பன்னிரு இராசிகளுக்குமான நவம்பர் மாதப் பலன்களுடன், இம் மாதம் 21ந் திகதி இடம்பெறும் குரு மாற்றத்திற்குரிய பலன்களும் இணைந்து வருகிறது. இவையணைத்தும் உங்கள் ராசிகளுக்கான பொதுப்பலன்கள். இப் பொதுப் பலன்களைக் கணித்தவர் மதுரை - பொருணைச் செல்வன்
இந்த மாதம் முக்கிய கிரகங்களில் குருபகவான் 7 ந் தேதி வக்கிர நிவர்த்தி அடைந்து நற்பலனை கொடுப்பார். அவர் 21 ம் தேதி மீனத்திற்கு மாறுகிறார். அதன் பின் அவரால் நன்மைகள் குறைவு. சனி 6 ம் இடத்தில் இருந்தும்கேது 3 ம் இடத்தில் இருந்தும் தொடர்ந்து நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் புதன் விருச்சிகத்தில் இருந்து மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். கேதுவால் ஆன்மீக தொடர்பான ஈடுபாடுகள் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக முடிக்க கேது உறுதுணையாக இருப்பார். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்ததியாகும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும் காலம்.திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.3,4,30 திகதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.குறிப்பாக 5,6,9,20,21 திகதிகளில் அவர்கள் மூலம் நன்மைகள் அதிகம் கிடைக்கும். 14,15,16 திகதிகளில் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். உத்தியோகத்தில், வேலைப்பளு குறைவதுடன் கூடுதல் வருமானமும் பெற வாய்ப்புண்டு. மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வணிகத்தை பொறுத்த மட்டில் உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் உண்டு. புதிய தொழில் வாய்ப்புகள் சிறப்பாக அமையும். ஆனால் அதிக முதலீட்டை செய்ய வேண்டாம்.3,4 திகதிகளில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். 27 ம் திகதிக்கு பிறகு முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராக அமையும். பொருள் நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்கவும்.
கலைஞர்கள் சிறப்பான இடத்தை பெறுவர்.பெண்கள் வகையில் சிறிய பிரச்சனைகள் தலைதூக்கலாம். பொதுச்சேவையில் உள்ளோர், அரசியல்வாதிகள் அனுகூலமான பலனை காணலாம். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த பலனை பெறலாம். விவசாயம் தொடர்பான தொழில்களில் இருப்பவர்கள்அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். தானியம் மற்றும் பயறு வகைகளில் கூடுதல் மகசூல் கிடைக்கும். கால்நடை தொடர்பான தொழில்களில் நல்ல லாபம் கிடைக்கும்.
பெண்கள் விருந்து விழா என்று அழைப்புகளுக்கு சென்று வருவீர்கள்.பிள்ளைகளால் மகிழ்ச்சியும்,பெருமையும் கிட்டும்.மருத்துவச் செலவு குறையும். 1,2,28,29 திகதிகளில் வெப்பம் தொடர்பான பிணிகள் வரலாம். அதாவது பித்த மயக்கம்,சளி போன்ற தொந்தரவுகள் இருக்கும்.
அதிர்ஷ்ட திகதிகள்-5,7. அதிர்ஷ்ட நிறங்கள்-பச்சை மற்றும் சிவப்பு.
பிரச்சனைகள் தீர முருகன் வழிபாடு கைகொடுக்கும்.
குரு மாதத்தின் தொடக்கத்தில் நற்பலன்களை வழங்கினாலும் 7 ம் திகதிக்கு பிறகு வக்கிர நிவர்த்தி அடைவதால் நன்மைகளை தரமாட்டார். பிறகு 21 ம் திகதி மீனத்திற்கு வந்த நிலையில் நன்மைகளை வழங்குவார். சூரியன் 17 ம் திகதி வரை துலாம் ராசியில் இருந்து நன்மைகளை தருவார். இந்த மாதத்தில் பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் சற்று சிரத்தை எடுத்து முடிக்க வேண்டிய நிலை இருக்கும்.
செவ்வாய் 7 ம் இடத்தில் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். கையிலிருக்கும் பணத்தை நிதானித்து செலவுகளை செய்யவும். மனைவியுடன் எந்த வித விவாதங்களும் வேண்டாம்.
குடும்பத்தை பொறுத்த மட்டில் வசதிகள் வரும்.தேவைகள் பூர்த்தியாகும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.7,8,22,23 திகதிகளில் அவர்களால் நன்மை கிடைக்கும். 26,27 திகதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.உறவினர்கள் வகையில் நன்மைகள் கிடைக்கும்.
உத்தியோக அளவில் சற்று கடினமான உழைப்பு இருக்கும். 21ம் திகதிக்கு பிறகு உழைப்பின் பலன் சிறப்பாக இருக்கும். வணிகத்தை பொறுத்த அளவில், பணப்புழக்கம் அதிகரிக்கும். செவ்வாய் அனுகூலமற்ற நிலையில் இருப்பதால் வீண்விரயம் இருக்கலாம். புதிய வியாபாரம் அனுகூலத்தை கொடுக்கும். 5,6 திகதிகளில் எதிர்பாராத பணவரவு இருக்கும். 19,20,21,24,25 திகதிகளில் சந்திரனால் சிறு தடைகள் வரலாம்.
கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இருந்தாலும் பணவரவு குறைவாக தான் இருக்கும். மாணவர்கள் தொடர்ந்து மன ஒருங்கிணைப்புடன் படிப்பது மட்டுமே சிறந்த நிலை அடைய வழிதரும்.
விவசாயத்தை பொறுத்த மட்டில் கரும்பு,பழவகைகள்,காய்கறிகள் மற்றும் கீரைவகைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை பண்ணையில் ஆவினங்களிலிருந்து சிறப்பான பலன் உண்டு.
பெண்கள் குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். குழந்தை பாக்கியம் உருவாகும். 12,13 திகதிகளில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
அதிர்ஷ்ட எண்கள்-3,5. பால் வெண்மை அதிர்ஷ்ட நிறமாக இருக்கிறது.
குருபகவான் 21 ம் திகதி வரை நற்பலனை வழங்குகிறார். செவ்வாய் 28 ம் திகதி வரை விருச்சிகத்தில் இருந்து நன்மைகளை கொடுப்பார். புதன் விருச்சிகத்தில் நின்றும் சுக்கிரன் 5 ம் இடத்தில் இருந்தும் நன்மை செய்கிறார்கள். நினைத்த காரியங்கள் வெற்றிகரமானதாக அமையும். 17 ம் திகதிக்கு பிறகு உங்களுக்கு இருந்து வந்த தடைகள் விலகும். செவ்வாயால் பொருளாதார வளம் சிறக்கும். குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவும் அனுசரனையும் தொடரும். நண்பர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். 9,10,11,24,25 திகதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். மாத்தின் இரண்டாவது பகுதியில் உறவினர்களின் வருகையும்,நன்மையும் கிடைக்கும். 27 ம் திகதிக்கு பிறகு பணிநிமித்தம் அலைச்சல் இருக்கும்.
உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்களை காணலாம். இடமாற்றம் விரும்பிய படி உண்டு. காவல் பணியில் உள்ளவர்கள் ராணுவத்தினர் செவ்வாயின் ஆதிக்கத்தால் செல்வாக்குடன் காணப்படுவர்.
வணிகத்தில், பொருளாதார வளம் உயரும். பகைவர்களின் இடையூறுகள் விலகும். அவர்களால் மனக்குழப்பத்தில் இருந்த உங்களின் துயரம் தீரும். அதிக முதலீடுகளை தவிர்த்து விடுங்கள். எதிலும் நிதானமாக சிந்தித்து பின்னர் செயலில் இறங்கவும். 7,8 திகதிகளில் பணவரவு இருக்கும்.
கலைஞர்களுக்கு சீரான முன்னேற்றம் காணப்படும். அரசியல்வாதிகளுக்கு இருந்த பிரச்சனைகள் குறையும். சிலர் வெளிநாட்டு பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் வரும். மாணவர்கள் அதிக அளவில் முயற்சித்தால் தான் போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
விவசாயத்தில் நெல்,கேழ்வரகு,மொச்சை,கிழங்கு வகைகளில் அதிக லாபம் கிட்டும்.
உடல் நலன் சிறப்புடன் இருக்கும். மருத்துவ செலவு குறையும்.
1,5,6 அதிர்ஷ்ட எண்கள்.மஞ்சள்,பச்சை,சிவப்பு அதிர்ஷ்ட நிறங்கள்.
செவ்வாயின் சுழற்சி 28 ம் திகதிக்கு பிறகு தனுசுக்கு வருகிற நிலையில் குடும்பத்தில் இருந்த வந்த பிரச்சனைகள் நீங்கும். சனி 3 ம் இடத்தில் இருப்பதால் எந்த பிரச்சனை வந்தாலும் எளிதாக சமாளித்து விடுவீர்கள். வெற்றி காண்பீர். குரு 20 ம் திகதிக்கு பிறகு மீனத்திற்கு மாறி நற்பலனை வழங்குவார். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிலவும். இது வரை உங்களிடம் இருந்த வந்த மனக்குழப்பம் விலகத் தொடங்கும். பிரச்சனைகள் யாவும் இருந்த இடம் தெரியாமல் மறையும். 12,13,26,27 திகதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். மாதத்தின் கடைசி பகுதியில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் இருக்கும்.
உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். அதிகாரிகளின் ஆதரவு உண்டு. உங்கள் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேறும் காலமிது. பெண்கள் வகையில் சில பிரச்சனைகள் வரலாம் என்பதால் சற்று ஒதுங்கி இருங்கள். வணிகத்தை பொறுத்தளவில் சீரான நிலை இருக்கும். எவரிடமும் வீணான வாக்குவதத்தை தவிர்க்கவும். பெண்கள் வகையில் எச்சரிக்கையுடன் இருக்கவும். 16 ம் திகதிக்கு பிறகு எதிரிகளால் சில பிரச்சனைகள் வரலாம். அலைச்சல் அதிகரிக்கும். தொழில்ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். 27 ம் திகதிக்கு பிறகு உங்களின் பலமும், ஆற்றலும் அதிகரிக்கும். கலைஞர்கள் சிறப்பான இடத்தை பெறுவர். பாராட்டுகள் கிடைக்கும்.
மாணவர்கள் புதனால் நற்பலனை பெறுவர். விவசாயிகளுக்கு வருமானத்திற்கு குறைவு இருக்காது. கால் நடை மூலம் வருமானம் குறைந்தாலும், பயிர் வகைகளில் அதிக லாபம் கிட்டும். பெண்கள் மகிழ்ச்சியுடன் இருப்பர். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புண்டு. செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் உடல் நலம் லேசாக பாதிக்கப்படலாம். 17,18 திகதிகளில் வயிற்று தொடர்பான உபாதைகள் வரலாம். 5,6 அதிர்ஷ்ட எண்கள். கறுப்பு,நீலம் அதிர்ஷ்ட நிறங்கள்.
உங்களுக்கு இந்த காலத்தில் புதன்,கேது நன்மைகளை வழங்குவார்கள். 17 ம் திகதி வரை சூரியன் துலாமில் இருந்து நற்பலன்களை தருவார். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். முயற்சிகளில் தடை வந்தாலும் அதை முறியடித்து வெற்றி காண்பீர்கள். சுற்றுவட்டாரத்தில் மதிப்பு மரியாதை உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். கணவன், மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் விலகி அன்பு மேலோங்கும். 7,8 தேதிகளில் உறவினர் வகையில் மனக்கசப்பு வரலாம். உத்தியோகத்தில் ஒரு பிடிப்பு இல்லாத நிலை காணப்படும். வேலைப்பளுவும்,அலைச்சலும் அதற்கு காரணமாக இருக்கலாம்.
வியாபரத்தை பொறுத்த மட்டில் உழைப்புக்கு ஏற்ற பலன் இருக்கும். வரவு செலவு கணக்குகளை துல்லியமாக பராமரிக்கவும். 16 ம் திகதிக்கு பிறகு பெண்களால் தொல்லை வரலாம். புதிய தொழில்கள் தொடங்கும் முயற்சியில் இறங்க வேண்டாம். 12,13 திகதிகளில் பணவரவு இருக்கும். 3,4,26,27,30 திகதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களால் ஏற்றம் பெறுவார்கள்.அரசியல்வாதிகளுக்கு சாதகமான நிலை இல்லை. ஆனால் அவர்களின் கவுரவத்திற்கு பாதிப்பில்லை. எதிர்பார்த்த பதவி கிடைக்காமல் போகலாம்.
மாணவர்கள் சற்று அதிக முயற்சி எடுத்தால் மட்டுமே வெற்றிகள் கிடைக்கும்.பெண்களுக்கு கணவரின் ஆதரவு நிறைவாக கிட்டும். விவசாயத்தை பொறுத்த அளவில் சீரான மகசூல் இருக்கும். பழவகைகள் தொடர்பான வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. மருத்துவச் செலவு குறையும். செவ்வாயால் சிறு உபாதைகள் வரலாம். சிலர் கெட்டசகவாசத்தால் அவதிக்குள்ளாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. வயிற்று தொடர்பான கோளாறுகள் இருக்கும். 4,7 அதிர்ஷ்ட எண்கள். வெள்ளை, பச்சை அதிர்ஷ்ட நிறங்கள்.
பிரச்சனைகள் தீர் விநாயகர் வழிபாடு கைகொடுக்கும்.
2 ல் சுக்கிரன்,3 ல் செவ்வாய் இருப்பது நற்பலன்கள் தொடர வழிவகுக்கும். 7 ம் திகதி வரை குருவக்கிரத்தில் இருந்து நன்மைகளை தருவார். சூரியன் 17 ம் திகதிக்கு பிறகு விருச்சகத்தில் இருந்து நன்மைகளை செய்கிறார். ஆனால் சனி,3ல் உள்ள புதன்,4 ம் இடத்தில் உள்ள ராகு,10 ல் உள்ள கேது ஆகியோர் நன்மைகளை தரும் இடத்தில் இல்லை. எடுத்த காரியங்கள் இனிதாக நிறைவேறும்.
16 ம் திகதி வரை சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் வீண்விரயங்கள் இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு மேலோங்கும். வீட்டுக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ள வழி உண்டாகும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். 3 ம் திகதிக்கு மேல் 4,17,18,30 திகதிகளில் பெண்களால் நன்மைகள் கிடைக்கும்.
26,27 திகதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் உண்டு. உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவும்,ஆலோசனையும் கிடைக்கும். 24,25 திகதிகளில் நல்ல பலன்களை காணலாம்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த பணப்புழக்கம் இருக்கும். புதிய தொழில் அனுகூலமான போக்கை தரும். பகைவர்களின் இடையூறுகள் இருந்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. வரவு செலவு கணக்கை சரியாக நிர்வகிக்கவும்.16 ம் திகதிக்கு பிறகு வீண்விரயங்கள் இருக்காது.வியாபாரிகளுக்கு அரசாங்கத்தின் வழியில் சில அனுகூலங்கள் கிடைக்கும்.
கலைஞர்கள் முன்னேற்றமான பலன்களை காணலாம். திறமை சிறப்பாக வெளிப்பட்டு புகழ்,பாராட்டு கிடைக்கும். சமூக சேவையில் ஈடுபடுவோருக்கு விருதுகளும், பாராட்டும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் மட்டும் அல்லாது ஏணைய போட்டி விளையாட்டுக்களிலும் வெற்றி காண்பர்.
விவசாயத்தில் செலவுகள் குறைந்து லாபம் அதிகரிக்கும். கரும்பு,சோளம்,நெல் பயிர்களில் அதிக வருமானம் இருக்கும். கால்நடை தொழில்களில் லாபம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு கணவரின் அன்பு அதிகரிக்கும். மாதம் முற்பகுதியில் விருந்து, விழா என்று சுபநிகழ்ச்சிகளுக்கு அழைப்புகள் வரும். 3,4,30 திகதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும்.
உடல்நலம் சிறப்பாக இருக்கும். சூரியனின் சஞ்சாரத்தால் கண்வலி வரலாம். 3.6 அதிர்ஷ்ட எண்கள்.வெள்ளை,சிவப்பு அதிர்ஷ்ட நிறங்கள்.
இந்த மாதத்தில் 3ம் இடத்தில் இருக்கும் ராகு மற்றும் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஆகியோர் மாதம் முழுவதும் நன்மைகளை தருகிறார்கள். குரு 7 ம் திகதி வக்கிர நிவர்த்தி அடைந்து நற்பலனை தருகிறார். ஆனால் இவை தவிர பெரும்பாலான கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் முயற்சிகளில் தடைகள் இருக்கும்.அதிக அலைச்சலும் இருக்கும். தவறான முடிவால் அவப்பெயர் வரலாம். ராகுவால் பொருளாதார பற்றாக்குறை இருக்காது. ஆனால் திடீர் செலவுகள் அதிகரிக்கும். எனவே சிக்கனம் தேவை.
குடும்பத்தில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் வீட்டில் நிம்மதியும்,குதூகலமும் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு மேம்படும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கருத்தரிப்பர். 5,6,19,20,21 திகதிகளில் பெண்களால் நன்மைகள் அதிகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சீரான நிலை இருக்கும்.ஆனால் உழைப்பு அதிகமாக இருக்கும். புதன் 3 ம் இடத்தில் இருப்பதால் இடமாற்றம் இருக்கலாம். மேல் அதிகாரிகள் கேட்டால் மட்டுமே ஆலோசனை சொல்லுங்கள்.
வணிகத்தில் அயராது உழைத்து கொண்டே இருங்கள். உங்கள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். 17 ம் திகதிக்கு பிறகு வீண்செலவுகள் இருக்கும். பொருள்கள் களவு போக நேரிடலாம். கவனம் தேவை.பகைவர்களின் இடையூறு இருக்கும். அவற்றை சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறுவர்.புகழ்,பாராட்டு கிடைக்கும். பெண்கள் மூலம் அனுகூலமான பலனை காணலாம். மாணவர்கள் கடினமாக உழைத்தாலும் நினைவுத்திறனில் குறைவு இருக்கும். ஆனால் முயற்சியை கைவிட வேண்டாம். குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பிற்போக்கான பலன் இருக்காது.
பெண்கள் கணவரின் அன்பை பெறுவர். திருமணம் சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சிறுசிறு உடல் உபாதைகள் வரலாம். குறிப்பாக வயிறு மற்றும் கண்வலி வந்து நீங்கும். அதிர்ஷ்ட எண்கள்-7,8. அதிர்ஷ்ட நிறங்கள்-வெள்ளை,நீலம்.
இந்த மாதத்தில் 11 ம் இடத்தில் இருக்கும் சனி மாதம் முழுவதும் நற்பலனை தருவார். 7 ம் திகதி வரை குரு வக்கிரத்தில் சிக்கி இருப்பது சாதக பலனை தரும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செவ்வாய் உங்கள் முயற்சியில் தடைகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு. எனவே சிரத்தை எடுத்தால் தான் காரிய அனுகூலம் ஏற்படும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். 17 ம் திகதிக்கு பிறகு அலைச்சலும்,சோர்வும் ஏற்படும். செல்வாக்கு பாதிக்கப்படலாம்.
குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். 7,8,22,23 திகதிகளில் பெண்களால் உதவிகள் கிடைக்கும். 3,4,30 திகதிகளில் உறவினர்கள் வருகை இருக்கும். 12,13 திகதிகளில் புத்தாடை,அணிகலன்கள் வாங்க உகந்த வாய்ப்புகள் வரும்.உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற பொறுப்புகள் கிடைக்காமல் போகலாம். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலர் இடமாற்றத்தை சந்திக்க நேரிடும்.28,29 திகதிகளில் எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்கும்.
வணிகத்தில் லாபத்திற்கு குறைவிருக்காது. தொழில் தொடர்பாக அரசாங்கத்திடம் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். 5 ம் திகதிக்கு மேல் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்.
பொதுசேவையில் ஈடுபடுவோர்,அரசியல்வாதிகளுக்கு பிரச்சனைகள் இல்லை. மாணவர்கள் தீயசேர்க்கைக்கு ஆளாக வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை. விவசாயம் சிறப்பான நிலையில் இருக்கும். நிலக்கடலை மற்றும் பசுக்களின் மூலம் சீரான வருமானம் இருக்கும். புதிய சொத்து ஒன்றை வாங்கி வாய்ப்பிருக்கிறது.
பெண்களுக்கு ஆடம்பர பொருட்கள் கிடைக்கலாம். வீட்டில் சிற்சில பிரச்சனைகள் காணப்பட்டாலும் அது பெரிதாகாது. உடல்நலன் சிறப்பாக இருக்கும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். அதிர்ஷ்ட எண்-4,7. அதிர்ஷ்ட நிறங்கள்- நீலம்,பலவண்ண கலவை.
இந்த மாதத்தில் சுக்கிரன் நற்பலன்களை தருகிறார். சூரியன் 16 ம் திகதி வரை நன்மைகளை வழங்குகிறார். மற்ற கிரகங்களான புதன்,சனி,கேது ஆகியோரால் சாதகமான அம்சங்கள் இல்லை. குரு 7 ம் திகதிக்கு வக்கிர நிவர்த்தி அடைந்தாலும் பெரிய அளவில் நன்மை இல்லை. மாத முற்பகுதியில் சூரியனால் அனுகூலங்கள் பல கிடைக்கும். அரசின் உதவி கிடைக்கும்.
சுக்கிரன் பலத்தால் காரிய அனுகூலம் ஏற்படும். முயற்சியில் இருந்து வந்த தடைகள் நீங்கி காரியங்கள் வெற்றியடையும். மதிப்பு,மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும்,ஆனந்தமும் நீடிக்கும். 9 ம் திகதிக்கு மேல் பெண்களால் அனுகூலமான பலன்களை காணலாம். அதே வேளையில் 17,18 திகதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம்.
14,15,16 திகதிகளில் புத்தாடை,அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் சிறப்பான நிலை இருந்து வரும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். இருந்தாலும் அலைச்சல் அதிகரிக்கும். 30ம் திகதி வாக்கில் அலுவலக ரீதியான முனனேற்றமான சம்பவம் நடைபெறலாம். வணிகத்தில் சீரான பலனை எதிர்பார்க்கலாம். லாபம் குறையாது. பகைவர்களின் இடையூறு மறைந்து போகும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதிப்பட நேரிடும். கவனம். 22,23 திகதிகளில் எதிர்பாராத பணவரவு இருக்கும்.
கலைஞர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை தேர்வது நல்லது. விவசாயிகள் கால்நடைகள் மூலம் கூடுதல் வருமானம் பெறுவர். சோளம்,கடலை தொடர்பான விவசாயம் மற்றும் தொழில்களில் லாபம் சிறக்கும். வழக்கு விவகாரங்கள் எதுவும் இருந்தால் சிறப்பு கவனத்துடன் இருக்கவும்.
பெண்கள் குடும்பத்தின் முக்கிய முடிவுகளில் சிறப்பான இடத்தை வகிப்பர். பிள்ளைகள் வகையில் சற்று கவனம் தேவை. உடல் நலம் சிறப்பாக இருந்தாலும் 17ம் திகதிக்கு பிறகு சிறு வயிறு உபாதைகள் வரலாம். அதிர்ஷ்ட எண்கள்-3,5. அதிர்ஷ்ட நிறங்கள்-வெள்ளை.செந்தூரம்.
நிழல்கிரகமான கேது உங்கள் ராசிக்கு 6 ம் இடத்தில் இருந்து தொடர்ந்து நன்மைகளை தருகிறார். 11 ம் இடத்தில் உள்ள புதனும் நற்பலன்களை தருகிறார். குரு 7 ம் திகதி வக்கிர நிவர்த்தி அடைந்து நன்மைகளை தருகிறார். ஆனால் 21 ம் திகதிக்கு பிறகு வக்கிர நிவர்த்தி அடைவதால் அந்த பலன்கள் கிடைப்பதில்லை. இந்த கட்டத்தில் எந்த ஒரு செயலையும் வெற்றிகரமாக செய்து முடிக்க புதன், கேது துணை நிற்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு மரியாதை கூடுதலாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். கணவன்,மனைவி இடையே அன்பு நீடிக்கும். பெண்களால் கூடுதலான நன்மைகள் உண்டு. உத்தியோகத்தில் அதிகமான உழைப்பு தேவைப்படும். நண்பர்கள் மற்றும் சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். 5,6 திகதிகளில் சிறப்பான பலனை காணலாம். வணிகத்தில் பொருளாதார வரவு சிறப்பாக இருக்கும். புதிய தொழில் அனுகூலத்தை தரும். தடைகளும், எதிரிகளின் சதியும் முறியடிக்கப்படும். 24,25 திகதிகளில் திடீர் பணவரவுக்கு வாய்ப்புண்டு.
கலைஞர்களுக்கு எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர். புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களால் குடும்பம் சிறக்கும். விவசாயத்தில் அதிக உழைப்பை செலுத்த வேண்டியதிருக்கும். கால்நடைகள் நல்ல பலனை தரும். உடல் நலன் பாதிப்பில்லை. இருந்தாலும் சீரண கோளாறுகள் வரலாம். கவனம் தேவை. அதிர்ஷ்ட எண்கள்-1,3,7 அதிர்ஷ்ட நிறங்கள்-சிவப்பு,பச்சை,நீலம்
இந்த ராசிக்கு புதன், சுக்கிரன், ராகு ஆகியோர் மாதம் முழுவதும் நன்மைகளை தருகிறார்கள். செவ்வாய் 28 ம் திகதிக்கு பிறகு நன்மைகளை தருவார். 16 ம் திகதிக்கு பிறகு சூரியன் விருச்சிகத்திற்கு வந்த நன்மைகளை தருகிறார். ஆனால் சனி,கேது ஆகியோர் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் நன்மைகள் இல்லை. பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக காணப்படுவதால் உங்களுக்கு நற்பலன்கள் இந்த மாதத்தில் தொடரும். பணப்புழக்கம் இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.
17 ம் திகதி வரை எதிலும் நிதானத்துடன் செயல்படுங்கள். மரியாதைக்கு இழுக்கு வரும்படியான நிகழ்வுகள் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உத்தியோத்தில் பெண்களின் ஆதரவு உண்டு. பொருள்சேரும். பதவி,சம்பள உயர்வு போன்றவை வந்து சேரும். மாதத்தின் பிற்பகுதியில் சகஊழியர்கள் உதவியாக இருந்து ஒரு திட்டத்தை முடிக்க ஒத்துழைப்பர். காவல் பணியில் இருப்பவர்கள் சிறப்பான பலனை காண்பர்.
வணிகத்தில் லாபம் அதிகரிக்கும். ஆனால் அஷ்டமத்தில் சனி இருப்பதால் எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம். 17 ம் திகதிக்கு பிறகு செலவு அதிகரிக்கும். எதிரிகளின் இடையூறு இருந்தாலும் பெரிய தாக்கம் இருக்காது. 12,13,17,18 திகதிகளில் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டி நேரலாம். கலைஞர்களுக்கு முன்னேற்றமான காலகட்டம். நல்ல பலன்கள் கிடைக்கும்.
மாணவர்கள் புதனால் கூடுதலான அனுகூலத்தை காணலாம். விவசாயத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. பயறுவகைகளில் நல்ல லாபம் கிடைக்கும். சொத்து வாங்க அனுகூலமான காலகட்டம் இது. பெண்கள் குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். 14,15,16 திகதிகளில் சிறப்பான பலனை காணலாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பயணத்தின் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்கள்-5,6,7 அதிர்ஷ்ட நிறங்கள்-பச்சை,நீலம்.
சுக்கிரன் மட்டும் இந்த மாதத்தில் நற்பலன்களை தருகிறார். 7 ம் திகதி குரு வக்கிர நிவர்த்தி அடைந்தாலும் நன்மை தருவதாக அமையவில்லை. கேது, ராகு ஆகியவை நன்மை தரும் இடத்தில் இல்லை. சந்திரன் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். கிரகங்கள் பலவும் சாதகமற்ற நிலையில் இருப்பது கவனமாக இருப்பது நல்லது. ஆனால் இந்த கிரகங்கள் கெடுதல் எதுவும் பெரிதாக செய்ய போவதில்லை.
குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பலம் உங்கள் பக்கம். அதன் மூலம் உங்களுக்கு வரும் தடைகளை தகர்க்கலாம். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் யாரிடமும் வீண் விவாதம் வேண்டாம். பொறுமையும் விட்டுக் கொடுத்து போகும் போக்கையும் கடைபிடியுங்கள். குடும்பத்தில் வசதிகள் பெருகும். பெண்கள் ஆதரவாக இருப்பர். சிக்கனம் தேவை. உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. 9,10,11 திகதிகளில் எதிலும் வெற்றி காணலாம்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் லாபம் இருக்கும். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். சந்திரனால் தடைகள் வந்தாலும், எதிர்பாராத வகையில் சந்திரனின் அனுகூலத்தால் பணம் கிடைக்கும். மாணவர்களும் கலைஞர்களும் சிறப்பான பலனை காண்பார்கள். விவசாயத்தில் இருந்த தொய்வு நிலை மாறிவிடும். புதிய சொத்து வாங்க முடிவெடுத்தால் சற்று பொறுத்திருங்கள்.
பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.செவ்வாய் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்கள்-7 அதிர்ஷ்ட நிறங்கள்-வெள்ளை. நவகிரக வழிபாடு பிரச்சனைகளை தகர்த்து வெற்றிக்கான வழியை ஏற்படுத்தும்.
கணித்தவர்- பொருணைச்செல்வன்,மதுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக