்களில் பெண் மீதான அடக்குமுறைகள், அவள் மீதான உடல், உள ரீதியான வன்முறைகளாக மாற்றம் பெற்றுள்ளன.
அதிலும் பெண் குடும்பத்தில் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களாலேயே, தெரிந்தவர்களாலேயே அதிகளவில் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றாள். நாம் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றோம் என்பதை அறிந்திருந்தும் அதை எதிர்த்துக் குரல் எழுப்ப முடியாதவர்களாய், அனேக பெண்கள் இருக்கையில், தம்மை அடித்துத் திருத்தும் உரிமை கணவனுக்கு இருப்பதாக எண்ணும் பெண்களின் எண்ணிக்கையும் கணிசமானதாக இருக்கின்றது. அவ்வாறு தம் மீதான வன்முறைகளை எதிர்க்கப் பெண்கள் துணியாத நிலையில் அவர்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் பெருகிவிடுகின்றன.
பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் ஐ. நா. மற்றும் உலக உணவு ஸ்தாபனம் என்பன வெளியிட்டுள்ள அறிக்கையில் பல அதிர்ச்சித் தரவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம், 1000 பேரைக் கொண்ட ஒரு கிராமத்தில், 500 பேர் பெண்களாக இருக்கின்றனர். 510 பெண்கள் பிறந்திருக்க வேண்டிய இடத்தில் 500 பெண்கள் இருக்கின்றனர்.
10 பேர் பாலியல் தேர்வு காரணமாக தாயின் வயிற்றிலேயே அழிக்கப் பட்டிருக்கின்றனர். 500 பெண்களில் 30 பெண்கள் ஆசியாவைச் சேர்ந்தவர்கள். 167 பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஏதோவொரு வகையான வன்முறையைச் சந்தித்தவர்களாக இருக்கின்றார்கள். 100 பேர் தமது வாழ்நாளின் ஏதோவொரு கட்டத்தில் பாலியல் வன்முறைகளை எதிர்கொண்டவர்களாக இருப்பார்கள்.
பெண்களும் சனத்தொகையும்
உலகின் சனத்தொகையில் 49.7 சத வீதமானவர்கள் பெண்கள். சமூக அமைப்புகளில் ஆண்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளிக்கப்படுகின்றது. அது மாத்திரமின்றி, பிறக்கப் போவது ஆணா பெண்ணா என்பதைக் கருவிலேயே அறிந்து கொள்ளக் கூடுமாகையால், அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படுவதாலும், பாலியல் தேர்வினாலும் உலகின் பல்வேறு சமூகங்களில் இருந்து சுமார் 60 மில்லியன் பெண் பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.
குடும்பத்தில் வன்முறை
குடும்ப வன்முறைகள் பல்வேறு வடிவங்களை எடுக்கின்றன. அடித்தல், உதைத்தல் என்பனவற்றிலிருந்து, உள ரீதியான பாதிப்புகள் வரை குடும்ப வன்முறைகள் வேறுபடுகின்றன. பெண்ணை அவளது உறவினர், நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்தல், பெண்ணின் நடவடிக்கைகளைக் கண்காணித்தலும், கட்டுப்படுத்தலும், தொடர்ச்சியான உடல் உள வன்முறைகளாகக் காணப்படுகின்றன.
உலகம் பூராகவும் நிலவும் நிலை
* மூன்று பெண்களில் ஒருவர் தான் நன்கு அறிந்தவர்களாலேயே அல்லது தனக்கு மிக நெருக்கமானவர்களாலேயே அடித்துத் துன்புறுத்தப்பட்டோ, கட்டாயப் பாலுறவுக்குத் தள்ளப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றாள்.
* கொலை செய்யப்படும் பெண்களில் 70 சதவீதமானவர்கள், அவர்களது கணவனாலேயே கொல்லப்படுகிறார்கள்.
* கென்யாவில், ஒவ்வொரு கிழமையும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் தமது துணைவர்களால் கொல்லப்படுகிறார்கள்.
* எகிப்தில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானோர் திருமண வாழ்வின் ஏதோவொரு கட்டத்தில் கணவனால் அடித்துத் துன்புறத்தப்படுகின்றனர்.
* கனடாவில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பாராமரிப்புக்கென வருடாந்தம் 1.6 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப் படுகின்றது.
* அமெரிக்காவில் ஒவ்வொரு 12 செக்கன்களுக்கும் ஒரு பெண் தனது கணவனாலோ, துணைவனாலோ அடித்துத் துன்புறுத்தப்படுகின்றாள்.
* பாகிஸ்தானில் 42 சதவீதமான பெண்கள் குடும்பத்தில் தம்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளைத் தமது தலைவிதி என ஏற்றுக்கொள்கின்றனர்.
* ரஷ்யாவில் தினமும் சுமார் 36,000 பெண்கள் தமது கணவரால் வன்முறைக்கு உள்ளாகின்றனர்.
* ஸ்பெயினில் 2000ஆம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், 5 நாட்களுக்கு 1 தடவை ஒரு பெண் தனது கணவனால் கொல்லப்படுகின்றாள்.
பாலியல் வன்முறைகள்
* ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதே, பாலியல் வன்முறையின் உச்சக்கட்டமாகக் கருதப்படுகின்றது. விருப்பமில்லாத கருத்தரிப்பு, எச். ஐ. வி/ எயிட்ஸ் உட்பட்ட பாலியல் நோய்களின் தொற்றுகை என்பனவற்றோடு, பாலியல் வல்லுறவு நெருக்கமாகத் தொடர்புபடுகின்றது. தாம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு விட்டோம் என்பது வெளியே தெரியவந்தால் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு விடுவோம் என்ற பயத்தாலேயே, தமக்கு நேர்ந்த அவலத்தை பல பெண்கள் வெளியே சொல்வதில்லை.
* தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவனை சட்டத்தின் முன் நிறுத்துவதுமில்லை. இது ஆணை தண்டனையின்றியே தப்பித்துக் கொள்ளவும், மேலும் குற்றம் செய்யும் தூண்டுகின்றது.
உலகில்...
* ஐந்து பெண்களில் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ, தனது வாழ்நாளில் ஒரு தடவையேனும் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டோ இருப்பார்.
* அமெரிக்காவில் 20 நிமிடங்களுக்கு ஒரு தடவை ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகின்றாள்.
* பிரான்ஸில் ஒவ்வொரு வருடமும் 25,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
* துருக்கியில் திருமணமான பெண்களில் 35 சதவீதமானவர்கள் தமது கணவனாலேயே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் படுகின்றார்கள்.
யுத்தமும் பெண்களும்
யுத்தங்களின்போது பெண்கள் அதிகளவில் வன்முறைக்கு உள்ளாக நேர்கின்றது. யுத்தங்களின்போது பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறக் காரணம், பாலியல் வல்லுறவை ஓர் ஆயுதமாக யுத்தத்தில் ஈடுபடும் தரப்பினர் கருதுவதுதான். பல யுத்தங்களின்போது தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்வதற்காக பாலியல் தொழிலில் பெண்கள் தள்ளப்படுகின்றார்கள்.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர் களிலும் பெண்களும் சிறுவர்களுமே அதிகளவு இருக்கின்றார்கள்.
* அகதிகளில் 80 சதவீதத்தினர் பெண்களும் சிறுவர்களுமாக உள்ளனர்.
* இவ்வுலகில் இடம்பெற்ற 34 யுத்தங்களில் பல மில்லியன் பெண்களும் சிறுவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
* யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்திச் செல்லப்படுவது 85 சதவீதமாக இருக்கின்றது.
* கொங்கோவின் உள்நாட்டுப் போரில் யுவிரா பிரதேசத்தில் 2002 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 40 பெண்கள் வீதம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.
* உகண்டாவில் 1994 இல் இடம்பெற்ற பாரிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் 250000 முதல் 500,000 வரையான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.
* சியராலியோனில் இடம்பெயர்ந்த பெண்களில் 94 சத வீதத்தினர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப் பட்டிருக்கின்றார்கள்.
* ஈராக்கில் 2003 இல் இடம்பெற்ற யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் பெண்களும் சிறுமிகளுமாக குறைந்தது 400 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிகளில் 8 வயது நிரம்பிய சிறுமிகளும் அநேகம்.
* கமரூஜ் ஆடசிக் காலத்தில் கம்போடியாவில் 250,000 கம்போடிய பெண்கள் கட்டாயத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர்.
* பொஸ்னியாவிலும் ஹெஸ்ஸகோவின்னாவிலும், 1992 இல் 5 மாதங்களே நீடித்த யுத்தத்தில் 20,00மும் 50,000 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.
* கொசோவோவில் 30 முதல் 50 சதவீதம் வரையான பெண்கள், சேர்பிய இராணுவத்தினரால் பாலியல் வல்லுறுவுக்குட்படுத்தப்பட்டடனர்.
தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள்
உலகில் உள்ள எல்லாக் கலாசாரங்களும் பெண்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை வழக்குகளை கொண்டிருக்கின்றன. ‘கலாசார நடைமுறைகளாக’ அவை பார்க்கப்படுவதால், பலருக்கும் தவறெனத் தெரியவில்லை.
உலகம் முழுவதிலும்
* உலகம் முழுவதிலும் 135 மில்லியன் பெண்களுக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் 2 மில்லியன் பெண்கள் அவ்வாறான நடைமுறைகளைப் எதிர்கொள்ளும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள்.
* தற்போது 10 முதல் 17 வயது வரையுள்ள 82 மில்லியன் சிறுமிகள் 18 வயதுக்கு முன்பாக திருமணம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.
* ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள 28 நாடுகளில் விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாய வழக்குகள் நடைமுறையில் உள்ளன.
* நைகரில் 76 சதவீதமான வறிய பெண்கள் 18 வயதுக்கு முன்னரே திருமணம் செய்கின்றனர.
* எகிப்தில் திருமணம் முடித்த 15 வயது முதல் 49 வயதான பெண்களில் 97 சத வீதத்தினருக்கு விருத்த சேதனம் செய்யப்பட்டுள்ளது.
* ஈரானில் 2003 ஆம் ஆண்டில், இரண்டு மாதங்களில் மாத்திரம், 45 பெண்கள் தங்கள் குடும்ப கெளரவத்தைக் காப்பாற்றுவதற்காகக் கொல்லப்பட்டனர்.
* விருத்த சேதனம் செய்யும் சம்பிரதாயபூர்வ வழக்கு இந்தியா, இந்தோனேஷியா, மலேஷிய, இலங்கை போன்ற நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது.
* இந்தியாவில் சுமார் 15,000 பெண்கள், வருடாந்தம் சீதனக் கொடுமையினால் கொல்லப்படுகின்றனர்.
* பெரும்பாலும் அவ்வாறான மரணங்கள் சமையல் எரிவாயு வெடித்ததால் ஏற்படுபவையாக சித்தரிக்கப்படுவதனால், குற்றவாளிகள் எளிதில் தப்பித்து விடுகின்றனர்.
குற்றமிழைப்போருக்குத் தண்டனை இல்லை
பெண்களுக்கெதிரான வன்முறைகள் பதிவு செய்யப் படுவதில்லை. அதனால் குற்றமிழைப்வோர் தண்டனை எதுவுமின்றி இலகுவில் தப்பித்துக் கொள்ள முடிகின்றது. பெண்கள் மீதான வன்முறைகள் பதிவு செய்யப்படாமைக்குப் பல காரணங்கள். பழிவாங்கப்படலாமென்ற அச்சம், போதிய பொருளாதார வசதிகளின்மை, பிறரில் தங்கி வாழுதல், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படலாமென்ற அச்சம், சட்டநிவாரணங்களைப் பெறுவதற்கான வழிவகைகள் பற்றி அறியாதிருத்தல் என்பனவற்றைக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.
உலகில்...
* சிலியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் 3சத வீதமானோர் மாத்திரமே, அதுபற்றி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர்.
* அமெரிக்காவில் இது 16 சதவீதமாக இருந்தது. ஆனால், தம்மைப் பற்றிய விபரங்கள் இரகசியமாகப் பாதுகாக்கப்படுமிடத்து, தம்மீதான வன்முறைகளுக்கு எதிராக பொலிசாரிடம் முறைப்பாடு செய்ய, பாதிக்கப்பட்ட பெண்களில் 50 சதவீதமானவர்கள் தயாராக உள்ளனர்.
* அவுஸ்திரேலியாவில் 1999ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் எவரும் அதனை வெளியே சொல்லவில்லை.
