2013ம் ஆண்டு ஏறத்தாழ முடிவடையும் நிலையிலிருக்கின்றது.தற்போது நடைபெறும் பாகிஸ்தான்-இலங்கை ஒருநாட் தொடரைத் தவிர இவ்வாண்டுக்குரிய ஒருநாட் போட்டிகள் யாவும் நிறைவு பெற்றுள்ளன.அதனடிப்படையில் இவ் ஆண்டில் ஒருநாட் போட்டிகளில் கலக்கிய Top 6 batsmenகளை தெரிவு செய்திருக்கின்றேன்.இதன் போது குறித்த வீரர் குவித்த ரன்களை மட்டும் கருத்திற் கொள்ளாது எதிரணியின் பலம்,அணியின் வெற்றியில் குறித்த வீரரின் பங்களிப்பு,அணியின் மொத்த ஓட்டங்களில் பங்களித்த சதவீதம், HOME & AWAY matchesகளிற்கு ஏற்ப அவர்களின் ஓட்டக் குவிப்பு மாறும் விதம்,அவர்கள் பங்குபற்றிய ஒவ்வொரு தொடரிலும் அவர்களின் ஓட்டக் குவிப்பு,பிட்ச்களின் தன்மை, strike rate,average போன்ற விடயங்கள் கருத்திற் கொண்டே இத் தரவரிசையை அமைத்துள்ளேன்.இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கக் கூடும்.அவ்வாறு இருப்பின் அவற்றை comment ஆக பதிவு செய்யுங்கள் நண்பர்களே.இனி தரவரிசைக்கு போவோமா
6.விராட் ஹோலி
இந்தியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரம்.2013ம் ஆண்டை பாகிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாட் போட்டியோடு ஆரம்பித்த ஹோலிக்கு முதற் தொடர் பலத்த ஏமாற்றமாகவே இருந்தது.பாகிஸ்தான் தொடரில் 3 போட்டிகளில் இவர் குவித்தது 13 ஓட்டங்கள் மட்டுமே.எனினும் பின்னர் இந்தியாவில் இடம்பெற்ற ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடர்களிலும் ஸிம்பாப்வேயில் இடம் பெற்ற ஸிம்பாப்வேயுடனான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபியிலும் சிறப்பாக செயற்பட்டார்.தென்னாபிரிக்கத் தொடர்,மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற முக்கோணத் தொடரில் சொதப்பியதாலும் இந்திய ஆடுகளங்கள் துடுப்பாட்டத்திற்கு மிகவும் சாதகமானவை என்பதும் ஹோலிக்கு பாதகமாக உள்ளன. இவர் சிறப்பாக ஆடிய பல போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாகச் செயற்பட்டமை அணியின் மொத்த ஓட்டக்குவிப்பிலும் வெற்றிவாய்ப்பிலும் ஹோலியின் பங்களிப்பை குறைவடையச் செய்தமை குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு மொத்தம் 34.ஒருநாட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹோலி 4 சதங்கள் 7 அரைச்சதங்கள் அடங்கலாக 52.83 என்ற சராசரியுடன் 1268 ஓட்டங்களைக் குவித்து இவ் ஆண்டு அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் இரண்டாமிடத்தில் உள்ளார்.
தென்னாபிரிக்காவின் நம்பிக்கை நட்சத்திரம்.கிரிக்கெட் மைதானத்தின் அத்தனை திசைகளிலும் பந்தை பவுண்டரிக்கு அனுப்பக் கூடிய இவர் இவ் ஆண்டில் 27 போட்டிகளில் 50.56 என்ற சராசரியில் மொத்தமாக 1163 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான தொடரில் இவர் 138 ஓட்டங்களை (சராசரி-27.6) மாத்திரம் குவித்த போதும் அத் தொடரில் அதிக ஓட்டங்களை குவித்தவர் வரிசையில் நான்காமிடம் பிடித்தார்.நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடிய டி வில்லியர்ஸ் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.இவை தவிர சாம்பியன்ஸ் தொடரில் அரையிறுதி தவிர ஏனைய போட்டிகளிலும் தென்னாபிரிக்காவில் இடம் பெற்ற பாகிஸ்தான்,இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் போட்டிக்கு தகுந்த சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்.இவ் ஆண்டில் தான் விளையாடிய அனைத்து தொடர்களிலும் 35+ சராசரியை பேணிய இவர் இலங்கையில் நடைபெற்ற அனைத்து ஒருநாள் தொடர்களிலும் அபாரமாக ஆடியிருந்தார்.(11 போட்டிகளில் 710 ஓட்டங்கள்,சராசரி 101.4).இவ்வாண்டில் இதுவரை 23 ஒருநாட்போட்டிகளில் விளையாடியுள்ள டில்ஷான் 3 சதங்கள் 7 அரைச்சதங்கள் அடங்கலாக 65.1 என்ற சராசரியுடன் 1107 ஓட்டங்களைக் குவித்திருக்கின்றார்.
3.ஜோர்ஜ் பெய்லி
ஆஸியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம்.மேற்கிந்திய அணிக்கெதிராக சொந்த மண்ணில் இடம்பெற்ற ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் 98 ஓட்டங்களுக்கு 6 விக்கட்களை இழந்து தவித்த ஆஸ்திரேலிய அணியை சதமடித்து காத்ததன் மூலம் ஆஸி ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் திருப்பிய பெய்லி அடுத்து நடைபெற்ற சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளிலும் இவ் வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற இலங்கைக்கெதிரான தொடரிலும் சராசரியான பெறுமானங்களை வெளிப்படுத்தியிருந்தார்.எனினும் அதன் பிறகு நடைபெற்ற நட்வெஸ்ட் ஒருநாள் தொடர் மற்றும் இந்தியாவுடனான தொடர்களில் விஸ்வரூபம் எடுத்திருந்தார்.இவ் ஆண்டு 22 ஒருநாட் போட்டிகளில் 64.58 என்ற சராசரியுடன் 1098 ஓட்டங்களை குவித்துள்ள பெய்லியின் ஸ்ட்ரைக் ரேட் 100 என்பது குறிப்பிடத்தக்கது.
2.மிஸ்பா உல் ஹக்
பாகிஸ்தானின் துடுப்பாட்டச் சுவர்.சீட்டுக்கட்டு போல் பாகிஸ்தான் அணியின் விக்கெட்கள் அடுத்தடுத்து சரியும் போது தன்னந்தனியாக நின்று போராடும் சிங்கம்.ஒரு தடவையல்ல இரு தடவையல்ல பல தடவை பாகிஸ்தான் அணியை ஒரு கௌரவமான ஸ்கோரை நோக்கி முன்னகர்த்தியவர் மிஸ்பா.பாகிஸ்தான் அணியில் சச்சின் இருந்திருந்தால் கூட மிஸ்பா அளவுக்கு விளையாடியிருப்பரா?என்று வியக்கும் அளவுக்கு மிஸ்பாவின் இவ் வருடத் துடுப்பாட்டம் இருந்தது என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.அடுத்தடுத்து சரியும் விக்கெட்களும் இவர் விளையாடிய பெரும்பாலான தொடர்களில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியமையும் நிதானமான ஆரம்பமும் இவரது ஸ்ட்ரைக் ரேட்டை 74 ஆக குறைத்துள்ளது.அயர்லாந்துடனான தொடரைத் தவிர தான் விளையாடிய அத்தனை தொடரிலும் குறைந்தது ஒரு முறையாவது அரைச்சதம் கடந்துள்ள மிஸ்பா 2013 இல் தான் துட்டுப்பெடுத்தாடிய 31 இன்னிங்க்ஸ்களில் 14 இல் அரைச்சதம் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ் ஆண்டு 32 போட்டிகளில் விளையாடி 55.1 என்ற சராசரியுடன் 1322 ஓட்டங்களை குவித்துள்ள மிஸ்பா இவ் வருடத்தில் ஒருநாட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தோர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். இது வரை ஒருநாள் போட்டிகளில் சதம் ஏதும் குவிக்காத மிஸ்பா உல் ஹக் அடுத்த வருடத்திலாவது சதமடிப்பார் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

இலங்கைக் கிரிக்கெட் அணியின் முதுகெலும்பு என்று கருத்தப்படும் சங்காவுக்கு இந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்தது.தான் விளையாடியுள்ள அனைத்து தொடர்களிலும் 50+ சராசரியை பேணியுள்ள சங்கா (தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பாகிஸ்தானுடனான தொடர் கருத்திற் கொள்ளப்படவில்லை) இலங்கை அணியினை பல ஒரு நாள் போட்டிகளில் வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றிருந்தார்.இவ் ஆண்டு 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சங்கா 2 சதங்கள் 9 அரைச்சதங்கள் அடங்கலாக 66.35 என்ற சராசரியுடன் 1128 ஓட்டங்களை குவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக