செவ்வாய், 31 டிசம்பர், 2013

புத்தாண்டே வருக வருக !....



இயந்திரம் போலிங்கு இயங்கிடலாமோ
இன்னலைப் பெருக்கும் வாழ்நாளில்
சுதந்திரம் வேண்டும் புத்தாண்டே
சுந்தர ஒளி நிறை நல்லாண்டே ..!

வருந்திடும் மக்களைப் பார்த்தாயோ?...
வறுமையைப் போக்கிட வரும் ஆண்டே
சுரந்தது கண்களில் உன் நினைவு
சுகம் தர வருவாய் புத்தாண்டே .........

நிரந்தரமானது எதுவுமில்லை என்ற
நினைப்பதை மக்கள் உணர்ந்திடவே
அவரவர் துன்பம் தனைப் போக்கி
அணைத்திட வா இங்கு புத்தாண்டே ...

கலைகளால் உலகம் மகிழட்டும்
கவலைகள் மறந்து சிரிக்கட்டும்
தலைமுறை காத்த பயிர் வளங்கள்
தக தக தகவென வளரட்டும் ....

கடலொடு தரையும் வானுமிங்கே
களிப்புடன் திகழும் வரம் தந்து
புதியதோர் ஆண்டு நீ பிறக்கப்
புண்ணியம் செய்தோம் வா அருகே ...

மலர்களின் மணமது கமழட்டும்
மனதினில் இன்பம் பொங்கட்டும்
உயிர் வளம் காத்திட வரும் ஆண்டே
உனதருள் வேண்டும் எமக்கெல்லாம் ...
மார்கழி முடிந்ததும் வரும் முதல் நாளே
மாவிலைத் தோரணம் உனக்காக
பூரண பொற் குடம் உனக்காக
பூசைகள் செய்வோம் உனக்காக .....

நாளெல்லாம் நன் நாளாய் மலரட்டும்
நாடெல்லாம் கொண்டாடி மகிழட்டும்
காதல் கொள் எம்மோடு புத்தாண்டே
காலத்தைக் கணிக்க வந்த நல்லாண்டே
பிறக்கப் போகும் புத்தாண்டில் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !....


                                                                

new year sms

பிறக்கும் புத்தாண்டு  புனிதமாய் 
புதுமை புரட்சியோடு 
உங்கள் வாழ்கையில்
வசந்த காற்று வீசி வளமாக வாழ
இறைவனை வேண்டி.....
பிறக்கும் இப்புத்தாண்டில்
வளங்கள் பல பெற்று வாழ
உளமார வாழ்த்துகின்றேன்
என் இணைய நண்பர்களே.....


2
இல்லம் தோறும்  இன்பம் பொங்க
இதயம் அதில் அமைதி தங்க
எங்கும் உயிரினம் மகிழ்வாய் வாழ
இனிய புத்தாண்டே மலர்ந்திடு இங்கே!...

எண்ணிய  எண்ணம் கை கூட
ஏற்றத் தாழ்வு நீங்கிட என்றும்
மண்ணினில் நல் வளம் பெருக்கிடும் ஆண்டாய்
மலர்ந்திடு இனிய புத்தாண்டே !!...........

கண்ணியம் மேலும் உயர்ந்திடவும்
இனிய கனவுகள் யாவர்க்கும் மெய்ப்படவும்
புண்ணியம் செய்த பூமி இதுவென இங்கே
புகழ்ந்திட மலர்ந்திடு இனிய புத்தாண்டே...

கல்வியும் செல்வமும் வீரமும் ஓங்கிடக் 
காரிருள் நீங்கியே  மக்கள் வாழ்வினில் ஒளி பெற
இன்னருள் புரியும் இறைவனின் மனம் இளகிட
வரம் தரும் ஆண்டாய் மலர்ந்திடு இனிய புத்தாண்டே

தண்ணியும் நெருப்பும் காற்றும் மண்ணில்
தாண்டவம் ஆடிடும் நிலைதனை மாற்றி
விண்ணில் இருந்து நற் செய்திகள் பரப்பிட
மலர்ந்திடு இனிய புத்தாண்டே !!................

3.
தனது பாரம்பரிய வாழ் நிலங்களிலே சந்தோமாக பல வண்ணக் கனவுகளுடன் வாழ்ந்து, இன்று தமது வாழ் நிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டு வாழ்க்கையில் அனைத்து சந்தோசங்களையும் இழந்து எதிலிக்கப்பட்டு தமது ஜீவ நாடியினைக் காப்பாற்றுவதற்காக வாழ்வின் கடைசி வினாடி வரை போராடிக் கொண்டிருக்கும் எம் உறவுகளின் அனைத்து துயரங்களும் நீங்கி மீண்டும் அவர்களின் சுயமும் மகிழ்ச்சியும் அவர்களிடமே வந்து சேர பிறக்கின்ற விரோதி வருடம் வழிகோல இறைவனைப் பிரார்த்திப்போம்..!

4.


புதன், 25 டிசம்பர், 2013

2014 இல் வெளிவரும் கலக்கல் ஹாலிவுட் படங்கள் எவை? : இதோ ட்ரெய்லருடன் பட்டியல்

2014 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னமும் ஒரு சில நாட்களே உள்ளன. இந்நிலையில் 2013 இன் முக்கிய சம்பவங்கள், இயற்கை அனர்த்தங்கள், உள்நாட்டுப் போர்கள் மட்டுமன்றி பிறக்கவுள்ள புது வருடத்தில் வெளிவரவுள்ள ஹாலிவுட், பாலிவுட் மற்றும் தென்னிந்தியப் படங்கள் குறித்த ஆவலும் தேடலும் கூட செய்திப் பிரியர்கள் மத்தியில் நிச்சயம் இருக்கும். அவ்வகையில்  2014 ஆம் ஆண்டு வெளிவரவுள்ள அதிக எதிர்பார்ப்பு நிலவும் ஹாலிவுட் படங்கள் பற்றிய விபரங்களை அலசுகின்றது 4தமிழ்மீடியாவின் இப்பதிவு :
(கவனத்தில் கொள்க : படங்கள் வெளியாகும் திகதிகள் சிலவேளைகளில் மாற்றமடையலாம்)

ஜனவரி 03 : பரானோர்மல் ஆக்டிவிட்டி (Paranormal Activity: The Marked Ones), அக்டோபர் 24 : பரானோர்மல் ஆக்டிவிட்டி 5 (Paranormal Activity 5)
ஹாலிவுட்டில் இதுவரை வெளிவந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி (super natural) மற்றும் திகில் (horror) படங்களின் வரிசையில் இதுவரை வெளிவந்த அனைத்து பரானோர்மல் ஆக்டிவிட்டி திரைப்படங்களுமே ரசிகர்களை நாற்காலி நுனிவரை வந்து உட்காரும் வகையில் விறுவிறுப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியவை. அவ்வகையில் 2014 ஆம் ஆண்டு இவ்வரிசையில் இரு திரைப்படங்கள் ஜனவரி 3 இல் ஒன்றும் ஆக்டோபர் 24 இல் ஒன்றும் வெளிவரவுள்ளன என அறிவிக்கப் பட்டுள்ளன.


ஜனவரி 10 : தி லெஜென்ட் ஆஃப் ஹெர்குலெஸ் (The Legend of Hercules)

பராமௌன்ட் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. புரூஸ் வில்லிஸின் பிரபல டை ஹார்ட் 2  திரைப்பட இயக்குனர் ரென்னி ஹார்லினின் இயக்கத்தில் இத்திரைப்படம் வெளிவருகின்றது.


ஜனவரி 24 :  ஃப்ராங்கென்ஸ்டெயின் (I, Frankenstein)

லயன்ஸ்கேட் (Lionsgate) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கவர்ச்சி மற்றும் அதிரடி (fantasy action) வகைப் படமாகும். கெவின் கிரேவியொக்ஸ் இன் கற்பனை நாவலைத் தழுவி எடுக்கப் பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் கதை கிறித்தவ மத நம்பிக்கை மற்றும் கதைகள் சிலவற்றையும் தழுவியுள்ளது.


பெப்ரவரி 12 : ரோபோ கோப் (RoboCop)

2014 இல் மிகவும் எதிர்பார்க்கப் படும் விஞ்ஞானப் புனைவு அதிரடி (science fiction action) படங்களில் இதுவும் ஒன்று. கொலம்பியா பிக்சர்ஸ் இனால் தயாரிக்கப் பட்ட இப்படத்தின் கதைப்படி Cyborg எனும் தொழிநுட்பத்தில் மூளையுடன் இணைந்து செயற்படும் எந்திர அங்கி அணிந்த ஒரு போலிஸ் புலனாய்வு அதிகாரி எவ்வாறு தனது தனிப்பட்ட உணர்ச்சிகளுடனும் காவல் துறை அதிகாரியாக திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களுடனும் போராடுகின்றார் என்பதே திரையில் காட்டப் படவுள்ளது. ரோபோ கோப் ஆங்கில தொலைக்காட்சித் தொடர் நாடகம் 90 களில் உலகை கலக்கியது உங்கள் சின்னவயது நினைவாக இருக்கலாம் அல்லவா! எனவே இத்திரைப்படத்தையும் காணத்தவறாதீர்கள்.
பெப்ரவரி 28 : சன் ஆஃப் கோட் (Son of God)
20th Century Fox ஆல் தயாரிக்கப் படும் இத்திரைப்படம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை பிறப்பில் இருந்து சிலுவையில் மரித்து மீள உயிர்த்தெழும் வரை (Resurrection) நாடகப் பாணியில் விவரிக்கின்றது. 'தி பைபிள்' எனும் பெயரில் ஹிஸ்டரி (History channel) சேனலில் வெளிவந்த மினி நாடகத்தின் சுருக்கமே இத்திரைப்படமாகும்.
பெப்ரவரி 28 : நொன் ஸ்டொப் (Non-Stop)

யுனிவேர்சல் பிக்சர்ஸினால் தயாரிக்கப் பட்ட இந்த விறுவிறுப்பான ஆக்சன் திரைப்படம் நியூயோர்க்கில் இருந்து லண்டனுக்குச் செல்லும் விமானம் ஒன்றில் நடக்கவுள்ள ஹை ஜேக் முயற்சி மற்றும் அம்முயற்சியை மேற்கொள்ளும் நபராக எதிர்பார்க்காத விதமாக ஹீரோவே மாட்டிக் கொள்வதையும் திரைக்கதையாகக் கொண்ட படமாகும்.
மார்ச் 07 : 300-ரைஸ் ஆப் அன் எம்பையர் (300- Rise of an Empire)

வார்னெர் புரொஸ் (Warner Bros) நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட இத்திரைப்படம் 2014 இல் மிக அதிகம் எதிர்பார்க்கப் படும் அரச சாகசக் கதையம்சம் கொண்ட படமாகும். நோவம் முர்ரோ இனால் இயக்கப் பட்ட இத்திரைப்படத்தின் கதை 2007 இல் வெளிவந்து அதிக எண்ணிக்கையான ரசிகர்களைக் கவர்ந்த 300 எனும் திரைப்படக் கதைக்கு முன்னும் பின்னரும் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்டுள்ளது. 300 திரைப்படத்தைப் போன்றே விறுவிறுப்பான அதே நேரம் பேர்சிய போர் வீரர்களின் தனித்துவமான போராட்டத் திறனை இப்படத்திலும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 07 : ரியோ 2 (Rio 2)

2011 இல் வெளிவந்த கம்பியூட்டர் அனிமேசன் கார்ட்டூன் படமான ரியோவின் 2 ஆம் பாகம் ஆகும் இது. புளூ ஸ்கை ஸ்டூடியோவல் தயாரிக்கப் பட்ட இத்திரைப்படம் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜனெயிரோவில் இருந்து அமேசன் காட்டுக்குச் சுற்றுலா செல்லும் விலங்குகள் பற்றிய காமெடி கலந்த சாகசக் கதையாகும். இத்திரைப்படத்தின் இசையும் ஹேப்பி ஃபீட் (Happy feet) அனிமேசன் திரைப்படத்தைப் போன்று சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினரையும் கவரும் என எதிர்பார்க்கப் படுவதும் குறிப்பிடத்தக்கது.
 மார்ச் 14 : நீட் ஃபோர் ஸ்பீட் (Need for Speed)

எலெக்ட்ரானிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் நீட் ஃபோர் ஸ்பீட் தொடர் (Need for Speed series) ரேசிங் கணணி விளையாட்டுக்கு அடிமையாகாத சிறுவர்களே இருக்க முடியாது. தற்போது இந்த கம்பியூட்டர் கேமில் உள்ள அனைத்து அம்சங்களையும் அடக்கிய முதலாவது ஹாலிவுட் திரைப்படம் அதே பெயரில் இத்திகதியில் வெளியாகின்றது. ஸ்காட் வோ இனால் இயக்கப் பட்டு டிரீம் வேர்க்ஸ் பிக்சர்ஸால் தயாரிக்கப் பட்டுள்ள இத்திரைப்படத்தின் மீது கார் ரேசிங் விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இதுவரை இதே பாணியில் வெளிவரும் Fast & Furious திரைப்படங்களுக்கு இனி Need for Speed திரைப்படம் கடும் போட்டியக் கொடுக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

ஏப்பிரல் 04 : கேப்டன் அமெரிக்கா 2 : தி வின்டர் சோல்ஜர் (Captain America 2 : The Winter soldier)

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் மார்வெல் காமிக்ஸின் அடுத்த படம் இது. ஏற்கனவே மார்வெல் காமிக்ஸில் சித்தரிக்கப் படும் 6 சூப்பர் ஹீரோக்கள் ஒன்றாக நடித்து 2012 இல் வெளிவந்த 'தி அவேஞ்சர்ஸ்' திரைப்படம் ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக அமைந்திருந்ததுடன் ஹாலிவுட்டில் அவதார் மற்றும் டைட்டானிக் படங்களை அடுத்து 3 ஆவது அதிக வசூலைக் குவித்த படமாக சாதனை படைத்திருந்தது. இப்படத்தின் தொடர்ச்சியாக அயர்ன் மேன் 3 (Iron men 3) 2013 ஏப்பிரலில் வெளிவந்து ஹாலிவுட் வசூலில் 5 ஆவது இடத்தைப் பெற்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து  2013 ஆக்டோபரில் வெளிவந்த 'தோர் 2' (Thor 2) உம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் அவேஞ்சர்ஸ் படத்தின் கதை முடிந்து 2 ஆண்டுகளின் பின்னர் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் 'கேப்டன் அமெரிக்கா 2' ஆம் பாகமும் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தளிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ஏப்ரல் 18 - டிரான்ஸ்சென்டென்ஸ் (Transcendence) -

வார்னெர் புரொஸ் பிக்சர்ஸால் (Warner Bros pictures) தயாரிக்கப் பட்டுள்ள விஞ்ஞானப் புனைவு மற்றும் திகில் வகை இப்படம் செயற்கை அறிவை (Artificial intelligence) தவறாக ஊக்குவித்தால் ஏற்படும் விபரீதத்தை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டுள்ளது. பைரட்ஸ் ஆஃப் கரிபியன் புகழ் ஜோனி டெப் (Johnny Depp) கதாநாயகனாக நடித்துள்ளார்.
மே 02 - தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2 (The Amazing Spider-Man 2)

கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஸ்பைடர் மேன் வரிசையில் 5 ஆவது படமாகும். மார்க் வெப் இன் இயக்கத்தில் பீட்டர் பார்க்கர் கதாபாத்திரத்தில் அன்ட்ரூ கரிஃபீல்ட் 2 ஆவது முறையாக இப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஸ்பைடர் மேனின் முக்கிய எதிரிகளாக எலெக்ட்ரோ எனும் மின்சாரத்தால் தாக்கும் வில்லனும் ரைனோ எனும் கவசம் அணிந்த இயந்திர மனிதனும் மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மே 16 - கோட்ஸில்லா 2014 (Godzilla 2014) -

1998 ஆம் ஆண்டு ரோலன்ட் எம்ரிச் இயக்கத்திலும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பிலும் மிகப் பிரம்மாண்டமாக வெளி வந்த மோன்ஸ்டெர் வகை விஞ்ஞானப் புனை கதைப் படமான 'கோட்ஸில்லா' இனை திரையரங்கில் பார்த்த அனுபவத்தை எவரும் மிக எளிதில் மறக்க முடியாது. தற்போது இதே தலைப்பில் மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் வார்னெர் புரொஸ் மற்றும் லெஜென்டரி பிக்சர்ஸ் கூட்டுத் தயாரிப்பில் கறெத் எட்வார்ட்ஸ் இயக்கத்தில் மறுபடியும் இத்திரைப்படம் வெளிவருகின்றது.
இத்திரைப்படத்தில் கோட்ஸில்லா விஞ்ஞான வளர்ச்சியின் விபரீதத்தால் தோற்றம் பெற்ற பயங்கரமான உயிரினங்களுடன் சண்டையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மே 23 - எக்ஸ் மேன்: டேய்ஸ் ஆஃப் ஃபியூச்சர் பாஸ்ட் (X-Men Days of Future Past) -

மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோ கதைகளில் தமது டி என் ஏ களின் தனித் தன்மையால் அபூர்வ சக்திகள் கொண்ட மனிதர்களான மியூடன்ஸ் (Mutants) களில் சாதாரண மனிதர்களை எதிர்க்காத எக்ஸ் மேன் குழுவினர் மற்றும் அவர்களுக்கு எதிரான தீய எண்ணம் கொண்ட மியூடன்ஸ் (Mutants) ஆகியோருக்கு இடையே நடக்கும் யுத்தம் பற்றி ஏற்கனவே 3 பாகங்கள் வெளிவந்தன. அதன் பின் எக்ஸ் மேன் குழுவினர் எவ்வாறு உருவாக்கப் பட்டவர்கள் என ஒரு பாகமும் அவர்களில் வயதாகுதல், மற்றும் காயப் படுதல் ஆகிய தன்மைகள் அற்றவனும் மிக வீரமான போராளியுமான வூல்வரின் (Wolverine) பற்றி இரு பாகங்களும் ஏற்கனவே வெளிவந்து விட்டன.
இந்நிலையில் தற்போது வெளிவரவுள்ள இப்பாகம் இந்த மியூடன்ஸ் மனிதர்கள் எவ்வாறு இணைந்து தமது கடந்த காலத்தை மாற்றியமைத்து எதிர்காலத்தில் தம்மைத் தற்காத்துக் கொள்கின்றனர் எனும் திரைக்கதையுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளது.
 ஜூன் 06 - எட்ஜ் ஆஃப் டுமாரோ (Edge of Tomorrow) -

வார்னர் புரொஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹாலிவுட்டின் முன்னணி ஆக்‌ஷன் ஹீரோக்களில் ஒருவரான டோம் க்ரூஸ் கதாநாயகனாக நடித்து வெளிவரவுள்ள விஞ்ஞானப் புனைவு மற்றும் ஆக்‌ஷன் வகைத் திரைப்படம் இது. ஜப்பான் நாவலான 'ஆல் யூ நீட் இஸ் கில்' (All You Need is Kill) இனைத் தழுவி எடுக்கப் பட்ட இப்படத்தில் உலகின் எந்த இராணுவத்தாலும் வீழ்த்தப் பட முடியாததும் கால இடைவெளிக்குள் பயணிக்கும் ஏலியன் இனமான 'மிமிக்ஸ்' உடன் மோதும் விசேட அதிரடிப் படையினரின் போராட்டம் விவரிக்கப் படுகின்றது.

ஜூன் 27 - டிரான்ஸ்ஃபோர்மெர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸிடிங்சன் (Transformers: Age of Extinction) -

பாராமௌன்ட் பிக்சர்ஸ் இன் தயாரிப்பில் டிரான்ஸ்ஃபோர்மெர்ஸ் தொடரில் வரும் 4 ஆவது படம் இது. முன்னைய படங்களைப் போன்றே ஸ்டீவென் ஸ்பில்பேர்க் தயாரிப்பில் மைக்கல் பே இயக்கத்தில் இப்படம் வெளிவருகின்ற போதும் இதில் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் ஓர் விடயமும் உள்ளது. அமெரிக்காவின் சிகாக்கோ நகரை டிரான்ஸ்ஃபோர்மெர்ஸ் தாக்கி 4 வருடம் கழித்து நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இப்புதிய திரைப்படம் வெளிவருகின்ற போதும் முன்னைய 3 படங்களிலும் நடித்த ஹீரோ ஷியா லாபேயௌஃப் உட்பட முக்கிய கதாபாத்திரங்கள் எவரும் இதில் நடிக்கவில்லை. முற்றிலும் புதிய கதாபாத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில் முன்னைய படங்களில் வந்த உருமாறும் இயந்திரங்களான ஆப்டிமஸ் ப்றைம் மற்றும் பம்பிள்பீ ஆகியவை மட்டுமே சேர்க்கப் பட்டுள்ளதும் கவனிக்கத் தக்க செய்தி.

2013 இல் உலகில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் : ஒரு சிறப்புப் பார்வை

2013 இல் உலகில் அதிகம் பேசப்பட்ட, அதிகம் உங்களிடையே ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ, மகிழ்ச்சியையோ ஏற்படுத்திய சம்பவங்கள் குறித்த தொகுப்பு இது.
உங்களது, ஊர் அல்லது உங்களது மாநிலம் என்ற வகையில் இல்லாது மேற்குலகம் சார்ந்த அல்லது உலக நாடுகள் சார்ந்த சில முக்கிய சம்பவங்களின் தொகுப்பே இவை.

குறித்த சம்பவங்கள் நிகழ்ந்த போது அன்றைய தினங்களில் 4தமிழ்மீடியாவில் வெளிவந்த பதிவுகளையும் உங்களுக்கு தருகிறோம்.

ஜனவரி 17, 2013 :   உலகின் மிகவும் மதிக்கத்தக்க, மிகப்புகழ்பெற்ற சைக்கிள் வீரரான லான்ஸ் ஆம்ஸ்ட்ரோங், தான் ஊக்கமருந்து பாவித்து வந்த உண்மையை ஒப்புக்கொண்டார். அவர் அதுவரை பெற்ற அனைத்து பதக்கங்களும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டன.
ஜனவரி 24, 2013 :  யுத்த களத்தில் பெண் இராணுவ வீராங்கணைகள் போர் புரிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்க அரசு நீக்கியது
ஜனவரி 27, 2013 : பிரேசிலின் நைட்கிளப் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 241 பேர் கொல்லப்பட்டனர்.
பெப்ரவரி 11, 2013  : அப்போது பாப்பரசராக இருந்த 7வது பெனடிக்ட் தான் திடீரென ஓய்வு பெறப் போவதாக அறிவிப்பு வெளியிட்டார். (வத்திகான் வரலாற்றில் 600 வருடங்களில், இப்படி தானே முன்வந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த தைரியமான முதல் பாப்பரசர் இவர்)
பெப்ரவரி 14, 2013 : உலகின் செயற்கை கால்களுடன் ஓடும் அதிவேக மின்னர் ஓட்ட வீரர் எனப் போற்றப்படும் ஒஸ்கார் பிஸ்டாரியஸ், தனது காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டார்.
பெப்ரவரி 15, 2013 : பூமியில் மிக வேகமாக வந்து வீழ்ந்தது எரிநட்சத்திரம் : ரஷ்யாவிலிருந்த பலரால் நேரடியாக அவதானிக்கப்பட்டது.
பதிவு : அதெப்படிங்க : ரஷ்யாவில் எரிநட்சத்திரம் வீழந்ததை அவ்வளவு தெளிவாக படம்புடிச்சாங்க?

மார்ச் 13, 2013 : உலகின் புதிய பாப்பரசராக பிரான்ஸிஸ் தெரிவானார்
பதிவு : வத்திக்கானில் வெண்ணிறப் புகை - புதிய பாப்பரசராக தெரிவானார் ஆர்ஜெண்டீனாவின் கார்டினல்

ஏப்ரல் 15, 2013 : அமெரிக்காவின் புகழ்பெற்ற பாஸ்டன் மரதன் போட்டிகளின் போது அடுத்தடுத்து இரு குண்டுவெடிப்பு நிகழ்ந்து உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நாள் இதில் 3 பேர் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தும் போயினர்.
பதிவு : உலகப்புகழ் பெற்ற பாஸ்டன் மரதன் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு : அதிர்ச்சியில் அமெரிக்கா 

ஏப்ரல் 16, 2013 : இக்குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் ட்சார்னேவ் சகோதரர்கள் என அவர்களுடைய புகைப்படங்களுடன் அடையாளம் காணப்பட்டனர். தாமெர்லான் ட்சார்னேவ் எனும் மூத்த சகோதரர் கொல்லப்பட்டார். இளையவரான ட்ஷோகார் சுற்றுவளைப்பின் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். தான் குற்றமற்றவர் என அவர் தொடர்ந்து வாதிட்டார்.
ஏப்ரல் 24, 2013 : பங்களாதேஷில் 8 மாடி கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 1,129 பேர் கொல்லப்பட்டனர்.
மே 06, 2013 : நான்கு தசாப்த காலத்தின் பின்னர் அமெண்டா எனும் பெண்மணி தான் கடத்தி வைக்கப்பட்டிருந்த வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இவரைப் போன்று பல பெண்களை கடத்தி சீரழித்த குற்றச்சாட்டில் அரியெல் கஸ்ட்ரோ எனும் நபருக்கு 1,000 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

மே 20, 2013 : அமெரிக்காவின் மூரில் டார்னார்டோ புயலால் 25 பேர் கொல்லப்பட்டனர்.

ஜூன் 9, 2013 : அமெரிக்காவின் புலனாய்வுத் துறை, பலரது ரகசிய தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கிறது எனும் அதிர்ச்சி தகவல்களை முதன்முறையாக உலகுக்கு வெளியிடப்பட்டவர் நான் தான் என  எட்வார்ட் ஸ்னோவ்டன் தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்டது.
ஜூன் 14 - 19, 2013 : இந்தியாவின் வட மாநிலங்களில் (உத்தரபிரதேசம்) பெய்த கடும் மழை மற்றும் அதனால் வேற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 6,000க்கும் அதிகமானோர் பலியானார்கள்
ஜூலை 03, 2013 : எகிப்து நாட்டின் அதிபர் மோர்ஸி, இராணுவ புரட்சி மூலம் திடீரென பதவியிறக்கப்பட்டார்.
ஜூலை 13, 2013  : அமெரிக்காவின் கறுப்பினத்தவரான எனும் நபரின் படுகொலையில் ஜோர்ச் சிம்மெர்மேன் எனும் நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டது
ஜூலை 22, 2013 : இங்கிலாந்தின் வருங்கால இளவரசரும், இளவரசர் வில்லியம்ஸ், கேட் தம்பதியினரின் புதல்வருமான ஜோர்ஜ் பிறந்த தினம்
பதிவு : கேட் வில்லியம் தம்பதியரின் புதிய அரச வாரிசின் பெயர் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்

ஆகஸ்டு 21, 2013 : அமெரிக்கா இராணுவம் ஈராக்கில் மேற்கொண்ட மனித உரிமை மீறல் குற்றங்களை விக்கிலீக்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லி மேன்னிங்கிற்கு 35 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
பதிவு : கேட் வில்லியம் தம்பதியரின் புதிய அரச வாரிசின் பெயர் ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ்

ஆகஸ்டு 21, 2013 : சிரிய போரின் போது இடம்பெற்ற  நச்சுவாயுத்தாக்குதலில் 1,429 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவார்கள். இத்தாக்குதல் தம்மால் நிகழ்த்தப்படவில்லை என சிரிய அதிபர் அசாத்தின் படைகள் மறுப்பு தெரிவித்தன.
பதிவு : சிரியா மீது போர் தொடுக்க மேற்குலக நாடுகள் திட்டம்:ஈரான் கண்டனம்

செப்டெம்பர் 13, 2013 : இந்தியாவை அதிரச்செய்த  டெல்லி மருத்துக் கல்லூரி மாணவியின்  பேருந்து பாலியல் பலாத்காரம் தொடர்பிலான  குற்றவாளிகள் நால்வருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டு தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. எனினும் இந்தியாவில் ஒவ்வொரு 21 நிமிடத்திற்கும் ஒரு தடவை ஒரு பெண் பாலியல் ரீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகிறார், அல்லது ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்.
பதிவு : டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் 4 குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை விதித்தது நீதிமன்றம்

செப்டெம்பர் 16, 2013 : அமெரிக்க வாஷிங்டன் கடற்படைத் தளத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்
பதிவு : வாஷிங்டன் கடற்படை கட்டுப்பாட்டுத் தளத்தில் துப்பாக்கிச் சூடு : 12 பேர் பலி

செப்டெம்பர் 21, 2013 : கென்யாவின் வர்த்தக மையத்தில் இஸ்லாமிய தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர்
பதிவு : வாஷிங்டன் கடற்படை கட்டுப்பாட்டுத் தளத்தில் துப்பாக்கிச் சூடு : 12 பேர் பலி

அக்டோபர் 4, 2013 : இந்தியாவின் ஆந்திர பிரதேஷ், ஒடிசாவில் ஏற்பட்ட மிகப்பயங்கரமான பைலின் புயலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 1999ம் ஆண்டு ஒடிசாவில் ஏற்பட்ட புயலின் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட இரண்டாவது மிகப் பாரிய புயலாக உருவான போதும்,  முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பத்திரமாக இடம்பெயரச் செய்யப்பட்டதால் பலர் கொல்லப்படுவது தவிர்க்கப்பட்டது.  
அக்டோபர் 17, 2013 : அமெரிக்க அரச அதிகாரிகளின் 16 நாள் திடீர் வேலைப் புறக்கணிப்பு முடிவுக்கு வந்ததுடன், அமெரிக்க அரசு மறுபடி இயங்கத் தொடங்கியது
பதிவு : அமெரிக்க அரசு துறை முடக்கம் : மலேசியா, பிலிப்பைன்ஸ் சுற்றுப் பயணத்தை ஒத்திவைத்தார் ஒபாமா!

நவம்பர் 5, 2013 : செவ்வாய்க்கிரகத்தை நோக்கி இந்தியா அனுப்பிய மங்கல்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்ட நாள். ரூ.450 கோடி செலவில், இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கிய இத்திட்டத்தின் படி செவ்வாய்க்கு செலுத்தப்பட்ட விண்கலம், 9 மாத பயணத்தின் பின்னர், செப்டெப்ம்பர் 24, 2014 இல் செவ்வாய்க் கிரகத்தை சென்றடையவுள்ளது. இது வெற்றிகரமாக செவ்வாய்க்கிரகத்தை சென்றடைந்தால் நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையம், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் என்பவற்றை அடுத்து செவ்வாய்க்கு வெற்றிகரமாக விண்கலம் அனுப்பிய நான்காவது விண்வெளி நிலையமாக இந்தியாவின் இஸ்ரோ புதிய சாதனை படைக்கும். இப்போதே குறித்த விண்கலம் திட்டமிட்டபடி விண்ணில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் இந்தியாவின் இத்திட்டத்திற்கு உலகளவில் கடும் விமர்சனமும் எழுந்திருந்தது.
வெறுமனே பணத்தை வீணடிக்கும் முயற்சி இது. இத்திட்டத்திற்கு செலவழித்த பணப் பெறுமதியை இஸ்ரோ தனது, தொலைத்தொடர்பாடல், ஒளிபரப்பு, காலநிலை முன்னறிவிப்பு, இயற்கை அனர்த்தங்கள் தொடர்பிலான எச்சரிக்கை, கடல்  கண்காண்பிப்பு எச்சரிக்கை, கல்வி, பாதை வடிவமைப்பு போன்ற செய்மதிகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்கின்றன அந்த விமர்சனங்கள். காரணம், இஸ்ரோவின் வருடாந்திர பட்ஜெட் ஒரு பில்லியன் டாலர், ஆனால் நாஸாவின் வருடாந்திர பட்ஜெட் 17.7 பில்லியன் டாலர்களாக இருப்பதுடன்,  ரஷ்ய ஏஜென்ஸியின் பட்ஜெட் 7.9 பில்லியன் டாலர்களாக உள்ளது.
பதிவு : செவ்வாயை நோக்கி மங்கல்யான் சற்று முன்னர் வெற்றிகரமாக தமது பயணத்தை தொடங்கியது!

நவம்பர் 8, 2013 : பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட ஹையான் தைபூனில் 6,000 பே கொல்லப்பட்டனர்.
பதிவு : பிலிப்பைன்ஸ் ஹையான் புயல் : 10 ஆயிரத்துற்கும் மேற்பட்டோர் பலி?

நவம்பர் 23, 2013 : 1979ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா - ஈரான் இடையே முதன்முறையாக அணு ஒப்பந்தம் ஒன்று நேரடி பேச்சுவார்த்தையின் பின்னர் கையெழுத்தானது.

டிசம்பர் 05, 2013 : 20ம் நூற்றாண்டின் Living Legend என அழைக்கப்பட்ட மாபெரும் கறுப்பினத் தலைவரும், நிறவெறிக்கு எதிராக போராடி வெற்றி கண்ட தென் ஆபிரிக்காவின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலா காலமானார்.
டிசம்பர் 8, 2013 : டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து  மாநிலத் தேர்தல்கள் முடிவுகள் வெளியாகின. காங்கிரஸ் கடும் பின்னடவைச் சந்தித்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியத் தலைநகர் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக டெல்லியில் ஆட்சி அமைக்கிறது. அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார். 

செவ்வாய், 24 டிசம்பர், 2013

2013 -ல் கலக்கிய நான் ரசித்த 10 பாடல்கள்.. வீடியோ இணைப்பு

2013 -ல் கலக்கிய நான் ரசித்த 10 பாடல்கள்.. வீடியோ இணைப்பு

2013-ல் மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஹிட் பாடல்கள்... நான் அறிந்த வரையில்...

விஸ்வரூபம்... உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே..
 

வருத்தப்படாத வாலிபர் சங்கம்... இந்த பொண்ணுங்களே...
 

பாண்டியநாடு... ஒத்தக்கடை.. ஒத்தக்கடை பையன்
 

சூது கவ்வும்... காசு... பணம்.. துட்டு.. மணி..மணி..
 


சிங்கம்-2... சிங்கம் டான்ஸ் 
 

ஆரம்பம்... முடியாதுன்னு சொல்ல முடியாது...
 

கண்ணா லட்டு தின்ன ஆசையா.... க..ல..தி...ஆசையா

நேரம்... பிஸ்தா சமாய்கிறாயா
 

தலைவா... வாங்கண்ணா வணக்கம்ன்னா



பட்டத்து யானை... என்னஒரு என்ன ஒரு அழகியடா..

2013 ஆண்டின் TOP 6 ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள்

2013ம் ஆண்டு ஏறத்தாழ முடிவடையும் நிலையிலிருக்கின்றது.தற்போது நடைபெறும் பாகிஸ்தான்-இலங்கை ஒருநாட் தொடரைத் தவிர இவ்வாண்டுக்குரிய ஒருநாட் போட்டிகள் யாவும் நிறைவு பெற்றுள்ளன.அதனடிப்படையில் இவ் ஆண்டில் ஒருநாட் போட்டிகளில் கலக்கிய Top 6 batsmenகளை தெரிவு செய்திருக்கின்றேன்.இதன் போது குறித்த வீரர் குவித்த ரன்களை மட்டும் கருத்திற் கொள்ளாது எதிரணியின் பலம்,அணியின் வெற்றியில் குறித்த வீரரின் பங்களிப்பு,அணியின் மொத்த ஓட்டங்களில் பங்களித்த சதவீதம், HOME & AWAY matchesகளிற்கு ஏற்ப அவர்களின் ஓட்டக் குவிப்பு மாறும் விதம்,அவர்கள் பங்குபற்றிய ஒவ்வொரு தொடரிலும் அவர்களின் ஓட்டக் குவிப்பு,பிட்ச்களின் தன்மை, strike rate,average போன்ற விடயங்கள் கருத்திற் கொண்டே இத் தரவரிசையை அமைத்துள்ளேன்.இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கக் கூடும்.அவ்வாறு இருப்பின் அவற்றை comment ஆக பதிவு செய்யுங்கள் நண்பர்களே.இனி தரவரிசைக்கு போவோமா
6.விராட் ஹோலி
05virat-kohli
இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரம்.2013ம் ஆண்டை பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாட் போட்டியோடு ஆரம்பித்த ஹோலிக்கு முதற் தொடர் பலத்த ஏமாற்றமாகவே இருந்தது.பாகிஸ்தான் தொடரில் 3 போட்டிகளில் இவர் குவித்தது 13 ஓட்டங்கள் மட்டுமே.எனினும் பின்னர் இந்தியாவில் இடம்பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடர்களிலும் ஸிம்பாப்வேயில் இடம் பெற்ற ஸிம்பாப்வேயுடனான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபியிலும் சிறப்பாக செயற்பட்டார்.தென்னாபிரிக்கத் தொடர்,மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற முக்கோணத் தொடரில் சொதப்பியதாலும் இந்திய ஆடுகளங்கள் துடுப்பாட்டத்திற்கு மிகவும் சாதகமானவை என்பதும் ஹோலிக்கு பாதகமாக உள்ளன. இவர் சிறப்பாக ஆடிய பல போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாகச் செயற்பட்டமை அணியின் மொத்த ஓட்டக்குவிப்பிலும் வெற்றிவாய்ப்பிலும் ஹோலியின் பங்களிப்பை குறைவடையச் செய்தமை குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு மொத்தம் 34.ஒருநாட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹோலி 4 சதங்கள் 7 அரைச்சதங்கள் அடங்கலாக 52.83 என்ற சராசரியுடன் 1268 ஓட்டங்களைக் குவித்து இவ் ஆண்டு அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் இரண்டாமிடத்தில் உள்ளார்.

5.AB டி வில்லியர்ஸ்                  AB-de-Villiers-SA-vs-INDIA-3rd-ODI
தென்னாபிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம்.கிரிக்கெட் மைதானத்தின் அத்தனை திசைகளிலும் பந்தை பவுண்டரிக்கு அனுப்பக் கூடிய இவர் இவ் ஆண்டில் 27 போட்டிகளில் 50.56 என்ற சராசரியில்  மொத்தமாக 1163 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான தொடரில்  இவர் 138 ஓட்டங்களை (சராசரி-27.6) மாத்திரம் குவித்த போதும் அத் தொடரில்   அதிக ஓட்டங்களை குவித்தவர் வரிசையில் நான்காமிடம் பிடித்தார்.நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடிய டி வில்லியர்ஸ்  7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.இவை தவிர சாம்பியன்ஸ் தொடரில் அரையிறுதி தவிர ஏனைய போட்டிகளிலும் தென்னாபிரிக்காவில் இடம் பெற்ற பாகிஸ்தான்,இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் போட்டிக்கு தகுந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
4.திலகரத்ன டில்சான் dilshan-100-1327931
இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்.இவ் ஆண்டில் தான் விளையாடிய அனைத்து தொடர்களிலும் 35+ சராசரியை பேணிய இவர் இலங்கையில் நடைபெற்ற அனைத்து ஒருநாள் தொடர்களிலும் அபாரமாக ஆடியிருந்தார்.(11 போட்டிகளில் 710 ஓட்டங்கள்,சராசரி 101.4).இவ்வாண்டில் இதுவரை 23 ஒருநாட்போட்டிகளில் விளையாடியுள்ள டில்ஷான் 3 சதங்கள் 7 அரைச்சதங்கள் அடங்கலாக 65.1 என்ற சராசரியுடன் 1107 ஓட்டங்களைக் குவித்திருக்கின்றார்.

3.ஜோர்ஜ் பெய்லி
???????????????????????????
ஆஸியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம்.மேற்கிந்திய அணிக்கெதிராக சொந்த மண்ணில் இடம்பெற்ற ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் 98 ஓட்டங்களுக்கு 6 விக்கட்களை இழந்து தவித்த ஆஸ்திரேலிய அணியை சதமடித்து காத்ததன் மூலம் ஆஸி ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் திருப்பிய பெய்லி அடுத்து நடைபெற்ற சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளிலும் இவ் வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற இலங்கைக்கெதிரான தொடரிலும்  சராசரியான பெறுமானங்களை வெளிப்படுத்தியிருந்தார்.எனினும் அதன் பிறகு  நடைபெற்ற நட்வெஸ்ட் ஒருநாள் தொடர் மற்றும் இந்தியாவுடனான தொடர்களில் விஸ்வரூபம் எடுத்திருந்தார்.இவ் ஆண்டு 22 ஒருநாட் போட்டிகளில் 64.58 என்ற சராசரியுடன்  1098 ஓட்டங்களை குவித்துள்ள பெய்லியின் ஸ்ட்ரைக் ரேட் 100 என்பது குறிப்பிடத்தக்கது.

2.மிஸ்பா உல் ஹக்
misbahபாகிஸ்தானின் துடுப்பாட்டச் சுவர்.சீட்டுக்கட்டு போல் பாகிஸ்தான் அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து சரியும் போது தன்னந்தனியாக நின்று போராடும் சிங்கம்.ஒரு தடவையல்ல இரு தடவையல்ல  பல  தடவை பாகிஸ்தான் அணியை  ஒரு கௌரவமான ஸ்கோரை   நோக்கி முன்னகர்த்தியவர் மிஸ்பா.பாகிஸ்தான் அணியில் சச்சின் இருந்திருந்தால் கூட மிஸ்பா அளவுக்கு விளையாடியிருப்பரா?என்று வியக்கும் அளவுக்கு மிஸ்பாவின் இவ் வருடத் துடுப்பாட்டம் இருந்தது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.அடுத்தடுத்து சரியும் விக்கெட்களும் இவர் விளையாடிய பெரும்பாலான தொடர்களில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியமையும் நிதானமான ஆரம்பமும்  இவரது ஸ்ட்ரைக் ரேட்டை  74 ஆக குறைத்துள்ளது.அயர்லாந்துடனான தொடரைத் தவிர தான் விளையாடிய அத்தனை தொடரிலும் குறைந்தது ஒரு முறையாவது அரைச்சதம் கடந்துள்ள மிஸ்பா 2013 இல் தான் துட்டுப்பெடுத்தாடிய 31 இன்னிங்க்ஸ்களில் 14 இல்  அரைச்சதம் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ் ஆண்டு 32 போட்டிகளில் விளையாடி 55.1 என்ற சராசரியுடன்    1322 ஓட்டங்களை  குவித்துள்ள மிஸ்பா இவ் வருடத்தில் ஒருநாட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தோர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இது வரை ஒருநாள் போட்டிகளில் சதம் ஏதும் குவிக்காத மிஸ்பா உல் ஹக் அடுத்த வருடத்திலாவது சதமடிப்பார் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

1.குமார் சங்கக்கார Kumar-Sangakkara
இலங்கைக் கிரிக்கெட் அணியின் முதுகெலும்பு என்று கருத்தப்படும் சங்காவுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்தது.தான் விளையாடியுள்ள அனைத்து தொடர்களிலும் 50+ சராசரியை பேணியுள்ள சங்கா (தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும்  பாகிஸ்தானுடனான தொடர் கருத்திற் கொள்ளப்படவில்லை)   இலங்கை அணியினை  பல ஒரு நாள் போட்டிகளில் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றிருந்தார்.இவ் ஆண்டு 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சங்கா 2 சதங்கள் 9 அரைச்சதங்கள் அடங்கலாக 66.35 என்ற சராசரியுடன் 1128 ஓட்டங்களை குவித்துள்ளார்.

மாந்­தரை மீட்­டிட பாலகன் பிறந்தார்



உல­க­மெங்­கிலும் மிகசிறப்­பாக கொண்­டா­டப்­ப­டு­கின்ற இந்த நத்­தா­ரா­னது சக­லத்­தையும் படைத்த சர்­வ­ சி­ருஷ்­டி­க­ரான பிதா­வா­கிய தேவனின் குமா­ர­னா­கிய இயேசு கிறிஸ்து மாந்­தரை மீட்­டிட மானிட உருவில் ஏழ்மை கோலமாய் தாழ்­மையின், ரூபமாய், மண்ணில் உதித்த பொன்­னான திரு­நாளே!
மனு­க்கு­லத்தின் பாவங்­களை போக்கி சாபங்­களை நீக்கி அனை­வரும் பரி­சுத்­தமாய் வாழவும் இன, மத பேத­மின்றி சக­லரும் சாந்­தமும் சமா­தா­னமும் சம­தர்­மமாய் வாழ வேண்டும் என்ற பிதாவின் சித்­தத்தை வெளிப்­ப­டுத்­தினார்.
வேதத்தில் கூறப்­பட்­டுள்­ள­படி இருளில் நடக்­கிற ஜனங்கள் பெரிய வெளிச்­சத்தைக் கண்­டார்கள். மரண இருளின் தேசத்தில் குடி­யி­ருக்­கின்­ற­வர்கள் மேல் வெளிச்சம் பிர­கா­சித்­தது" (ஏசாயா 9:2) இந்த கூற்­றுக்­கி­ணங்க மெய்­யா­கவே நம் இயேசு இவ் உலகின் இருளை அகற்றும் சுடர் ஒளியா­னவர் என்­பது மிகை­யா­காது. இதன்­படி நத்­தாரை மிக களிப்­பாக கொண்­டா­டு­வது மட்­டு­மல்­லாது இதன் உண்­மை­யான அர்த்­தத்தை உணர்ந்­த­வர்­களாய் செயல்­ப­டு­வோ­மாக.
ஆஹோ மார்­கழி மாதம் என்­றாலே.... என்ன குதூ­கலம்..! எத்­தனை கொண்­டாட்டம்..! இதிலும் நமது சின்னஞ் சிறார்­க­ளுக்கோ சொல்­லொணா மகிழ்ச்சி ததும்பும் விடு­முறை நாட்­களும் கூட அது மட்­டுமா? இக்­கா­லத்தில் அகி­ல­மெங்கும் பட்­ட­ணங்கள், கிரா­மங்கள், ஆல­யங்கள், வீதிகள், வீடுகள் தோறும் வர்ண ஜாலங்கள், பல வர்ண கோலங்கள், மின் விளக்­குகள், நத்தார் மரங்­க­ளினால் அலங்­க­ரிக்­கப்­பட்ட தோர­ணங்கள், ஆங்­காங்கே பட்­டாசு சத்­தங்கள், வாண­வெ­டிகள், சிறு­வர்கள், பாவையர், ஆட­வர்­க­ளது புத்தம் புதிய நவ­நா­க­ரீக உடைகள் இன்னும் வர்­ணித்துக் கொண்டே போகலாம். அத்­த­னையும் நம் இயேசு பால­கனின் பிறப்பை கோலா­க­ல­மாக வர­வேற்க காத்­தி­ருக்கும் ஆயத்­தங்கள் தானோ..? எனலாம்.
இந்த உவ­கை­யூட்டும் திரு­நாளில் நம்மை இரட்­சிக்க வந்த இயேசு கிறிஸ்­துவை பற்­றியும் சற்று சிந்­தித்து தியா­னிப்­போமா...? தேவன் தமது மக்கள் தன்னை ஒவ்­வொரு நாளும் தேட வேண்டும் என்று விரும்­பு­கின்றார். இக்­கி­றிஸ்மஸ் காலங்­களில் மாத்­திரம் அல்ல சங்­கீ­த­காரன் 23 ஆம் அதி­கா­ரத்தில் சொன்­ன­படி என் பாத்­திரம் நிரம்பி வழி­கின்­றது. ஜீவ­னுள்ள நாளெல்லாம் நன்­மையும் கிரு­பையும் என்னை தொடரும் என்று சொல்­லு­கின்றான்.
யூதர்கள் இஸ்­ர­வேலர் தம்மை மீண்டும் ஓர் இரட்­சகர் வருவார் என்று எதிர்­பார்த்­தார்கள். மல்­கியா தீர்க்­க­த­ரி­சியின் கால­முதல் மத்­தே­யுவில் கிறிஸ்­துவின் வருகை வரை 400 வரு­டங்­களும் ஏசாயா தீர்க்­க­த­ரி­சியின் கால­முதல் கிறிஸ்­துவின் பிறப்பு வரை 800 வரு­டங்­களும் இருண்ட ஓர் பகு­தி­யாக யூதர்கள் தமது காலத்தை கழித்­தார்கள்.
முன்கூட்­டியே அவரின் பிறப்பை குறித்து வேதா­க­மத்தில் தீர்க்­க­த­ரி­சி­களால் கூறப்­பட்­டது. ஏசாயா 9:6 “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்" நமக்கு ஒரு குமாரன் கொடுக்­கப்­பட்டார்" கர்த்தத்துவம் அவர் தோளின் மேலி­ருக்கும் அவர் நாமம் அதி­ச­ய­மா­னவர். ஆலோ­ச­னைக்­கர்த்தா வல்­ல­மை­யுள்ள தேவன் நித்­திய பிதா, சமா­தா­னத்தின் பிரபு எனப்­படும்.
மீகா 5:2இல் எப்­பி­ராத்தா எனப்­பட்ட பெத்­ல­கேமே நீ யூதே­யா­வி­லுள்ள ஆயி­ரங்­க­ளுக்­குள்ளே சிறி­ய­தா­யி­ருந்தும் இஸ்­ர­வேலை ஆளப்­போ­கி­றவர் உன்­னி­டத்­தி­லி­ருந்து புறப்­பட்டு என்­னி­டத்தில் வருவார். அவ­ரு­டைய புறப்­ப­டுதல் அநாதி நாட்­க­ளா­கிய பூர்­வத்­தி­னு­டை­யது.
அவரின் (கிறிஸ்­துவின்) பிறப்பை உல­க­முண்­டா­வ­தற்கு முன்னே தீர்­மா­னிக்­கப்­பட்டு விட்­டது. வேதம் இப்­படி சொல்­லு­கின்­றது. நம்­மையும் அவர் உலகம் உண்­டாக முன்­ப­தா­கவே தெரிந்துகொண்டார்.
1. எபே­சியர் 1:4 இல் நமக்கு முன்­பாக நாம் அன்பில் பரி­சுத்­த­முள்­ள­வர்­களும் குற்­ற­மில்­லா­த­வர்­க­ளு­மா­யி­ருப்­ப­தற்கு அவர் உலகத் தோற்­றத்­துக்கு முன்னே கிறிஸ்­து­வுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார்.
2. எபே­சியர் 1:6 இல் நம்­மு­டைய தய­வுள்ள சித்­தத்தின் படியே நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவி­கார புத்­தி­ர­ரா­கும்­படி முன் குறித்­தி­ருக்­கிறார்.
3. எபே­சியர் 1:10 இல் தமக்­குள்ளே தீர்­மா­னித்­தி­ருந்த நம்­மு­டைய தய­வுள்ள சித்­தத்தின் இர­க­சி­யத்தை எங்­க­ளுக்கு அறி­வித்தார்.
4. எபே­சியர் 2:4 இல் தேவனோ இரக்­கத்தில் ஐசு­வ­ரி­ய­முள்­ள­வராய் நம்மில் அன்பு கூர்ந்த தம்­மு­டைய மிகுந்த அன்­பி­னாலே அக்­கி­ர­மங்­களில் மரித்­த­வர்­க­ளா­யி­ருந்த நம்மை கிறிஸ்­து­வு­டனே கூட உயிர்ப்­பித்தார். கிரு­பை­யி­னாலே இரட்­சிக்­கப்­பட்­டீர்கள்.
5.எபே­சியர் 2:12:13 இல் அக்­கா­லத்­திலே கிறிஸ்­துவைச் சேரா­த­வர்­களும் இஸ்­ர­வே­லு­டைய காணி­யாட்­சிக்குப் புறம்­பா­ன­வர்­களும் வாக்­குத்­தத்­தத்தின் உடன்­ப­டிக்­கை­க­ளுக்கு அந்­நி­யரும் நம்­பிக்­கை­யில்­லா­த­வர்­களும் இவ்­வு­ல­கத்தில் தேவ­னற்­ற­வர்­க­ளு­மா­யி­ருந்­தீர்­க­ளென்று நினைத்துக்கொள்­ளுங்கள். முன்னே தூர­மா­யி­ருந்த நீங்கள் இப்­பொ­ழுது கிறிஸ்து இயே­சு­வுக்குள் கிறிஸ்­துவின் இர­த்­தத்­தி­னாலே சமீ­ப­மா­னீர்கள். யூதர்­க­ளுக்கு மாத்­தி­ரமே கிறிஸ்து சொந்­த­க்கா­ரல்ல அவர் முழு உல­கத்தின் மக்­களின் இரட்­சகர்.
எரே­மியா 9:23:24 இல் ஞானி தன் ஞானத்தைக் குறித்து மேன்மை பாராட்­டப்­பட வேண்டாம்" பராக்­கி­ரமன் தன் பராக்­கி­ர­மத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்" ஐசு­வ­ரி­யவான் தன் ஐசு­வ­ரி­யத்தைக் குறித்து மேன்மை பாராட்ட வேண்டாம்." மேன்மை பாராட்­டு­கின்­றவன் பூமி­யிலே கிரு­பையும் நியா­யத்­தையும் நீதி­யையும் செய்­கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்­தி­ருக்­கின்­றதைக் குறித்தே மேன்மை பாராட்­டக்­க­டவன் என்று கர்த்தர் சொல்­லு­கிறார். இவை­களின் மேல் பிரி­ய­மா­யி­ருக்­கிறேன் என்று கர்த்தர் சொல்­லு­கிறார்.


மேன்மை பாராட்­டு­கின்­றவன் கிறிஸ்­துவின் அன்­பையும் அவரின் கிரு­பையும் மகி­மையும் குறித்தே மேன்மை பாராட்ட வேண்டும். இஸ்­ர­வேலர் தமக்கு தம்மை நடத்தும் படி ராஜாவை ஏற்­ப­டுத்தும் படி சாமுவேல் என்னும் தீர்க்­க­த­ரி­சிக்­கூ­டாக தேவ­னிடம் வேண்­டுதல் செய்யும் படி கேட்­கின்றார். தேவன் இஸ்­ர­வே­லரை மோசே என்னும் ஊழி­யக்­காரன் வழி­யாக 430 வருடம் அடி­மைத்­த­னத்தின் வீடா­கிய எகிப்­தி­யரை அற்­புத அடை­யாள மூல­மாக புறப்­பட பண்ணி சினாய் மலையில் 10 கற்­ப­னை­களை கொடுத்து ஆசா­ரி­யர்கள் தீர்க்­க­த­ரிசி வழி­யாக அவர்­களை தமது ஆலோ­ச­னை­யின்­படி வழி நடத்தி வந்­தார்கள்.
1 சாமுவேல் 10:18 இல் இஸ்­ரவேல் புத்­தி­ரரை நோக்கி இஸ்­ர­வேலின் தேவ­னா­கிய கர்த்தர் சொல்­லு­கி­றது என்­ன­வென்றால் நான் இஸ்­ர­வேலை எகிப்­தி­லி­ருந்து புறப்­படப் பண்ணி உங்­களை எகிப்­தியர் கைக்கும் உங்­களை இறுகப் பிடித்த எல்லா இராஜ்ஜி­யத்­தாரின் கைக்கும் நீங்­க­லாக்­கி­விட்டேன்.
1 சாமுவேல் 8:7 இல் அப்­பொ­ழுது கர்த்தர் சாமு­வேலை நோக்கி ஜனங்கள் உன்­னி­டத்தில் சொல்­வ­தெல்­லா­வற்­றிலும் அவர்கள் சொல்லை கேள். அவர்கள் உன்னைத் தள்­ள­வில்லை. நான் அவர்­களை ஆளா­த­ப­டிக்கும் என்­னைத்தான் தள்­ளி­னார்கள்.
1 சாமுவேல் 8:10 இல் 16 வரை வேதா­க­மத்தில் வாசித்து பாருங்கள். உங்­களை ஆளும் ராஜாவின் காரியம் என்­ன­வென்றால் தன் ரதத்­திற்கு முன் ஓடும்­படி அவன் உங்கள் குமா­ரரை எடுத்து தன் ரகு சார­தி­க­ளா­கவும் தன் குதிரை வீர­ரா­கவும் வைத்துக் கொள்வான். ஆயிரம் பேருக்கும் ஐம்­பது பேருக்கும் தலை­வ­ரா­கவும் தன் நிலத்தை உழு­கி­ற­வர்­க­ளா­கவும் தன் யுத்த ஆயு­தங்­க­ளையும் தன் ரதங்­களின் பணி­முட்­டு­க­ளையும் பண்­ணு­கி­ற­வர்­க­ளா­கவும் அவர்­களை வைத்துக் கொள்வான். உங்­களை குமா­ரத்­தி­களைப் பரி­மள தைலம் செய்­கி­ற­வர்­க­ளா­கவும் சமையல் பண்­ணு­கி­ற­வர்­க­ளா­கவும் அப்பம் சுடு­கி­ற­வர்­க­ளா­கவும் வைத்துக் கொள்­ளுவான். உங்கள் வயல்­க­ளிலும் உங்கள் திராட்சைத் தோட்­டங்­க­ளிலும் உங்கள் ஒலிவ் தோப்­புக்­க­ளிலும் நல்­ல­வை­களை எடுத்துக்கொண்டு தன் ஊழி­யக்­கா­ர­ருக்குக் கொடுப்பான். உங்கள் தானி­யத்­திலும் உங்கள் திராட்­சப்­ப­ல­னிலும் தச­ம­பாகம் வாங்கிஇ தன் பிர­தா­னி­க­ளுக்கும் தன் சேவ­கர்­க­ளுக்கும் கொடுப்பான். உங்கள் வேலைக்­கா­ர­ரையும் உங்கள் வேலைக்­கா­ரி­க­ளையும் உங்­களில் திற­மை­யான வாலி­ப­ரையும் உங்கள் கழு­தை­க­ளையும் எடுத்துத் தன்­னு­டைய வேலைக்கு வைத்துக் கொள்வான். யூதர்­க­ளையும் இஸ்­ர­வேலையும் இப்­ப­டித்தான் ராஜா ஆளுமை செய்து வந்தான்.
ரோமர் 6:12 இல் ஆகையால் நீங்கள் சரீர இச்­சை­களின் படி பாவத்­திற்குக் கீழ்ப்­படி­ய­த­தக்­க­தாக சாவுக்­கே­து­வான உங்கள் சரீ­ரத்தில் பாவம் ஆளா­தி­ருப்­பதாக.
ஒவ்­வொரு மனி­தனும் தன் வாழ்வில் இறை ஆசீர்­வா­தத்­தையும் ஆன்­மீக ஒளியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்­பது இறை­வனின் ஆசை. மனிதன் தன் வாழ்வை வாழும்­படி மனி­த­னுக்கு கீழ்­ப­்படிந்து தன் சரீ­ரத்தை பாவத்­துக்கு ஒப்புக்கொடுத்து தன் வாழ்வில் சமா­தா­ன­மில்­லாமல் உலக வாழ்வில் நிலை­யற்­ற­வ­னா­கவே வாழ விரும்­பு­கின்றான்.
ஐசு­வ­ரி­யத்­தி­னாலும் ஞானத்­தி­னாலும் பராக்­கி­ர­மத்­தி­னாலும் தன் பெலத்­தி­னாலும் வாழ முடியும் என்று சொல்­லு­கிறான். பாவத்­திலும் அடி­மைத்­த­னத்­திலும் உள்ள ஒவ்­வொரு மானி­டரையும் மீட்கும் படி இவ் உல­கத்­துக்கு தேவன் தமது குமா­ரனை அனுப்­பினார்.
யோவான் 1:9 இல் உல­கத்­திலே வந்து மானு­ட­னையும் பிர­கா­சிக்­கின்ற ஒளியே அந்த மெய்­யான ஒளி.
யோவான் 4:42 இல் மெய்யாய்க் கிறிஸ்­து­வா­கிய உலக இரட்­சகர் என்று அறிந்து விசு­வா­சிக்­கிறோம் என்­றார்கள்.
1 தீமோத்­தேயு 2:56 இல் தேவன் ஒரு­வரே. தேவ­னுக்கும் மானு­ட­ருக்கும் மத்­தி­யஸ்­தரும் ஒரு­வரே. எல்­லோ­ரையும் மீட்கும் பொரு­ளாகத் தம்மை ஒப்புக் கொடுத்த மானு­ட­னா­கிய கிறிஸ்து இயேசு அவரே. இதற்­கு­ரிய சாட்சி ஏற்ற காலங்­களில் விளங்கி வரு­கி­றது.
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறா­தவர். 2000 வரு­டங்­க­ளுக்கு முன் தாவீதுவின் ஊரிலே பிறந்த கர்த்­த­ரா­கிய கிறிஸ்து இரட்­சகர். ‘இரட்­சகர்’ என்­பது கிரேக்­கச்சொல்.சோடோர் இரட்­சிப்பு என்­ப­தற்­கான சொல்இ சோடோ­ரியா இரட்­சிப்பு என்­பது ‘ஆபத்து தண்­டனை’ பாவத்­தி­லி­ருந்து விடு­வித்தல் என்­பது பொருள் ஆகும். இரட்­சகர் என்­பது விடு­விப்­பவர் பாது­காப்­பவர் பரா­ம­ரிப்­பவர் ஆகும்.
1 யோவான் 2:2 இல் நம்­மு­டைய பாவங்­களை நிவர்த்திசெய்­கின்ற கிரு­பா­தா­ர­பலி அவரே. நம்­மு­டைய பாவங்­களை மாத்­திரம் அல்ல. சர்­வ­லோ­கத்தின் பாவங்­க­ளையும் நிவர்த்தி செய்­கிற பலி­யா­யி­ருக்­கிறார்.
லூக்கா 1:78–-79 இல் அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும் நம்முடைய கால்களை சமாதானத்தின் வழியில் நடத்தவும் அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மை சந்தித்திருக்கிறது.

எழுந்து சமாதானத்தின் பாதையில் நம்மை நடத்த இறைவன் விரும்புகிறார். உம்மை ஆள எழுந்து சமாதானத்தின் வாழ்வை ருசிக்க பாவத்திலிருந்து மீட்க இவ் கிறிஸ்மஸ் நாளில் உமது உள்ளத்தில் இயேசு என்னும் இரட்சகர் பிறக்கிறார். மண்ணில் உதித்த மைந்தனாம் இயேசு எமக்குள்ளும் பிறந்து எம்மை செம்மையான வழியில் நடத்திட வழி "செய்வார். “நீதிமான்களுக்கு வெளிச்சமும் செம்மையானவர்களுக்கு மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கும்" (சங்கீதம் 97:11) “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக" (லூக்கா 2:14)
உங்கள் அனைவருக்கும் எமது இனிய நத்தார்  – புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.