* பங்களாதேஷில் 68 சதவீதமான பெண்கள் தாங்கள் அடித்துத் துன்புறுத்தப் படுவதை எவருக்கும் சொல்வதில்லை.
* ஒஸ்ரியாவில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த 20 சதவீதமான பெண்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
சட்ட நிவாரணங்கள்
பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் குற்றவாளிகள் தண்டனைகள் இன்றியே தப்பித்து விடுகின்றார்கள். இவ்வன்முறைக்கு எதிரான சட்டங்கள் எவையும் சில நாடுகளில் இல்லை. சில நாடுகளில் சில வன்முறைகளுக்கு எதிராக மட்டுமே சட்டங்கள் அமுலில் உள்ளன. பெண்கள் மீதான எல்லாவிதமான வன்முறைகளை எதிர்த்தும் சட்டங்கள் இருந்தாலும் பல நாடுகளில் இவை ஒழுங்காக அமுல்படுத்தப் படுவதில்லை.
* 2003 இல் பெண்கள் மீதான வன்முறைகளை எதிர்த்து 54 நாடுகள் சட்டமியற்றின.
* 79 நாடுகள் வீட்டு வன்முறைகளை எதிர்த்து எந்தவிதமான சட்டங்களையும் கொண்டிருக்கவில்லை.
* திருமண பந்தத்திலும் பெண்ணின் விருப்பின்றி உறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என 51 நாடுகள் அங்கீகரித்தன. விஷேடமாக பாலியல் பலாத்காரம் தொடர்பில், 16 நாடுகளே சட்டங்களைக் கொண்டிருக்கின்றன.
எச். ஐ. வி. / எயிட்ஸ்
பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரிப்பது, பாரிய சுகாதாரப் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது. வன்முறைகள் பெண்ணின் இனப்பெருக்க சுகாதாரத்தைப் பாதித்திப்பதோடு, உடல், உள நலனோம்புகையையும் பாதிக்கின்றது. பெண்கள் மீதான வன்முறைகளால் எச். ஐ. வி/ எயிட்ஸ் போன்ற நோய்த்தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பும் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு அதிகமானதாக இருக்கின்றது.
உலகில்
* உலகில் எச். ஐ. வி/ எயிட்ஸ் தொற்றுக்குள்ளானோரில் 51 சத வீதமானவர்கள் பெண்கள்.
* புதிய எச். ஐ. வி. தொற்றுக்கள், 15 முதல் 24 வயது வரையானோருக்கே ஏற்படுகின்றன. அவ்வயதுப் பருவத்தில் எச். ஐ. வி. தொற்றுக்குள்ளானோரில் 60 சத வீதமானவர்கள் பெண்கள்.
* தினமும் தொற்றுக்குள்ளாகும் 16,000 பேரில் 55 சத வீதமானவர்கள் பெண்கள்.
* ஐரோப்பா, வட மெரிக்கா, ஆசியா போன்ற பகுதிகளில் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களிடையே ஏற்படும் மரணத்துக்கு எச். ஐ. வி/ எயிட்ஸே காரணமாகின்றது.

திங்கள், 14 ஜூன், 2010
இளவரசி டயானா (Diana)
உலகின் அத்தனை இதயங்களையும் ஒரு சேர கவர்வதற்கு அதிர்ஷ்டம் மட்டுமல்ல.. சில அடிப்படை தகுதிகளும் வேண்டும். இங்கிலாந்தின் இளவரசி டயானாவுக்கு அந்தத் தகுதி நிறையவே இருந்தது.
அதிலும் மறைந்து ஏழு வருடங்கள் முடிந்த நிலையிலும், இன்னும் பலர் அந்த மரணத்தை மறக்கவோ, நம்பவோ முடியாமல் ‘பெண்ணே.. எழுந்து வரமாட்டாயா?’, என்று கண்ணீர் விடும் பூங்கொத்துகளோடு உலகம் முழுக்க அவர் நினைவுநாளில் உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டம் இது!
பார்த்தவுடனே பளிச்சென்று மனசை அள்ளும் அந்தக் கனிவான சிரிப்பு.. இளவரசியே ஆனாலும் ‘இவ நம்ம வீட்டுப் பொண்ணு’ என்று சொல்லும்படியான அந்த அன்னியோன்யம்... பந்தாக்களை விரும்பாத எளிமை என்று, டயானா மக்களுக்கு அறிமுகமான நாளிலிருந்தே அவர்களின் செல்லப் பெண்ணாகிவிட்டார்.
டயானா என்ற நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த, மென்மை சுபாவம் கொண்ட, அந்த அழகான இளம் பெண் மக்களுக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமான கதை...
லண்டனில் இருந்த ஒரு நர்சரி பள்ளிக்கூடம் அது..
வெளியே இருந்து வந்த இரைச்சலான குரல்கள் கேட்டு அந்தப் பள்ளியின் பிரின்சிபால் திகைத்துப் போய் வெளியே வந்தார்.
வெளியே...
பள்ளியை ஃபோகஸ் பண்ணியபடி கேமராக்கள்.. கேமிராக்கள்... கேமிராக்கள்.
ரிப்போர்ட்டர்கள், டி.வி. மைக்குகள் என்று சுற்றிலும் ஜே ஜேவென பெரும் இரைச்சல்!
‘‘என்ன வேண்டும் உங்களுக்கு?’’ கேட்டார் அந்த பிரின்ஸிபால்.
‘‘உங்கள் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கும் இளம் பெண்ணான டயானாவைப் பார்க்க வந்திருக்கிறோம். அவரை தயவு செய்து வெளியே வரச் சொல்லுங்கள்..’’ கோரஸாக குரல் வந்தது.
பிரின்ஸிபால் திகைப்புடனே நிற்க...
‘‘இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசியாக டயானா ஆகவிருக்கிறார் என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா, தெரியாதா? இந்த இளம் பெண் டயானாவும், இளவரசர் சார்லஸ§ம் காதலிக்கிறார்கள். டயானா எப்படியிருப்பார்? அவர் முகத்தை நாங்களும் பார்க்க வேண்டும்.. படமெடுக்க வேண்டும்.. அவரை வெளியே வரச் சொல்லுங்கள்!’’
என்று கூட்டம் திமிற...
ஒரு சிறிய குழந்தையைக் கையில் தூக்கி வைத்தபடி உள்ளே, கதவருகே, நின்று கேட்டுக் கொண்டிருந்த டயானா ‘மிஸ்’ தயக்கத்துடன் வெளியே வந்தாள்.
தயக்கமான பந்தா இல்லாத பார்வை, மிக எளிமையான ஒரு மெல்லிய ஸ்கர்ட் என்று பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் டயானா வர..
அவ்வளவுதான்... அத்தனை காமெராக்களும் தங்கள் ஆசை தீர டயானாவின் உருவத்தை விழுங்கிக் கொண்டன. அவளைப் பெருமிதத்துடன் ‘‘இவள்தான் எங்கள் இளவரசி!’’ என்று உலகம் முழுக்க அறிமுகப்படுத்தின.
அன்று தொடங்கிய காமெராக்கள்தான்.. அப்புறம் டயானாவின் வாழ்க்கையில் அவரைத் துரத்தித் துரத்தி படமெடுக்கத் தொடங்கின. கடைசியில் கூட காமெராவுக்கு பயந்தேதான் அந்த அழகான இளம் பெண்ணின் வாழ்க்கையே ஒரு முடிவுக்கு வந்ததும் நடந்தது.
டயானா சார்லஸ் காதல் ஆரம்பமானது ஒரு விழாவில்தான்!
எலிஸபெத் மகாராணியின் செகரட்டரியைத்தான் டயானாவின் இரண்டாவது அக்கா ஜேன் திருமணம் செய்து கொண்டிருந்தார். அக்காவைப் பார்க்கச் சொல்லும் டயானா அவ்வப்போது அரண்மனை விழாக்களிலும் பங்கு கொள்வதுண்டு. தவிர டயனாவின் அப்பா அல்டாஃப், இங்கிலாந்து மன்னர் குடும்பத்தின் குதிரை பராமரிப்பு வீரராக இருந்ததால் அரச குடும்பத்துடன் நெருங்கிப் பழகுவார்.
எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கும் இந்த இனிமையான இளம்பெண்ணை, இளவரசர் சார்லஸ் பார்த்தது அப்படி ஒரு விழாவில்தான். தனது திருமணத்தை ரொம்ப நாட்களாகத் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த சார்லஸை முதல் பார்வையிலேயே கவர்ந்து விட்டாள் டயானா. இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினார்கள்.
ஒன்று மாற்றி மற்றொன்று என இளம் பெண்கள், பல ஆண்களோடு டேட்டிங் போவது வெளிநாட்டில் சகஜமாக இருந்தாலும், டயானா அந்த மாதிரி எந்த ஆணுடனும் பழகியதில்லை. அவள் வாழ்க்கையில் முதன்முதலாக டேட்டிங் செய்ததே சார்லஸோடுதான்!
டயானாவின் அழகு, நடத்தை, மகன் சார்லஸின் பிடிவாதம் என்று பல காரணங்களுக்காக மகாராணி எலிஸபெத்தும் இந்தத் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நடந்த முதல் காதல் திருமணமே சார்லஸ் _ டயானாவுடையதுதான்!
டயானா படம் பத்திரி கைகளில் வந்தவுடனேயே, இங்கி லாந்தில் ‘டயானா ஜுரம்’ வெகு வேகமாகப் பரவத் தொடங் கியது. ‘டயானாவைப் போலவே இருக்கும் பெண் யார்?’ எனும் தலைப்பில் ஒரு பிரபல பத்திரிகை போட்டியே நடத்தியது. அந்த அளவுக்குத் திருமணத்திற்கு முன்னறே படு பாப்புலராகி விட்டார் டயானா. அவர் நிற்பது, சிரிப்பது என எல்லாமே பரபரப்புச் செய்தியானது.
தேவதைக் கதைகளில் வருவதுபோல் டயானா சார்லஸ் திருமணம் உலகமே வியக்கும் படியாக, மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்தை நேரடியாக ஒளிபரப்பியது பி.பி.சி தொலைக்காட்சி. உலகமே அதை ஆவலுடன் ரசித்துப் பார்த்தது.
அரச குடும்பத்தின் மருமகளாகி விட்ட நிலையில் தன் கடமைகளைச் செய்வதில் மிகக் கவனமாக இருந்தார் டயானா. அரச குடும்பத்தினர் பொதுவாக வெளியுலகத்தினருடன் அதிகம் பட்டுக் கொள்ளாமல், ஏதாவது சில முக்கிய விழாக்களுக்கு மட்டும் செல்வதுண்டு... ஆனால் டயானா, தன் இயல்பான இரக்க சுபாவத்தால், நர்சரிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்கு அதிகமாகச் செல்லத் தொடங்கினார். ஒரு வட்டத்திற்குள் தன்னைச் சுருக்கி கொள்ளாமல், எளிமையாக அவர் எல்லோருடனும் சகஜமாகப் பழக, அவரது இமேஜ் கிடுகிடுவென ஏறத் தொடங்கியது. சார்லஸ் கூட ஒரு முறை ‘‘இப்போதெல்லாம் டயானாவுக்குக் கொடுக்கப்படும் பூங்கொத்துக்களைக் கலெக்ட் செய்வதே எனக்குப் பெரிய வேலையாகிவிட்டது!’’ என்று விளையாட்டாகக் குறிப்பிட்டார்.
மாமியார் ராணி எலிஸபெத்துக்கு டயானாவின் மேல் தனிப்பாசம். டயானாவும் மாமியாரிடம் பிரியமாகப் பழகுவார். பிற்காலத்தில் மனசுக்கு சங்கடமான சில நேரங்களில், மாமியாருடன் சென்று பேசிக் கொண்டு இருந்ததுதான் டயானாவின் மனசுக்கு நிம்மதியளித்திருக்கிறது.
அரச குடும்பத்தினரின் வாழ்க்கை முறை அவ்வளவாக சாதாரண மக்களுக்குத் தெரியாது. அவர்களுடைய புகைப்படங்கள் கூட எப்போதாவதுதான் பத்திரிகைகளில் வரும். ஆனால் டயானா, வேல்ஸ் இளவரசியானதும் நிலைமை தலைகீழானது. அவர் தினசரி செய்யும் அனைத்து காரியங்களும் வரிசை மாறாமல் பேப்பரில் வர ஆரம்பிக்க, அரண்மனைக்குள் மெல்ல சூடு கிளம்ப ஆரம்பித்தது.
மகாராணியே வேறு வழியில்லாமல் அனைத்து பத்திரிக்கைகளின் எடிட்டர்களையும் அரண்மனைக்கு வரவழைத்து, இனி டயானாவை போகுமிடமெல்லாம் படமெடுத்து தொந்திரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். எல்லாம் ஒரு சில நாட்கள்தான்! மறுபடி பழைய கதைதான்.
திருமணம் ஆன மறு வருடத்திலேயே முதல் மகன் வில்லியம் பிறந்தான். இரண்டு வருடங்கள் கழித்து அடுத்த குழந்தை _ ஹென்றி.
இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த யாரும் பள்ளிக்குச் சென்று படித்ததில்லை. ஆசிரியர்கள்தான் அரண்மனைக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால், தன் மகன்கள் விஷயத்தில் இது தொடர டயானா விரும்பவில்லை. அவர்கள் பள்ளிக்குச் சென்றுதான் படிக்கவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அப்போதுதான் மக்களோடு மக்களாகப் பழகும் வாய்ப்பு தன் குழந்தைகளுக்குக் கிடைக்கும் என்று டயானா நம்பினார்.
கணவரின் மேல் டயனா, அளவுக்கு அதிகமான காதல் கொண்டிருந்ததாலேயோ என்னவோ... கமீலா என்ற திருமணமான பெண்ணுடன் சார்லஸ§க்கு முன்பிருந்தே ஒரு உறவு இருந்து வருகிறது... அது இப்போதும் தொடர்கிறது என்று தெரிந்த போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
திருமணமான முதல் வருடத்திலேயே இதனால் இருவருக்கும் பிரியம் குறைந்தது. மனம் வெறுத்து டயானா சிலமுறை தற்கொலை முயற்சியில்கூட ஈடுபட்டிருக்கிறார். எதை சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்துவிடுகிற (புலீமியா) நோய் கூட அவருக்கு வந்துவிட்டது.
தன் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளை மறக்க, பல சமூக நலத் திட்டங்களில் இன்னும் அதிகமாக ஈடுபட ஆரம்பித்திருந்தார் டயானா.
அப்படித்தான் ஒரு முறை, எய்ட்ஸ் நோயாளி ஒருவருடன் டயானா கைகுலுக்கிய புகைப்படம் பிரிட்டிஷ் நாளிதழ்களில் முதல் பக்கத்தைப் பிடித்தது! எÊய்ட்ஸ் என்பது தொட்டாலே ஒட்டிக் கொள்ளும் வியாதி என்று பலரால் கருதப்பட்ட அந்தக் காலகட்டத்தில், இளவரசியே இப்படி நடந்துகொண்டது, எய்ட்ஸ் குறித்த பல தவறான பயங்கள் நீங்க வழி வகுத்தது. இந்தோனேஷியாவுக்கு சென்றிருந்தபோது அங்கிருந்த தொழுநோயாளிகளிடம் டயானா கைகுலுக்கியதும் பலரையும் வியக்க வைத்தது.
குழந்தை ஹாரி, நர்சரி பள்ளியில் சேர்க்கப்பட்ட காலகட்டத்தில் சார்லஸ் _ டயானா விரிசல் பகிரங்கமானது.
தன்மேல் தவறில்லை என்பதுபோல் சார்லஸ் பி.பி.சி.யில் பேட்டிகூட அளித்தார். தொடர்ந்து டயனாவையும் பேட்டி கண்டார்கள். ‘‘அரசராகும் எண்ணம் சார்லஸ§க்கு இல்லை..’’ என்று, டயானா தன் பேட்டியில் பல விஷயங்களை பகிரங்கப்படுத்த அது, இங்கிலாந்து மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கூடவே ‘‘நான் ராணியாக விரும்புகிறேன்... ஆனால் சிம்மாசனத்தில் அமரும் ராணி அல்ல... மக்கள் மனங்களில் என்றென்றும் ராணியாக இருக்கவே விரும்புகிறேன்..’’ என்று டயானா கூறியது மக்கள் மனதில் பசை போட்டு ஒட்டிக்கொண்டது. காரணம் உதட்டிலிருந்து வராமல் அவரது உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள் இவை என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது.
இருவரின் தொலைக்காட்சிப் பேட்டிகளும் ஒலிபரப்பான உடனே ‘மக்கள் யார் பக்கம்?’ என்று வேறொரு தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பில் ‘‘தொலைக்காட்சி பேட்டிக்குப் பிறகு நாங்கள் டயானாவை மேலும் விரும்புகிறோம்!’’ என்று எண்பத்துமூன்று சதவிகிதத்தினர் பதிலளித்து அசத்தினர்.
மக்கள் ஆதரவு டயானாவுக்குதான் என்பதை அறிந்தவுடன், பக்கிங்காஹாம் அரண்மனையும் டயானாவுக்கு வெளிப்படையான எதிர்ப்பு காட்டாமல் அடக்கி வாசித்தது. கமீலாவுடன் தனக்கிருந்த தொடர்பை பிறகு வெளிப்படையாக ஒத்துக் கொண்டார் சார்லஸ்.
டயானாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்களும் நடக்காமலில்லை. டயானாவின் குதிரைப் பயிற்சியாளரான ஜேம்ஸ் ஹெரிட் ஒரு நூலை வெளியிட்டார். அதில் டயானாவுடன் தான் நெருக்கமாக இருந்தது உண்டு என்று குறிப்பிட்டார். டயானா இதை மறுக்கவில்லை. ஆனால் ‘‘அவர் எனது மிக அரிய நண்பராக விளங்கியவர். அதுவும் சோதனையான ஒரு கட்டத்தில்... அவரது அந்த நூல் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன்பு என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் அவர். ‘என் புத்தகத்தில் நீங்கள் கவலைப்படும்படியாக நான் எதையும் எழுதவில்லை’ என்றார். நானும் முட்டாள்தனமாக அதை நம்பினேன்...’’ என்று உடைந்துபோய்ச் சொன்னார் டயானா.
சார்லஸ்_டயானா விரிசல் இவ்வளவு பகிரங்கமான பிறகு விவகாரத்துதான் ஒரே வழி என்று மகாராணியே வற்புறுத்த, விவாகரத்து நடந்தது.
டயானா இந்தியாவுக்குகூட வந்திருக்கிறார். உடல்நலம் குறைந்திருந்த அன்னை தெரசாவை சந்தித்தார் டயானா. தன் 79 விலையுயர்ந்த உடைகளை ஏலத்தில் விட்டு அதன் மூலம் கிடைத்த பெருந்தொகையை தர்மகாரியங்களுக்கு செலவிட்டார்.
அரபு நாட்டைச் சேர்ந்த கோடிஸ்வரரான முகமது ஹல் என்பவரின் மகன் டோடி_யுடன் டயனாவுக்கு ஏற்பட்ட பர்சனல் நெருக்கம் புதிய சர்ச்சைகளுக்கு இடம் கொடுத்தது. இருவரும் பாய்மரக்கப்பலில் உற்சாகம் பொங்க பயணம் சென்றது பத்திரிக்கைகளுக்குப் பெரும் தீனியைக் கொடுத்தது. இருவரும் செல்லுமிடமெல்லாம் கேமராவும் கையுமாய் பத்திரிகைக்காரர்கள் அவர்களைத் துரத்தினார்கள்.
டோடியும் டயானாவும் பிரான்ஸில் தனிமையில் இருக்க ஆசைப்பட, பத்திரிகைகாரர்களால் அதுமுடியாமல் போனது.
பாரீஸின் ரிட்ஸ் உணவகத்தில் மாலை உணவுக்குப் பின் காரில் டயானா, டோடி, ஒரு பாதுகாப்பாளர் மற்றும் ஓட்டுனர் போய்க் கொண்டிருந்தார்கள். விடாமல் அவர்கள் காரைத் துரத்தியது வேறு ஒரு வாகனம். அதில் பத்திரிக்கைப் புகைப்படக்காரர்கள். அவர்களிடமிருந்து தப்பியே ஆகவேண்டும் என்ற வேகத்தில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில், பறந்தது டயானாவின் கார். விளைவு? கோரவிபத்து! டோடியும், கார் ஓட்டுனரும் அந்த இடத்திலேயே மரணமடைய, உயிருடன் இருந்த டயானாவை மட்டும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
அழகான தேவதை போன்றே பார்த்துப் பழகிய டயானாவை, முகமும் எலும்புகளும் சிதைந்த நிலையில் பார்த்த மருத்துவர்கள் கூட அடக்க முடியாமல் கதறி அழுதனர். இரண்டு நர்சுகள் வாயிலெடுத்து விட்டனர். எவ்வளவு முயன்றும் அந்த புன்னகை இளவரசியை காப்பாற்ற முடியவில்லை. அவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட உலகமே வேதனையில் உருகி கண்ணீர் விட்டது.
பல்லாயிரக்கணக்கான மலர்கள் அந்த இனிமையான இளவரசியின் கல்லறைக்கு இன்னமும் வந்து குவிந்து கொண்டிருக்கிறது. அவர் மீது மக்கள் வைத்திருக்கும் அன்புக்கு எடுத்துக் காட்டாக இருக்கிறது!
நீதிபதி நவநீதம் பிள்ளை
நவநீதம் பிள்ளை (Navanethem Pillay, பிறப்பு:1941) என்பவர் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நீதிபதியும் ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூனால் ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக பரிந்துரைக்கப் பட்டவரும் ஆவார்.
ஐநா பொதுச்சபையின் முடிவை எதிர்பார்த்திருக்கும் நவநீதம் பிள்ளை தற்போது பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் 2003 ம் ஆண்டு முதல் நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
1941 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் பிறந்த ஒரு தமிழரான நவநீதம் பிள்ளை, 1982ம் ஆண்டில் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்று 1988 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.
1967 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் நட்டால் மாகாணத்தின் முதலாவது பெண் சட்டத்தரணியாக அவர் பணியாற்றத் தொடங்கினார். தென்னாபிரிக்க விடுதலைப் போராளிகளுக்காவும் , இவரது கணவர் உட்பட தென்னாபிரிக்க விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கும் அவர் ஒரு பாதுகாவலராக கடமையாற்றியவர்.
பூகோள ரீதியாகவும் பாலியல் மற்றும் அனுபவ ரீதியாகவும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் பொறுப்புக்கு இரு குழுக்களால் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1973 இல் நெல்சன் மண்டேலா ரொபன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி வெற்றி பெற்றார்.
1992 இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் "ஈக்குவலிட்டி இன்று" என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். 1995 இல் தென்னாபிரிக்காவின் மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறு நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய வம்சாவளித் தமிழ்ப் பெண்மணி இவராவார்.
2003 இல் இவருக்கு பெண்கள் உரிமைக்கான குரூபர் பரிசு வழங்கப்பட்டது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் பதவிக்கு தென்னாப்பிரிக்க தமிழர் நவநீதம் பிள்ளையின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது
நீதிபதி நவநீதம் பிள்ளை
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பதவிக்கு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஒரு நீதிபதியான நவநீதம் பிள்ளை அம்மையாரின் பெயரை ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் பரிந்துரைத்துள்ளார்.
64 வயதாகும் நீதிபதி நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சி முடிவுக்கு வந்ததன் பிறகு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்துக்கு தேர்வுசெய்யப்பட்ட வெள்ளையினத்தவரல்லாத முதல் நீதிபதி என்ற பெருமைக்குரியவர்.
இவரது பெயரை ஐ.நா. பொதுச்சபை அங்கீகரிக்குமானால், கடந்த நான்கு ஆண்டுகளாக கனடாவின் லூயிஸ் ஆர்பர் அம்மையார் வகித்துவந்த பதவியை நவநீதம் பிள்ளை ஏற்பார்.
நவி என்று அழைக்கப்படுகின்ற நவநீதம் பிள்ளை இந்தியத் தமிழ் பூர்வீகம் கொண்டவர். நடால் மாகாணத்தைச் சேர்ந்தவரான இவரின் தந்தை ஒரு பஸ் டிரைவர். எளிய குடும்பத்திலிருந்து வந்தவரானாலும், இனவெறி ஆட்சிக் காலத்தின்போதே சட்டத்தரணிகள் நிறுவனம் அமைத்த வெள்ளையரல்லாத முதல் தென்னாப்பிரிக்கர் என்ற பெருமை இவரைச் சாரும்.
அமெரிக்காவின் பிரபல ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மனித உரிமை சட்டங்கள் பயின்றிருந்த அவர், 1995ல் தென்னாப்பிரிக்காவின் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதுவரை வெள்ளையினத்தவர் மட்டுமே வீற்றிருந்த உயர் நீதிமன்ற நீதிபதியின் ஆசனத்தை அலங்கரித்த வெள்ளையரல்லாத முதல் ஆள் அவர்தான்.
ருவாண்டா இனப்படுகொலையை விசாரிப்பதற்காக டான்ஸானிவின் அருஷா நகரில் அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்தில் நீதியரசராக நியமிக்கப்பட்டதிலிருந்து சர்வதேச அளவில் அவர் பங்காற்றத் துவங்கினார். நான்கு ஆண்டுகாலம் அப்பொறுப்பை வகித்த பின்னர் தி ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இவர் நீதிபதியாக இருந்தார்.

ஞாயிறு, 13 ஜூன், 2010
யாழ்ப்பாணத்தின் வரலாறு
யாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை இங்கிருந்து தென்மேற்காக நெடுந்தீவு சென்று அங்கிருந்து ராமேஸ்த்திற்கோ அல்லது மன்னார், கொழும்பிற்கோ செல்லலாம். வடக்கில் கோடிக்கரைக்கோ நாகப்பட்டினத்திற்கோ போய் அங்கிருந்து கிழக்காக, பத்தாவது அகலக்கோட்டைப் பின்பற்றித் தென்கிழக்காசியாவிற்கும் சீனாவிற்கும் போகலாம். நேர் வடக்கில் இந்தியாவின் கிழக்குக் கரையோரமாக எந்தத்துறை முகத்திற்கும் போக முடியும். மேற்குத் திசையில் தொண்டி, அதிராம் பட்டினத்திற்கும் தென் கிழக்கில் யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்கும் போகலாம்.
காரைநகருக்கும், ஊர்காவற்துறைக்கும் இடையில் பரவைக் கடலின் தலைவாயிலில் அமைந்த திட்டொன்றில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் இருந்து, யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்க்கவும் முடியும். பாதுகாக்கவும் முடியும். இந்த இடத்தின் கடற்பாதை முக்கியத்துவம், பாதுகாப்பு முக்கியத்துவம் காரணமாக, கடற்கோட்டைக்கு நேர் எதிராக ஊர்காவற்றுறைப் பக்கம் எய்றி (Fort Eyrie) என்றழைக்கப்பட்ட ஒரு கோட்டையை போர்த்துக்கேயர் ஏற்கனவே கட்டியிருந்தார்கள். அது இப்பொழுது பாழடைந்த நிலையில் உள்ளது.
ஊர்காவற்றுறைக்கு முயலவள என்று வழங்கப்படும் பெயர் முயலள என்ற போர்த்துக்கேயச் சொல்லில் இருந்து வந்ததாகக் கருதப்படுகின்றது. இச்சொல், துறைமுகம் அல்லது துறைமுகமேடை எனப்பொள்படும் ‘கீ’ என்று உச்சரிக்கப்படும் Qyal என்ற ஆங்கிலச் சொல் இதற்குச் சமதையானது.
ஊர்காவற்றுறையென்று இன்று எழுத்துத் தமிழ் வடிவம் பெற்றிருக்கும் இந்த இடம்பெயர் , ‘ஊறாத்துறை’ என்றே பேச்சு வழக்கில் உள்ளது. 12ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கல்வெட்டுக்களில் ஊராத்துறை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஸிகர தித்த என்று சூளவம்சத்திலும் ஹிராதொட அல்லது ஊராதொட என்று பூஜாவலிய, ராஜாவலிய, நிகாயஸங்கிரஹய போன்ற இலங்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. (இந்திரபாலா: 1969)
நயினாதீவு கல்வெட்டு
1).............. நாங்கள் .......................
2) வந்து ஊராத்துறை
3) (யில்) பிரதேசிகள் வந்து
4) இருக்க வேணுமென்றும்
5) அவர்கள் ரஷைப்படn
6) வணுமென்றும் பல தை
7) றகளில் பிரதேசிகள் வந்து நந்து
8) றையிn(ல) கூடவேணு மென்று
9) (ம்) நாம் ஆனை குதிரை மேல் ஸ்நெஹ
10) (மு) ண்டாதலால் நமக்கு ஆனை குதிரை
11) கொடுவந்த மரக்கலங் கெட்டது
12) ண்டாகில் நாலத் தொன்று பண்டா
13) (ர) த்துக்குக் கொண்டு மூன்று கூறும
் 14) (உ) டையவனுக்கு விடக்கடவதாகவு
15) (ம்) வாணிய மரக்கலங் கெட்டதுண்
16) டாகில் செம்பாகம் பண்டாரத்துக்
17) (கு) க் கொண்டு செம்பாகம் உடைய
18) (வ) னுக்கு விடக்கடவதாகவும் இவ்
19) வவஸ்தை (ரு) ள்ளதனையுங்க
20) வில்லிலுஞ் செம்பிலும் எழுத்துவெ
21) ட்டி வித்து இவ்வவஸ்தை செய்துங் கு
சமஸ்கிருதப் பாகத்தின் மொழி பெயர்ப்பு
பெயர்ப்புவரி 22 – 23 சகல சிங்களத்துக்கும் சக்கரவர்த்தி யாகிய பகை அரசர்களுக்கு காட்டுத் தீயாயாகிய வேபராக்கிரம புஜோ (பாஹி)....
இந்திரபாலா.கா.(யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள், 1969
ஸிகரஹா என்பது பன்றி எனப் பொருள்தரும் சமஸ்கிருதச் சொல். சூகரம் என்று தமிழ் நிகண்டுகளிலும் இச்சொல் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. பிராகிருத வழக்காறுகளில் இது ஹ{ரா என்றும் ஊரா என்றும் உருமாறும். சிங்களத்தில் இது வழக்கிலுள்ள சொல். ஸ{கரதித்த (ஸ{கர தீர்த்தம்) என்று சூளவம்சம் குறிப்பிடுவது பன்றித்துறை என்பதற்குச் சமதையானது. பன்றியின் காற்குளம் என்ற பொருளில் கடற்கோட்டைக்கு ஒல்லாந்தர் ஹம்மன் ஹீல் (ர்யஅஅநnhநடை) எனப் பெயரிட்டது. கோட்டையின் வடிவமைப்பினால் மாத்திரம் அல்ல என்றே தோன்றுகின்றது.
ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு மேலாக, கடற்கோட்டைப் பகுதியைக் கடந்து சென்ற பன்நாட்டுக் கடல்வணிகத்தின் தொல்லியற் தடங்களை நெடுந்தீவில் பெரியதுறை அருகிலுள்ள வெடியரசன் கோட்டையிலும் காரைநகரில் கடற்கோட்டைக்கு அணித்தாகவுள்ள வேரப்பிட்டியிலும் பொன்னாலையில் சம்புத்துறைக்குப் பக்கத்திலுள்ள திசைமழுவையிலும் காணலாம். பழைய துறைகளை ஒட்டியுள்ள இந்த மூன்று இடங்களிலும் காணப்படும் பௌத்த சின்னங்கள், கடல்வணிகத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையில் அக்காலத்தில் இருந்த நெருங்கிய தொடர்பைக் காட்டுகின்றன.
இருப்பினும், இப்பகுதியின் கடல்வழித் தொடர்புகள் பௌத்த தடயங்களின் காலத்திற்கும் முந்தியவை என்பதை, காரைநகரின் உட்புறத்தில் களபூமியில் கிடைத்த பெருங்கற்காலத் தடயங்களும் ஊர்காவற்றுறை அமைந்துள்ள வேலணைத்தீவின் தென்கிழக்கில் சாட்டியிலும் கும்புறுப்பிட்டியிலும் கிடைத்த மட்கலத்தடயங்களும் தெளிவுபடுத்துகின்றன.
இரண்டாம் இராசாதிராசசோழனது திருவாலங்காட்டுக் கல்வெட்டு
இவன் தன் படைநிலையான ஊராத்துறை, புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம் , மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே படைகளும் புகுதவிட்டு படவுகளுஞ் செய்விக்கிறபடி கேட்டு இதுக்குப் பரிகாரமாக ஈழத்தான் மருமகனராய் ஈழ ராச்சியத்துக்குங் கடவராய் முன்பே போந்திருந்த சீவல்லவரை அழைப்பித்து இவர்க்கு வேண்டுவனஞ் செய்து இவரையும் இவருடனே வேண்டும் படைகளும் ஊராத்துறை வல்லிகாமம் மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே புகலிட்டுப் புலைச்சேரி மாதோட்டம் உள்ளிட்ட ஊர்களும், அழித்து ஈழத்தானினவாய் இவ்வூர்களில் நின்ற ஆனைகளுங் கொண்டு ஈழமண்டலத்தில் கீழ்மேல் இருபதின் காதமேற்படவுந் தென் வடல் முப்பதின்காதமேற்படவும் அழித்து இத்துறையில் இவன் மனிசராயிருந்தாரில் கொல்வாரையுங் கொன்று பிடிப்பாரையும் பிடித்து இவர்களையுஞ் சரக்காய்க் கைக்கொண்டனவும் பிடித்த ஆனைகளும் அழைப்பித்து இவன் தமக்குக் காட்டி ஈழமண்டலத்துக் காரியம் எல்லாப் படியாலும் இவன் (சோழத்தளபதியாகிய பழையனுருடையான வேதவன் முடையான் அம்மையப்பனான ‘அண்ணன் பல்லவராயன்) அழியச் செய்வித்த படிக்கும் (சதாசிவபண்டாரத்தார் பிற்காலச் சோழர் சரித்திரம்: 1967)
12ஆம் நூற்றாண்டில் ஊர்காவற்றுறையின் கேந்திர, வணிக முக்கியத்துவங்களை இரு தமிழ்க் கல்வெட்டுக்கள் அறியத்தருகின்றன. இரண்டாம் இராஜாதிராஜசோழனது (1163-1178) திருவாலங்காட்டுக் கல்வெட்டு, சோழர்களுக்கும் பராக்கிரமபாகுவிற்குமிடையில் நடைபெற்ற மோதலில் படைத்தளஙக்களுள் ஒன்றாக ஊராத்துறை இருந்ததை அறியத்தருகின்றது. தற்பொழுது நயினாதீவுக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள, முதலாம் பராக்கிரமபாகுவின் தமிழ் சமஸ்கிருதக் கல்வெட்டு, ஊர்காவற்றுறையில் பன்நாட்டு வணிகம் ஊக்குவிக்கப்பட்டதைத் தெரியப்படுத்துகின்றது. கடற்கோட்டைக்கு அணித்தாக, நீரோட்டங்கள் கலக்கும் அபாயகரமான ஏழாற்றுப் பிரிவில் அடிக்கடி மரக்கல விபத்துக்கள் நடந்ததையும் இக்கல்வெட்டைக் கொண்டு ஊகிக்க முடிகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் சிதைந்த மரக்கலங்களில் வந்த பொருட்கள் எவ்வாறு பகிரப்பட்டன என்பதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. சர்வதேசக்கடல் சார் சட்டங்களின் (ஐவெநசயெவழையெட ஆயசவைiநெ டுயறள) தோற்றுவாய்க்குரிய எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக இது விளங்குகின்றது.
காரைநகரில், கடற்கோட்டைக்கு அணித்தாகவுள்ள இராசாந்தோட்டத்தில் யாழ்ப்பாண அரசர்களுக்குச் சொந்தமான இருப்பிடமொன்று இருந்திருக்கிறது. இதற்கும், முன்னர் குறிப்பிடப்பட்ட வேரப்பிட்டிக்கும் இடையில், வியாவில் என்ற இடத்தில், ஐயனார் கோயிலொன்று யாழ்ப்பாணத்து அரசர் ஒருவரால் போர்த்துக்கேயர் இறுதியாக யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்குச் சற்று முன்னதாகக் கட்டப்பட்டது. இக்கோயில், போர்த்துக்கேர் காலத்தில் இடிக்கப்படாவிட்டாலும் ஒல்லாந்தர் காலத்தில் இடிக்கப்பட்டு அக்கற்களைக் கொண்டு கடற்கோட்டை கட்டப்பட்டது. இவை, காரைநகர் சிவாச்சாரியார்களின் பரம்பரை ஏடுகள் அறியத்தரும் செய்திகள். (கணபதீஸ்வரக் குருக்கள் நினைவுமலர்:1967)
காரைநகர்ச் சிவாச்சாரியார்களின் பரம்பரை ஏடுகளில் இருந்து...
வியாவில் ஐயனார் கோவில் கும்பாபிஷேகஞ் செய்த தினம் கலியப்தம் நாலாயிரத்து ஏழு நூற்று மூன்று, சாலிவாகன சகாப்தம் ஆயிரத்தைஞ் நூற்றுப் பதினெட்டு, பிரபாவாதி வருஷம் முப்பத்தைந்தாவது பிலவ வருடம் வைகாசி மாசம் 25ந் திகதி நடைபெற்றது........ (மங்களேஸ்வரக் குருக்கள்)
நானுமெனது தமையனாரும் கோயிற் ப+சை செய்து வரும் காலத்தில் தமிழ் இராச்சியம் போய்விட்டது. முத்துமாணிக்கம் செட்டியாரும் இறந்துவிட்டார். போர்த்துக்கீசர் என்னும் பறங்கியர் கிறிஸ்து வருஷம் 1618 ம் ஆண்டு காலயுத்தி வருஷம் ஊர்காவற்றுறைக்கு வந்தார்கள். அநேக வைசசமயக் கோயில்களை இடித்துப் போராட்டார்கள். இங்கேயுள்ள ஐயனார் கோயிலை இடிக்க வந்து கோபுரவாசலிற் கதவைத் திறக்கப்போனார்கள். அவர்களின் வாயிலிருந்து இரத்தம் புறப்பட்டு இறந்துவிட்டார்கள் அந்தப் பயணத்தினால் மறுபடி கோயிலை இடிக்க வரவில்லை....
(---சூரியநாராயணக் குருக்கள்)
------ பின்னர் போர்த்துக்கீசராச்சியம் போய் ஒல்லாந்தராச்சியம், வந்தது. அவர்கள் கிறிஸ்து வருஷம் 1858 ஆம் ஆண்டு ஏவிளம்பி வருஷம் சித்திரை மாதம் ஊர்காவற்றுறையைப் பிடித்தனர். ஊர்காவற்றுறை பிடிபட்ட ஒரு மாசத்திற்குள் அநேக சைவசமயக் கோயில்களையும் இடித்துவிட்டு இந்த ஐயனார் கோவிலை யும் இடிக்க வந்தபோது நாலுபேர் கண் தெரியாதவர் களாயும், இரண்டு பேர் நடக்கமாட்டாதவர்களாயும் போனார்கள். இது நடந்து கொஞ்சக்காலத்தின் பின் எங்களைப் ப+சை செய்யாது தடுத்தனர். அவர்கள் போனபிற்பாடு விக்கிரகங்கள் எல்லாவற்றையும் நில அறையில் வைத்து இரகசியமாய்ப் ப+சை செய்து வரும்போது ஒரு நாள் வந்து கோவிலையும் இடித்து கடலுக்குள்ளே ஓர் கோட்டையையும் கட்டினார்கள்.. (கனகசபாபதிக் குருக்கள்)
(ஆன்ம தர்சநம், கணபதீசுவரக்குருக்கள் நினைவு மலர் 1967)
வரிசையாக ஆட்களை நிறுத்தி, கற்களைக் கைமாற்றித் தூக்கிச் சென்று, கடற்கோட்டையைப் ப+தத்தம்பி முதலியார் ஒல்லாந்தருக்காகக் கட்டிக் கொடுத்தார் என்பதும் அந்தச் செல்வாக்கால் வந்த பொறாமை அவரது வாழ்வுக்கு உலை வைத்த காரணங்களுள் ஒன்றென்பதும் நாட்டார் இலக்கியத்தில் இடம்பெற்ற விடயங்கள்.
அழிபாடுகளில் இருந்து எடுத்துவரப்பட்ட கற்கள் கடற்கோட்டையைக் கட்டப் பயன்பட்டிருக்கலாம் என்பதை, கோட்டைக்குள் காணப்படும் வேலைப் பாடமைந்த சில கற்களை வைத்து ஊகிக்கலாம். இவற்றுள் இரு கற்களில் சோழர்காலக் கல்வெட்டுக்கள் அறியப்பட்டுள்ளன. ஒன்று மாத்திரமே படிக்கப்பட்டுள்ளது. மற்றையதன் பெரும்பாகம் சாந்தினால் மூடப்பட்டுள்ளதால் முழுமையாகப் படிக்கப்படவில்லை. படிக்கப்பட்ட கல்வெட்டு முதலாம் இராஜேந்திரசோழன் காலத்தது. இலங்கையை வெற்றி கொண்ட சோழத் தளபதியின் பெயரை அறியத்தருகின்றது.
கடற்கோட்டைக் கல்வெட்டுக்கள்
முதலாவது கல்வெட்டு
ஸவஸ்திஸ்ரீ
ஈழமு(ழு)
(ங்)துவ்கொ
ண்டு ஈழ
த்தnசெர
யும் பெண்
டிர் பண்டார
மும் பிடிச்
சுக் கொடுபொ
ன அதிகார
த் தண்டநாச
கனார் ஐய
(ங்) கொண்டn (சொ)
(ழ) மூவேந்(த)
வெளார் மா
தொட்டமான
இராசராசபுர
ஸ்வ்திஸ்ரீ
ஈழமான மு
ம்முடி சொழ
மண்டல...
...ண...
குல....
இந்திரபாலா. கா:(யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள் 1969)
பாய்க்கப்பல் போய் நீராவிக்கப்பல் வந்த காலத்தில், பாக்குநீரிணையின் ஆழம் போதாததால் ஊர்காவற்றுறை பன்நாட்டு முக்கியத்துவத்தை இழந்தது. இருப்பினும், இந்தியாவின் கிழக்குக் கரையுடன் வணிகம் அண்மைக்காலம் வரை தொடர்ந்தது. யாழ்ப்பாணப் பரவைக்கடலின் சங்கு வங்காளம் வரை சென்றதையும், விசாகப்பட்டினத்து வடக்கன் மாடு இங்கு வந்ததையும் ஊர்காவற்றுறையில் இன்றும் காணப்படும் சங்குக் கழிவுக்குவியல்களாலும் இடிந்து போன கால்நடைத் தொற்று நோய்த்தடுப்புக் கட்டிடங்களாலும் அறிந்து கொள்ளலாம். ஊர்காவற்றுறையில் இறக்கப்பட்ட சரக்கு, மாட்டு வண்டித் தொடர்களில் அனுராதபுரம், கண்டிவரை சென்றதை எனது பாட்டனார் கூறக்கேட்டிருக்கின்றேன்.
காலனித்துவம் போய்த் தேசியங்கள் வந்த காலத்தில் ஊர்காவற்றுறையின் வணிகம் நின்று போனாலும் கேந்திர முக்கியத்துவம் போய்விடவில்லை வணிகத்தையும் கடற்பாதைகளையும் பராமரிக்கவும் பாதுகாக்கவும் தேவைப்பட்ட கேந்திர அமைவிடம் அவற்றைத் தடுக்கவும் தேவைப்பட்டது. வடபுலத்திற்கான இலங்கைக்கடற்படையின் தலைமையகம் கடற்கோட்டைக்கு மிகவும் அண்மித்த நிலப்பகுதியான காரைநகர், நீலங்காட்டில் அமைந்தது. இக்காரணத்தினாலேயே, 1971 ஆம் ஆண்டு து.ஏ.P. கிளர்ச்சியின் போது கைதான ரோகண விNஜிவீரவும் சகாக்களும் பாதுகாப்புக் கருதி கடற்கோட்டையிலேயே சிலகாலம் சிறைவைக்கப்பட்டனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
மிகப்பழங்காலந்தொட்டு மேற்கிற்கும் கிழக்கிற்குமான கடற்பாதை, மன்னார் வளைகுடா – பாக்குநீரிணைய+டாகச் சென்றது. அபாயகரமானது என்பதால் ஆழ்கடல் பாதைகள் ஆதிகாலத்தில் இயன்றளவு தவிர்க்கப்பட்டன. இலங்கையின் தென்கிழக்கு மூலையில் , காந்தப்பாறைகள் என அறியப்பட்ட புசநயவ டீயளநளஇ டுவைவடந டீயளநள காரணமாக இலங்கைப் பாதுகாப்பும் மன்னார் வளைகுடாவின் முத்தும் பாக்கு நீரிணையின் சங்கும் கிழக்கையும் மேற்கையும் இங்கு சந்திக்க வைத்தன.
இந்தியாவின் மேற்குக் கரையினரும் கிழக்குக் கரையினரும் பரஸ்பரம் வந்து போனதும் கிரேக்கரும் உரோமரும் வந்ததும் அரபுக்களும் சீனரும் வந்ததும் பின்னர் ஐரோப்பியர் வந்ததும் மன்னார் வளைகுடா பாக்குநீரிணைக் கடற்பாதைய+டாகவே பெரிதும் நடைபெற்றதை அதன் இருபுறக் கரைகளிலும் காணப்படும் எண்ணிறந்த தொல்லியற் தடங்களால் அறிந்து கொள்ளலாம்.
இராமர் அணை என்றும் ஆதாமின் பாலம் என்றும்அழைக்கப்படும் சேதுவை இவர்கள் மன்னார்த்தீவிற்கும் மாந்தைக்கும் இடையில் உள்ள கால்வாயால் அல்லது இராமேஸ்வரம் தீவுக்கும் இராமநாதபுரத்துக்கும் இடையில் உள்ள பாம்பன் கால்வாயால் கடந்தனர். பெரிய துறைமுகம் எனப்பொருள் தரும் மாதோட்டம் என்ற மாந்தையிலும் பாம்பன் கால்வாயின் பெருநிலப்பகுதியில் உள்ள அழகன் குளத்திலும் அறியப்பட்ட தொல்லியற் தடங்கள், அவை பல நூற்றாண்டுகளாக பல நாட்டினரும் வந்துபோன பெரும் நகரங்களாக விளங்கின என்பதைத் தெரியப்படுத்துகின்றன.
ஏறத்தாழ ஒல்லாந்தர்காலப் பிற்பகுதியில் மாந்தைக் கால்வாய் சேறடைந்து போக, பாம்பன் கால்வாய் மட்டும் தொடர்ந்து இயங்கியது. தமிழ்நாட்டுப் பாரம்பரிய வணிகர்களான செட்டியர்களின் தாயகம் எனப்படும் செட்டிநாடு, பாம்பன் கால்வாய்க்கு வடக்கிலும் மற்றொரு பாரம்பரிய வணிகர்களான முஸ்லீம்களின் பழைமை முக்கியத்துவம் வாய்ந்த நகரமான கீழக்கரை, பாம்பன் கால்வாய்க்குத் தெற்கிலும் அமைந்திருப்பது தற்செயலானவையன்று.
1860 இல் நீராவிக் கப்பல்கள் ஓடத் தொடங்கின. 1869 இல் சுயெஸ் கால்வாய் திறக்கப்பட்டது. கொழும்புத் துறைமுகமும் இலங்கையைச் சுற்றி செல்லும் கடற்பாதையும் தனி முக்கியத்துவம் பெற்றன. பாக்குநீரிணைப்பாதை அறவே கைவிடப்பட்டது. துறைமுகங்கள் செல்வாக்கிழந்தன. வணிகப்பெரு மக்கள் வேறிடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
மன்னார் வளைகுடா – பாக்குநீரிணையை மீண்டும் பன்நாட்டுக் கடற்பாதையாக்கும் சேதுசமுத்திரத்திட்டம் நூறாண்டுகளுக்கு மேலாகப் பேசப்பட்டு வருவதொன்று. சேதுசமுத்திரத் திட்டம் வந்தால், கொழும்பின் இழப்பைச் சரி செய்யவும் தூத்துக்குடியுடன் போட்டியிடவும் காங்கேசன்துறையை விரிவாக்கவென்று, அறுபதுகளின் பிற்பகுதியில், டட்லிசேனநாயக்கா வந்து காங்கேசன்துறை மருத்துவமனைப் பகுதியில் அத்திவாரமிட்டதைப் பார்த்து நினைவுக்கு வருகிறது. அத்திவாரக்கல் இப்பவும் இருக்கலாம்.
இப்பொழுது சேதுசமுத்திரத் திட்டம் மீண்டும் முனைப்பாகப் பேசப்படுகிறது. இந்தியா மட்டும், தன்னுடைய கடற்பகுதியில் செய்யப்போவதாக , பல்வேறு அபிவிருத்திக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் பாதுகாப்பு என்பதே முனைப்பான காரணம் என்பதில் ஐயமில்லை. இதில், தனக்குப் பங்கு என்ன என்பது இலங்கை அரசின் கவலை. இருவருக்கும் பொதுவான பாதையாக இருக்கலாம் என்றும் இலங்கை அரசின் நிலப்பாலத்திட்டத்தை இதனுடன் இணைக்கலாம் என்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல பன்நாட்டு நிறுவனங்களும் பங்கு கொள்ளக் காத்திருக்கின்றன. டெல்லியிலும் சென்னையிலும் கொழும்பிலும் இதைத் தீர்மானித்துவிடலாம் என்ற போக்கும் தெரிகின்றது.
எது எவ்வாறாயினும் சேதுசமுத்திரத் திட்டத்தால் வரப்போகும் கால்வாய் எங்கள் தீவகத்தின் புழைக்கடைய+டாகத்தான் போகப் போகின்றது. பாக்கு நீரிணையின் பாரம்பரியப் பங்காளிகள், அதன் இருபுறமும் வாழும் மக்கள், பாக்குநீரிணை இவர்களது பொருளாதார உரிமை மட்டுமல்ல, பண்பாட்டு உரிமையும் கூட, திட்டத்தில் இவர்களுக்குப் பங்கு என்ன என்பது தெளிவாகவில்லை. பாதிப்பு என்ன என்பதும் தெளிவாகவில்லை. சூழல், பொருளாதார, பண்பாட்டு விளைவுகள் மிகக் கவனமாக ஆராயப்பட வேண்டியவை. எங்களுக்கு இன்று அவசியம் தேவைப்படுவது இத்திட்டத்தின் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு
சனி, 12 ஜூன், 2010
பழமொழிகள்
•அகத்தினழகு முகத்தில் தெரியும்.
•அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
•அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
•அடியாத மாடு படியாது.
•அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
•அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
•அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.
•அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
•அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
•அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
•அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
•அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.
•ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
•ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
•ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
•ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
•ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
•ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
•ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
•ஆழம் தெரியாமல் காலை விடாதே.
•ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.
•ஆறிலும் சாவு நூறிலும் சாவு.
•ஆனைக்கும் அடிசறுக்கும்.
•இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
•இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.
•உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
•உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
•எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
•எறும்பூரக் கல்லும் தேயும்.
•ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
•ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
•ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
•கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
•கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
•கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.
•கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.
•கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
•கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
•கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
•கழுதை அறியுமா கற்பூர வாசனை?
•காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
•காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.
•காகம் திட்டி மாடு சாகாது.
•காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
•காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
•காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
•கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
•குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
•குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
•குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
•குரைக்கிற நாய் கடிக்காது.
•கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
•கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.
•கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
•கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
•சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
•சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.
•சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.
•சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
•சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?
•தடியெடுத்தவன் தண்டக்காரன்.
•தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
•தன் வினை தன்னைச் சுடும்.
•தனிமரம் தோப்பாகாது.
•தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.
•தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.
•தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
•தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
•தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
•நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
•நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
•நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
•நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
•நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
•நிறைகுடம் தளம்பாது.
•பசி வந்தால் பத்தும் பறந்திடும்.
•படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
•பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.
•பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
•பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
•பனை மரத்தடியில் பால் குடித்தது போல.
•பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
•பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
•பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
•புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
•புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
•பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.
•பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
•போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
•மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
•மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
•மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
•முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
•முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.
•முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
•மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
•யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
•யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
•விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
•விரலுக்குத் தக்கதே வீக்கம்.
•விளையும் பயிரை முளையிலே தெரியும்.
•வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
•வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
•வெளுத்ததெல்லாம் பாலல்ல.
•வேலிக்கு ஓணான் சாட்சி.
•வைக்கோற் போர் நாய் போல.

பெண் என்ற (என்றால்) தெய்வம் .
பெண் என்பவள் யார்?அவளின் குணாதிசயங்கள் யாவை?அவளின் எதிர்பார்ப்புக்கள் எவை?அவளிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது? - ஏன்? பெண் என்பவன் ஆணுக்கு ஒரு புதிராகவே எப்போதும் தெரிகிறான். ‘கடலின் ஆழத்தைவிட ஆழமானது பெண்ணின் மனம்’ என்பார்கள். உலகில், எழுதப்பட்ட இலக்கியங்களில் பெரும்பங்கு - பெண்’ என்ற புதிரைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் எழுதப்பட்டவைதாம்.கொஞ்சம் பெரிய சைஸ் காக்கையைப் போல் இருக்கும். அழகே இல்லாத ஒரு பெண் மயிலைக் கவர, கம்பீரமான, வானவில்லைப் பல் வண்ணங்களைக் கொண்ட தோகையை உடைய அழகிய ஆண் மயில் ஏன் ஆடிப்பாட வேண்டும்? ஏதோ முட்டையிட்டோம். குஞ்சுபொரித்தோம். இனி அதுவாயிற்று அதன் வாழ்க்கையாயிற்று என்று ‘தேமேய யென சும்மா இராமல் ஒரு தாய்ப் பருந்து ஒருமீனைக் கொன்று ஏன் குஞ்சுக்கு ஊட்ட வேண்டும்? காடும் மேடும் திரிந்து, புல்லும் சருகும் சேர்த்து ஏன் ஒரு கூட்டைக் கட்ட வேண்டும்?இதற்கெல்லாம் விடை ‘அன்பு’ என்பீர்கள். அன்பு என்பது என்ன? அது ஒரு இரசாயன மாற்றமா, ஹார்மோன் சுரப்பா, இல்லை வேறு ஏதாவதா? பசிக்கும்போது சாப்பிடுவதைப்போல அன்பு என்பது ஒரு உடலின் தேவையா, இல்லை அதைவிட மேலானதா?சைனாவின் ‘யின் - யாங்’ தத்துவத்தை நாம் கேள்விப்பட்டிருப்போம். “யின்”என்பது பெண் தத்துவம். “யாங்” என்பது ஆண் தத்துவம். யின் என்பது பெண்மை, பூமி, இருள், செயலுக்கு உள்ளாவது. யாங் என்பது ஆண்மை, வானம், வெளிச்சம், செயல்படுவது, ஊடுருவுவது.பூமியைப் போன்றவள் பெண்: பொறுமைக்காக மட்டுமல்ல “Down to eartt” என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல, பெண் மிகவும் லௌகினமானவள் Very practical.ஷேக்ஸ்பியரைப் பற்றியோ, குண்டலினியைப் பற்றியோ, பைசாவிற்கு லாயக்கற்ற த்த்துவங்களைப் பற்றியோ அவளுக்கு அக்கறையில்லை. அவளுக்கு வேண்டியதெல்லாம் அவள் வீடு, அவள் கணவன், அவள் குழந்தைகள்.இதைச் “சுயநலம்” என்று சொல்வது மிகவும் தவறான கருத்து. பெண் மட்டும் இப்படி சுயநலமாய் இல்லாவிட்டால், பொதுநலமாய் இல்லாவிட்டால், பொதுநலமான பல ஆண்களின் தாராள மனத்தினால் பல வீடுகள் நடுத்தெருவிற்கு வந்துவிட்டிருக்கும்.“Charity begins at home” இரக்கம் இல்லறத்தில் ஆரம்பிக்கிறது என்பார்கள். தனக்கு மிஞ்சினால்தான் தானம். தனக்காகவும், தன் கணவனுக்காகவும எப்போதும் ஓயாமல் சிந்திப்பவள் பெண். ஒரு முட்டையில் கருவின் எதிர்காலத்திற்குத்
தேவையான அனைத்து ஊட்டப் பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டிருப்பதைப் போல, பெண் தன் குழந்தையின் எதிர்காலத்திற்காக அக்கறையோடு சேமித்து வைக்கிறாள்.விதை வளர்வதறகுத் தேவையான நீர், ஆக்ஸிஜன், நைட்ரஜன், தாதுப்பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் நிலமானது சேமித்து வைத்திருக்கிறது. வானம் பொய்த்தாலும், பூமி பொய்ப்பதில்ல. மழையைத் தராமல் வானம் வறண்ட பாலைவனத்தில் கூட எங்கோ ஒரு மூலையில் சோலை இருப்பதைப்போல, பெண் என்பவள் அன்பு என்ற நீரூற்றை உடைய பூமி.இருளைப் போன்றவன் பெண் வானவெளியில் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது இருள் பூமியில் பாதி வெளிச்சம் மறுபாதி இருள். வெளிச்சத்தில், பகல் வேளையில் உழைத்துக் களைத்த உயிரினங்கள் இளைப்பாற வீடு திரும்புவது இருளில்.ஓய்வெடுக்கும் உயிரினங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஆனந்தமாகக் காதல் செய்வதும் இருளில். காதல் செய்த உயிரினங்கள் களைத்துப் போய் தன்னை மறந்து உறங்குவதும் இருளில். எனவே, இருள் என்பது ஓய்வு, இனப்பெருக்கம், அமைதி.இருள் என்பதற்கு இப்படி பல நற்குணங்கள் இருந்தாலும், அதற்கு சில எதிர்மறை குணங்களும் உண்டு. இருள் என்பது யாரிடமாவது அடைக்கலம். தேடும் தன்மை. பெண்களிடம் காணப்படும் எல்லாவிதமான பயங்களும்,
சகலவிதமான குழப்பங்களும், சந்தேகங்களும் ஒருங்கே உருவெடுத்த ஒரு வடிவம் பெண்.தன் திறமையைத் தானே உணராத அனுமாரைப்போல, அன்பு என்ற நீரூற்று தனக்குள்ளேயே இருந்தாலும் உண்டு. இருள் என்பது பயம். இருள் என்பது பாதுகாப்பற்ற தன்மை. இருள் என்பது யாரிடமாவது அடைக்கலம் தேடும் தன்மை. இருளின் இந்த எதிரிடையான குணங்களும் பெண்களிடம் காணப்படும். எல்லா விதமான பயங்களும், சகலவிதமான குழப்பங்களும், சந்தேகங்களும் ஒருங்கே உருவெடுத்த ஒரு வடிவம் பெண்.தன் திறமையைத் தானே உணராத அனுமாரைப்போல, அன்பு என்ற நீரூற்று தனக்குள்ளேயே இருந்தாலும், எப்போதும் அதை வெளியே யாரிடமாவது தேடி அலைபவள் பெண்.இளம் வயதில் பெற்றோரிடம், பருவத்தில் காதலனிடம், திருமணத்திற்குப் பிறகு கணவனிடம், தாயான பிறகு குழந்தைகளிடம் என்று எப்போதும் யாரையாவது அண்டியே இருப்பவள் பெண். அவளால் தன் காலில் தானே நிறக முடியாது என்று பிறர் குறை கூறுவது உண்டு. ஆனால், இது குறையல்ல. இதுதான் நிறை. பிறரிடம் எப்போதும் எதிர்பார்த்து, அதை அவர்கள் தந்தாலும், தராவிட்டாலும் பெண் எப்போதும் தந்து கொண்டேதானிருக்கிறாள். எனவே, அண்டி வாழ்வது பெண்ணிற்கு குறையல்ல நிறை. பெற்றோரைச் சார்ந்து வாழும் குழந்தை அவர்களை ஒன்றாகப் பிணைத்து வைக்கிறது. காதல் வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் பெண்ணின் இந்த அண்டிவாழும் குணம்தான். கணவன் - மனைவி இணை பிரியாமல் இருப்பதற்கு காரணமும் இக்குணம் தான் சார்ந்து வாழ்தல், இயல்பானது. ஆரோக்கியமானது.செயலுக்கு உள்ளாவது பெண் ஆங்கிலத்தில் “Passive” என்பார்கள். இதன் பொருள் செயல்படாமல் இருப்பது. செயல்படாமல் இருப்பது என்பதற்கு பொருள் செயலுக்கு உள்ளாவது என்பது பொருள். செயலுக்கு உள்ளாவது என்றால் வேறு ஏதோ செயல்படுகிறது என்றுதானே பொருள்? ஆம். ஆணைச் செயல்பட வைத்து அந்த செயலுக்கு உள்ளாவது பெண்.ஒன்றும் தெரியாத அப்பாவி ஆணை, தன் வெகுளித்தனத்தை வெளிப்படுத்தி ‘அடப்பாவி’ ஆணாக்குபவள் பெண். ஒன்றும் தெரியாதது போல் ஒரு பெண் நடித்தால், ஆண்மை பொங்கி எழி, ஒரு ஆண் அறிவாளியாக மாறித்தானே தீர வேண்டும்?“என்னங்க இதைத் திறந்து குடுங்க’ என்று மூடியைத் திறக்க முடியாதது போல் பெண் நடித்தால், ஆண்மை பொங்கி எழுவது இயல்புதானே? துருப்பிடித்த மூடியைத்திருகி, கையெல்லாம் சிவந்திருந்தாலும் தன் ஆண்மை வெளிப்பட ஒரு சந்தர்ப்பம் கொடுத்ததற்காக ஒரு ஆண் பெண்ணிற்கு நன்றி செலத்துகிறான். அடிமையாகிறான்.ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது இப்படித்தான் தூண்டி விடுபவள் பெண். தூண்டப்படுவது ஆண். செயல்பட வைப்பவள் பெண். செயலைச் செய்வத ஆண். இதைத்தான் நாகரீகமாக ‘செயலுக்கு உள்ளாவது’ என்கிறார்கள். செயல்படாமல் இருப்பது என்ற அர்த்தத்தில் அல்ல.ஹிந்துஸ்தான் லீவர் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் தன் சோப்புப்
பொருட்களை இந்தியாவில் ‘விற்பனை செய்யத் திட்டமிட்டபோது ஒரு சர்வே நடத்தியது. Who is the decision maker தீர்மானம் செய்வது யார்? ஆணா, பெண்ணா?என்பதுதான் கேள்வி.ஒவ்வொரு வீடாகப் புகுந்து இதே கேள்வியைக் கேட்டார்கள். ‘உங்க, வீட்டில யாருங்க ‘தீர்மானம் பண்றது?’‘எங்க வீட்டில எல்லாமே அவருதாங்க.”வந்தவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஆஹா, என்ன ஒரு அடக்கம்! பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும். இந்தியாவை இதனால்தான் தாய்நாடு, தெய்வீகமானது என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்து அந்த அதிகாரிகள் எதற்கும் கேட்டுப் பார்க்கலாமே என்று ஆண்களிடம் அதே கேள்வியைக் கேட்டார்கள்.‘தீர்மானம் எடுக்கறதெல்லாம் நான்தாங்க. ஆனா, அவ என்ன தீர்மானம் எடுக்கச் சொல்றாளோ அதைதாங்க நான் செய்வேன்.’ இது ஒரு நகைச்சுவைப் போலிருந்தாலும், இதுதான் உண்மை. செயல்படுவது ஆண். செயல்பட வைப்பது பெண்..இன்னும் சில ஆண்கள் கொஞ்சம் கௌரமாய் சொல்வார்கள். “முக்கியமான விஷயங்களைப் பத்தி நான் யோசிப்பேன். தேவையில்லாத சாதாரண விஷயங்களை அவள் தீர்மானிப்பாள்”.“அப்படியா…?”“ஆம்.. நான் எந்த வேலைக்குப் போக வேண்டும். எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும், வீட்டிற்கு என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டும் போன்ற சாதாரண விஷயங்களையெல்லாம் அவள் தீர்மானிப்பாள். ஜார்ஜ் புஷ் செய்வது சரியா? இந்திய அரசியல் எப்போது மாறும்? போன்ற தீவிரமான விஷயங்களைப் பற்றி நான்தான் யோசிப்பேன்.விளையாட்டல்ல. நிறைய ஆண்களின் நிலை இதுதான்.கிரகிப்பது பெண் எல்லாவற்றையும் கிரகித்து உறிஞ்சி விடுவது பெண்ணின் குணம். ஆண் என்ன தப்பு செய்தாலும், பொய் சொன்னாலும் உடனே பெண் புரிந்து கொண்டு விடுவாள் என்றும் இதற்கு அர்த்தம் சொல்லலாம். சாணம், குப்பை ன்று தப்போட்டாலும் அதை மூடி மறைத்து, கிரகித்து எருவாக மாற்றக்கூடிய குணம் என்ற பொருளிலும் கூறலாம்.இந்த “யின் - யாங்” சின்னத்தை கூர்ந்து கவனித்தால், இன்னொரு உண்மை புலப்படும். இருட்டு, வெளிச்சம், இரண்டும் பின்னப பிணைந்து காணப்படுகிறது. இருட்டில் ஒரு சிறிய வட்டமாக வெளிச்சம் காணப்படுகிறது. வெளிச்சத்தில் ஒரு சிறிய வட்டமாக இருள் காணப்படுகிறது. ஆம், இருட்டில் வெளிச்சத்தின் விதை இருக்கிறது.ஒரு பெண்ணில், ஆணின் விதை இருக்கிறது. ஒரு ஆணில், பெண்ணின் விதை இருக்கிறது.எவ்வளவு தோல்வியிலும் ஏதோ முயற்சி செய்தோம் என்ற சந்தோஷத்திலும் அட்டா இன்னும் கிடைச்சிருக்கலாமே என்ற வருத்தம் இருக்கிறது. ஏதோ முயற்சி செய்தோம் என்ற சந்தோஷம்தான் ஒருவனைத் தொடர்ந்து ஊக்குவித்து மேலும் மேலும் செயல்பட வைக்கிறது. அடடா இன்னும் கிடைச்சிருக்கலாமே என்ற வருத்தம்தான் சந்தோஷத்தால் திமிராகி மேற்கொண்டு எதையும் செய்யாமல் இருத்தலைத் தவிர்த்து முடங்கிப் போகாமல் தொடர்ந்து மேலும் மேலும் வெற்றிகளைக் குவிக்க வைக்கிறது.
தோல்வியில் வெற்றியின் விதை இருக்கிறது. வெற்றியில் தோல்வியின் விதை இருக்கிறது. வெற்றியும், தோல்வியும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன. ஒன்றில்லாமல் வேறில்லை.‘நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை’ என்று ஆணும் பெண்ணும் பின்னிப் பிணைந்து வாழ்வதற்கும் காரணம் இந்த விதைதான். இந்த கொக்கிதான் (The Hook) பொம்மலாட்டக் கயிறு போன்றது. இது பொம்மைகள் ஆடலாம், பாடலாம். ஆனால் பொம்மை ஆடுவதற்குக் காரணம் அதற்குப் பின்னாலிருந்து இயக்கும் சூத்ரதாரி.ஷாஜஹானைப் போல் ஒரு ஆண் ஒரு பெரிய அழகிய உன்னதமான தாஜ்மஹாலையே கட்டிவிடலாம். ஆனால், அந்த தாஜ்மகஹாலை உற்றுக் கவனியுங்கள். அந்த அழகிய வெண்மையான கற்களை ஊடுருவிப் பாருங்கள். கயிறுகள் தெரியும். அந்தக் கயிறுகள் மும்தாஜின் கையில் போய் முடிவடைகின்றன.
பெண்கள் வாழ்க்கையில் சிறக்க `ஐந்து’ விஷயங்கள்
நம்பிக்கை
கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று பயம் கொள்வதை விட, நிகழ்கால வாழ்க்கையை வெற்றி கரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். முதுமை என்பது எல்லோருக்கும் வருவது தான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50 வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்கு பின் தோல் சுருங்கி போய்விடுமே என்றெல்லாம் பயந்து கொண்டிருக்கக் கூடாது. எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக் கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள்.
பாதுகாப்பு
ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ் கின்றனர். இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும்போது தான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவா கின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணை விட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மை களில் மேலானவர் தான்.
மரியாதை
ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்கு உண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வு களுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலை யாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர் களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.
அன்பு
வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவி தான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடியவை. அன்பால் மலரும் உணர்வு களே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்பதை இருவரும் உணர வேண்டும். அன்பை வெளிபடுத்தவே திருமணம் நம்மை இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும். மனிதர் கள் உணர்வு களுக்குக் கட்டுபட்டவர்கள். அதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பினால் சீரமைக்கபட வேண்டும். `என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.
நேர்மை
நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். “என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல் பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்ட வாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மை தான் குடும்பத்தின் முதுகெலும்பு
இதயம் செயல்படும் முறை
நமது மார்புக்கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்கு பெருந் தமனி என்று பெயர்.இந்த பெருந்தமனி, இதயத்தின் இடது கீழ் அறையிலிருந்து கிளம்பி, பிறகு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதேபோல், உடல் திசுக்களில் சேரும் அசுத்தங்களும், கரியமில வாயுவும் (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த ரத்தம், சிரைக் குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு வந்து சேரும்.இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் நுரையீரல் ரத்தக் குழாய்கள், வலது இடது எனப்பிரிந்து முறையே வலது மற்றும் இடது நுரையீரலுக்குச் செல்கின்றன. அங்கு, உள் இழுக்கப்பட்ட மூச்சுக்காற்றில் உள்ள ஆக்ஸிஜன் வாயுவால் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. வெளி விடும் மூச்சுக் காற்றின் மூலம் ரத்தத்தில் உள்ள அசுத்தம் வெளியேற்றப்படுகிறது.இவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட ரத்தம், இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையால், பெருந்தமனி மூலம் மீண்டும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் செலுத்தப்படுகிறது இப்படி இதயம் சுருங்கி விரியும் ஒவ்வொரு முறையும் உடல் முழுவதும் ரத்தம் பரவுகிறது.இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது ?நமது உடலில் உறுப்புகளில் பெரும்பா லானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கும். அதவாது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை. தூங்கி னால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி, கை, கால், கண் போன்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்க முடியும்.ஆனால், ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது? இதயம் ‘துடிக்கவில்லை’ என்றால் அசுத்த ரத்தம் தூய்மையாகாது. உடல் திசுக்களுக்கு, சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துகள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய்ச் சேராது. போது மான சத்து கிடைக்காமல் திசுக்கள் பாதிக்கப்படும். செயல் இழந்துபோகும். மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த மனித உடலே இறந்துகோகும்.இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டி ருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்து இயங்குகிறது.இதயத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஏன்?இதயம் தன்னிச்சையாக செயல்படக் கூடியது. கண், காது, கால், கை போன்ற உறுப்புகளைப்போல் நமது விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஏற்ப இதயத்தை இயக்க முடியாது. ஆனால், இதயத்தைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு மண்டலம் உள்ளது. இதற்கு, தன்னியக்க நரம்பு மண்டலம் அல்லது பரிவு நரம்பு மண்டலம் என்று பெயர். இந்த நரம்பு மண்டலம் தவிர, உயிரி-ரசாயன சுரப்பு நீர்களும் இதயத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்து கின்றன.இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. இன்னொரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.ஹார்மோன் செயல்பாடுகள் :அட்ரீனலின் - இந்த ஹார்மோன், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். பயம் மற்றும் உணர்ச்சிவசப்படும்போது, ரத்தத்தில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரித்து இதயத்துடிப்பு அதிகரிக்கும்.தைராக்ஸின் - இந்த ஹார்மோன், இளம் வயதில் உடல் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. உடலின் பல்வேறு வளர்சிதை மாற்றங்களை இது கட்டுப் படுத்துகிறது. இந்த ஹார்மோனால்கூட இதயத் துடிப்பு அதிகரிக்கும்.பிற காரணங்கள் :சிரைக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு வரும் ரத்தத்தின் அளவைப் பொறுத்தும், ரத்தஅழுத்தத்தைப் பொறுத்தும் இதயத் துடிப்பு அதிகரிக்க வோ, குறைக்கவோ செய்யும்.இதயத் துடிப்பு எவ்வாறு ஏற்படுகிறது ?இதயத்தின் இயக்கத்தைப் போலவே, இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவதில் நரம்பு மண்டலம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மூளை மற்றும் தண்டுவடத்தில் இருந்து வரும்நரம்புகள் இதயத்தில் வியாபித்திருக்கும். இவை, இதயத்தின் வலது பக்க மேல் அறையில் ந.அ. மின் குமிழில் (ந.அ. சர்க்ங்-நண்ய்ர்-அற்ழ்ண்ஹப் சர்க்ங்) குவிந் திருக்கும். இதில் இருந்து தொடர்ந்து மின் னோட்டம் ஏற்படும். இந்த மின்னோட்டம், அருகில் இருக்கும் (மின் குமிழ்) மேல் அறைக்கும், கீழ் அறைக்கும் மையமாக அமைந்துள்ள மின் குமிழிக்குப் பரவும். அங்கிருந்து பிரியும் நரம்பிழைகள் மூலமாக வலது மற்றும் இடது கீழ் அறைக்கு மின்னோட்டம் பரவும். இதனால் இதயத் துடிப்பு ஏற்படுகிறது.அதாவது, இதயத் தசைகள் சுருங்கி விரிகின்றன. அதில் உள்ள வால்வுகள் மூடித் திறக்கின்றன. இவ்வாறு மின்னோட்டத்தை ஏற்ப டுத்தக்கூடிய மின் குமிழ் மற்றும் மின்னோட்ட இழைகளில் கோளாறுகள் ஏற்பட்டால், இதயத் துடிப்பு குறையும் அல்லது அதிகரிக்கும் அல்லது சீரில்லாமல் துடிக்கும்.சாதாரணமாக, ந.அ மின் குமிழ் எத்தனை முறை இதயத்தில் மின்னோட்டத்தைப் பாய்ச்சுகிறதோ அத்தனை முறை இதயத்துடிப்பு இருக்கும். இது சராசரியாக நிமிடத்துக்கு 72 முறையாக இருக்கும். அதாவது, இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.இதயத் துடிப்புக்கும், நாடித் துடிப்புக்கும் என்ன தொடர்பு ?இதயத் துடிப்பு என்பது இதய இயங்கும் போது ஏற்படுவது. அப்படி இதயம் துடிக்கும் போது பெருந்தமனியின் ரத்த ஒட்டம் ஏற்பட்டு ரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால், ஏற்ப டுவதே நாடித் துடிப்பு.. ஆக, இதயத் துடிப்பு எத்தனை முறை ஏற்படுகிறதோ அத்தனை முறை நாடித் துடிப்பும் ஏற்படும்.இதயத் துடிப்பு எப்போது அதிகமாகும் ?இதயத் துடிப்பு பல்வேறு காரணங்களால்அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங்களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் காரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும்.உடற்பயிற்சி செய்யப்போகும், கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கும், கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும்இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைக்கக் விடும்.இதயத் துடிப்பு எப்போது குறையும் ?தூங்கும்போதும், நீண்ட நேரம் படுத்து ஓய்வெடுக்கும் போதும் இதயத் துடிப்பு பொதுவாகக் குறைந்து காணப்படும்.ஒரு சராசரி மனிதனுக்கு இதயத் துடிப்பு என்பது நிமிடத்துக்கு 72 முறை. சில சமயங்களில், சிலருக்கு இது 60 முதல் 90 க்கும் அதிகமான அளவில் இருக்கும். அப்படி 90 க்கு மேல் இருந்தால் அதை மிகை இதயத் துடிப்பு என்றும் 60க்குக் குறைவாக இருந்தால் குறை இதயத் துடிப்பு என்றும் சொல்வார்கள்.உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத் துடிப்பு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் கோப்பை ஐந்து முறை வென்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜான் போர்க்குக்கு சாதாரண மாகவே இதயம் நிமிடத்துக்கு 38 முறைதான் துடிக்குமாம்.மனிதன் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இது பொருந்தும், யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயம் 25 முறைதான் துடிக்கும். அதுவே, கானாரி என்ற பறவைக்கு இதயம் ஒரு நிமிடத்துக்கு 1000முறை துடிக்குமாம்.இதயத்தின் அமைப்புஇதயம், விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை, இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுரை, வெளிப் புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் நீர் இருக்கும். இது, இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத்திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும்.இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுள் ளது. இந்தச் சுவர்ப் பகுதியில் இருந்துதான் இதய வால்வுகள் உருவாகின்றன. மேல்பக்கம் இருக்கும் இரண்டு ஆரிக்கிள் அறைகளை, மேல்புற இதயத்தடுப்புச் சுவரும், கீழ்ப்பக்கம் இருக்கும் இரண்டு வென்ட்ரிகிள் அறைகளை, கீழ்ப்புற இதயத் துடிப்புச் சுவரும் பிரிக்கின்றன.இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. மேலே இரண்டு, கீழே இரண்டு. மேலே இருக்கும்அறைகள் ‘இடது ஆரிக்கிள்’, ‘வலது ஆரிக்கிள் ‘என்றும் கீழே இருக்கும் அறைகள் ‘இடது வென்ட்ரிகிள்’, ‘வலது வென்ட்ரிகிள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.இதய வால்வுகள் :இதயம் இயங்கும்போது, இதயத்தில் இருந்து ரத்தம் வெளியே உந்தித் தள்ளப்படும்.அப்படி தள்ளப்படும் ரத்தம் ஒரு வழியாகவே செல்லும். மீண்டும் அதே வழியில் திரும்பு வருவதில்லை. இவ்வாறு வெளியே தள்ளப்படும் ரத்தம், மீண்டும் வராமல் தடுக்க இதய அறைகளில் நிலைய வால்வுகள் உள்ளன. வலதுஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு மூவிதழ் வால்வு என்றும், இடது ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு ஈரிதழ் வால்வு என்றும் பெயர்.வலது ஆரிக்கிள் அறையில் இருந்து வலது வென்ட்ரிகிள் அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் வலது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல் ‘மூவிதழ் வால்வு’ தடுக்கிறது. அதேபோல், இடது ஆரிக்கிள் அறையில் இருந்து இடது வென்ட்ரிகிள் அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் இடது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல் ‘ஈரிதழ் வால்வு’ தடுக்கிறது.வலது வென்ட்ரிகிள் சுருங்கும்போது, அதிக அறையில் இருந்த ரத்தம் நுரையீரல் தமனியில் பாயும். அது திரும்பி வராமல் தடுக்கும் வால்வுக்கு நுரையீரல் பிறைச்சந்திர வால்வு என்று பெயர். அதேபோல், இடது வென்ட்ரிகிள் சுருங்கும்போது, பெருந்தமனியில் செல்லும் ரத்தம் திரும்பிவரமால் தடுக்கும் வால்வுக்கு ‘பெருந்தமனி பிறைச்சந்திர வால்வு’ என்று பெயர்.இதயத்துக்கும் ரத்தம் தேவை :உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் இதயம் இயங்குவதற்குப் போதுமான சக்தி, ஆக்ஸிஜன் போன்றவை அவசியம். அதற்குத் தான் இதயத்துக்கே ரத்தத்தைத் தரும் ரத்தக் குழாய்கள் உள்ளன. இவை வலது, இடது எனப் பிரிந்து இதயத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைவிட்டு பரவியிருக்கும். இவை மூலம், இதயம் தனக்குத் தேவையான ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த ரத்தக் குழாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போதுதான் ‘மாரடைப்பு’ ஏற்படுகிறது.இதயம் சுருங்கும்போது, உடலின் பல்வேறு பகுதி களுக்கும் ரத்தம் செல்கிறது. ஆனால், இதயம் விரிவடையும்போது தான் இதயத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்கிறது.இதய ஒலிகள் :இதயம் சுருங்கி விரியும்போது, அதில் உள்ள வால்வுகள் மூடித் திறப்பதன் மூலம், முறையாக உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் நுரையீர லுக்கும் ரத்தம் செல்கிறது. இந்த நிகழ்வு நடை பெறும்போது உருவாவதுதான் இதய ஒலிகள் இத்தகைய ஒலிகளை நம் காதுகளால் சாதாரண மாகக் கேட்க முடியாது. அதற்குத்தான்மருத்து வர்கள் பயன்படுத்தும் ‘ஸ்டெதாஸ்கோப்’ என்ற கருவி உள்ளது.இதயத்தில் ஏற்படும் இதய ஒலிகள் மொத்தம் நான்கு. அவை, முதலாவது ஒலி, இரண்டாவது ஒலி, மூன்றாவது ஒலி, நான்காவது ஒலி என்று அழைக்கப்படுகின்றன. ஸ்டெதாஸ் கோப் கருவியைப் பயன்படுத்தி னாலும்கூட, மருத்துவர் களால் இந்த நான்கு ஒலிகளையும் ஒரே நேரத்தில் கேட்க முடியாது. அவர்களால், முதலாவது மற்றும் இரண்டாவது ஒலிகளைத் தான் கேட்க முடியும்முதலாவது ஒலி :இதய மேல் அறைகளில் இருந்து கீழ் அறைகளுக்கு ரத்தம் வந்த பிறகு, கீழ் அறை களான இரண்டு வென்ட்ரிக்கிள் அறைகளும் சுருங்கத் தொடங்கும். அப்போது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக்கொள்ளும்.இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படுவதுதான் முதல் ஒலி.மூவிதழ் வால்வும், ஈரிதழ் வால்வும் மிகக் குறைந்த கால இடைவேளையில் மூடிக் கொள்ளும். இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படு வதுதான் முதல் ஒலி.முதல் ஒலியின் அளவு பல்வேறு காரணங்களி னால் மாறுபடக்கூடியது. அதாவது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகளின் அமைப்பு, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பின் தன்மை ஆகிய வற்றைப் பொறுத்து முதல் ஒலியின் அளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.இரண்டாவது ஒலி :கீழ் அறைகள் இரண்டும் சுருங்கிய பிறகு, பருந் தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வழியாக ரத்தம் வெளியேறிய பிறகு, இதயத்துக்குள் மீண்டும் வந்த ரத்தம் கீழ் அறைகளுக்கு வராமல் தடுக்க பெருந்தமனி வால்வும், நுரையீரல் பெருந்தமனி வால்வும் மூடிக்கொள்ளும். அப் போது ஏற்படுவதுதான் இரண்டாவது ஒலி. இதயத்தின் அடிப்பகுதியில் இந்த ஒலி நன்றாகக் கேட்கும்.ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது,இந்த இரண்டாவது ஒலியின் அளவு அதிகமாக இருக்கும். பெருந்தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வால்வுகளில் கால்சியம் படிந்து இறுகி, அவை சரியாகச் செயல்படாமல் போகும் போது ஒலியின் அளவு குறைவாக இருக்கும்மூன்றாவது ஒலி :இதய கீழ் அறைகள் விரிவடைந்திருக்கும்போது, மேல் அறையில் இருந்து ரத்தம் பாயும்போது ஏற்படுவதுதான் மூன்றாவது ஒலி. இது, மிகவும் மெல்லிய ஒலியாகும். இரண்டாவது ஒலியைத் தொடர்ந்து 0.15 விநாடிக்குப் பிறகு இது ஏற்படும். சிறுவர், சிறுமியர், இளம் வயதினர், கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு இந்த மூன்றவது ஒலி ஏற்படும். இதயம் செயலிழப்பு, இதயத் தசை நோய் போன்றவை இருந்தாலும் இந்த ஒலி கேட்கும்.முதல் இரண்டு ஒலிகளோடு இந்த மூன்றா வது ஒலியும் சேர்ந்து கேட்கும்போது, குதிரை ஓடும் போது ஏற்படும் சத்தத்தைப்போல் இருக்கும்.நான்காவது ஒலி :மூன்றாவது ஒலியைப்போல் இதுவும் மூன்றாவது மெல்லியதாகும். வென்ட்ரிகிள்அறை விறைத்த நிலையில், மேல் அறைகள் அதிகமாகச் சுருங்கி கீழ் அறைகளுக்கு ரத்தத்தைத் தள்ளும்போது (அற்ழ்ண்ஹப் இர்ய்ற்ழ்ஹஸ்ரீற்ண்ர்ய்) இந்த ஒலி ஏற்படும். இதைச் சாதாரண நிலையில் கேட்க முடியாது.இதயத்தில் ஏதாவது கோளாறுகள் இருந்தால் மட்டுமே கேட்கும். இதயம் செயலிழப்பு, இதயச் செல்கள் அழிதல், இதய கீழ் அறைகள் வீங்கி, விறைத்துப்போதல் போன்ற பிரச்னைகள் இருந்தால் இந்த ஒலி கேட்கும்.பிற இதய ஒலிகள் :மேலே சொன்ன நான்கு இதய ஒலிகள் தவிர, இதயத்தில் ஏதாவது நோய்கள் இருந்தால் அவற்றின் காரணமாகவும் பல்வேறு ஒலிகள் கேட்கும்.இதய வால்வுகள் மிகவும் பாதிக்கப்பட்டி ருந்தால், அவற்றை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்கி விட்டு, உலோகத்தால் ஆன செயற் கை வால்வுகளைப் பொருத்துவார்கள். இந்த உலோக வால்வுகளாலும் ஒலி ஏற்படும். இதை, ஸ்டெதாஸ்கோப் உதவி இல்லாமலேயே, இதயத் துக்கு அருகே காது வைத்துக் கேட்க முடியும்.
நன்றி : சு. முத்துசெல்வக்குமார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)