வியாழன், 10 ஜூன், 2010
சிறுநீரகக் கல் உருவாகாமல் எலுமிச்சைப்பழச்சாறு தடுக்கும்
சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் எலுமிச்சை சாறு தடுக்கும் என்று அமெரிக்க மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சான்டியகோவில் உள்ளது ஒருங்கிணைந்த சிறுநீரக நல மையம். அதன் இயக்குனர் ரோஜர் சர். அவர் கூறியதாவது:
சிறுநீரகத்தை நலமுடன் பராமரிப்பதில் எலுமிச்சையின் செயல்கள் பற்றி எனது தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. தினசரி 4 ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றை இரண்டு லிட்டர் தண்ணீருடன் கலந்து சிறிது சிறிதாக சிலரை குடிக்கச் செய்து பரிசோதித்தோம். சிறுநீரகத்தில் கற்கள் சேர்வதற்கான வாய்ப்பு 1 புள்ளியில் இருந்து 0.13 புள்ளியாகக் குறைந்தது தெரிய வந்தது. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிகளவில் உள்ளது. மற்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களைக் காட்டிலும், சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுப்பதில் எலுமிச்சை சிறப்பாக செயல்படுகிறது. எலுமிச்சை, சாத்துக்குடி தவிர்த்து மற்ற பழங்களில் சிட்ரஸ் மிகக் குறைவாகவே உள்ளது.
எனவே, தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பு, கால்சியம், புரோட்டீன் ஆகியவற்றின் பாதிப்பைக் குறைக்க, எலுமிச்சை சாறு மிகவும் உதவும். உப்பில் உள்ள கால்சியம்தான் சிறுநீரக கல் உருவாதில் அதிக பங்கு வகிக்கிறது. எனவே, உணவில் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் கல் உருவாவதை தவிர்க்க முடியும் என்றார் ரோஜர் சர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக