புதன், 29 செப்டம்பர், 2010

கேள்வியும் - பதிலும் - கேள்வியும்

வார்த்தைகளாக மாறிக் கொண்டிருக்கும்
எழுத்துக்களுக்கு சத்தியமாக தெரியாது
நாம் ஆகப்போவது
நற்சொல்லா? இழிசொல்லா? ----எழுதுபவனுக்கு


சில்லுச் சில்லாய் சிதறிக்கொண்டிருக்கும்
கற்களுக்குக் சத்தியமாக தெரியாது
நாம் மாறப்போவது
சிலையா? படிக்கல்லா? ----சிற்பிக்கு


தேன்துளிகளை சேமித்துக் கொண்டிருக்கும்
தேனீக்களுக்கு சத்தியமாக தெரியாது
தாம் உழைத்துக்கொண்டிருப்பது
தங்களுக்கா? மனிதனுக்கா? ----திருடுபவனுக்கு


நொடிக்கொன்றாக பிறந்துக் கொண்டிருக்கும்
குழந்தைகளுக்கு சத்தியமாக தெரியாது
தான் வாழப்போவது
தூயவனா? தீயவனா? ----சமுதாயத்திற்கு


உயிரை உறிஞ்சிக் குடிக்கும்
அம்புகளுக்கு சத்தியமாக தெரியாது
தான் செய்துகொண்டிருப்பது
பாதுகாப்பா? பாதகமா? ----எய்தவனுக்கு


இருண்ட முற்சந்தியின் வளைவில்
சொறிப்பிடித்த - தாயால் கைவிடப்பட்ட நாய்க்குட்டிகளை
ஏற்றிக்கொன்றவனுக்கு சத்தியமாக தெரியாது
தான் ஹிட்லரா? காந்தியா? ----என் மனசாட்சிக்கு

பகலவன்-தமிழீழப் போராளியாக விஜய்

விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் பகலவன் படத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான கருத்துக்கள் இடம்பெறும் வகையில் விறுவிறுப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் சீமான்.

தமிழக மீனவர்களை பெரும் தொல்லைக்கு உள்ளாக்கியும் காயப்படுத்தி துன்புறுத்தியும் வரும் இலங்கை கடற்படையை கண்டித்து சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமானின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக குற்றம்சாட்டி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது போலீஸ். தற்போது அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சிறையில் இருந்தபடியே சில திட்டங்களைத் தீட்டியுள்ள சீமான், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

ஈழப்போரில் திராவிட கட்சிகள் ஆரியருக்கு உதவி செய்ததன் மூலம் ஈழத் தமிழர்களை எப்படியெல்லாம் கொன்றுகுவித்தது என்பதை விளக்கும் புத்தகம் ஒன்றை அவர் சிறைக்குள்ளேயே எழுதி வருகிறார். திராவிட கட்சிகள் மக்களை ஏமாற்றிவிட்டு தொப்புள்கொடி உறவான தமிழர்களை அழிக்க, மறைமுகமாக ஆரியர்களுக்கு செய்த உதவிகள் என்னென்ன என்று விளக்கமாக அதில் எழுதியுள்ளார் சீமான்.

இப்புத்தகத்திற்கு “ஆரியம் வெல்ல…திராவிடம் செய்த உதவி” என்றே அவர் தலைப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறையை விட்டு விடுதலையாகி வெளியே வந்ததும் இப்புத்தக வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார்.

அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கும் படத்தை மிகவும் பரபரப்பாக உருவாக்கப் போகிறார். இதற்கான திரைக்கதையை சிறைக்குள்ளேயே எழுதி முடித்துவிட்டார் சீமான். படத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான கருத்துக்கள் நிறையவே இருக்குமாம். தமிழீழப் போராளிகளை ஆதரிக்கும் இளைஞன் வேடத்தில் விஜய் நடிக்கிறார்.

சமீபத்தில் தன்னைக் காண சிறைக்கு வந்த பகலவன் பட தயாரிப்பாளர் தாணுவுக்கு திரைக்கதையை விவரித்துள்ளார் சீமான். அதில் சிலிர்த்துப் போன தாணு, தமிழீழ போராட்டத்துக்கு தனது பங்களிப்பாக இந்தப் படம் அமையும் என்று கூறியுள்ளார்.

சீமான் விடுதலையானதும் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறதாம். தணிக்கைக் குழுவினரின் கெடுபிடியையும் மனதில் கொண்டு மிக எச்சரிக்கையுடன் இந்த திரைக்கதையை உருவாக்கியுள்ளார் தம்பி சீமான் என்று தாணு குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராகுல் காந்தியுடன் சந்திப்பு, அசின் விவகாரம் போன்றவற்றால் விஜய்க்கு தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள கெட்ட பெயரைப் போக்கவும் இந்தப் படம் உதவும் என நம்புகிறார்கள். இந்தப் படப்பிடிப்பு நடக்கும்போதே, நாம் தமிழர் கட்சியின் பிரமாண்ட மாநாட்டை நடத்தி தனது பலத்தைக் காட்டவும் முடிவு செய்துள்ளார் சீமான்.

நான் ரசித்த எஸ்.எம்.எஸ் ஜோக்குகள்!

மாப்ள
மச்சி
நண்பா
ஃப்ரெண்ட்
தோஸ்த்
சகல
தோழா
மாமு
மச்சான்
பங்காளி
மாம்ஸ்
உறவே இல்லாமல் வந்த உறவுக்கு இத்தனை பெயர்.நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


@நான் எஸ்.எம்.எஸ் அனுப்பினா நீங்களும் ரிட்டர்ன் எஸ்.எம்.எஸ் தான் அனுப்பணும்னு இல்ல.ஒரு ஹோண்டா சிட்டி கார்,கலர் டி.வி.,வாசிங்க் மெசின் இப்படி கூட அனுப்பலாம் ஓகே

@கண்ணீர் வரும்போது இதயம் வலித்தால் அது நட்பு.
இதயம் வலிக்கும் போது கண்ணீர் வந்தால் அது காதல் இல்லை


அது நெஞ்சுவலி!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


@அமெரிக்காகாரன் -நாங்கதான் முதல்ல நிலவுல கால் வெச்சோம்
ஆஸ்திரேலியாக்காரன் - நாங்கதான் முதல்ல வீனஸ் க்கு போனோம்
இந்தியா - நாங்கதான் முதல்ல சூரியன்ல காலை வெச்சோம்.

அமெரிக்கா-டேய் பொய் சொல்லாதீங்கடா சூரியன் ல கால் வெச்சா எரிஞ்சு போயிடுவோம்

இந்தியாக்காரன் கொய்யாலே..நாங்க போனது ராத்திரியில...


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@



#முடியாதுன்னு சொல்றவன் முட்டாள்
# எதுவும் தன்னால் முடியும் நு சொல்றவன் தான் புத்திசாலி!

இப்ப சொல்லுங்க எனக்கு ரீ சார்ஜ் பண்ணிவிட முடியுமா? முடியாதா?


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

வாத்தியார் - போய் சிலபஸ் வாங்கிட்டு வாங்கடா

மாணவர்கள் -சார்.தமிழ்நாடு பூரா கெட்டுட்டேன்.சிட்டி பஸ் இருக்குன்றான்.ஏர்பஸ் இருக்குன்றான்.எக்ஸ்பிரஸ் பஸ் கூட இருக்குன்றான்.பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ் இருக்குன்றான்.ஏசி பஸ் இருக்குன்றான்.ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் இல்லைன்றான்.

டிப்போ விலியே இல்லையாம்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

லவ்வர மட்டும் சைட் அடிச்சா சாதாரண வொர்க்!
அவ ஃபிரெண்டையும் சேர்த்து சைட் அடிச்சா அது ஹார்டு ஒர்க்!

ஒர்க் சில நேரம் ஃபெயில் ஆகலாம்

ஆனா ஹார்டு ஒர்க் எப்பவும் பலன் தராம போகாது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கேர்ள் - உங்க போன் அழகா இருக்கு.எங்க வாங்குனீங்க?

பாய் -ஓட்டப்பந்தயத்துல...

கேர்ள் -எத்தனை பேர் கலந்துக்கிட்டாங்க?

பாய் -போனுக்கு சொந்தக்காரன்,போலீஸ் அப்புறம் நான்.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நடிகர் விஜய் மகன் -அப்பா இனிமே படத்துல நடிக்காதே!

விஜய் -ஏண்டா செல்லம்?

மகன் -பெத்தவங்க செய்யுற பாவம் அப்புறம் புள்ளைங்களுக்குத்தான் வந்து சேருமாம்.

@ ஒரு பிச்சைக்காரன் சாகும் போது கடவுளிடம் வேண்டினான்.
கடவுளெ அடுத்த ஜென்மத்துல என் பை நிறைய சில்லறை வேணும்.அப்படியே என்னை சுத்தி நிறைய பொண்ணுங்க இருக்கணும்
கடவுள் அப்படியே ஆகட்டும் பக்தா என்றார்.

அடுத்த ஜென்மத்தில் அவன் லேடீஸ் பஸ் இல் கண்டக்டராக பணி புரிந்தான்.

@தத்துவம்
உன்னை விட சிறந்தவன் கணவனாக வரும் வரை,அவளுக்கு நீ காதலன்’’

இதுதான் பெண்கள் காதல்’’

எஸ்.எம்.எஸ் ஜோக்ஸ்!!

அக்கா வாசல்ல நின்னு படிக்கிறா.தங்கச்சி தெருவுல நின்னு படிக்கிறா ஏன்?
அக்காவுக்கு எண்டரன்ஸ் எக்சாம்.தங்கச்சிக்கு பப்ளிக் எக்சாம்.

@@@@@@@@@@@@


சர்தார்-ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாமா?

பெண்- செருப்பு பிஞ்சிடும்
சர்தார் -பரவாயில்ல...கையில் எடுத்துக்கிட்டு ஓடலாம்!!

@@@@@@@@@@@@

கணவன் - நீதான் எனக்கு மனைவியா வருவீன்னு என் டீச்சருக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு!
மனைவி - எப்படி சொல்றீங்க?
கணவன் -பன்னி மேய்க்கத்தான் நீ லாயக்குன்னு அப்பவே சொன்னாங்க

@@@@@@@@@@@@@


மனைவி - போன வாராம் பூரா படத்துக்கு போனோம்.இந்த வாரம் முழுக்க ஷாப்பிங் போலாங்க.
கணவன் - சரி.அடுத்த வாரம் முழுக்க பிச்சை எடுக்கலாம்.

@@@@@@@@@@@@@@@@

அதிக பட்சமாக விலங்குகளின் தாண்டும் நீளங்கள் எவ்வளவு?
நாய் -4 மீட்டர்
பூனை -3 மீட்டர்
கழுதை -4 மீட்டர்
குதிரை -14 மீட்டர்
புலி -14.9 மீட்டர்
விஜய் -ஒரு கட்டிடத்திலிருந்து ரயிலிற்க்கு தாவிய நீளம் -1கிலோ மீட்டர்(ஆதாரம்- குருவி திரைக்காவியம் ).என்ன ஒரு அதிசய பிறவி?

@@@@@@@@@@@@@@

இரு பாலினர் படிக்கும் கோ எட் கல்லூரியில் எழுதப்பட்டிருந்த வாசகம் -
“இங்கு தொலையும் இதயங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல..’’

@@@@@@@@@@@@

ஒரு சின்ன சந்தேகம்?
ஸ்வாமி நித்யானந்தா வை இப்போ போலிஸ் வெச்சிருக்கு!
நித்யானந்தா வெச்சிருந்த ரஞ்சிதாவை இப்போ யாரு வெச்சிருக்கா?

@@@@@@@@@@@@@@


உங்கள் வேலையை நிறுத்துங்கள்’’
மனதை அமைதி ஆக்கி கொள்ளுங்கள்
படுக்கைக்கு செல்லுங்கள்’’
இன்றைக்கு நீங்கள் செய்த பணிகளை சிந்தித்து பாருங்கள்’’

தெரியும் விடை’’

“’ங்கொய்யாலே..இன்னிக்கும் குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற தாண்டா கிடந்த...”

@@@@@@@@@@@@@

உலகம் என்ன சொல்லுமோ என்று கவலைப்படாதே..உன் மனதுக்கு சரி என்று பட்டால் மட்டும்......

ஆடி 18 க்கு குளி’’

Jok 2

பூமியில் பூப்பதற்க்கு எல்லாம் பூ என்று பெயரிட்டால்
உன் அழகான முகத்தில் பூக்கும் புன்னகையை
என்னவென்பது?

-இன்னும் நிறைய ஜோக் இருக்கு நாளைக்கு சொல்றேன்.
-------------------------------------------------------------------------
உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்,
இரண்டும் ஒண்ணா தூங்குது...
ஒண்ணா முழிக்குது..
ஒண்ணா அழுவுது....ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும்
ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது
இதிலிருந்து என்ன தெரியுது?
ஒரு பொண்ணு நினைச்சா,
எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!(ஜஸ்ட் ஜோக்)

---------------------------------------------------------------------------
முதலாளி-சர்வர் அங்க என்ன கலாட்டா?
சர்வர்-ஃபுல் மீல்ஸ் கேட்டாரு கொடுத்தேன்.
முதலாளி-அப்புறம் எதுக்கு கலாட்டா?
சர்வர்;-மீல்ஸ் இருக்கு ஃபுல் எங்கன்னு கேட்குறார்
----------------------------------------------------------------------
பாஸ் என்கிற பாஸ்கரன் சந்தானம் ஸ்டைலில் படிக்கவும்;
ஊர்ல Bsc,Bcom,M,sc ன்னு ரெண்டு மூணு பட்டம் வெச்சிருக்கிறவன் எல்லாம் சந்தோசமா சுத்திகினு இருக்கான்.BEன்னு ஒரு பட்டம் வெச்சுகிட்டு நான் படுற அவஸ்தை இருக்கேஅய்யய்யாயாயோயோ
---------------------------------------------------------------------------------------------
வாழ்க்கையில் மிஸ் பண்ண வேண்டியது 3
1.லவ்வர்
2,கேர்ள்ஸ்
3.பெண்கள்
இவங்க பின்னாடி சுத்தாம் இருந்தா 3 கிடைக்கும்
1.படிப்பு
2.வேலை
3.நல்ல நண்பர்கள்
------------------------------------------------------------------------------------------------------
யூத்துக்கு ரிஸ்க்கு எடுக்கிறது ரஸ்க் சாப்பிடறது மாதிரி..
ஆனா ஓல்டுக்கு ரஸ்க் சாப்பிடுறதே ரிஸ்க் எடுக்கிற மாதிரி தான்!
------------------------------------------------------------------------------
பீர் க்கு பிறகு காரமான உணவை தொட்டுக்கொள்ளவும்.இது வாந்தியை உடனே தடுக்கும்
-பீர் வீணாவதை தடுப்போம்
காரணம் பெற்றோர்கள் தரும் பணம் மதிப்பு மிக்கது(ஜஸ்ட் ஜோக்)

.
------------------------------------------------------------------
ஒரு நாள் சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.மழை பெய்தது.ஒரு பெண் குடையுடன் வந்தாள்.வாங்க இரண்டு பேரும் இதில் போகலாம் என்றாள்.வேண்டாம் தங்கச்சி பரவாயில்லை என மறுத்து விட்டு மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு சென்றேன்..

காரணம்...

ஏங்க..அது சப்ப ஃபிகருங்க...

SMS Joks

உங்களுக்கு அடிக்கடி எஸ்.எம்.எஸ் அனுப்பி தொந்தரவு பண்றேனா?
ஓகே..இதுதான் எனது கடைசி மூணு வரிகள்...

அப்படித்தான் அனுப்புவேன்...போ..!
----------------------------------------------------------------------------------------------
பெற்றவர்களை விட பெரிய கடவுள் உலகத்துல யாரும் இல்லை..

அதனால.....

சீக்கிரம் ஒரு ஃபிகரை பிக்கப் பண்ணுவோம்...நாமளும் கடவுள் ஆவோம்!!
---------------------------------------------------------------------------------------------.
ஒரு நாள் கடவுள் என் மூளையில் உள்ள அனைத்து பதிவுகளையும் அழித்து விட்டார்...பிறகு கேட்டார்..
உனக்கு ஏதாவது ஞாபகம் இருக்கா?
நான்,உன் பெயரை சொன்னேன்!
அதற்க்கு அவர் சொன்னார்..
இன்னும் உன் மூளையில் நீக்கமுடியாத வைரஸ்கள் இருக்கத்தான் செய்கின்றன....!!
------------------------------------------------------------------------------------
உலகத்தின் மிகச் சிறிய லீவ் லெட்டர்.......
டியர் சார்....
’’என்னா பண்ண முடியுமோ பண்ணிக்க..நான் க்ளாஸ்க்கு வரமாட்டேன்’’
தேங்கிங் யூ சார்.
----------------------------------------------------------------------------------------
நல்ல நேரம் ,கெட்ட நேரம் என்ன வித்தியாசம்?
வேகமான காத்து அடிச்சு ஃபிகர் ட்ரெஸ் விலகுச்சுன்னா அது நல்ல நேரம்...
அதே சமயம் நம்ம கண்ணுல தூசு விழுந்து எதுவும் தெரியலைன்னா கெட்ட நேரம்!
------------------------------------------------------------------
உன் நட்பின் நினைவு மட்டும் இருந்தால் போதும்...நண்பா.

.
எப்பவாவது உன்கிட்ட காசு இருக்கும் போது உன் கைய முறுக்கி என் கடனை வசூல் பண்ணிக்குவேன்!
----------------------------------------------------------
உலகத்திலியே ரொம்ப சுத்தமானவங்க யாரு?
ஷகிலா டீச்சர்..!
ஏண்டா?
அவங்கதான் எந்த படத்துல பார்த்தாலும் குளிச்சுகிட்டே இருக்காங்க...
----------------------------------------------------------------------
நம்ம மேல..ஒருத்தன் கைய வெச்சா எல்லோரும் என்ன சொல்வாங்க..?
அப்பா..-தறுதல..எப்ப பாரு..எதுனாச்சும் கூட..சண்ட போட்டுகிட்டு...
அம்மா-பொறுக்கி பைய..என் பையன..எப்படி அடிச்சிருக்கான் பாரு..அவன் உருப்படுவானா?
தங்கை-ரொம்ப வலிக்குதாண்ணா...மருந்து போட்டு விடட்டா...?
காதலி-ஏம்பா..இப்படி பொறுக்கி மாதிரி சண்டை போட்டுட்டு இப்படி அடி வாங்கிட்டு வந்து நிற்கிற..?
நண்பன் -மச்சி...கிளம்புடா...இப்பவே அவன தூக்குறோம்...
இதுதான் ஃப்ரெண்ட்ஸிப்....
---------------------------------------------------------------------------------------
கல்யாணம் வரைதான் காதல் சுகமானது...
ஆனால் கல்லறை வரை
சுகமானது,
கள்ளக்காதல்
-இப்படிக்கு சின்ன வீடு பாக்யராஜ் அபிமானர்கள் சங்கம்.
------------------------------------------------------------------------------------
இந்த கொடுமைய பாருங்க...

.

கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா..கொய்யாலே...
---------------------------------------------------------------------------------------------
இந்த வார..நாங்க..எல்லோர்கிட்டியும் சமாதானமா..போயிடுவோம்..யாரையும் பகைச்சிக்க மாட்டோம் விருது....ரோமியோவுக்கு....

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

சைக்கிள் ஓட்டி பால் சப்ளை செய்கிறது நாய்


தர்மபுரி: குட்டி சைக்கிளில் பால் கேனை ஏற்றி, ஓட்டிச் செல்லும் சிறுவர்களைப் பார்த்திருக்கிறோம். நம்ப மாட்டீர்கள்! சும்மா இல்லை... ஒரு கி.மீ., தூரம் சைக்கிளை ஓட்டி, பால் சப்ளை செய்கிறது ஒரு நாய்!

தர்மபுரியை அடுத்த பெரியாம்பட்டி கீழ் தும்பலஅள்ளியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (42). தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாயை, பத்து மாதத்துக்கு முன் எடுத்து, வளர்க்கத் துவங்கினார். அதற்கு மணி என்றும் பெயர் வைத்தார். தங்கவேல் கால்நடைகள் வளர்த்து வருகிறார். தினம் காலை மற்றும் மாலையில் பாலை கறந்து, தும்பலஅள்ளியில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு எடுத்து சென்று கொடுத்து வருவார். இவர் காலையும், மாலையும் பால் சொசைட்டிக்கு கிளம்பும் போது, மணியும் தொடர்ந்து கூடவே சென்று வரும். ஒரு நாள், மணி மூலம் பால் கொடுக்க முடிவு செய்தார். ஒரு தூக்கில் பால் ஊற்றி, நாயிடம் கொடுத்தார். அதுவும், வாயில் கவ்வியபடி பாலை எடுத்துச் சென்று, சரியான நபரிடம் கொடுத்துத் திரும்பியது.

இதையடுத்து, 1,500 ரூபாய் செலவில், பால் கேன்களை ஏற்றிச் செல்லும் வகையில் சிறிய சைக்கிளை உருவாக்கிய தங்கவேல், மாடுகளை பூட்டுவது போல் நாயைப் பூட்டி, அதில் 35 லிட்டர் பால் கேனையும், கூட்டுறவு சங்க பதிவேடு புத்தகத்தையும் அனுப்பி வைத்தார். தனியாக ரோட்டில் செல்லும் நாய், பால் சொசைட்டியில் நின்று பால் கேனை ஊழியர்கள் பெற்று பதிவேட்டில் பதிவு செய்த பின், மீண்டும் காலி கேனுடன் வீட்டுக்குத் திரும்பி வருகிறது. சில நேரங்களில் தங்கவேலின் மகன் மற்றும் மகளையும் சைக்கிளில் சுமந்தபடி பயணம் செய்யும் மணியை, அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். ஒரு மாதமாக பால் கேனுடன் பயணம் செய்யும் நாய்க்கு, வீட்டுக்கு திரும்பியதும், வீட்டில் உள்ளவர்கள் ஆரத்தி எடுத்து, திருஷ்டி கழிப்பதையும் வாடிக்கையாக செய்து வருகின்றனர்.

இது குறித்து தங்கவேல் கூறியதாவது: தினம் நான் செல்லும் இடங்களுக்கு வந்த நாயை இப்படி பழக்கி விட்டேன். எனக்கு பெரும் உதவியாக மாறி விட்டது. வீட்டில் நாங்கள் சாப்பிடும் சாப்பாட்டை மட்டும் சாப்பிடும் மணி, நன்றிக்கு உதாரணம் என்பதை செயலில் செய்து காட்டுவது, எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது. இவ்வாறு தங்கவேல் கூறினார்


source:dinamalar


ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

பிரச்சனைகளைக் கண்டு சோர்வடையாதீர்கள்



பிரச்னைகள் இல்லாத மனிதனே கிடையாது. வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்னைகள் கூட ஒரு அனுபவம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்னைகள் இருக்கும். அதுபோலவே, ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு விதமான தீர்வு இருக்கும்.எனவே, பிரச்னைகளைக் கண்டு பயந்துவிடாமல் அவற்றை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். அதற் கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக

* நமக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்னைக்கு வேறு யாரும் காரணமில்லை. அதை நாம் தான் வரவழைத்துக் கொண்டோம். எனவே, இந்த பிரச்னையை தீர்க்க நம்மால் மட்டும் தான் முடியும் என்று நம்பிக் கையுடனும் மனவலிமையுடனும் அவற்றை எதிர்கொள்ளுங்கள்.

* எந்த பிரச்னையையும் பெரிதுபடுத்திப் பார்க்கும் பூதக்கண்ணாடி மனநிலைமையை கைவிடுங்கள். எதையும் எளிமைப்படுத்திப் பார்க்கப் பழகுங்கள்.உங்களுக்கு நேர்ந்த பிரச்னையை விட, இந்த உலகில் எவ்வளவோ பிரச்னைகள் எப்படியெல்லாமோ தீர்க்கப்படுகிறது; எனவே, அவற்றையெல்லாம் விட நமது பிரச்னை ஒன்றுமே இல்லை என்று எண்ணுங்கள் அப்போது தான் பிரச்னைக்கு உரிய தீர்வை தெளிவாக யோசிக்க முடியும்.

* எல்லா பிரச்னைக்கும் என்னால் தீர்வு காணமுடியும் என்று அசட்டு தைரியத்துடன் செயல்படாதீர்கள். அதேபோல், தேவையில்லாமல் பிறரது பிரச்னைகளையும் உங்கள் சுமையாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். தேவைப்படும் போது, அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை பெறுங்கள்.

* ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே, முடிந்தவரை அன்றைய பிரச்னையை அன்றே தீர்க்க முயலுங்கள். இல்லாவிடில், நேற்றைய பிரச்னை, நாளைய பிரச்னை என அனைத்தும் சேர்ந்து உங்களை வலுவிழக்கச் செய்யும்.

* ஒரு நாளில் குறிப்பிட்ட பிரச் னைக்குக் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கித் திட்டமிட்டு நிறைவேற் றுங்கள். அதை அந்தந்த நேரத்தில் முடித்துவிட முயற்சியுங்கள்.

* ஒரு நேரத்தில் ஒரு பிரச்னையை மட்டும் சமாளியுங்கள். எல்லா பிரச்னைக்கும் ஒரே தீர்வு காண முடியாது என்பதில் கவனமாகவும், உறுதியாகவும் இருப்பீர்கள்.

* ஒவ்வொரு பிரச்னைக்கும், ஒவ் வொரு விதமான அணுகுமுறை மாற்றங்களைக் கண்டுபிடியுங்கள். அதற்கேற்ப தீர்வுகளைக் காணுங்கள். எதை எளிதாக முடிக்க முடியுமோ அதற்கு முன்னுரிமை கொடுத்து நிறைவு செய்யுங்கள். இந்த அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தினால், தைரியமாக, மனரீதியாக பிரச்னைகளை கையாள தயாராகிவிட்டால்,பிரச்னைகளைக் கண்டு நீங்கள் பயப்படவில்லையானால், இனிமேல் எந்த பிரச்னையும் உங்கள் மீது பயணிக்காது. அவை உங்களைக் கண்டு ஓடிவிடும். முயன்று பாருங்கள் வெற்றி பெறுவீர்கள்.

டென்ஷனே இல்லாமல் புதிய நாளை வரவேற்க


டென்ஷனே இல்லாமல் புதிய நாளை வரவேற்க

காலையில் விழித்தெழும்போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என் னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், "டென்ஷன்` தானாகவே தொற்றிக் கொள்ளும். இதைத் தவிர்க்க...
மூதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி விட்டு, நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டும்.


அடுத்த நாள் எழும்போது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், இனிமையான சங்கீதம் கேட்க வேண்டும். பல் துலக்குவது, பால்/ காபி/ டீ குடிப்பது, காலைக் கடன்களை முடிப்பது உட்பட முதல் அரை மணி நேர வேலைகளை செய்து முடித்த பின், முதல் நாள் இரவு எழுதிய பட்டியலைப் பார்த்துக் கொண்டால், எந்தெந்த வேலைகளை முதலில் செய்வது என்ற தெளிவு பிறக்கும்.

சுறுசுறுப்பாய் வேலைகளைச் செய்யத் துவங்கலாம். இது அடிப்படை. இது தவிர, தினமும் உங்கள் மனதை, "ரிலாக்ஸ்` செய்து கொள்ள சில யோசனைகள்...


* இனிமையான சங்கீதம் கேட்க அடிப்படைத் தேவையாக அமைவது, குறைந்தபட்சம் ஒரு கருவி. அது கேசட் பிளேயராகவோ, எம்.பி.,3யாகவோ, கம்ப்யூட்டராகவோ இருக்கலாம்; இனிமையான சங்கீதத்தை இதமாகக் கேட்கும் வகையில், அறைகளில் ஸ்பீக்கர் வசதி செய்து கொண்டால், மிக நல்லது.


நீங்கள் பயன்படுத்தும் அந்தக் கருவி எந்தப் பிரச்னையும் இல்லாமல், சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியாக இயங்கவில்லை என்றால், அதைச் சரி செய்வதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது.


* செடி வளர்க்கலாம். தினமும் ஒரே ஒரு பூவாவது தரக் கூடிய வகையில், பூச்செடி வளர்க்கலாம். எந்தச் செடியையும், அதன் அருகில் அமர்ந்து பேசி, கொஞ்சி, தண்ணீர் விட்டு வளர்த்தால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, பூக்களைக் கொடுக்கும்.


அவற்றுக்கும் மனது உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். நாமே வளர்த்து, ஒரே ஒரு பூ பூத்தால் கூட, அதில் கிடைக்கும் மன நிறைவு, நமக்கு நிம்மதியைக் கொடுக்கும்.


* கவிதை எழுதப் பிடிக்குமா? அடி மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கவிதையாக அது அமைய வேண்டும். கவிதை எழுதப் பழகினால், மன வளம் பெருகும்; எழுத்து வளம் பெருகும். உங்களிடம் உள்ள வலிமையான கருத்துக்கள், பலவீனமான கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பாகுபடுத்திப் பிரித்துப் பார்க்கும் அறிவு வளரும்.

* பாட்டு பாடலாம், ஓவியம் வரையலாம், துணி தைக்கலாம், நகைகள் செய்யலாம். இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடும்போது, உங்களிடையே உள்ள கலைத் தன்மை வெளிப்படும். இதுவே உங்களின் தனித் தன்மையை நிலைநாட்டும்.


* ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, தேவையற்ற விஷயங்களை மனதில் அசை போட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் நாட்டம் செலுத் தும்போது வேலையில் கவனம் குறையும்.


அதுவே உங்களுக்கு ஆபத்தாய் அமைந்து விடும். முழுமையான பணி செய்த திருப்தி ஏற்படாது; மன நிம்மதி கெடும். மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றுவது மிகவும் கடினம் தான். வாழ்க்கையில் சந்தோஷமும் நிலைப்பதில்லை; துன்பங்களும் நிலைப்பதில்லை. இன்றைய தினத்தில் உள்ள கடமைகளையும், பணிகளையும் சீராகச் செய்யும்போது கிடைக்கும் நிம்மதியுடன், திருப்தியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.

டீன்-ஏஜ் பெண்களை கையாள்வது எப்படி?



டீன்-ஏஜ் பெண்களை கையாள்வது எப்படி?

டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற் றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பதில்லையா? நீங்கள் கோபப்பட்டால், உங்களை விட அவர்கள் அதிக டென்ஷன் ஆகின்றனரா? இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று எண்ணுகிறீர்களா? ஆம். நிச்சயம் செய்யத் தான் வேண்டும். இதற்கான சிகிச்சை தேவைப்படுவது உங்கள் குழந்தைகளுக்கு அல்ல; பெற்றோர்களாகிய உங்களுக்குத் தான்.


* அன்பாக இருங்கள்: உங்கள் குழந்தை பிறந்த போது, அதன் மீது எவ்வளவு அக்கறையும், பாசமும் காட்டினீர்களோ, அதே அளவு, இந்த பருவத்திலும் காட்ட வேண்டும். இது, அவர்களின் முக்கியமான பருவம். நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் அவர்கள் தங்களுக்குள்ளாக குழம்பி தவிக்கும் பருவம்.அன்பாக இருப்பது மட்டுமின்றி, தோழமையுடனும் பழகுங்கள். அப்போது தான், அவர்களது வீண் பயம், குழப்பம் போன்றவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முன் வருவர். ஏனெனில், இது, மன உளைச்சலுடனும், சோர்வுடனும் காணப்படும் பருவம்.


* கட்டாயப்படுத்தாதீர்கள்: உங்கள் பிள்ளைகள், நீங்கள் கூறுவதுபடி தான் செய்ய வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள். உதாரணமாக, "இந்த உணவை தான் நீ சாப்பிட வேண்டும், இன்றைக்கு இந்த டிரஸ் தான் போட்டுக் கொள்ள வேண்டும்` என்பது போன்ற, அவர்களது சிறு சிறு விஷயங் களில் நீங்கள் தலையிடாதீர்கள். அவர்கள் உணர்ச்சிகளுக்கும், விருப்பங்களுக்கும் இடம் கொடுங்கள். இதற்கு, முதலில் நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.


* சந்தேகப்படாதீர்கள்: இந்த பருவத்தில் உள்ள அனைவருமே பொதுவாக, தங்கள் அழகு குறித்து கவலைப்படுவர். அதிலும், பெண்களை கேட்கவே வேண்டாம். எனவே, கண்ணாடி முன் நிற்கும் உங்கள் பெண்ணை, அனாவசியமாக திட்டாதீர்கள். சந்தேகக் கண் கொண்டு அவர்களைப் பார்க்காதீர்கள். இப்படி நீங்கள் நடந்து கொள்ளும் போது, அது அவர்களை எதிர்மறையாக சிந்திக்கத் தூண்டும். எனவே, உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்.


* கோபப்படாதீர்கள்: குழந்தைகளின் மன நிலையை புரிந்து கொள்ளுங்கள். முடிந்த வரை அவர்களிடம் அன்பாக இருங்கள். இந்த பருவத்தில் இருக்கும் பிள்ளைகளிடம், கோபப்பட்டு உங்களால் எதையும் சாதிக்க முடியாது. அன்பால் மட்டுமே அவர் களை திருத்த முடியும். நீங்கள் கோபப் பட்டால், அவர்கள் டென்ஷன் ஆவர். உதாரணத்திற்கு, அவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால், அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவதை நிறுத்துங் கள். இப்படி செய்வதால், அவர்களுக்கு, உங்கள் மீது மட்டுமின்றி, படிப்பின் மீதும் வெறுப்பு வரும். எனவே, நீங்கள் அவர்கள் படிப்பிற்காக ஆகும் செலவு பற்றியும், படிப்பின் அவசியத்தைப் பற்றியும் அன்பாக எடுத்துக் கூறுங்கள்.


* உற்று நோக்குங்கள்: உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை அவர்கள் அறியாதவாறு கண்காணியுங்கள். சிலர், இந்த பருவத்தின் போது, சரியாக சாப்பிட மாட்டார்கள்; தூங்க மாட்டார்கள். இது, டீன்-ஏஜ் வயதுள்ள அனைவரிடமும் காணப்படும் பொதுவான விஷயம். இதுகுறித்து, நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்றாலும், பிரச்னை அளவுக்கு அதிகமாக போகும் போது, மருத்துவரை அணுகுவது நல்லது.

ர.ஹரிணி

குடும்பத்தில் ஏற்படும் தேவையில்லா பிரச்சினைகளை சமாளிக்க


பிரச்சினை இல்லாமல் மனிதனும் இல்லை பிரச்சினை இல்லாதவன் மனிதனே இல்லை` என்று கூறுவார்கள். அந்தளவிற்கு எங்கும் எவ்விடத்திலும் பிரச்சினை தான். வெளிப்பிரச்சினைகளை பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.

அதுவே அளவுக்கதிகமாகும் போது பிரச்சினைக்குரிய நபரையோ பிரச்சினையையோ தவிர்த்து விடலாம். ஆனால் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் போது தான் தொடங்குகிறது தலைவலி காதலித்துத் திருமணம் முடித்தவர்களாகட்டும் பெற்றோர்களால் நிச்சயித்து திருமணம் முடித்தவர்களாகட்டும் பிரச்சினை இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்வார்களேயானால் அது கின்னஸ்ஸில் பதிய வேண்டிய சாதனை தான்.

"இல்லவே இல்லை நாங்கள் இதுநாள்வரைக்கும் எந்த சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம்` எனக் கூறும் சில தம்பதியினரும் உள்ளனர். நான் மறுப்பதற்கில்லை. ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள். ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக இருப்பதனாலேயே குடும்பச் சமனிலை பேணப்படுகிறது.

இதற்குப் புரிந்துணர்வு மிக முக்கியமானதாகும். "ஒருவரின் சுதந்திரம் மற்றவரின் மூக்கு நுனிவரை` எனக் கூறுவார்கள். தனிநபரின் சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் பங்கம் வரும்போது கோபமும் கூட வருகின்றது. இருபாலாருக்கும் கோபம் ஏற்பட்டாலும் ஒப்பீட்டளவில் ஆண்கள் அதிகம் கோபப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இதுவே நமது சமூகத்தில் குடும்பத்தில் நிகழும் போது கணவன் அதிகம் கோபப்படும் சந்தர்ப்பத்தில் மனைவி அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கின்றாள்.

இவ்விடயத்தில் பெண்ணியத்தைப் பற்றியும் பெண் அடிமைத்தனத்தை பற்றியும் பேசிக்கொண்டு இருப்பார்களேயானால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நடுவீதியில் தான் நிற்க வேண்டும். எனவே நடைமுறைக்கு ஒத்து வரக்கூடிய வகையில் சில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குடும்பச் சச்சரவுகளை வீதிவரை கொண்டு வராது வீட்டிலேயே தீர்த்துக் கொள்ளலாம். கணவனின் தேவையற்ற கோபத்தைத் தவிர்ப்பதற்கான சில வழிகளைக் கூறுகின்றேன் கவனமாகக் கேளுங்கள். அந்தக் காலத்தில் கணவன் வேலைமுடிந்து வரும்போது இன்முகத்துடன் வரவேற்று உபசரியுங்கள் என்று கூறினார்கள். இந்தக் காலத்தில் கணவனெல்லவா உபசரிக்க வேண்டியுள்ளது. எனவே பழைய புராணத்தை இப்பொழுதும் பாடிக்கொண்டிருக்க முடியாது. கணவன் மனைவி இருவமே வேலைக்குச் செல்பவர்களாக தற்போது காணப்படுகின்றனர்.

அவ்வாறு இல்லாவிடினும் தற்போதைய நிலைமைகளில் குடும்பத்தை கொண்டு நடாத்துவது மிகக்கடினம். இவ்வாறு இருவருமே தொழில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கூடியவரை மனைவி கணவனுக்கு முன் வேலை முடிந்த வந்துவிடுவது நல்லது. காரணம் கணவன் வேலையால் வரும்போது உங்களைக் காணும் பட்சத்தில் மிகுந்து மனமகிழ்ச்சி அடைவார். அதுவும் நீங்கள் அவர்களது மனதுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகளை கதைத்துக் கொண்டே அவரது சேட், ஷநிக்களை கழற்றிவிடும் போது சொல்லவும் வேண்டுமா அவர்களது சந்தோசத்தை அதேபோல் கணவன் தனது வேலைப்பளுவைப் பற்றி உங்களுடன் கலந்துரையாடும் போது அவர்களது சுமைகளைப்பகிர்ந்து கொள்ளாமல் நீங்கள் அதிகப்பிரசங்கித்தனமாக நீங்களும் வேலை பார்க்கிறீர்கள் என்கின்ற தலைக்கனத்தில் "எனக்கும் வேலை தான்“ நான் அதையெல்லாம் முடித்து வந்த வீட்டு வேலைகளைப் பார்க்கலயா?` என்று கூறாதீர் கள். இது அவர்களின் சினத்தை இன்னும் அதிகப்படுத்தம்.

அதுமட்டுமல்லாது நீங்கள் சிலசமயங்களில் அவர்களைவிட அதிக சம்பளம் உழைக்கக்கூடும். ஒரு போதும் அந்தத் திமிரில் கதைத்து விடாதீர்கள் உங்கள் வாழ்க்கையே இருண்டு விடும். வேலை முடிந்து வரும் கணவனிடம் உங்கள் குறைகளை அடுக்காதீர்கள். உதாரணத்திற்கு நீங்கள் மதியம் சமையலில் ஈடுபடும் போது உப்பு முடிந்திருப்பதை அவதானிப்பீர்கள். அதைக் கணவன் வீட்டுக்கு வந்ததம் "ஒரு கிழமையா உப்பு முடியப்போகுதெண்டு சொல்லிக் கொண்டிருக்கிறன். அதைக் கொஞ்சமாவது காதில் விழுத்தினால் தானே` என்று பொரிந்து தள்ளாதீர்கள்.

உங்களுடன் படித்த அல்லது வேலை பார்க்கும் ஆண் நண்பர்களுடன் பழகும் போது கணவருக்கு தெரியும்படியாக அவருக்குக்கூட அறிமுகப் படுத்திவிட்டு பழகுங்கள். இதைவிடுத்து உங்கள் கணவருக்கு பிற ஆடவருடன் நான் பழகுவது பிடிக்குமோ என நீங்களாகவே நினைத்துப் பயந்து அவர்களுடன் ஒழித்துக் கதைப்பதால் எப்போதாவது கணவருக்கு நீங்கள் பழகுவது தெரிய வந்தால் தேவையில்லாத சந்தேகங்களுக்கு வித்திடும். எனவே வெளிப்படையாக இருங்கள். அதை உங்கள் கணவர் புரிந்து கொள்ளாவிடில் அது அவரது பலவீனம் அல்லது உங்கள் தலைவிதி உங்களுடன் இருக்கும் உங்கள் தாய் தந்தையரைப்பற்றியோ விசேடமாக உங்கள் மாமா மாமியைப் பற்றியோ தேவையில்லாமல் முறையிடாதீர்கள்.

கூடியவரை அவர்களை அனுசரித்துப்போங்கள். அதிகளவான குடும்பங்களில் பிரச்சினை இவர்கள் மூலம் தான் ஆரம்பிக்கின்றது. உங்கள் கணவனிடம் குறைகள் காணுமிடத்து குறிப்பாக அவர் நடத்தையில் சந்தேகம் வரும்போது "அவர் அப்படிச் செய்யக்கூடியவர் தானா?` என்று உங்களுக்குள்ளேயே சுயமதிப்பீடு செய்து முடிவெடுங்கள் ஒரு தீர்மானத்திற்கு வரமுடியாத சந்தர்ப்பத்தில் மட்டும் அவருடன் அதுபற்றி நேரடியாகக் கதையுங்கள். தேவையில்லாமல் உங்கள் நண்பர்களிடமோ உறவினர்களிடமோ இது பற்றி கதைக்காதீர்கள்.

மிக முக்கியமான விடயம் என்னவெனில் உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் இடையிலான தாம்பத்திய உறவு தான். அதிகமான குடும்பங்களில் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையில் தேவையற்ற சச்சரவுகள் எழும். அதற்கு மூல காரணம் படுக்கையறையில் ஏற்பட்ட திருப்தியளிக்காமையாகத் தான் இருக்கும்.. பொதுவாக ஆண்களின் செக்ஸ் ஆசைகளைப்பற்றி ஓரளவாவது எழுத்து ஊடகங்கள் மூலம் அறிந்து வைத்திருப்பது நல்லது. அதற்கேற்றால் போல் செயற்படுங்கள். அதிகமாக ஆண்கள் சிறு சிறு செக்ஸ் விளையாட்டுக்களில் தான் அதிகமாக ஆர்வம் காட்டுவார்கள். நீங்கள் சமைக்கும் போதோ அல்லது துணிதுவைக்கும் போதோ அல்லது குளிக்கும் போதோ வந்த குழந்தைப்பிள்ளைகளைப் போல் சீண்டுவார்கள். நீங்கள் அருவருக்காதீர்கள். அல்லது அறவே நாட்டம் இல்லாதது போல் காட்டிக் கொள்ளாதீர்கள். நீங்கள் வேறு விடயங்களுக்கு மறுப்பது வேறு இவ்விடயத்தில் மறுப்பது வேறுவிதமாக அமைந்து விடும். இது ஆசையாக உங்களை அணுகும் கணவரை பல மடங்கு தாக்கும். அவர்கள் மனமுடைந்து விடுவார்கள். படுக்கையறைதான் செக்ஸ் இற்குரிய இடமென்ற கருதாதீர்கள். வீட்டின் மற்றய இடங்கள் தான் அதிகளவான இன்பத்தை உண்டு பண்ணும். ஆக மொத்தத்தில் உங்கள் கணவரைப் புரிந்து நடவுங்கள் இல்லறம் சிறக்கும். .

நேர்மை தான் குடும்பத்தின் முதுகெலும்பு.


நம்பிக்கை கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று பயம் கொள்வதை விட, நிகழ்கால வாழ்க்கையை வெற்றி கரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். முதுமை என்பது எல்லோருக்கும் வருவது தான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50 வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்கு பின் தோல் சுருங்கி போய்விடுமே என்றெல்லாம் பயந்து கொண்டிருக்கக் கூடாது.

எந்த வயதிலும் மனதை இளமையாக வைத்துக் கொள்ள முடியும் என்று சந்தோஷபடுங்கள். பாதுகாப்பு ஆண்களை விட பெண்களுக்குத் தான் அதிக பாதுகாப்பு தேவைபடுகிறது. திருமண வயதையடையும் வரை பெண்களுக்கு பெற்றோரால் பாதுகாப்பு தரப்படுகிறது. பெண்கள் தங்கள் தாயைக் காட்டிலும் தந்தையே அதிக பாதுகாப்பு தருவதாக எண்ணுகின்றனர். திருமணத்திற்கு பின் பாதுகாப்பிற்காக கணவனை நம்பி வாழ்கின்றனர்.

இந்த விஷயத்தில் முரண்பாடு நிகழும்போது தான் ஈகோ போன்ற பிரச்சினைகள் உருவா கின்றன. விட்டுக் கொடுக்கும் மனபான்மை இல்லாததுதான் இதற்கு காரணம். பெண், ஆணை விட தான் தான் மேலானவள் என்றும், ஆண் பெண்ணை விட தானே எல்லா விதத்திலும் மேலானவன் என்றும் எண்ணுகின்றனர். இருவரும் அவரவர் தனித்தன்மைகளில் மேலானவர் தான்.மரியாதை ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்கு உண்டு என்பதைக் காட்ட வேண்டும். அதில் தான் பெண்ணுக்கு மரியாதை உள்ளது. அதேபோல், மனைவியின் உணர்வு களுக்கு மதிப்பளித்து அவளுடன் இணைந்து ஒற்றுமை குலை யாமல் குடும்பத்தை பராமரிப்பதில் தான் கணவனுக்கு மரியாதை உள்ளது. இயல்புக்கு மீறிய நடத்தைகளில் ஈடுபடும்போது அவர்களது மரியாதைக்கு பங்கம் வந்து விடுகிறது.

அன்பு வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவி தான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர்வுகள் தான் நம் வாழ்வையே அர்த்தமுள்ளதாக மாற்றக்கூடியவை. அன்பால் மலரும் உணர்வு களே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் என்பதை இருவரும் உணர வேண்டும். அன்பை வெளிபடுத்தவே திருமணம் நம்மை இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும். மனிதர் கள் உணர்வு களுக்குக் கட்டுபட்டவர்கள். அதனால் பல நேரங்களில் தவறு செய்யக் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பினால் சீரமைக்கபட வேண்டும்.

"என்னை நல்லபடியாக வைத்துக் கொள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்" என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும். நேர்மை நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொகுப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். “என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். என் நோக்கம், இயல் பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவரும் எண்ண வேண்டும்.

நேர்மை இல்லாத குடும்பம் தண்ட வாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மை தான் குடும்பத்தின் முதுகெலும்பு.

thanks to tamilulakam

உங்கள் சிரிப்பு, “பெர்சனாலிட்டியை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும்


இந்த உலகில் நம்மை சட்டென்று கவர்பவர்கள் யார் என்றால் நிச்சயமாக, சிரித்த முகத்துடன் இருப்பவர்கள் தான். புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் “புன்னகை இருக்க, பொன் நகை எதற்கு? என்ற பழமொழியை கூறியுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம்.

ஒருவரின் தோற்றத்தை, செலவே இல்லாமல் வசீகரமாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. நமக்குப் பிடித்த நபர்களைப் பார்த்தவுடன், நம்மையும் அறியாமல் நாம் புன்புறுவல் பூக்கிறோம் அல்லவா?அந்த சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை; அது உறவின் வெளிப்பாடு. சிரித்த முகத்தை பார்க்கும் போது, எத்தனையோ பிரச்னைகளை மீறி, ஒரு நம்பிக்கை விதை மனதில் விழுகிறது.

உங்கள் சிரிப்பு, “பெர்சனாலிட்டியை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமாகவும் காட்டும். எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுங்கள். அழும் குழந்தையை விட, சிரிக்கும் குழந்தையை தானே நாம் அனைவரும் விரும்புகிறோம். சிடுமூஞ்சி பெண்ணை விட, சிரித்த முகம் கொண்ட பெண் தானே விளம்பரங்களுக்கு ஏற்றவள். ஆக, சிரித்த முகமே கூடுதல் வசீகரம். பிறரை வசீகரப்படுத்தவும், எப்படிபட்ட நபரையும் “ஹேண்டில் செய்வதற்கும், அவசியமான ஒன்று உங்கள் புன்னகை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வீடாக இருந்தாலும் சரி, பணியாற்றும் இடமாக இருந்தாலும் சரி, புன்னகை பூத்திடுங்கள். பணியிடத்தில் புன்னகையையும், ஆதரவான பார்வையையும் தவழ விடுங்கள். இது செயற்கையான விஷயமாக தோன்றலாம். ஆனால், கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக, உங்கள் புன்னகை செயல்படும். எனவே, உங்கள் முசுடு உயரதிகாரியையோ அல்லது “மூடியான கணவனையோ பார்த்து உங்களுக்கு புன்னகை வரவில்லை என்றாலும், செயற்கையாக நீங்களாகவே புன்னகையை வரவழையுங்கள். உடனடியாக இல்லாவிட்டாலும், காலப் போக்கில் உங்கள் புன்னகை அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் உங்களை நடத்தும் விதம் மாறலாம்.

உங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த ஆயுதம். என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங்களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், நீங்கள் தேவையில்லாத பிரச்னையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, ஜொள்ளடிக்கும் சக ஊழியர்களிடமோ, பெண்களிடம் தவறாக நடக்கும் சீப்பான ஆசாமிகளிடமோ புன்னகையை நீங்கள் தொடர்வீர்களானால், விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள்; அப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.