2014 ஆம் ஆண்டு பிறப்பதற்கு இன்னமும் ஒரு சில நாட்களே உள்ளன. இந்நிலையில் 2013 இன் முக்கிய சம்பவங்கள், இயற்கை அனர்த்தங்கள், உள்நாட்டுப் போர்கள் மட்டுமன்றி பிறக்கவுள்ள புது வருடத்தில் வெளிவரவுள்ள ஹாலிவுட், பாலிவுட் மற்றும் தென்னிந்தியப் படங்கள் குறித்த ஆவலும் தேடலும் கூட செய்திப் பிரியர்கள் மத்தியில் நிச்சயம் இருக்கும். அவ்வகையில் 2014 ஆம் ஆண்டு வெளிவரவுள்ள அதிக எதிர்பார்ப்பு நிலவும் ஹாலிவுட் படங்கள் பற்றிய விபரங்களை அலசுகின்றது 4தமிழ்மீடியாவின் இப்பதிவு :
(கவனத்தில் கொள்க : படங்கள் வெளியாகும் திகதிகள் சிலவேளைகளில் மாற்றமடையலாம்)
ஜனவரி 03 : பரானோர்மல் ஆக்டிவிட்டி (Paranormal Activity: The Marked Ones), அக்டோபர் 24 : பரானோர்மல் ஆக்டிவிட்டி 5 (Paranormal Activity 5)

ஹாலிவுட்டில் இதுவரை வெளிவந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி (super natural) மற்றும் திகில் (horror) படங்களின் வரிசையில் இதுவரை வெளிவந்த அனைத்து பரானோர்மல் ஆக்டிவிட்டி திரைப்படங்களுமே ரசிகர்களை நாற்காலி நுனிவரை வந்து உட்காரும் வகையில் விறுவிறுப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியவை. அவ்வகையில் 2014 ஆம் ஆண்டு இவ்வரிசையில் இரு திரைப்படங்கள் ஜனவரி 3 இல் ஒன்றும் ஆக்டோபர் 24 இல் ஒன்றும் வெளிவரவுள்ளன என அறிவிக்கப் பட்டுள்ளன.
ஜனவரி 10 : தி லெஜென்ட் ஆஃப் ஹெர்குலெஸ் (The Legend of Hercules)
பராமௌன்ட் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. புரூஸ் வில்லிஸின் பிரபல டை ஹார்ட் 2 திரைப்பட இயக்குனர் ரென்னி ஹார்லினின் இயக்கத்தில் இத்திரைப்படம் வெளிவருகின்றது.
ஜனவரி 24 : ஃப்ராங்கென்ஸ்டெயின் (I, Frankenstein)
லயன்ஸ்கேட் (Lionsgate) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கவர்ச்சி மற்றும் அதிரடி (fantasy action) வகைப் படமாகும். கெவின் கிரேவியொக்ஸ் இன் கற்பனை நாவலைத் தழுவி எடுக்கப் பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் கதை கிறித்தவ மத நம்பிக்கை மற்றும் கதைகள் சிலவற்றையும் தழுவியுள்ளது.
பெப்ரவரி 12 : ரோபோ கோப் (RoboCop)
2014 இல் மிகவும் எதிர்பார்க்கப் படும் விஞ்ஞானப் புனைவு அதிரடி (science fiction action) படங்களில் இதுவும் ஒன்று. கொலம்பியா பிக்சர்ஸ் இனால் தயாரிக்கப் பட்ட இப்படத்தின் கதைப்படி Cyborg எனும் தொழிநுட்பத்தில் மூளையுடன் இணைந்து செயற்படும் எந்திர அங்கி அணிந்த ஒரு போலிஸ் புலனாய்வு அதிகாரி எவ்வாறு தனது தனிப்பட்ட உணர்ச்சிகளுடனும் காவல் துறை அதிகாரியாக திருடர்கள் மற்றும் கொள்ளைக்காரர்களுடனும் போராடுகின்றார் என்பதே திரையில் காட்டப் படவுள்ளது. ரோபோ கோப் ஆங்கில தொலைக்காட்சித் தொடர் நாடகம் 90 களில் உலகை கலக்கியது உங்கள் சின்னவயது நினைவாக இருக்கலாம் அல்லவா! எனவே இத்திரைப்படத்தையும் காணத்தவறாதீர்கள்.
பெப்ரவரி 28 : சன் ஆஃப் கோட் (Son of God)
20th Century Fox ஆல் தயாரிக்கப் படும் இத்திரைப்படம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை பிறப்பில் இருந்து சிலுவையில் மரித்து மீள உயிர்த்தெழும் வரை (Resurrection) நாடகப் பாணியில் விவரிக்கின்றது. 'தி பைபிள்' எனும் பெயரில் ஹிஸ்டரி (History channel) சேனலில் வெளிவந்த மினி நாடகத்தின் சுருக்கமே இத்திரைப்படமாகும்.
பெப்ரவரி 28 : நொன் ஸ்டொப் (Non-Stop)
யுனிவேர்சல் பிக்சர்ஸினால் தயாரிக்கப் பட்ட இந்த விறுவிறுப்பான ஆக்சன் திரைப்படம் நியூயோர்க்கில் இருந்து லண்டனுக்குச் செல்லும் விமானம் ஒன்றில் நடக்கவுள்ள ஹை ஜேக் முயற்சி மற்றும் அம்முயற்சியை மேற்கொள்ளும் நபராக எதிர்பார்க்காத விதமாக ஹீரோவே மாட்டிக் கொள்வதையும் திரைக்கதையாகக் கொண்ட படமாகும்.

மார்ச் 07 : 300-ரைஸ் ஆப் அன் எம்பையர் (300- Rise of an Empire)
வார்னெர் புரொஸ் (Warner Bros) நிறுவனத்தால் தயாரிக்கப் பட்ட இத்திரைப்படம் 2014 இல் மிக அதிகம் எதிர்பார்க்கப் படும் அரச சாகசக் கதையம்சம் கொண்ட படமாகும். நோவம் முர்ரோ இனால் இயக்கப் பட்ட இத்திரைப்படத்தின் கதை 2007 இல் வெளிவந்து அதிக எண்ணிக்கையான ரசிகர்களைக் கவர்ந்த 300 எனும் திரைப்படக் கதைக்கு முன்னும் பின்னரும் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்டுள்ளது. 300 திரைப்படத்தைப் போன்றே விறுவிறுப்பான அதே நேரம் பேர்சிய போர் வீரர்களின் தனித்துவமான போராட்டத் திறனை இப்படத்திலும் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் 07 : ரியோ 2 (Rio 2)
2011 இல் வெளிவந்த கம்பியூட்டர் அனிமேசன் கார்ட்டூன் படமான ரியோவின் 2 ஆம் பாகம் ஆகும் இது. புளூ ஸ்கை ஸ்டூடியோவல் தயாரிக்கப் பட்ட இத்திரைப்படம் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜனெயிரோவில் இருந்து அமேசன் காட்டுக்குச் சுற்றுலா செல்லும் விலங்குகள் பற்றிய காமெடி கலந்த சாகசக் கதையாகும். இத்திரைப்படத்தின் இசையும் ஹேப்பி ஃபீட் (Happy feet) அனிமேசன் திரைப்படத்தைப் போன்று சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைத்துத் தரப்பினரையும் கவரும் என எதிர்பார்க்கப் படுவதும் குறிப்பிடத்தக்கது.

மார்ச் 14 : நீட் ஃபோர் ஸ்பீட் (Need for Speed)
எலெக்ட்ரானிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் நீட் ஃபோர் ஸ்பீட் தொடர் (Need for Speed series) ரேசிங் கணணி விளையாட்டுக்கு அடிமையாகாத சிறுவர்களே இருக்க முடியாது. தற்போது இந்த கம்பியூட்டர் கேமில் உள்ள அனைத்து அம்சங்களையும் அடக்கிய முதலாவது ஹாலிவுட் திரைப்படம் அதே பெயரில் இத்திகதியில் வெளியாகின்றது. ஸ்காட் வோ இனால் இயக்கப் பட்டு டிரீம் வேர்க்ஸ் பிக்சர்ஸால் தயாரிக்கப் பட்டுள்ள இத்திரைப்படத்தின் மீது கார் ரேசிங் விளையாட்டுப் பிரியர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகின்றது. இதுவரை இதே பாணியில் வெளிவரும் Fast & Furious திரைப்படங்களுக்கு இனி Need for Speed திரைப்படம் கடும் போட்டியக் கொடுக்கும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

ஏப்பிரல் 04 : கேப்டன் அமெரிக்கா 2 : தி வின்டர் சோல்ஜர் (Captain America 2 : The Winter soldier)
ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் மார்வெல் காமிக்ஸின் அடுத்த படம் இது. ஏற்கனவே மார்வெல் காமிக்ஸில் சித்தரிக்கப் படும் 6 சூப்பர் ஹீரோக்கள் ஒன்றாக நடித்து 2012 இல் வெளிவந்த 'தி அவேஞ்சர்ஸ்' திரைப்படம் ரசிகர்களுக்கும் நல்ல விருந்தாக அமைந்திருந்ததுடன் ஹாலிவுட்டில் அவதார் மற்றும் டைட்டானிக் படங்களை அடுத்து 3 ஆவது அதிக வசூலைக் குவித்த படமாக சாதனை படைத்திருந்தது. இப்படத்தின் தொடர்ச்சியாக அயர்ன் மேன் 3 (Iron men 3) 2013 ஏப்பிரலில் வெளிவந்து ஹாலிவுட் வசூலில் 5 ஆவது இடத்தைப் பெற்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து 2013 ஆக்டோபரில் வெளிவந்த 'தோர் 2' (Thor 2) உம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் அவேஞ்சர்ஸ் படத்தின் கதை முடிந்து 2 ஆண்டுகளின் பின்னர் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் 'கேப்டன் அமெரிக்கா 2' ஆம் பாகமும் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஏப்ரல் 18 - டிரான்ஸ்சென்டென்ஸ் (Transcendence) -
வார்னெர் புரொஸ் பிக்சர்ஸால் (Warner Bros pictures) தயாரிக்கப் பட்டுள்ள விஞ்ஞானப் புனைவு மற்றும் திகில் வகை இப்படம் செயற்கை அறிவை (Artificial intelligence) தவறாக ஊக்குவித்தால் ஏற்படும் விபரீதத்தை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்டுள்ளது. பைரட்ஸ் ஆஃப் கரிபியன் புகழ் ஜோனி டெப் (Johnny Depp) கதாநாயகனாக நடித்துள்ளார்.
மே 02 - தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2 (The Amazing Spider-Man 2)
கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டூடியோ இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஸ்பைடர் மேன் வரிசையில் 5 ஆவது படமாகும். மார்க் வெப் இன் இயக்கத்தில் பீட்டர் பார்க்கர் கதாபாத்திரத்தில் அன்ட்ரூ கரிஃபீல்ட் 2 ஆவது முறையாக இப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஸ்பைடர் மேனின் முக்கிய எதிரிகளாக எலெக்ட்ரோ எனும் மின்சாரத்தால் தாக்கும் வில்லனும் ரைனோ எனும் கவசம் அணிந்த இயந்திர மனிதனும் மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 16 - கோட்ஸில்லா 2014 (Godzilla 2014) -
1998 ஆம் ஆண்டு ரோலன்ட் எம்ரிச் இயக்கத்திலும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பிலும் மிகப் பிரம்மாண்டமாக வெளி வந்த மோன்ஸ்டெர் வகை விஞ்ஞானப் புனை கதைப் படமான 'கோட்ஸில்லா' இனை திரையரங்கில் பார்த்த அனுபவத்தை எவரும் மிக எளிதில் மறக்க முடியாது. தற்போது இதே தலைப்பில் மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் வார்னெர் புரொஸ் மற்றும் லெஜென்டரி பிக்சர்ஸ் கூட்டுத் தயாரிப்பில் கறெத் எட்வார்ட்ஸ் இயக்கத்தில் மறுபடியும் இத்திரைப்படம் வெளிவருகின்றது.
இத்திரைப்படத்தில் கோட்ஸில்லா விஞ்ஞான வளர்ச்சியின் விபரீதத்தால் தோற்றம் பெற்ற பயங்கரமான உயிரினங்களுடன் சண்டையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மே 23 - எக்ஸ் மேன்: டேய்ஸ் ஆஃப் ஃபியூச்சர் பாஸ்ட் (X-Men Days of Future Past) -
மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோ கதைகளில் தமது டி என் ஏ களின் தனித் தன்மையால் அபூர்வ சக்திகள் கொண்ட மனிதர்களான மியூடன்ஸ் (Mutants) களில் சாதாரண மனிதர்களை எதிர்க்காத எக்ஸ் மேன் குழுவினர் மற்றும் அவர்களுக்கு எதிரான தீய எண்ணம் கொண்ட மியூடன்ஸ் (Mutants) ஆகியோருக்கு இடையே நடக்கும் யுத்தம் பற்றி ஏற்கனவே 3 பாகங்கள் வெளிவந்தன. அதன் பின் எக்ஸ் மேன் குழுவினர் எவ்வாறு உருவாக்கப் பட்டவர்கள் என ஒரு பாகமும் அவர்களில் வயதாகுதல், மற்றும் காயப் படுதல் ஆகிய தன்மைகள் அற்றவனும் மிக வீரமான போராளியுமான வூல்வரின் (Wolverine) பற்றி இரு பாகங்களும் ஏற்கனவே வெளிவந்து விட்டன.

இந்நிலையில் தற்போது வெளிவரவுள்ள இப்பாகம் இந்த மியூடன்ஸ் மனிதர்கள் எவ்வாறு இணைந்து தமது கடந்த காலத்தை மாற்றியமைத்து எதிர்காலத்தில் தம்மைத் தற்காத்துக் கொள்கின்றனர் எனும் திரைக்கதையுடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளது.
ஜூன் 06 - எட்ஜ் ஆஃப் டுமாரோ (Edge of Tomorrow) -
வார்னர் புரொஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹாலிவுட்டின் முன்னணி ஆக்ஷன் ஹீரோக்களில் ஒருவரான டோம் க்ரூஸ் கதாநாயகனாக நடித்து வெளிவரவுள்ள விஞ்ஞானப் புனைவு மற்றும் ஆக்ஷன் வகைத் திரைப்படம் இது. ஜப்பான் நாவலான 'ஆல் யூ நீட் இஸ் கில்' (All You Need is Kill) இனைத் தழுவி எடுக்கப் பட்ட இப்படத்தில் உலகின் எந்த இராணுவத்தாலும் வீழ்த்தப் பட முடியாததும் கால இடைவெளிக்குள் பயணிக்கும் ஏலியன் இனமான 'மிமிக்ஸ்' உடன் மோதும் விசேட அதிரடிப் படையினரின் போராட்டம் விவரிக்கப் படுகின்றது.

ஜூன் 27 - டிரான்ஸ்ஃபோர்மெர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸிடிங்சன் (Transformers: Age of Extinction) -
பாராமௌன்ட் பிக்சர்ஸ் இன் தயாரிப்பில் டிரான்ஸ்ஃபோர்மெர்ஸ் தொடரில் வரும் 4 ஆவது படம் இது. முன்னைய படங்களைப் போன்றே ஸ்டீவென் ஸ்பில்பேர்க் தயாரிப்பில் மைக்கல் பே இயக்கத்தில் இப்படம் வெளிவருகின்ற போதும் இதில் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் ஓர் விடயமும் உள்ளது. அமெரிக்காவின் சிகாக்கோ நகரை டிரான்ஸ்ஃபோர்மெர்ஸ் தாக்கி 4 வருடம் கழித்து நடைபெறும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இப்புதிய திரைப்படம் வெளிவருகின்ற போதும் முன்னைய 3 படங்களிலும் நடித்த ஹீரோ ஷியா லாபேயௌஃப் உட்பட முக்கிய கதாபாத்திரங்கள் எவரும் இதில் நடிக்கவில்லை. முற்றிலும் புதிய கதாபாத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில் முன்னைய படங்களில் வந்த உருமாறும் இயந்திரங்களான ஆப்டிமஸ் ப்றைம் மற்றும் பம்பிள்பீ ஆகியவை மட்டுமே சேர்க்கப் பட்டுள்ளதும் கவனிக்கத் தக்க செய்தி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக