சனி, 12 ஜூன், 2010
இதயம் செயல்படும் முறை
நமது மார்புக்கூட்டுக்குள் கொஞ்சம் இடதுபக்கமாக இதயம் அமைந்துள்ளது. இடைவிடாமல் தொடர்ந்து இயங்கி, ரத்தத்தை உடல் முழுவதும் பரவச் செய்கிறது. இவ்வாறு உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் தேவையான ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருங்குழாய்க்கு பெருந் தமனி என்று பெயர்.இந்த பெருந்தமனி, இதயத்தின் இடது கீழ் அறையிலிருந்து கிளம்பி, பிறகு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்கிறது. அதேபோல், உடல் திசுக்களில் சேரும் அசுத்தங்களும், கரியமில வாயுவும் (கார்பன்-டை-ஆக்ஸைடு) கலந்த ரத்தம், சிரைக் குழாய்கள் வழியே இதயத்தின் வலது மேல் அறைக்கு வந்து சேரும்.இதயத்தின் வலது கீழ் அறையிலிருந்து செல்லும் நுரையீரல் ரத்தக் குழாய்கள், வலது இடது எனப்பிரிந்து முறையே வலது மற்றும் இடது நுரையீரலுக்குச் செல்கின்றன. அங்கு, உள் இழுக்கப்பட்ட மூச்சுக்காற்றில் உள்ள ஆக்ஸிஜன் வாயுவால் ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. வெளி விடும் மூச்சுக் காற்றின் மூலம் ரத்தத்தில் உள்ள அசுத்தம் வெளியேற்றப்படுகிறது.இவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட ரத்தம், இதயத்தின் சுருங்கி விரியும் தன்மையால், பெருந்தமனி மூலம் மீண்டும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் செலுத்தப்படுகிறது இப்படி இதயம் சுருங்கி விரியும் ஒவ்வொரு முறையும் உடல் முழுவதும் ரத்தம் பரவுகிறது.இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது ?நமது உடலில் உறுப்புகளில் பெரும்பா லானவற்றுக்கு அவ்வப்போது ஓய்வு கிடைக்கும். அதவாது, உணவு சாப்பிடவில்லை என்றால், ஜீரண உறுப்புகளுக்கு வேலை இல்லை. தூங்கி னால், மூளைக்கு வேலை இல்லை. இப்படி, கை, கால், கண் போன்ற உறுப்புகள்கூட ஓய்வு எடுக்க முடியும்.ஆனால், ஓய்வே இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு சில உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான். ஏன் இதயம் மட்டும் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது? இதயம் ‘துடிக்கவில்லை’ என்றால் அசுத்த ரத்தம் தூய்மையாகாது. உடல் திசுக்களுக்கு, சக்தி தரும் குளுக்கோஸ் போன்ற சத்துகள், தாது உப்புகள் போன்றவை ஒழுங்காகப் போய்ச் சேராது. போது மான சத்து கிடைக்காமல் திசுக்கள் பாதிக்கப்படும். செயல் இழந்துபோகும். மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முடியாமல் போகும். கடைசியில், ஒட்டுமொத்த மனித உடலே இறந்துகோகும்.இந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான், இதயம் தொடர்ந்து இயங்கிக் கொண்டி ருக்கிறது. இதயத்துக்குத் துணையாக நுரையீரலும் தொடர்ந்து இயங்குகிறது.இதயத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஏன்?இதயம் தன்னிச்சையாக செயல்படக் கூடியது. கண், காது, கால், கை போன்ற உறுப்புகளைப்போல் நமது விருப்பத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் ஏற்ப இதயத்தை இயக்க முடியாது. ஆனால், இதயத்தைக் கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு மண்டலம் உள்ளது. இதற்கு, தன்னியக்க நரம்பு மண்டலம் அல்லது பரிவு நரம்பு மண்டலம் என்று பெயர். இந்த நரம்பு மண்டலம் தவிர, உயிரி-ரசாயன சுரப்பு நீர்களும் இதயத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்து கின்றன.இதயத்தைக் கட்டுப்படுத்தும் நரம்பு மண்டலத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டைக் குறைக்க உதவுகிறது. இன்னொரு பிரிவு, இதயத்தின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது.ஹார்மோன் செயல்பாடுகள் :அட்ரீனலின் - இந்த ஹார்மோன், இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். பயம் மற்றும் உணர்ச்சிவசப்படும்போது, ரத்தத்தில் இந்த ஹார்மோனின் அளவு அதிகரித்து இதயத்துடிப்பு அதிகரிக்கும்.தைராக்ஸின் - இந்த ஹார்மோன், இளம் வயதில் உடல் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. உடலின் பல்வேறு வளர்சிதை மாற்றங்களை இது கட்டுப் படுத்துகிறது. இந்த ஹார்மோனால்கூட இதயத் துடிப்பு அதிகரிக்கும்.பிற காரணங்கள் :சிரைக் குழாய்கள் மூலம் இதயத்துக்கு வரும் ரத்தத்தின் அளவைப் பொறுத்தும், ரத்தஅழுத்தத்தைப் பொறுத்தும் இதயத் துடிப்பு அதிகரிக்க வோ, குறைக்கவோ செய்யும்.இதயத் துடிப்பு எவ்வாறு ஏற்படுகிறது ?இதயத்தின் இயக்கத்தைப் போலவே, இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்துவதில் நரம்பு மண்டலம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மூளை மற்றும் தண்டுவடத்தில் இருந்து வரும்நரம்புகள் இதயத்தில் வியாபித்திருக்கும். இவை, இதயத்தின் வலது பக்க மேல் அறையில் ந.அ. மின் குமிழில் (ந.அ. சர்க்ங்-நண்ய்ர்-அற்ழ்ண்ஹப் சர்க்ங்) குவிந் திருக்கும். இதில் இருந்து தொடர்ந்து மின் னோட்டம் ஏற்படும். இந்த மின்னோட்டம், அருகில் இருக்கும் (மின் குமிழ்) மேல் அறைக்கும், கீழ் அறைக்கும் மையமாக அமைந்துள்ள மின் குமிழிக்குப் பரவும். அங்கிருந்து பிரியும் நரம்பிழைகள் மூலமாக வலது மற்றும் இடது கீழ் அறைக்கு மின்னோட்டம் பரவும். இதனால் இதயத் துடிப்பு ஏற்படுகிறது.அதாவது, இதயத் தசைகள் சுருங்கி விரிகின்றன. அதில் உள்ள வால்வுகள் மூடித் திறக்கின்றன. இவ்வாறு மின்னோட்டத்தை ஏற்ப டுத்தக்கூடிய மின் குமிழ் மற்றும் மின்னோட்ட இழைகளில் கோளாறுகள் ஏற்பட்டால், இதயத் துடிப்பு குறையும் அல்லது அதிகரிக்கும் அல்லது சீரில்லாமல் துடிக்கும்.சாதாரணமாக, ந.அ மின் குமிழ் எத்தனை முறை இதயத்தில் மின்னோட்டத்தைப் பாய்ச்சுகிறதோ அத்தனை முறை இதயத்துடிப்பு இருக்கும். இது சராசரியாக நிமிடத்துக்கு 72 முறையாக இருக்கும். அதாவது, இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.இதயத் துடிப்புக்கும், நாடித் துடிப்புக்கும் என்ன தொடர்பு ?இதயத் துடிப்பு என்பது இதய இயங்கும் போது ஏற்படுவது. அப்படி இதயம் துடிக்கும் போது பெருந்தமனியின் ரத்த ஒட்டம் ஏற்பட்டு ரத்தக் குழாய்கள் விரிவடையும். இதனால், ஏற்ப டுவதே நாடித் துடிப்பு.. ஆக, இதயத் துடிப்பு எத்தனை முறை ஏற்படுகிறதோ அத்தனை முறை நாடித் துடிப்பும் ஏற்படும்.இதயத் துடிப்பு எப்போது அதிகமாகும் ?இதயத் துடிப்பு பல்வேறு காரணங்களால்அதிகரிக்கக்கூடும். ஆனால், உடலியல் காரணங்களால் ஏற்படும் அதிகப்படியான இதயத் துடிப்பு, தானாகவே மீண்டும் பழைய நிலையை அடையும். ஆனால், நோய்கள் காரணமாக இதயத் துடிப்பு அதிகரித்தால், அந்தந்த நோய்க்கு உரிய சிகிச்சை அளித்தால்தான் இதயத் துடிப்பு சீராகும்.உடற்பயிற்சி செய்யப்போகும், கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கும், கோபம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போது, உடலில் வெப்பநிலை அதிகரிக்கும்போதும்இதயத் துடிப்பு அதிகமாகும். பிறகு தானாகக் குறைக்கக் விடும்.இதயத் துடிப்பு எப்போது குறையும் ?தூங்கும்போதும், நீண்ட நேரம் படுத்து ஓய்வெடுக்கும் போதும் இதயத் துடிப்பு பொதுவாகக் குறைந்து காணப்படும்.ஒரு சராசரி மனிதனுக்கு இதயத் துடிப்பு என்பது நிமிடத்துக்கு 72 முறை. சில சமயங்களில், சிலருக்கு இது 60 முதல் 90 க்கும் அதிகமான அளவில் இருக்கும். அப்படி 90 க்கு மேல் இருந்தால் அதை மிகை இதயத் துடிப்பு என்றும் 60க்குக் குறைவாக இருந்தால் குறை இதயத் துடிப்பு என்றும் சொல்வார்கள்.உடல் அமைப்பையும், எடையையும் பொறுத்து இதயத் துடிப்பு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடும். டென்னிஸ் போட்டியில் விம்பிள்டன் கோப்பை ஐந்து முறை வென்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஜான் போர்க்குக்கு சாதாரண மாகவே இதயம் நிமிடத்துக்கு 38 முறைதான் துடிக்குமாம்.மனிதன் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இது பொருந்தும், யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயம் 25 முறைதான் துடிக்கும். அதுவே, கானாரி என்ற பறவைக்கு இதயம் ஒரு நிமிடத்துக்கு 1000முறை துடிக்குமாம்.இதயத்தின் அமைப்புஇதயம், விசேஷமான இயங்கு தசையால் ஆனது. இதயத்தைச் சுற்றி இருப்பது இதய உறை, இது இரண்டு அடுக்காக இருக்கும். இதயத்தை ஒட்டி இருப்பது உள்ளுரை, வெளிப் புறம் இருப்பது வெளியுறை. இரண்டு உறைக்கும் இடையே இருக்கும் இடைவெளியில் நீர் இருக்கும். இது, இதயம் இயங்கும்போது ஏற்படும் உராய்வைத் தடுப்பதுடன், இதயத்தைத்திடீர் அதிர்ச்சிகளில் இருந்தும் பாதுகாக்கும்.இதயத்தின் உள்பக்கச் சுவர்தான் ரத்தத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுள் ளது. இந்தச் சுவர்ப் பகுதியில் இருந்துதான் இதய வால்வுகள் உருவாகின்றன. மேல்பக்கம் இருக்கும் இரண்டு ஆரிக்கிள் அறைகளை, மேல்புற இதயத்தடுப்புச் சுவரும், கீழ்ப்பக்கம் இருக்கும் இரண்டு வென்ட்ரிகிள் அறைகளை, கீழ்ப்புற இதயத் துடிப்புச் சுவரும் பிரிக்கின்றன.இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. மேலே இரண்டு, கீழே இரண்டு. மேலே இருக்கும்அறைகள் ‘இடது ஆரிக்கிள்’, ‘வலது ஆரிக்கிள் ‘என்றும் கீழே இருக்கும் அறைகள் ‘இடது வென்ட்ரிகிள்’, ‘வலது வென்ட்ரிகிள்’ என்றும் அழைக்கப்படுகின்றன.இதய வால்வுகள் :இதயம் இயங்கும்போது, இதயத்தில் இருந்து ரத்தம் வெளியே உந்தித் தள்ளப்படும்.அப்படி தள்ளப்படும் ரத்தம் ஒரு வழியாகவே செல்லும். மீண்டும் அதே வழியில் திரும்பு வருவதில்லை. இவ்வாறு வெளியே தள்ளப்படும் ரத்தம், மீண்டும் வராமல் தடுக்க இதய அறைகளில் நிலைய வால்வுகள் உள்ளன. வலதுஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு மூவிதழ் வால்வு என்றும், இடது ஆரிக்கிள் மற்றும் வலது வென்ட்ரிகிள் அறைகளுக்கு இடையே உள்ள வால்வுக்கு ஈரிதழ் வால்வு என்றும் பெயர்.வலது ஆரிக்கிள் அறையில் இருந்து வலது வென்ட்ரிகிள் அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் வலது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல் ‘மூவிதழ் வால்வு’ தடுக்கிறது. அதேபோல், இடது ஆரிக்கிள் அறையில் இருந்து இடது வென்ட்ரிகிள் அறைக்குச் செல்லும் ரத்தம் மீண்டும் இடது ஆரிக்கிள் அறைக்குத் திரும் பாமல் ‘ஈரிதழ் வால்வு’ தடுக்கிறது.வலது வென்ட்ரிகிள் சுருங்கும்போது, அதிக அறையில் இருந்த ரத்தம் நுரையீரல் தமனியில் பாயும். அது திரும்பி வராமல் தடுக்கும் வால்வுக்கு நுரையீரல் பிறைச்சந்திர வால்வு என்று பெயர். அதேபோல், இடது வென்ட்ரிகிள் சுருங்கும்போது, பெருந்தமனியில் செல்லும் ரத்தம் திரும்பிவரமால் தடுக்கும் வால்வுக்கு ‘பெருந்தமனி பிறைச்சந்திர வால்வு’ என்று பெயர்.இதயத்துக்கும் ரத்தம் தேவை :உடல் முழுவதும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் இதயம் இயங்குவதற்குப் போதுமான சக்தி, ஆக்ஸிஜன் போன்றவை அவசியம். அதற்குத் தான் இதயத்துக்கே ரத்தத்தைத் தரும் ரத்தக் குழாய்கள் உள்ளன. இவை வலது, இடது எனப் பிரிந்து இதயத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைவிட்டு பரவியிருக்கும். இவை மூலம், இதயம் தனக்குத் தேவையான ரத்தத்தைப் பெற்றுக் கொள்கிறது. இந்த ரத்தக் குழாய்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், இந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படும் போதுதான் ‘மாரடைப்பு’ ஏற்படுகிறது.இதயம் சுருங்கும்போது, உடலின் பல்வேறு பகுதி களுக்கும் ரத்தம் செல்கிறது. ஆனால், இதயம் விரிவடையும்போது தான் இதயத்துக்குத் தேவையான ரத்தம் கிடைக்கிறது.இதய ஒலிகள் :இதயம் சுருங்கி விரியும்போது, அதில் உள்ள வால்வுகள் மூடித் திறப்பதன் மூலம், முறையாக உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் நுரையீர லுக்கும் ரத்தம் செல்கிறது. இந்த நிகழ்வு நடை பெறும்போது உருவாவதுதான் இதய ஒலிகள் இத்தகைய ஒலிகளை நம் காதுகளால் சாதாரண மாகக் கேட்க முடியாது. அதற்குத்தான்மருத்து வர்கள் பயன்படுத்தும் ‘ஸ்டெதாஸ்கோப்’ என்ற கருவி உள்ளது.இதயத்தில் ஏற்படும் இதய ஒலிகள் மொத்தம் நான்கு. அவை, முதலாவது ஒலி, இரண்டாவது ஒலி, மூன்றாவது ஒலி, நான்காவது ஒலி என்று அழைக்கப்படுகின்றன. ஸ்டெதாஸ் கோப் கருவியைப் பயன்படுத்தி னாலும்கூட, மருத்துவர் களால் இந்த நான்கு ஒலிகளையும் ஒரே நேரத்தில் கேட்க முடியாது. அவர்களால், முதலாவது மற்றும் இரண்டாவது ஒலிகளைத் தான் கேட்க முடியும்முதலாவது ஒலி :இதய மேல் அறைகளில் இருந்து கீழ் அறைகளுக்கு ரத்தம் வந்த பிறகு, கீழ் அறை களான இரண்டு வென்ட்ரிக்கிள் அறைகளும் சுருங்கத் தொடங்கும். அப்போது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகள் மூடிக்கொள்ளும்.இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படுவதுதான் முதல் ஒலி.மூவிதழ் வால்வும், ஈரிதழ் வால்வும் மிகக் குறைந்த கால இடைவேளையில் மூடிக் கொள்ளும். இப்படி, இரு வால்வுகளும் மூடிக் கொள்வதால் ஏற்படு வதுதான் முதல் ஒலி.முதல் ஒலியின் அளவு பல்வேறு காரணங்களி னால் மாறுபடக்கூடியது. அதாவது, மூவிதழ் மற்றும் ஈரிதழ் வால்வுகளின் அமைப்பு, ரத்த ஓட்டம், இதயத் துடிப்பின் தன்மை ஆகிய வற்றைப் பொறுத்து முதல் ஒலியின் அளவு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.இரண்டாவது ஒலி :கீழ் அறைகள் இரண்டும் சுருங்கிய பிறகு, பருந் தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வழியாக ரத்தம் வெளியேறிய பிறகு, இதயத்துக்குள் மீண்டும் வந்த ரத்தம் கீழ் அறைகளுக்கு வராமல் தடுக்க பெருந்தமனி வால்வும், நுரையீரல் பெருந்தமனி வால்வும் மூடிக்கொள்ளும். அப் போது ஏற்படுவதுதான் இரண்டாவது ஒலி. இதயத்தின் அடிப்பகுதியில் இந்த ஒலி நன்றாகக் கேட்கும்.ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்போது,இந்த இரண்டாவது ஒலியின் அளவு அதிகமாக இருக்கும். பெருந்தமனி மற்றும் நுரையீரல் பெருந்தமனி வால்வுகளில் கால்சியம் படிந்து இறுகி, அவை சரியாகச் செயல்படாமல் போகும் போது ஒலியின் அளவு குறைவாக இருக்கும்மூன்றாவது ஒலி :இதய கீழ் அறைகள் விரிவடைந்திருக்கும்போது, மேல் அறையில் இருந்து ரத்தம் பாயும்போது ஏற்படுவதுதான் மூன்றாவது ஒலி. இது, மிகவும் மெல்லிய ஒலியாகும். இரண்டாவது ஒலியைத் தொடர்ந்து 0.15 விநாடிக்குப் பிறகு இது ஏற்படும். சிறுவர், சிறுமியர், இளம் வயதினர், கர்ப்பிணிகள் போன்றவர்களுக்கு இந்த மூன்றவது ஒலி ஏற்படும். இதயம் செயலிழப்பு, இதயத் தசை நோய் போன்றவை இருந்தாலும் இந்த ஒலி கேட்கும்.முதல் இரண்டு ஒலிகளோடு இந்த மூன்றா வது ஒலியும் சேர்ந்து கேட்கும்போது, குதிரை ஓடும் போது ஏற்படும் சத்தத்தைப்போல் இருக்கும்.நான்காவது ஒலி :மூன்றாவது ஒலியைப்போல் இதுவும் மூன்றாவது மெல்லியதாகும். வென்ட்ரிகிள்அறை விறைத்த நிலையில், மேல் அறைகள் அதிகமாகச் சுருங்கி கீழ் அறைகளுக்கு ரத்தத்தைத் தள்ளும்போது (அற்ழ்ண்ஹப் இர்ய்ற்ழ்ஹஸ்ரீற்ண்ர்ய்) இந்த ஒலி ஏற்படும். இதைச் சாதாரண நிலையில் கேட்க முடியாது.இதயத்தில் ஏதாவது கோளாறுகள் இருந்தால் மட்டுமே கேட்கும். இதயம் செயலிழப்பு, இதயச் செல்கள் அழிதல், இதய கீழ் அறைகள் வீங்கி, விறைத்துப்போதல் போன்ற பிரச்னைகள் இருந்தால் இந்த ஒலி கேட்கும்.பிற இதய ஒலிகள் :மேலே சொன்ன நான்கு இதய ஒலிகள் தவிர, இதயத்தில் ஏதாவது நோய்கள் இருந்தால் அவற்றின் காரணமாகவும் பல்வேறு ஒலிகள் கேட்கும்.இதய வால்வுகள் மிகவும் பாதிக்கப்பட்டி ருந்தால், அவற்றை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்கி விட்டு, உலோகத்தால் ஆன செயற் கை வால்வுகளைப் பொருத்துவார்கள். இந்த உலோக வால்வுகளாலும் ஒலி ஏற்படும். இதை, ஸ்டெதாஸ்கோப் உதவி இல்லாமலேயே, இதயத் துக்கு அருகே காது வைத்துக் கேட்க முடியும்.
நன்றி : சு. முத்துசெல்வக்குமார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக